PDA

View Full Version : லண்டனில் ஒருநாள்



ஆதவா
05-05-2007, 01:47 PM
அன்னக்கி காலைல்ல 9.00 மணி.. நல்லா தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு போன்... அட இந்நேரத்தில
யாரப்பா தூக்கத்த கெடுக்கறதுன்னு போனை எடுத்தேன்.. பார்த்தால் வெளிநாட்டு அழைப்பு... எல்லா
எண்களையும் போட்டு போன் திரையில் இடம் பத்தாம No Space என்று அந்த அழைப்புக்குண்டான எண்
இருந்தது. எனக்கு பயம் வேற.. முன்னபின்ன தெரியாத நம்பர அட்டெண்டு பண்ணி நம்ம போனு கெட்டு
போச்சுன்னா... சரி சரி.. அப்படி என்ன பெரிய போனா வெச்சுருக்கோம்... எடுத்து ஹலோ என்றேன்.

" நான் தான் மது. எப்படி இருக்கே ஆதவா?"

"மதுரகனா? இல்லை நம்ம மதியா? (ராஜேஸ்குமார்) நீங்க யார்னு தெரியலீங்க.. ஆனா ஒன்னு மட்டும் தெளிவு.
தமிழ்மன்றத்தில இருந்துதான் கூப்பிடறீங்க"

" அடப்பாவி ஆதவா! உலகக்கிண்ண பரிசுப்போட்டி நடத்தினேனே ஞாபகம் இல்லையா?"

" அட ஆமாம்... நல்லா இருக்கீங்களா? என்னோட நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்? அது சரி நான் என்ன
சனாதிபதியா?"

" அதெல்லாம் இருக்கட்டுமப்பா.. உன் வீட்டு அட்ரஸ் சொல்லு. உனக்கொரு கொரியர் அனுப்பனும்.."

" என்ன அனுப்பப் போறீங்க? ஆந்த்ராக்ஸா? " சிரித்துக் கொண்டே கேட்டேன்..

" இல்லைப்பா. இது சஸ்பென்ஸ். வீட்டு அட்ரஸ் சொல்லு.. அப்பறம் உனக்குத் தெரியும்.."

டொக்.

எனக்கு பக் பக் னு இருந்தது... பாரின் காலெல்லாம் வருது. அட்ரஸ் கேக்கறாங்க. பார்சல்னு வேற
சொல்றாங்க... அய்யய்யோ.. சரி மது நம்மாளு. பிரச்சனை இல்லை. அப்படீனுட்டு அன்றாட வேலைல்ல
கவனம் செலுத்தினேன்..

சொன்ன மாதிரியே ஒரு பார்சல் அனுப்பிட்டாருங்க பாருங்க.. அடடா.. ஒரே குஷி. ஏதோ அனுப்பி
இருக்காரு.. பணமா இருக்குமோ? சேசே பணத்த பார்சலா அனுப்புவாங்களா... சுமாரா 200 கிராம் தேறும்.
வாங்கி பிரிச்சா அதுக்குள்ள ஒரு லெட்டர் கிடந்தது,.
அதை அப்படியே அடிபிறழாம இங்க எழுதறேன் படிச்சுக்கோங்க

" அன்பு ஆதவனுக்கு,
நலம் நலமறிய ஆவல். சமீபத்தில உலக் கிண்ண பரிசுப்போட்டி நடத்தினன். ஞாபகம் இருக்கல்ல.. அதில் நீர்
இரண்டாவது இடம். வாழ்த்துக்கள் ஆதவன். சொன்ன மாதிரியே இரண்டாமிடத்து பரிசான " லண்டனில்
ஒருநாள் - ஓவியா சுற்றிக் காண்பிப்பார் " என்ற பரிசு உங்களுக்கு வழங்கப்படுகிறது. விசா டிக்கெட் இருக்கு.
பாஸ்போர்ட் வெச்சு இருக்கீங்கல்ல.. உடனே கிளம்பி வாங்க.. லண்டனில் ஓவியாவின் அட்டகாசத்தை
சமாளிக்கவும். பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்
அன்பு
மது."

