PDA

View Full Version : ஒசூர் அருகே அதிசய கிராமம்



ஜோய்ஸ்
05-05-2007, 02:58 PM
ஒசூர் அருகே வவ்வால்களை குல தெய்வமாகவும், முன்னோர்களாகவும் பாவித்து வழிபடும் அதிசய கிராமம் உள்ளது. திருவிழா நாட்களில் இனிப்புகளை படையலிட்டு வவ்வால்களை அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ளது கவுதாசபுரம். இங்குள்ள நான்கு மா மரங்களில் இரண்டு நூற்றாண்டுகளாக வவ்வால்கள் வசித்து வருகின்றன. குட்டி, பெரியது என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் உள்ளன. இவற்றை அப்பகுதி மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். யாரும் அவற்றை விரட்டவோ, கொல்லவோ அனுமதிப்பதில்லை. வவ்வால்களை பட்சிகள் என்றும், தேவதைகள் என்றும் அழைக்கின்றனர்.

இவற்றுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். தீபாவளி, பொங்கல், யுகாதி திருவிழா என அனைத்து திருவிழாக்களின்போதும் வவ்வால்களுக்கு தேங்காய், பழம் வைத்து பூஜை செய்து வழிபடுகின்றனர். பூஜையின் போது தட்டு, தட்டாக இனிப்புகளை படைத்து வழிபடுகின்றனர். சிலர் வவ்வால்களை முன்னோர்கள் என்றும், குல தெய்வமாகவும் வழிபடுகின்றனர். புனித இடமாக கருதப்படும் வவ்வால்கள் இருக்கும் பகுதிக்கு மாதவிடாய் ஆன பெண்கள் நுழைவது இல்லை.

பல நூறு ஆண்டுகளாக இப்பகுதியில் தொடர்ந்து வவ்வால்கள் இருப்பதால் இப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். திருமணம், புதிய தொழில் தொடங்குவது உள்ளிட்ட நல்ல காரியங்கள் செய்யும் முன் இங்கு வந்து வவ்வால்களை தரிசித்த பின்னரே காரியத்தில் இறங்குகின்றனர்.

இது குறித்து பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், வவ்வால்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. அவற்றின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள். இந்த காலக் கட்டத்தில் 15 முறை இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும். ஆனால், கவுதாசபுரத்தில் உள்ள வவ்வால்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக அதே இடத்தில் இருப்பது சிறப்பம்சம் என்றனர்.

சொடுக்குங்கள் சுட்டியை.
http://www.dinakaran.co.in/epapertamilmurasu/552007/TM_05-05-07_E1_04-03%20CNI.jpg

மனோஜ்
05-05-2007, 03:05 PM
இது முடபழக்கவழக்கம் என்பதா அல்லது அறியாமை என்பதா ?

சக்தி
05-05-2007, 03:06 PM
ஆச்சரியமான விசயம் தான்.

அறிஞர்
05-05-2007, 03:09 PM
நான் படித்த அரசு கல்லூரியில் வகுப்பறையில் வவ்வாலுடன் தான் பாடம் படிப்போம்.....

எது எப்படியோ... மற்றவர்களுக்கு வவ்வால்கள் தொல்லை கொடுக்காவிட்டால் நல்லது தான்.

ராஜா
05-05-2007, 03:23 PM
சில வழக்கங்கள் வினோதமானவை.

எவருக்கும் இன்னல் இல்லாத பட்சத்தில் அவை இருந்துவிட்டுப் போகட்டுமே..!

ஜெயாஸ்தா
05-05-2007, 03:48 PM
வொளவால்கள் பற்றி இன்னொரு கொசுறு செய்தி: வெளாவால்களுக்கு சாப்பிடுவதற்கும், கழிவை வெளியேற்றவும் ஒரே உறுப்பு மட்டுமே உள்ளது. அதாவது வாய்வழியாக சாப்பிட்டு அந்த வழியாகவே ஆய் போய்விடுகிறது என்றும் வைத்துக்கொள்ளலாம்.

ஓவியன்
06-05-2007, 03:52 AM
வெளவாலா???

அப்ப அவங்க பாட் மேன் பரம்பரை போல......