PDA

View Full Version : பி.எஸ்.என்.எல். பிராட்பேன்ட சந்தேகம்



சிவாஜி
05-05-2007, 04:15 AM
நான் சென்னையில் வசிப்பவன்... பி.எஸ்.என்.எல். பிராட்பேன்ட் கனெக்ஷன் வைத்துள்ளேன்...பி.எஸ்.என்.எல். வைத்திருக்கும் அனைவரும் அக்கவுன் செக் செய்ய dataone.inக்கு செல்வீர்கள்... அவ்வாறு அக்கவுன்ட் செக் பண்ணும் போது நீங்கள் இன்டர்நெட் எக்போளரை (IE) மட்டுமே உபயோகிக்க வேண்டும்,, மற்ற பிரவுசரை யூஸ் செய்தால் அக்கவுண்ட் செக் செய்ய முடியாது...
ஏன் மற்ற பிரவுசர்களில் அக்கவுண்ட் செக் செய்ய முடியவில்லை..?
செக் செய்ய முடியுமெனில் அதற்கான வழிமுறைகளை தயவு செய்து கூறவும்..?

ஆதவா
05-05-2007, 10:14 AM
வணக்கம் சிவாஜி..
இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கும் மற்ற பிரவுசருக்கும் பல
வித்தியாசங்கள் இருக்கின்றன. இணையத்தில் உலவச்
சிறந்தது IE தான். அடுத்தபடியாக நெட்ஸ்கேப்பும் ஓபராவும்
பயர்பாக்ஸும் இருந்தாலும் சில உள்ளடக்க டேடாக்கள்
அடங்கியது IE. உதாரணம் ஒன்று சொல்கிறேன்.
ஓபராவில் தமிழ் தட்ட முடியாது. மற்ற ப்ரவுசரில் இது
முடியும்.

சில ஜாவா, ஆக்டிவ் எக்ஸ் போன்றவைகள் IE க்கு
வேலைசெய்யுமாறு பக்கம் வடிவமைத்திருப்பார்கள். மற்றபடி
கோளாறுகள் இல்லை.

நெட்கேப் உபயோகம் செய்துபாருங்கள். இல்லையென்றால்
பேசாமல் பில்கேட் படைப்புதான் நமக்கெல்லாம்...

ஜெயாஸ்தா
05-05-2007, 03:53 PM
நெட்கேப் உபயோகம் செய்துபாருங்கள். இல்லையென்றால்
பேசாமல் பில்கேட் படைப்புதான் நமக்கெல்லாம்...

பி.எஸ்.என்.எல். தன்னுடைய அக்கவுண்டை செக் செய்யும் பகுதியை IE-ல் இயங்குமாறு வடிவமைத்துள்ளதே இதற்கு காரணம். அதை அவர்களே அக்கவுண்ட் செக் செய்ய IE உபயோகிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் பி.எஸ்.என்.எல்-ல் மின்னஞ்சல் படிக்க, அனுப்ப எந்த உலவியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

சிவாஜி
05-05-2007, 04:08 PM
பதிலளித்த ஆதவா, ஜே.எம். இருவருக்கும் நன்றிகள்
எந்த வழிமுறைகளை கையான்டாலும் பிரவுசர் மாற்றி அக்கவுன்ட் செக் செய்ய முடியாதா,,,?
உதாரணத்திற்கு megaupload.com தளத்தின் பைலை firefoxல் டவுன்லோட் செய்ய முடியாத நிலை இருந்தது,,, ஏதோ ஒரு தளத்தில் சில வழிமுறைகளை கூறியிருந்தனர் அதனை கையாண்ட பின் டவுன்லோட் செய்ய முடிந்தது,,, அது போன்று ஏதேனும் வழிமுறைகள் உள்ளதா..?