அப்படியே மயக்கம் வந்துருச்சு.. லண்டனுக்கு இலவச டிக்கெட்டா...

உடனடியா ஓடிப்போய் குமரன் சில்க்ஸ்ல ரெண்டு பேண்ட் ரெண்ட் சர்ட் எடுத்துக்கிட்டேன்.. எதுக்கும்
தேவைப்படுமேன்னு கர்சீப் ஒன்னு வாங்கி வெச்சு கிட்டேன்.. வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு
சென்னையிலிருந்து விமானம்.. புதன் கிழமையே சென்னைக்கு போய்ட்டேன்.. ஆனா இந்த விடயம்
சென்னைவாழ் மன்றத்தினருக்குத் தெரியாது. சரியா அஞ்சு மணிக்கு மீனம்பாக்கம் போய் சேர்ந்து விமான
நிலையத்தில முதன்முறையா கால் வெச்சேன்... யப்பா.. என்னாமாதிரி இருக்கு... நமக்கெல்லாம் இந்த
கொடுப்பினை கிட்டுமான்னு ஏங்கிட்டு இருந்த காலம்.. நம்ம மது அண்ணாச்சியால நிறைவேறப் போகுது..
அப்படியே சுத்திப் பாத்துகிட்டே கழுத்து வலிக்க ஒக்காந்தேன்.. அங்க வேலை செய்ற பொண்ணுங்கள
அப்படியே நோட்டம் உட்டுகிட்டே இருக்கையிலே சரியா எட்டு மணிக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம் செக்
பண்ணி ரன்வேக்கு அனுப்பினாங்க.... யப்பா. என்ன பெரிய ஏரோபிளேனு.. அப்படியே நடுங்கிட்டேன் சாமி..
தனியா போறதனாலா கொஞ்சம் கூச்சம் இருந்தது. இருந்தாலும் பிரம்மாண்டம் நம்ம கண்ண மறச்சுட்டுது.
மெதுவா போய் உட்கார்ந்தேன்.. பஞ்சு மாதிரி இருக்கைகள்.. சுத்தமான காற்று. ஏகப்பட்ட வசதிகள். ஒன்றா
ரெண்டா. சொல்றதற்கே இன்னொரு திரி வேணும்... அங்க பணிப்பொண்ணுங்க வந்தாங்க.. நல்லா
பேசனாங்க.. எப்படி எப்படி எது உபயோகப்படுத்தனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.. எல்லாம் ஆங்கிலம் தான்..
ஹி ஹி எனக்கு ஒன்னுமே புரியல.. உதடு அசையறது மட்டும் ஜொல்லீட்டு இருந்தேன்...

தொடரும்..

ஓவியன்
06-05-2007, 05:24 AM
ஆதவா அசத்தலா ஆரம்பிச்சு இருக்கீங்க!, தொடரும் பாகங்களில் பலரது தலை உருளப் போகிறது என்பதை நினைக்கும் போதே மனசிலே ஆர்வம் பேயாட்டம் போடுது.

தொடருங்க தலைவா!

ஓவியா
06-05-2007, 04:27 PM
அடடே ஆதவா, அசத்துரே,

அச்ஷோ, உன்னை பாராட்டியே ஃபோரடிக்குதுலே!!!!!!!!!

சரி தொடரும்லே.

ஷீ-நிசி
06-05-2007, 04:33 PM
ஆரம்பமே அசத்தல்.... லண்டனைப் பற்றி நானும் தெரிஞ்சிக்கிறேன்.. உன் (உடான்ஸ்) தயவால....

இணைய நண்பன்
06-05-2007, 04:44 PM
ஆதவா.....அசத்தலான தொடர்..இன்னும் சற்று நேரத்தில் ஓவியாவின் அட்டகாசத்தையும் சொல்வீர்கள் தானே?

