PDA

View Full Version : மொழிகள் தேவை இல்லை



சக்தி
05-05-2007, 01:41 PM
எங்கே உனது நினைவலைகள்
அங்கே எனது பள்ளியறை
பெண்ணிற்கும் உண்டு வாசம்
இங்கே
பூவிற்கும் ஏனடி ரோசம்
காலம் வகுத்தது கோலம்
நம் காதலுக்கில்லை பாலம்
உள்ளங்கள் இணைந்த பின்பு
உருவங்கள் தேவை இல்லை
விழிகள் சந்தித்தபின்
மொழிகள் தேவை இல்லை

பின்குறிப்பு:

தவறிருந்தால் மன்னிக்காமல் திட்டுங்கள்:violent-smiley-010:

ஆதவா
05-05-2007, 01:58 PM
முதலில் வாழ்த்துக்கள். கவிதை அருமை. கருத்து எளிமை. காதல் புதுமை.

விமர்சனம் ஏற்கும் பக்குவம் உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவள் நினைவுகள் உலவும் இடமெல்லாம் இவன் மூச்சுறங்கும் இடம். அழகான கற்பனை ரோஜா....பூவான பெண்ணுக்கு உண்டான வாசமானதைக் கண்டு பூவுக்கு ஏன் ரோசம்? நியாயம் தான் ரோசப்படக்கூடாதே!! காலம் கோலம் போட்டதா? காதலுக்கு பாலம் வேண்டாமா.... அதுசரி.. நெருக்க மாகிவிட்டீங்க... உள்ளம் இணைந்த பிறகு உருவம் வேண்டியதில்லௌ- ஆங். அங்க மிஸ்டேக் பண்ணீட்டீங்க... ஹி ஹி பிறகு சொல்றேன். கடைசி வரி அருமை வாத்தியாரே!

எதுகைகள் ரசிக்கும்படி இருக்கா? ம் ஹீம்.. மன்னிக்கனு ராசா. என் கருத்து இது. கடைசி வரிகள் முதல் வகுப்பு.... அதற்கு முந்தைய வரிகள் ஜஸ்ட் பாஸ்.

உள்ளம் மட்டுமே போதுமென்றால் உலகக் காதல் எதுவுமே ஜெயித்திருக்காது,,, நிற்க. முழுமையாக ஜெயித்திருக்காது./ உடல் வேண்டும்... இது யதார்த்தம் தான் மக்கா... தப்பா எடுக்காதேயும். கவிதைக்கு இந்த வரி நிச்சயம் தேவைதான்..

எப்படிங்க நம்ம விமர்சனம்.... ??? :D :D

ராஜா
05-05-2007, 02:09 PM
உங்களின் கவிதை அருமை. அதன் கீழே உள்ள பின் குறிப்பு தவறிருந்தால் திருத்திக்கொண்டு மேலும் செம்மையடைய வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடு..

பாராட்டுகிறேன் தம்பி.

அக்னி
05-05-2007, 02:11 PM
முதலே வந்து பார்த்தேன். ஆனால், கருத்து பதிக்கவில்லை. காரணம் ஆதவா சொல்லியது போல்

உள்ளங்கள் இணைந்த பின்பு
உருவங்கள் தேவை இல்லை

வரிகள் நன்று. கரு என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், மன்றில் என் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, மூத்தோர் சுட்டுவர் என்று விட்டுவிட்டேன். சுட்டிவிட்டதால், என் மன ஓட்டத்தையும் பதித்துவிடுகின்றேன்.

மனோஜ்
05-05-2007, 02:12 PM
நல்ல கவிதை வாழ்த்துக்கள்

mravikumaar
05-05-2007, 02:13 PM
விழிகள் சந்தித்தபின்
மொழிகள் தேவை இல்லை



இந்த வரிகள் அருமை

வாழ்த்துக்கள் நண்பரே

அன்புடன்,
ரவி

சக்தி
05-05-2007, 02:22 PM
உருவங்கள் என்று குறிப்பிட்டது வெளிப்புற தோற்றமேயன்றி உடல்கள் அல்ல. எனினும் கருத்துக்கள் கூறிய என் இனிய நண்பர்களுக்கு நன்றிகள் பல.

ஆதவா
05-05-2007, 02:25 PM
உட்புறத்தோற்றம் - உள்ளம்
வெளிப்புறத்தோற்றம் - உருவம்
??? - உடல் ???

சக்தி
05-05-2007, 02:33 PM
உடல்களின் வடிவம் உருவம்

ஆதவா
05-05-2007, 02:36 PM
வெளிப்புறத் தோற்றங்கள் - உருவம்
உடல்களின் வடிவம் - உருவம்

உருவங்கள் = வெளிப்புறத்தோற்றமான உடலின் வடிவங்கள்.. அது சரி வெளிப்புறத் தோற்றம் எப்படி இருக்கும்....??/ இது சரியா?

சரி என்றால் வெளிப்புறத் தோற்றம் = உடல்.//

புரியாமல் விழிக்கும்
ஆதவன்

சக்தி
05-05-2007, 02:53 PM
அனைவருக்கும் உடல் உண்டு ஆனால் உருவம் வேறுபடடும், உதாரணமாக அழகானவன், அழகற்றவன், ரசிக்கத்தக்கவன், வெறுக்கத்தக்கவன் இப்படி பல்வேறு உருவங்கள் இவை உடலின் மேல் போர்த்தப்பட்டிருக்கும் மாயை.

அக்னி
05-05-2007, 05:22 PM
ஐயோ... கண்ணக் கட்டுதே...

