PDA

View Full Version : திருப்பிக்கொடு!!



poo
05-05-2007, 09:05 AM
--------------------------------------------------------------
என் மனதினைப் பிசையும் மழலைச்செல்வங்களுக்கு சமர்ப்பணம்.
(இன்று மீண்டும் என் நினைவுகளை கீறிவிட்டு விட்டது ஷீ-நிசியின் கவிதை.(கும்பகோண நிகழ்வு..) முன்பு பழைய மன்றத்தில் இட்டது.. என் ஆற்றாமையை மீண்டும் கொட்டிக் கொள்கிறேன்..
--------------------------------------------------------------

காக்காய்க் கடி கடித்து
காயா பழமா விட்டு
சாதிச் சாக்கடைகளுக்கு
அணைக்கட்டாய்...
நாளைய சமுதாயத்திற்கு
படிக்கட்டாய்..

கோர்த்துக்கொண்ட விரல்களில்
வளமான இந்தியாவின்
வரைபடத்தினை
வடித்துக்காட்டிய சிற்பிகளுக்கு
வந்ததோ சோதனைக்காலம்...
கோலங்கள் பூர்த்தியாகும் முன்னே
புள்ளிகள் கலைந்த கொடூரம்..

ஊதாங்குழலில் சுவாசத்தை
தொலைக்கும் அம்மா
சமையற்கூடத்தில்...
வண்ணமயமான வாழ்க்கையை
எதிர்நோக்கும் அப்பா
சாயப்பட்டறையில்...
தினப்படிக்கு அகவிலைப்படி
ஏறாதாவென்ற ஏக்கத்தில்...
வயிறுநிறைய வறட்சி
குறையாதாவென்ற துக்கத்தில்..

இத்துணைத் துயரிலும்
தூணாக நிற்பாரென்றே
உன்னைத் துணையாக்கி
தலைவாரி பூச்சூடி
பாடசாலைக்கு...
என்ன பிழைக் கண்டாய்...
ஏனப்பா பாடைசாலையாக்கி
எம்மையெல்லாம் சிலையாக்கினாய்?!

கொஞ்சும் மொழியில் சங்கீதம்...
சலங்கையொலி கேட்கவிருந்த
செவிகளில் சங்கொலி...

இறைவா...
எம்மை ஒலி(ளி)யிழந்தவனாக்கிவிட்டு
இசைத்திருக்கலாம்
இந்த முகாரி ராகங்களை...

நஞ்சு கலக்காத மனங்கள்...
நாளைய விடியலைத் தேடுகையில்
இன்றைய இரவை நீட்டித்துவிட்டாயே?!!

கருவறை பிரவேசத்தில்
மணவறை மகிழ்ச்சியை மிஞ்சினோம்..
இந்த கல்லறை பயணத்தில்
பிணவறை செல்ல துடித்திடும்
எம் உணர்வுகளுக்கு என்ன பதில்?!!

இறைவா திருப்பிக்கொடு...
தேசத்தின் களைகளை
கலையவந்த எம் கருவிகளை....
நாளைய இருளுக்கு
விளக்கான எம் விடிவெள்ளிகளை...
சிறகுவிரிக்க காத்திருந்த
வண்ணத்துப்பூச்சிகளை....
மலர்வதற்குள் பறித்துச்சென்ற
எம் மனத்தோட்டத்து மல்லிகைகளை...
திருப்பிக்கொடு...

வேண்டுமெனில்
ஈடாக என்னைத் தருகிறேன்...
இணையில்லா செல்வங்களை
திருப்பிக் கொடுத்துவிடு....
இருந்தபடி இறந்துகொண்டிருக்க
விருப்பமில்லையெனக்கு!!!

ஓவியன்
05-05-2007, 09:22 AM
மனதை உருக்கும் வரிகள் பூ அண்ணா!
வாழ வைக்க வேண்டிய பள்ளி ஒன்று
மழலைகளின் வாழ்வில் மண் அள்ளிப் போட்டு,
தீயில் அள்ளிப் போட்ட கொடுமையை என்னவென்பது?
அறிந்த போது மனம் பதறியது,
இப்போது உங்கள் கவிதையைக் கண்ட போதும்,
சில கேள்விகளுக்கு ஆண்டவன் கூட விடை அளிப்பதில்லை - அவ்வாறே
உங்கள் கவிதைக்கும்.