ஓவியா
06-05-2007, 04:48 PM
அதே அதே சபாபதே

இணைய நண்பன்
06-05-2007, 04:55 PM
அதே அதே சபாபதே


ஆதவா - ஓவியாவின் மிரட்டல்களுக்கு பயப்பட வேணாம். எல்லாம் சொல்லுங்கள்

மனோஜ்
06-05-2007, 05:10 PM
இதற்கு மேல் ஜாருமே சரிஜான பதிலை சொலவிலை, எனவே இதுவரை பெற்ற புள்ளிகளை வைத்து பரிசுகள் வளங்கபடுகிறது

முதலிடம் பூ.............25 புள்ளிகள்

இரண்டாமிடம் மனோஜ்.....25 புள்ளிகள்

மூன்றாமிடம் ஆதவா.... 20 புள்ளிகள்

4. நரன்..........15 புள்ளிகள்
5. ஷீ-நிசி.... 10 புள்ளிகள்

பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
உங்களுக்கு மூன்றவது இடமாச்சே மது எனக்கு தராம உங்களுக்கு கூடுத்துடாரா அனியம் அக்குரமம்
இத தட்டி கேட்க யாரும் இல்லையா ஆதவா நீங்களாவது கேலுங்க

அன்புரசிகன்
06-05-2007, 05:29 PM
தொடருங்கள் சூரியப்புதல்வரே...

மதி
07-05-2007, 03:19 AM
நல்ல தொடக்கம் ஆதவா...
லண்டன் பயணம் எப்படி..?? ஹிஹி

மன்மதன்
07-05-2007, 06:14 AM
அதென்னபா லண்டனில் ஒரு நாள்.. நீர் போய் சேர்வதற்கே ஒருநாள் போயிடுமே!! அப்படியே அதே ஃபிளைட்டை பிடிச்சி திரும்ப வந்திடணுமா?? :D :D

ஓவியன்
07-05-2007, 06:24 AM
அதென்னபா லண்டனில் ஒரு நாள்.. நீர் போய் சேர்வதற்கே ஒருநாள் போயிடுமே!! அப்படியே அதே ஃபிளைட்டை பிடிச்சி திரும்ப வந்திடணுமா?? :D :D

அட சரியான கேள்வி!:icon_blush:

எங்கேயப்பா நம்ம ஆதவனைக் காணோம்???:lachen001:

ஆதவா
07-05-2007, 08:20 AM
வந்துட்டேன் தலைகளே!!!! ஹி ஹி
அனைவரின் ஊக்கத்திற்கும் எனது நன்றி... வரும் பதிவுகளில் பல சூடு இருக்குமா இல்லையா என்பது தெரியாது.. ஆனால் ஓவியா அக்கா செய்த அட்டாக் காசம் இருக்கே அம்மம்மா....
மன்மி.... லண்டனில்தானே ஒருநாள்... லண்டன் ப்ளைட்டில் ஒருநாள் இல்லையே!! ஹி ஹி இப்போ என்னா பண்ணுவே இப்போ என்னா பண்ணுவே...
மனோ!! இந்த விஷயத்தை மதுகிட்ட கேட்டேன்... ஹி ஹி ஹி.. மனோக்கு அனுப்பவேண்டிய டிக்கெட்ட் கொஞ்சம் மாறுதலா உனக்கு வந்துருச்சு... சமாளின்னுட்டாரு.. இதுக்குத்தான்.. ஒம்பது மணிவரைக்கும் தூங்கன்னும்கிறது....

poo
08-05-2007, 08:49 AM
அடங்க நம்மகிட்ட சொல்லவே இல்லையேன்னு தலைப்பைப் ஓடிவந்தேன் ஆதவன்...

அதன்பின் புரிந்து கொண்டேன், நமக்கு அமெரிக்காவுலதானே ஒருநாள்-னு..

