PDA

View Full Version : இனியது தான் அறிவோம்



சக்தி
05-05-2007, 04:43 PM
வழிமேல் விழிவைத்து
காத்திருந்தேன்
வஞ்சியவள் வரவை

தூரத்தே கடைப்பார்வை
தூதூ விட்டாய்
எனை நோக்கி

உயிர்கொல்லும்
ஆயுதம்- உன்
விழிப் பார்வை

உயிர் கொடுக்கும்
பாத்திரம்- உன்
இதழ்சேவை

இது
மெல்லியதோ
அன்றி
வலியதோ
யாம் அறியோம்

ஆனால்
இனியது- தான்
அறிவோம்

மனோஜ்
05-05-2007, 05:08 PM
கடைசி வரிகள் சரியில்லை இப்படியா எழுதுவது கவிதை யா இது ச
என்று திட்டவில்லை ஏன் இப்படி பின் குறிப்பு தேவையில்லை
நன்றாக தான் கவிதை எழுதுகிறீர்களே அப்பரம ஏன்?
கவிதை அருமையிலும் அருமை உள்ளத்தின் உனர்வுகள் கவிதையில் அழகாக வெளிபடுத்துகிறீர்கள் வாழ்த்துக்கள் மேலும் படைக்க

ஆதவா
05-05-2007, 05:12 PM
ஒரே காதல் கவியாக கலக்குறீங்களே!!!! அடடே இந்தநேரம் பாத்து நான் சாமியார் ஆய்ட்டேனே!!

காதலியின் பார்வை மெலியதா? பேசும் அதரம் வலியதா? அறியாது. இனியது ஒன்றே அறிவோம்...

இது கரு.

இடையிடையே இரு வரிகள் நன்றாக அமைந்திருக்கிறது ரோசா. விழிப்பார்வையும், இதழ்சேவையும்... கண்ணியமாக இருந்தது இரண்டாம் பத்தி.. இறுதியில் முடித்த விதம் மிக அருமை.

காதலியின் பார்வை மெலியதா? (மெல்லியதா என்று கூட போடலாம்) இல்லை... அந்த பார்வைக் கத்திகள் நம்மைத் தொளைத்தால்தான் நாம் விழித்தெழுகிறோம்.. அல்லது மீண்டெழுகிறோம்.. இதழ்சேவை வலியதா (வல்லியது அல்ல..) இல்லை.. உணர்வுகளை சுண்டி இழுக்கிற மந்திரம். காதலை பரிமாற்றம் செய்ய உதவும் வியாபார நுணுக்கம். உயிர் அணுக்கள் தினவெடுத்தாடச் செய்யும் குத்துப்பாட்டு.. இன்னும் சொல்லிக் கொண்டு போகலாம்..

அருமையான நடை ரோசா.. ஓரிரு இடங்களில் எழுத்துப் பிழை..

கரு = 5
காதல் = 5
வரிகள் = 4
ஒட்டுமொத்த நடை = 5
சில பழைய நடை வார்த்தைகள் = 5
பிழை = - 4 (காத்திருந்தேன், தூது, வல்லியது)

ஆக மொத்தம் 20 பணம்

சக்தி
05-05-2007, 05:28 PM
கடைசி வரிகள் சரியில்லை இப்படியா எழுதுவது கவிதை யா இது ச
என்று திட்டவில்லை ஏன் இப்படி பின் குறிப்பு தேவையில்லை
நன்றாக தான் கவிதை எழுதுகிறீர்களே அப்பரம ஏன்?
கவிதை அருமையிலும் அருமை உள்ளத்தின் உனர்வுகள் கவிதையில் அழகாக வெளிபடுத்துகிறீர்கள் வாழ்த்துக்கள் மேலும் படைக்க

நீக்கி விட்டேன் நண்பரே, மேலும் திரு. ஆதவாவிற்கும் உங்களுக்கும் என் நன்றிகள்

ஆதவா
05-05-2007, 05:39 PM
அடப்பாவமே ! என்னங்க மனோ! கடைசி வரி நன்றாகத்தானே இருக்கு..

அக்னி
05-05-2007, 05:46 PM
உயிர்கொல்லும்
ஆயுதம்- உன்
விழிப் பார்வை

உயிர் கொடுக்கும்
பாத்திரம்- உன்
இதழ்சேவை

எழில் கொஞ்சுகின்றது... ஆனால் எளிமையாக...
ரசித்தேன்... மேலும் எதிர்பார்க்கின்றேன்...

சக்தி
05-05-2007, 06:28 PM
திரு.அக்னி அவர்களுக்கு என் நன்றி

mravikumaar
06-05-2007, 03:24 AM
கவிதை தூள்

அன்புடன்,
ரவிக்குமார்

சக்தி
06-05-2007, 04:14 AM
நன்றீங்க ரவி

ஓவியன்
06-05-2007, 04:17 AM
இது
மெல்லியதோ
அன்றி
வலியதோ
யாம் அறியோம்

ஆனால்
இனியது- தான்
அறிவோம்

ஆமாம் இவையெல்லாம் ஆராய்வதற்கு வேண்டிய விடயங்கள் அல்ல - மாறாக அனுபவிக்க வேண்டியவை ரோஜா!

உங்கள் வரிகளையும் அனுபவித்தேன் வாழ்த்துக்கள் நண்பரே!

சுட்டிபையன்
06-05-2007, 04:24 AM
அழகான காதல் கவிதை

ஓவியா
06-05-2007, 07:09 PM
உயிர்கொல்லும்
ஆயுதம்- உன்
விழிப் பார்வை

உயிர் கொடுக்கும்
பாத்திரம்- உன்
இதழ்சேவை


முழுகவிதையில் சொக்கியே போனேன். இந்த வரிகள் தூள்மாமே

ரோஜா,
தங்கள் கவிதையில் எழில் கொஞ்சும் வரிகள் அருமையோ அருமை,

மிகவும் எழிய வரிகளில் அசத்துறீங்க.

ஒவ்வொன்றும் ஒரு ரோஜாவின் தன்மை, பாராட்டுக்கள்

சக்தி
07-05-2007, 04:48 AM
நன்றி தொழியே. உங்கள் விமர்சனம் என்னை மென்மேலும் எழுதத்தூண்டும்