தேசத்தின் களைகளை
கலையவந்த எம் கருவிகளை....
நாளைய இருளுக்கு
விளக்கான எம் விடிவெள்ளிகளை...
சிறகுவிரிக்க காத்திருந்த
வண்ணத்துப்பூச்சிகளை....
மலர்வதற்குள் பறித்துச்சென்ற
எம் மனத்தோட்டத்து மல்லிகைகளை...
திருப்பிக்கொடு...

வேண்டுமெனில்
ஈடாக என்னைத் தருகிறேன்...
இணையில்லா செல்வங்களை
திருப்பிக் கொடுத்துவிடு....
இருந்தபடி இறந்துகொண்டிருக்க
விருப்பமில்லையெனக்கு!!!

ஆதவா
05-05-2007, 11:11 AM
பூ!
காலம் கடந்து வந்தாலும் கருகிய வாசனை நெஞ்சைத் துளைக்கிறது. குழந்தைகளுக்கு
இரங்கற்பா என்றாலே அது இறைவன் செய்யும் கொடுமைதான். கவிதை மீண்டும்
நினைக்கத் தோன்றுகிறது அந்த நெஞ்சங்களை. ஷீ-நிசி இதேமாதிரி அழகாக
குறிப்பிட்டு இருக்கிறார். அவர் ரகம் வேறு.

சாதிச் சாக்கடை - மிக அருமையான தொடக்கம் பூ. அந்த பருவங்களில் சாதி என்றால்
என்ன என்று அறிந்திராத சிறுகாளைகள்..

கோர்த்துக்கொண்ட விரல்களில்
வளமான இந்தியாவின்
வரைபடத்தினை
வடித்துக்காட்டிய சிற்பிகளுக்கு
வந்ததோ சோதனைக்காலம்...
கோலங்கள் பூர்த்தியாகும் முன்னே
புள்ளிகள் கலைந்த கொடூரம்..

வடித்துக்காட்டவிருந்த / வந்த என்று இட்டிருக்கலாம் என்று தோணுகிறது.
பிரமாதமான கட்டமைப்பு பூ கடைசி இரு வரிகள் கவிஞன் என்ற வரைமுறை மீறி
சொக்க வைக்கிறது. பிரமாதம்.

ஊதாங்குழலில் சுவாசத்தை
தொலைக்கும் அம்மா
சமையற்கூடத்தில்...
வண்ணமயமான வாழ்க்கையை
எதிர்நோக்கும் அப்பா
சாயப்பட்டறையில்...
தினப்படிக்கு அகவிலைப்படி
ஏறாதாவென்ற ஏக்கத்தில்...
வயிறுநிறைய வறட்சி
குறையாதாவென்ற துக்கத்தில்..

வறுமை என்பது என்ன என்று நானறிவேன். அனுபவித்துள்ளேன். அந்த நினைவுகளை
அப்படியே கொண்டு செல்கிறது வரிகள். வயிர வரிகள் இவை.

இத்துணைத் துயரிலும்
தூணாக நிற்பாரென்றே
உன்னைத் துணையாக்கி
தலைவாரி பூச்சூடி
பாடசாலைக்கு...
என்ன பிழைக் கண்டாய்...
ஏனப்பா பாடைசாலையாக்கி
எம்மையெல்லாம் சிலையாக்கினாய்?!

இறைவனிடம் கேட்கிறீர்களா? வெறும் சிலையிடம் கேட்டு என்ன பிரயோசனம்.? இந்த
வார்த்தை பிரயோகம் ஷீ கவிதையிலும் உண்டு.. முன்பே உங்களிடம் இருந்ததும்
சந்தோசம்..

கொஞ்சும் மொழியில் சங்கீதம்...
சலங்கையொலி கேட்கவிருந்த
செவிகளில் சங்கொலி...

நீங்கள் இருவருமே வார்த்தைகளை நேர்த்தியாக இட்டிருக்கிறீர்கள். மகிழ்வான
வார்த்தை அதை மாற்றிப்போட்டால் துன்பகர வார்த்தை.. என்னே தமிழ்!!!

இறைவா...
எம்மை ஒலி(ளி)யிழந்தவனாக்கிவிட்டு
இசைத்திருக்கலாம்
இந்த முகாரி ராகங்களை...