ஆதவா
05-05-2007, 05:43 PM
அடப்பாவமே! நான் எழுதின பதில கானோமே??
----------------------------------------------

உருவங்களின் கூட்டு உடல்கள்.. உடல்கள் இல்லையேல் உருவமில்லை. உருவமில்லையேல் உடல் (உண்டா இல்லையா?)

ஆக ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

அரசன்
06-05-2007, 09:39 AM
விழிகள் சந்தித்தபின்
மொழிகள் தேவை இல்லை



நான் ரசித்த வரிகள்

கவிதை எளிமையாகவும், முழுமையாகவும் இருக்கிறது.

சக்தி
06-05-2007, 02:53 PM
நன்றி கலியமூர்த்தி அவர்களே

ஓவியா
06-05-2007, 09:25 PM
ஐயோ... கண்ணக் கட்டுதே...

எனக்குந்தான்லே ஆயிரம் நட்சத்திரம் கண்ணுலே தெரியுது :icon_wacko: :icon_wacko:

அக்னி
06-05-2007, 09:31 PM
எனக்குந்தான்லே ஆயிரம் நட்சத்திரம் கண்ணுலே தெரியுது :icon_wacko: :icon_wacko:

இரவில் வானம் பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள்....

ஓவியா
06-05-2007, 09:46 PM
எங்கே உனது நினைவலைகள்
அங்கே எனது பள்ளியறை

பெண்ணிற்கும் உண்டு வாசம்
இங்கே
பூவிற்கும் ஏனடி ரோசம்

காலம் வகுத்தது கோலம்
நம் காதலுக்கில்லை பாலம்

உள்ளங்கள் இணைந்த பின்பு
உருவங்கள் தேவை இல்லை

விழிகள் சந்தித்தபின்
மொழிகள் தேவை இல்லை

பின்குறிப்பு:
தவறிருந்தால் மன்னிக்காமல் திட்டுங்கள்:violent-smiley-010:

பாராட்டு
கவிதை உணர்வுகளை குவித்து மிக அருமையாக வடிக்கப்பட்டிருகின்றது. நன்றி நன்பரே.

கடைசி வரிகள் மிகவும் அழகு. பாராட்டுக்கள்.


ஒரு கருத்து,
என் பார்வையில் உருவங்கள் என்பது இரண்டு உடல்கள்.

அதன்படி பார்த்தால், இந்த வரி இடிக்குதே.


உள்ளங்கள் இணைந்த பின்பு
உருவங்கள் தேவை இல்லை



மனதளவில் கோடி முறை அன்பே, ஆருயிரே, என் காதலே, என் காதலியே, என் பூவெ, என் பொட்டே, என் கண்ணே, என் முக்கே, என் மூகுத்தியே, ஐ லவ் யு ட செல்லம் என்று சொல்வதை...................................

ஒரே ஒரு முறை ஆரத்தழுவி சொல்லும் 'அன்பே' வார்த்தைக்கு ஈடாகாது.

அதனால் காதலை முழுமையாக அடைய, உணர உருவம் அவசியமே.

(இதற்காக பலர் நாடு விட்டு நாடு பறந்து சென்று ஐ லவ் யு ட செல்லம் என்று சொல்லியுள்ளார்கலாம்)


...............................................................................................................

தாங்கள் கூரும் உருவம், உதாரணமாக
அழகானவன், அழகற்றவன், ரசிக்கத்தக்கவன், வெறுக்கத்தக்கவன் இப்படி பல்வேறு உருவங்கள் என்றால் கவிதை ஓகே.

ஷீ-நிசி
07-05-2007, 04:07 AM
கவிதை நன்றாகவே உள்ளது....

உள்ளங்கள் இணைந்த பின்பு
உருவங்கள் தேவை இல்லை

விழிகள் சந்தித்தபின்
மொழிகள் தேவை இல்லை

முதல் இரண்டு வரிகள், கவிஞனின் பார்வையில்... எனக்கு எப்படி தோணுகிறது என்றால்....

தொலைபேசி காதலை எடுத்துக்கொள்வோம்.. பார்க்கவில்லை... வெறும் பேச்சிலேயே, காதல் வயப்பட்டு இதயங்கள் இடம் மாறின காதல் இது.. நேரில் சந்திக்கும்போது உருவங்கள் எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மன வலிமையை கொடுத்திருக்கிறது இருவருக்கும் இந்த பாராக் காதல்...

இந்த நிலையில் இருக்கும் காதலிற்கு உருவங்கள் தேவையில்லையென்றால் உடல் என்று அர்த்தமில்லை.. அழகற்றவள், அழகுள்ளவள். எப்படியிருந்தாலும் ஓ.கே. அது எனக்கு பொருட்டல்ல, என்று,,

கவிஞரே, எதுகை மோனைக்காக வார்த்தைகள் அமைக்க விரும்பி, சொல்ல வந்த கருத்து படிப்பவரை சென்றடையாமல் இருந்திடக்கூடாது...
இது என் கருத்து கவிஞரே!

அடுத்த இரண்டு வரிகள் சூப்பர் ரகம்... விழிகள் சந்தித்தபின் மொழிகள் தேவை இல்லை.. மொழி படம் பார்த்துவிட்டு கவிதை எழுதினீர்களா நண்பரே!

அருமை அருமை...

சக்தி
07-05-2007, 04:36 AM
நான் தமிழ் ன் படங்கள் பார்த்து வருடங்கள் பல ஆகிவிட்டது நண்பரே. நான் கடந்த 8 ஆண்டுகளாக வடநாட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறேன். நான் தமிழகத்தில் இருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
நீங்கள் கூறிய மொழி திரைப்படத்தை நான் பார்க்கவில்லை