Mathu
08-05-2007, 11:26 AM
ஆகா அசத்தல் ஆதவா...! தொடரட்டும் கலக்கல்... அப்படியே ஓவியாவின் அட்டகாசங்களையும் கொஞ்சம் சொல்லுப்பா இங்க தாங்க முடியல ரவுசு..

:icon_drunk: :aetsch013:

ஆதவா
08-05-2007, 11:33 AM
எல்லாம் நீங்க கொடுத்த டிக்கெட் விளைவுகள் தான்..

பூ!! அமெரிக்க அனுபவங்களைச் சொல்லலாமே? :D :D

அன்புரசிகன்
08-05-2007, 11:43 AM
எல்லாம் நீங்க கொடுத்த டிக்கெட் விளைவுகள் தான்..

பூ!! அமெரிக்க அனுபவங்களைச் சொல்லலாமே? :D :D

நல்லாத்தெரியுது... வேறயாருக்கப்பா டிக்கட் கிடைச்சது...

லண்டனுக்குப்போய் 1 நாள் தங்கி வந்த ஆசாமி ஆதவருதான். (சட்டபூர்வமாக செல்பவர்களை மட்டும் கருத்தில் கொண்டு)

gragavan
08-05-2007, 11:46 AM
லண்டன் பயணமா...சூப்பர். மிக நன்றாக இருந்ததா? தொடரவும். நடந்தவைகளை ஒளிவுமறைவின்றிச் சொல்லவும்.

அன்புரசிகன்
08-05-2007, 12:01 PM
லண்டன் பயணமா...சூப்பர். மிக நன்றாக இருந்ததா? தொடரவும். நடந்தவைகளை ஒளிவுமறைவின்றிச் சொல்லவும்.

அவர்கள் ஒளிப்பதென்றால் அங்கு சென்றதைத்தான் மறைக்க வேண்டும். 1நாளில் அப்படி என்ன செய்தார்கள் என்று தெரியல.
ஓ.... இது மட்டுமோ? :icon_drunk:

poo
09-05-2007, 06:26 AM
ஷீ-க்கு டிக்கெட் கிடைக்கலயா ஆதவன்?!!..

அமெரிக்க அனுபவங்களை சொல்லிடுவேன்.. அறிஞர்கிட்ட எதுக்கும் ஒருதரம் கேட்டுடறேன்..

அமரன்
01-06-2007, 04:36 PM
ஆதவா ஆரம்பமே அசத்தலப்பா. அடுத்த பாகத்துக்கான சுட்டியை இணைத்து விடுங்கள். தேடிப்பிடித்து படிப்பதுக்கு இலகுவாக இருக்கும். அடுத்த பாகத்திலும் இதே சுவை இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இப்போ தேடிப்போறேன்.

ஓவியா
01-06-2007, 10:24 PM
ஆதவா ஆரம்பமே அசத்தலப்பா. அடுத்த பாகத்துக்கான சுட்டியை இணைத்து விடுங்கள். தேடிப்பிடித்து படிப்பதுக்கு இலகுவாக இருக்கும். அடுத்த பாகத்திலும் இதே சுவை இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இப்போ தேடிப்போறேன்.

போய் படிசுட்டு, மயக்கமடிச்சு விழுங்க. :sport-smiley-014:

அக்னி
01-06-2007, 10:28 PM
ஆமா, ஆதவருக்கு விசா கொடுத்தவர இண்டர்போல் தேடுதாமே...

நானும் தேடுறன் ஆதவரின் அடுத்த பாகத்தை...

அன்புரசிகன்
01-06-2007, 10:36 PM
ஆமா, ஆதவருக்கு விசா கொடுத்தவர இண்டர்போல் தேடுதாமே...

ஏனய்யா?.... ஒன்று தெரியுமோ?

ஓவியா
01-06-2007, 10:38 PM
ஏனய்யா?.... ஒன்று தெரியுமோ?

இதென்ன கேள்வி? புரியவில்லையே!!!

அக்னி
01-06-2007, 10:40 PM
ஏனய்யா?.... ஒன்று தெரியுமோ?