நஞ்சு கலக்காத மனங்கள்...
நாளைய விடியலைத் தேடுகையில்
இன்றைய இரவை நீட்டித்துவிட்டாயே?!!

வேண்டாத வெளிச்சத்திற்க்கு வராத வேண்டுகோள். ஒவ்வொரு முறையும்
இறைவனிடமே கேட்பது இழுக்குதான். என்ன செய்ய/? நமக்கு இறைஅன்றி வேறு
தெரிவதில்லை.. முகாரி ராக இசையும் இரவு நீடலும் அருமை பூ..

கருவறை பிரவேசத்தில்
மணவறை மகிழ்ச்சியை மிஞ்சினோம்..
இந்த கல்லறை பயணத்தில்
பிணவறை செல்ல துடித்திடும்
எம் உணர்வுகளுக்கு என்ன பதில்?!!

அட அட... என்னமா விளையாடுறீங்க.. பூக்கள் வெடிக்கும் சப்தம் பிரபஞ்சம் முழுவதும்
கேட்கிறதே... கவிதைகளில் வார்த்தைகளின் பலம் தான் கவிதையின் வெற்றி. இங்கே
அது வெற்றியையும் தாண்டி...

இறைவா திருப்பிக்கொடு...
தேசத்தின் களைகளை
கலையவந்த எம் கருவிகளை....
நாளைய இருளுக்கு
விளக்கான எம் விடிவெள்ளிகளை...
சிறகுவிரிக்க காத்திருந்த
வண்ணத்துப்பூச்சிகளை....
மலர்வதற்குள் பறித்துச்சென்ற
எம் மனத்தோட்டத்து மல்லிகைகளை...
திருப்பிக்கொடு...

அதுதான் முடியாது என்று முன்னமே சொல்லிவிட்டேனே.. மற்றபடி சிறுவசிறுமிகளை
ஒப்புமை படுத்தியது மிக அருமை கவிமன்னரே! திருப்பிக் கொடுத்துவிட்டால்
கடவுளுக்கு இழுக்காமே!!

வேண்டுமெனில்
ஈடாக என்னைத் தருகிறேன்...
இணையில்லா செல்வங்களை
திருப்பிக் கொடுத்துவிடு....
இருந்தபடி இறந்துகொண்டிருக்க
விருப்பமில்லையெனக்கு!!!

இருந்தபடி இறந்துவிட.... அட அட.. ம்ம் இப்போதுதான் தெரிகிறது. பூவுக்கு ஏனப்பா
உணர்ச்சிக் கவிஞன் என்ற பெயர் என்று.. உணர்வுகளைக் கிள்ளி எறிகிறீர்களே!
போங்க... இப்படி புகழ்ந்து புகழ்ந்து எனக்கு வார்த்ததயே மறந்துபோகுது.. வேற
வார்த்தை சொல்லுங்க சாரே

சரி.. இனி விமர்சனம் :

கவிதை இறைவனிடம் வேண்டுவதாக உள்ளது. கிட்டதட்ட இம்மாதிரி கவிதைகள்
நிறைய இறைவனிடமே வேண்டுவது அல்லது கண்டிப்பது வழக்கம்.. ஆனால் இதுவரை
யதார்த்த மனிதரைத் தூற்றுவதாக எழுதப்பட நான் படிக்கவில்லை. இங்கே அது ஜஸ்ட் மிஸ்.

கொஞ்சம் நீண்டு விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. (என் கவிதைகளும்
இப்படித்தான்...) இருப்பினும் பழையகவிதை என்பதால் அது கொஞ்சம் மறைக்கிறது,.

கவிதைக்கு ப்ளஸ்.. பூ எழுதியது. என்பதுதான்..

poo
08-05-2007, 04:30 AM
நன்றி ஆதவன். இதை மீண்டும் பதிக்கும்போது., உங்கள் எண்ணம் எனக்குள்ளும் எழுந்தது.. ஆனால் இப்படி துயரங்கள் நடந்தவுடன் உடனடியாக உணர்ச்சிகளை அவிழ்த்துவிடுவது இறைவனை நோக்கியே அமைவதின் காரணம், நிகழ்வுக்கான சரியான காரணங்களும், காரணகர்த்தாக்களும் அவ்வளவு விரைவில் வெளிவராததும்தான்.

