PDA

View Full Version : உணர வைத்தாள்



mravikumaar
05-05-2007, 02:09 PM
காதலை
காதல்தந்த சுகத்தை

உன்னைப் பார்த்தால்
ஊஞ்சலாடும் இதயத்தை
நீ பார்த்தால்
உச்சி முதல் உள்ளங்கால் வரை
நரம்புகளில் ரயில் ஓடுவதை

உன்னிடம் பேசினால்
உலகம் மறந்துபோவதை
நீ பேசினால்
குருதி குத்தாட்டம்போடுவதை

உன்னை நினைத்தால்
உடலெங்கும்
நாடிநரம்புகள்
நடனமாடுவதை

உனக்காக காத்திருந்தால்
உண்டாகும் சுகத்தை
இயற்கையை நான்
இயற்கையாக ரசிப்பதை

கவிதை எனக்குள்
காற்று போல் வந்ததை

இவையனைத்தும்
உணர வைத்தவள்

பிரிவு துயரைத்தையும்
பிரிந்த வலியையும்
இன்னும் பிற
இன்னல்களையும்
உணர வைத்தாள்

ஒருவேளை
காதல் முழுமையடைய வேண்டும் என
நினைத்தாளோ? என்னவோ?.

மன்ற நண்பர்களே விமர்சனம் தாருங்கள்.

அன்புடன்,
ரவி

ஆதவா
05-05-2007, 02:19 PM
அன்பு கர்ணா (பேரே அமைஞ்சுபோச்சு..)

கவிதை அருமை.

காதல் - அது ஒரு ஆன்மீகம். இருப்பதும் தெரிவதில்லை. உணர்வதும் புரிவதில்லை.. காதலுக்கு தனி பாசைகள் தனி செய்கைகள் தனி உணர்ச்சிகள். தனி கவிதைகள்... காதலின் பாதையே தனி.. அதனால்தான் ஆதிகாலம் முதல் காதல் அழியாமல் இருக்கிறது. இறை பக்திக்கு ஈடானது உண்மை காதல்.

உணர்வுகளை ஏற்படவைப்பவள் காதலி. காதலின் அருமை காதலித்தவர்களுக்குத் தெரியும். உணர்வுகளின் தொகுப்பு காதல்.

உமது கவிதை அதைத்தான் சொல்லுகிறது. உச்சிமுதல் கால்வரை நித்தம் நீக்கமற நிறைந்திருப்பாள் காதலி. உணர்ச்சிகளை கிளப்புவாள்.. கண்களை சொடுக்குவாள். காதுகளில் பாடுவாள்.

ஊஞ்சலாடும் இதயம். நரம்புகளில் ரயில் ஓடும்.... மிகச் சரியாக அழகாக இருக்கிறது வார்த்தைகள்.. சிலர் கவிதைகளில்தான் இந்த வார்த்தைகளை கவனித்திருக்கிறேன்... பாராட்டுக்கள் அதற்கு...

குருதி குத்தாட்டம் போடும் - மேற்சொன்னவைகள் போலவே.. வித்தியாச சிந்தனை.. சபாஷ் போடவைக்கும் வரிகள்.

நரம்புகளின் நடனம் - ஏற்கனவே ரயில் ஓட்டியாயிற்று அதனால் இதனை என்னால் ரசிக்க முடியவில்லை என்றாலும் வரிகள் அருமையாக இருக்கிறது.

காற்றாக கவிதை, மிகவும் சரி... அட போட வைக்க்கும் வரிகள்...

முடிவும் பிரமாதம்.. தேர்ந்த கவிதை. காதலில் அழுத்தமாய்... சொன்னவிதமும் புதுமை வார்த்தைகளும் டாப்... மேலும் எழுத வேண்டுகிறேன்...

வார்த்தை பிரயோகம் - 5
கனக்கச்சித வரிகள் - 5
பிழையின்மை - 5
அழகிய கரு - 7
ஒட்டுமொத்த அழகு - 5 ஆக 27 பணம் உமக்கு...

mravikumaar
05-05-2007, 02:43 PM
ஆதவா,
உங்களது விரிவான விமர்சனத்திற்கும்,
காதலின் விளக்கத்திற்கும்
முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நரம்புகளின் நடனம்-இதை எழுதும் போதே மனதில் தோன்றியது
நீங்கள் சொல்லிவிட்டீர்கள் நன்றி



உணர்வுகளை ஏற்படவைப்பவள் காதலி. காதலின் அருமை காதலித்தவர்களுக்குத் தெரியும். உணர்வுகளின் தொகுப்பு காதல்.



உண்மைதான் ஆதவா

அன்புடன்,
ரவி

ஓவியன்
06-05-2007, 07:53 AM
உள்ளத்து வலி
எப்படியெல்லாம் உடலை வருத்துகிறது.

அருமை ரவி!

poo
09-05-2007, 07:40 AM
கவிதை அழகு... ஆதவனின் விமர்சனம் அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகலன்.. விலைமதிக்க முடியாத சொத்தாகிய ஆதவன் கரம்பட்டபின் கவிதைக்கு வேறென்ன வேண்டும் இங்கே..

வாழ்த்துகிறேன்...

ஓவியன்
09-05-2007, 07:42 AM
இரு பெருந்தலைகள் கவிதையை அருமை என்று விட்டார்கள்.

அதுவே உங்கள் கவிதைக்கு கிடைத்த சிறந்த அங்கிகாரம்.

கலக்குங்கள் நண்பரே!

mravikumaar
09-05-2007, 08:55 AM
நன்றி பூ

நன்றி ஓவியன்

அன்புடன்,
ரவிக்குமார்