இதென்ன கேள்வி? புரியவில்லையே!!!

ஓ.. தெரியுமே... இதானே...?

1

அன்புரசிகன்
01-06-2007, 10:40 PM
இதென்ன கேள்வி? புரியவில்லையே!!!

ஓஓஓ... உங்களுக்கு ஒன்று தெரியாது போலிருக்கே அக்கா...

இது தான் 1. ஆங்கிலத்தில் One. சிங்களத்தில் எக்காய். ஹிந்தியில் ஏக். (மிச்சம் மொழியில் எனக்கும் தெரியாது)

அன்புரசிகன்
01-06-2007, 10:41 PM
ஓ.. தெரியுமே... இதானே...?

1

நீங்கதான் வகுப்பில் முதலாம் பிள்ளைபோலிருக்கே... :sport-smiley-014: :icon_clap: :D :D :D

அக்னி
01-06-2007, 10:43 PM
ஓஓஓ... உங்களுக்கு ஒன்று தெரியாது போலிருக்கே அக்கா...

இது தான் 1. ஆங்கிலத்தில் One. சிங்களத்தில் எக்காய். ஹிந்தியில் ஏக். (மிச்சம் மொழியில் எனக்கும் தெரியாது)

ருஸ்கியில்.. அஜிந்
டச்சில்... எய்ன்
இத்தாலியில்... uஉன

ஓவியா
01-06-2007, 10:44 PM
ஓஓஓ... உங்களுக்கு ஒன்று தெரியாது போலிருக்கே அக்கா...

இது தான் 1. ஆங்கிலத்தில் One. சிங்களத்தில் எக்காய். ஹிந்தியில் ஏக். (மிச்சம் மொழியில் எனக்கும் தெரியாது)

அஹஹ்ஹஹஹ செம்ம பதில்.

மலாயில் சத்து, சீனத்தில் யாட்.

அன்புரசிகன்
01-06-2007, 10:44 PM
ஓவியாக்கா.. மலாய் இல் எப்படி?

ஓவியா
01-06-2007, 10:46 PM
ஓவியாக்கா.. மலாய் இல் எப்படி?

மலாயில் சத்து

சீனத்தில் யாட்

ஆதவா
02-06-2007, 01:18 AM
தமிழில் ஒன்று
மலையாளத்தில் ஒன்னு(னி)
தெலுகில் ஓட்டி (ஒகுட்டி)
இந்தியில் ஏக்

என்ன விளையாடறீங்களா? விஷயத்துக்கு வாங்க....

சரி அந்த ஒன்னு என்ன தெரியுங்களா? அடுத்த பாகத்தை எழுதக்கூடாதுன்னு யாரோ லண்டன்ல இருக்கிற ஒருத்தர் சதி பண்றார்... பிகு: அவர் பெண்பிள்ளையாம்...

அன்புரசிகன்
02-06-2007, 08:46 AM
என்ன விளையாடறீங்களா?

நீங்க புகுந்து விளையாடுங்க.


விஷயத்துக்கு வாங்க....
வந்திட்டோம்.



சரி அந்த ஒன்னு என்ன தெரியுங்களா?
விடிய விடிய இராமன் கதை. விடிந்தாற்பிறகு இராமன் சீதைக்கு என்னமுறை என்று கேக்கிறப்பால இருக்கு. நேற்று யார்கூட :icon_drunk:



அடுத்த பாகத்தை எழுதக்கூடாதுன்னு யாரோ லண்டன்ல இருக்கிற ஒருத்தர் சதி பண்றார்... பிகு: அவர் பெண்பிள்ளையாம்...

ஓ.... அது ஒரு பென் (ண்) குட்டியோ... :D

மயூ
14-06-2007, 05:24 AM
இன்னிக்குத்தான் வந்து இதைப் பார்த்தன்...
அடப்பாவி... லண்டன் எல்லாம் போய் வந்தியா???

ஓவியா
20-06-2007, 08:03 PM
மயூ, நீயுமா?? உண்மையா நம்பினாயா?? அடப்பாவமே.