ஷீ-நிசி
08-05-2007, 04:33 AM
பூ! இது மனதை பிழிகின்ற கவிதைதான்.. சில நிகழ்வுகளில் மனம் கணத்துவிட்டால் வார்த்தைகளை நிறுத்தமுடியாது.. உங்கள் கவிதையின் நீளத்திற்கும் காரணம் இதுவே!

(இந்தக் கவிதைக்கு நான் ஏற்கெனவே பின்னூட்டமிட்டிருந்தேன்.. காணவில்லை...)

ஓவியன்
15-07-2007, 06:08 PM
நாளை கும்ப கோணக் கொடுரம் நடந்து மூன்று ஆண்டுகளாவதால்.........

இந்தக் கவிதையை மீள மேலே கொண்டுவருகிறேன்.........

தகவலுக்கு நன்றி − காந்தி அண்ணா!

அமரன்
15-07-2007, 08:01 PM
உணர்ச்சிக்கவிஞன் பூ அவர்களின் உணர்ச்சிக்குவியல் இது..வேறு எதுவும் சொல்ல முடியவில்லை..இதயம் மௌனமாகிறது...

ஓவியன்
16-07-2007, 03:31 AM
உணர்ச்சிக்கவிஞன் பூ அவர்களின் உணர்ச்சிக்குவியல் இது..வேறு எதுவும் சொல்ல முடியவில்லை..இதயம் மௌனமாகிறது...

உண்மைதான் அமர்!

பூ அண்ணா இப்போது விடுப்பில் இருந்தாலும், இன்றைய நாளுக்காக இந்த திரியை மேலே கொண்டு வந்தேன்.

aren
16-07-2007, 04:00 AM
இன்று மூன்றாவது வருட நினைவுநாள். படித்ததும் நெஞ்சு கனத்துவிட்டது. அருமையான வரிகள் பூ அவர்களே. கல் நெஞ்சையும் ஈரமாக்கிவிடும் அழுத்தமான வரிகள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
16-07-2007, 04:27 AM
அது என்னவோ தெரியவில்லை நேற்றுதான் அர்ஜுன் நடித்த வாத்தியார் படம் பார்த்தேன். கும்பகோண நிகழ்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். மசாலா படமாக இருந்தாலும் அதில் நாயகன் அடையாளம் காட்டும் பொறுப்பற்ற அந்த அரசு அதிகாரிகளின் பட்டியல்....நெஞ்சு கொதிக்கிறது. இவர்களுக்கும் மகனோ மகளோ உண்டுதானே?காசு ஒன்றையே பிரதானமாகப்பார்த்து இப்படி நாளைய சமுதாயத்தினரை நாசமாக்கும் இவர்கள் தீவிரவாதிகளை விட கொடுமையானவர்கள். மிகக் கடுமையாய் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.அந்த தண்டனை படத்தில் மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது.நிஜத்திலும் அப்படிப்பட்ட தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஒரு நந்தவனமே கருகிகிடந்த காட்சி மனதை உலுக்கிவிட்டது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தீராத வலியைத்தந்துவிட்டு போய்விட்டது அந்த சம்பவம். தன் அற்புதமான வரிகளால் அந்த துயரத்தை வடித்த பூ அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

அமரன்
16-07-2007, 07:41 AM
உண்மைதான் அமர்!

பூ அண்ணா இப்போது விடுப்பில் இருந்தாலும், இன்றைய நாளுக்காக இந்த திரியை மேலே கொண்டு வந்தேன்.

கொண்டுவந்ததுக்கு நன்றி எல்லாம் சொல்லமாட்டேன். பாராட்டும் சொல்லமாட்டேன். லேட்டாகக் கொண்டுவந்ததுக்கு திட்டுத்தான் கிடைக்கும்..நல்ல கவிதைகளை மேலே கொண்டுவருவதை விட்டு விட்டு சின்னபிளையாட்டம் கிறுக்கல்ஸ் போடுகின்றீர்.

கோபத்துடன்
நண்பன்
அமரன்..

aren
16-07-2007, 08:07 AM
கொண்டுவந்ததுக்கு நன்றி எல்லாம் சொல்லமாட்டேன். பாராட்டும் சொல்லமாட்டேன். லேட்டாகக் கொண்டுவந்ததுக்கு திட்டுத்தான் கிடைக்கும்..நல்ல கவிதைகளை மேலே கொண்டுவருவதை விட்டு விட்டு சின்னபிளையாட்டம் கிறுக்கல்ஸ் போடுகின்றீர்.