நாமயெல்லாம் ஒரே தோட்டத்து மாங்காய், இப்படி அப்பாவியா இருக்கோமே!!!

மனோஜ்
20-06-2007, 08:07 PM
நீங்க அப்பாவியா இருக்கவும் தான் ஆதவா உங்களை குழம்பு வச்சுட்டார்

namsec
21-06-2007, 05:59 AM
ஒரு அளவுல்லையா காதுல பூவசுத்த*

அமரன்
21-06-2007, 12:39 PM
ஒரு அளவுல்லையா காதுல பூவசுத்த*

இதத்தான் சித்தரே நானும் சொன்னேன்...

ஓவியன்
21-06-2007, 12:40 PM
இன்னிக்குத்தான் வந்து இதைப் பார்த்தன்...
அடப்பாவி... லண்டன் எல்லாம் போய் வந்தியா???

ஆமா நீர் துடைப்பக் குச்சில பறக்கிற மாதிரி.........:D

aren
14-07-2007, 06:23 PM
நான் இதுவரை இதை பார்க்கவில்லையே.

ஆரம்பமே அருமையாக இருக்கு. 9.00 மணி வரைக்கும் தூக்கமா? ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

விகடன்
26-07-2007, 03:44 AM
இது கதை அல்ல நிஜம் என்ற தலைப்பின் கீழா வருகிறது ஆதவா?

சஸ்பன்ஸ் அதிகமாக இருக்கிறதே. அன்றயட் தினம் ஏப்பிரல் 1ஆந்திகதியாக இருக்குமா அல்லது ஆதவன் கனவில் இதெல்லாம் ஹடந்ததா என்று ஐயம் வேறு உருவாகிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவுகட்ட வேண்டுமானால் இங்கே இருந்து பயனில்லை. ஆதலால் செல்கிறேன் அடுத்த பாகத்தைத்தேடி...

ஆதவா
26-07-2007, 07:12 PM
ஆமா நீர் துடைப்பக் குச்சில பறக்கிற மாதிரி.........:D

இந்த கிண்டல்தானே வேனாங்கறது?? ஏற்கனவே துடைப்பட்த்துல பறக்கறேன் பேர்வழின்னு மூக்கை உடைச்சுக்கிட கதை உங்களுக்குத் தெரியாதா?

ஆதவா
26-07-2007, 07:13 PM
இது கதை அல்ல நிஜம் என்ற தலைப்பின் கீழா வருகிறது ஆதவா?

சஸ்பன்ஸ் அதிகமாக இருக்கிறதே. அன்றயட் தினம் ஏப்பிரல் 1ஆந்திகதியாக இருக்குமா அல்லது ஆதவன் கனவில் இதெல்லாம் ஹடந்ததா என்று ஐயம் வேறு உருவாகிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவுகட்ட வேண்டுமானால் இங்கே இருந்து பயனில்லை. ஆதலால் செல்கிறேன் அடுத்த பாகத்தைத்தேடி...

நிஜத்தை சொன்னால் பொய் என்று சொல்கிறீர்கள்.. அட பொய்தான் சொல்லலாம் என்றால் அதை நிஜம் என்று சொல்கிறீர்கள்.....

என்னங்க ஜாவா.. இப்போதெல்லம உங்களை அடிக்கடி பார்க்கமுடிவதில்லையே!! பணிப்பளுவா?

விகடன்
27-07-2007, 10:19 AM
என்னங்க ஜாவா.. இப்போதெல்லம உங்களை அடிக்கடி பார்க்கமுடிவதில்லையே!! பணிப்பளுவா?

பணிப்பழுவெல்லாம் உண்டுதான். ஆனால் அதெல்லாம் காரணம் கிடையாது ஆதவா. இருந்தாலும் அதை சொல்லிக்கொள்ள மாட்டேன். கடந்த சில வாரங்களாக எமது இணையம் துண்டிக்கப்பட்டிருந்தது.