கோபத்துடன்
நண்பன்
அமரன்..

பாவம் நம்ம ஓவியன். எதற்கெடுத்தாலும் உங்களிடம் திட்டு வாங்கிக்கொண்டு. பாவம் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அழுகிறார் பாருங்கள்.

ஓவியன்
16-07-2007, 08:14 AM
பாவம் நம்ம ஓவியன். எதற்கெடுத்தாலும் உங்களிடம் திட்டு வாங்கிக்கொண்டு. பாவம் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அழுகிறார் பாருங்கள்.

ஓவியனா அழுகிறதா?

அதற்குப் பதில் அரட்டைப் பகுதியில் பட்டு வாடா செய்யப் பட்டு விட்டது!:icon_good: .

அக்னி
16-07-2007, 12:07 PM
தீயை நூர்க்கத் தவறி..,
தாமதாய் ஏன் பொங்கினாய்
கண்ணீரே..?
தீ நாக்குகள் கருக்கும்போது,
ஏன் சுரக்கத் தவறினாய்
உமிழ்நீரே..?
காபனீரொட்சைட்டை முழு மூச்சாய்,
விடுத்து தீயணைக்க ஏன் தவறினாய்
சுவாசமே..?

மரணமே!
பிஞ்சுகளின் உடலின் கருக்கல்கள்தான்
உனக்குச் சுவையான உணவோ..?
பறிகொடுத்த உறவுகளின்
கதறலைத் தாலாட்டாக்கி,
உண்ட களையில்,
ஆழ்ந்த உறக்கமோ..?

புன்னகையோடு சிரித்துப்போன
மழலைகள்..,
கருகிப்போன நாளின்,
நீங்காத சோகம்...
இனிமேலும் நாம் வேண்டாத நாசம்...

இறந்தவனுக்கு ஒரு முறை
தீயினால் அபிஷேகம்...
மழலைகளே உங்களுக்கு மட்டும்
இருமுறை அல்லவா...
தீயின் அகோரம்...
உங்களைத் தீய்த்துப்போன
நாளில்,
சிந்தும்
கண்ணீர்த் துளிகள்...
உங்களைச் சிறிதேனும் குளிர்விக்கட்டும்...

உங்களைச் சுமந்த வயிற்றில்,
மீண்டும் வந்து பிறக்கமுடியுமானால்,
மீள வந்துவிடுங்கள்...

தீயினால் கருகிய மழலைகளுக்கு கவிதாஞ்சலிகள்...

ஆதவா
16-07-2007, 12:45 PM
எனது குருவின் கவிதை... எத்தனை நாளானாலும் இனிக்கும் கவிதை. மேலெழுப்பியவர்களுக்கு பூவின் சார்பில் நன்றி..

lolluvathiyar
16-07-2007, 12:53 PM
--------------------------------------------------------------
கொஞ்சும் மொழியில் சங்கீதம்...
சலங்கையொலி கேட்கவிருந்த
செவிகளில் சங்கொலி...


கன்னீரை வரவழைக்கு வரிகள்.
உங்கள் வரிகள் அனைத்தும்
என்னை போன்ற கல்மனதையும்
கரைய வைத்த உனர்ச்சிகள்

ஓவியன்
16-07-2007, 06:14 PM
தீயை நூர்க்கத் தவறி..,
தாமதாய் ஏன் பொங்கினாய்
கண்ணீரே..?
தீ நாக்குகள் கருக்கும்போது,
சுரக்கத் தவறினாய்
உமிழ்நீரே..?
காபனீரொட்சைட்டை முழு மூச்சாய்,
விடுத்து தீயணைக்க ஏன் தவறினாய்
சுவாசமே.....

அக்னி!

அன்று பேயாட்டம் போட்ட அந்த அக்னியை சுட்டெரித்தது உங்கள் கவி அக்னி!.

அக்னி
16-07-2007, 07:17 PM
அக்னி!

அன்று பேயாட்டம் போட்ட அந்த அக்னியை சுட்டெரித்தது உங்கள் கவி அக்னி!.

தொலைக்காட்சியில் பார்த்தது நிழலாடுகின்றது...
நேரில் பார்த்த பெற்றவர் மன்மும் வெந்தல்லவா போயிருக்கும்...