PDA

View Full Version : 3000 உறுப்பினர்கள்அறிஞர்
04-05-2007, 06:56 PM
தமிழ் மன்றத்தில் உறுப்பினர் எண்ணிக்கை 3000த்தை தாண்டியுள்ளது.

ஆனால் தொடர்ந்து வருபவர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை.

அனைவரும் தொடர்ந்து பங்களிக்க என்ன என்ன மாற்றங்களை செய்யலாம்.

மனம் திறந்து தங்கள் கருத்துக்களை கொடுங்கள்.

ஆதவா
04-05-2007, 11:06 PM
தமிழ் மன்றத்திற்கு முதலில் வாழ்த்துக்கள் அறிஞரே!!!

ஆதவா
05-05-2007, 01:47 AM
சரி முதல் கருத்தாக நான் சொல்லுகிறேன்..

சுவேதாவின் பாட்டுக்குப் பாட்டு திரியை ஒட்டி வைக்கலாமே... 6000 பதிவுகளுக்கும்மேலே சென்று கொண்டிருக்கிறது.. கிட்டத்தட்ட எல்லாருமே சென்று பதிக்கிறார்கள் அல்லது பார்வையிடுகிறார்கள்...

பின் யோசனை வரின் சொல்லுகிறேன் தலைவா

leomohan
05-05-2007, 05:23 AM
அருமையான செய்தி இதன் பின் தூண் போல இருக்கும் அனைத்து நிர்வாகிகளக்கும் வழிநடத்துனர்களுக்கும் தொடர்ந்து வரும் உறுப்பினர்களும் வாழ்த்துகள். நன்றிகள்.

Invite - Referral முறையை அறிமுகப்படுத்தலாம். அதாவது ஓர்குட்டில் இருப்பது போல் ஒவ்வொரு உறுப்பினரும் மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த Invite அனுப்பினால் அவர்கள் மூலம் chain உருவாக்கலாம்.

lolluvathiyar
05-05-2007, 06:18 AM
உருப்பினர்களின் என்னிக்கை அதிகரிக்கும்
போது ஆர்வம் உள்ளவர்கள், சிந்தனை உள்ளவர்கள்
தானாக பங்களிப்பார்கள்.
பங்களிப்பு என்பது ஒருவர் ஆழ்மணதிலிருந்து உருவானால் தான் சிறப்பு

பங்களிக்க ஊக்க படுத்தினால் எதையாவது பங்களித்து
குப்பை சேர்ப்பார்கள், வம்பு கொண்டு வருவார்கள்
நிர்வாகத்துக்கு குப்பை அள்ளுவதே வேலையாகி விடும்

poo
05-05-2007, 08:28 AM
பெருமையாக இருக்கிறது....

பங்களிப்புகள் குறைவாக இருந்தாலும், இதில் அநேக மக்கள் வந்து படித்துவிட்டு செல்பவர்களாக இருப்பார்கள் என நம்புகிறேன்...

திறம்பட மன்றத்தை வழிநடத்தும் நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..

அன்புரசிகன்
05-05-2007, 08:32 AM
இங்கு பலருக்கு இருக்கும் பிரச்சனை தமிழில் பதிவது. பலர் வந்து வாசிப்பதுடன் நிறுத்திவிடுவர். என்னுடன் பல வெளி நண்பர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வர். ஆனாலும் பிரச்சனை என்னமோ தமிழில் பதிவது தான். (நான் அறிந்த வகையில்).

இருவருக்கு காட்டிக்கொடுத்தாயிற்று. தமிழில் பதிவது ரைப் செய்வது எப்படி என்ற திரியை முதல் பக்கத்தில் நிரந்தரமாக கொடுக்கலாமே.

அமரன்
05-05-2007, 08:40 AM
இங்கு பலருக்கு இருக்கும் பிரச்சனை தமிழில் பதிவது. பலர் வந்து வாசிப்பதுடன் நிறுத்திவிடுவர். என்னுடன் பல வெளி நண்பர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வர். ஆனாலும் பிரச்சனை என்னமோ தமிழில் பதிவது தான். (நான் அறிந்த வகையில்).

எனது கருத்தும் இதுவே. பலர் படிக்கின்றார்கள். ஆனால் பின்னூட்டம் இடுவதில்லை. படைப்புகள் கொடுக்க நினைப்பவர்கள் தமிழில் தட்டச்சுவது காரணமாக தவிர்க்கின்றார்கள். அப்படித் தவிப்பவர்களுக்காக தனியான ஒரு பகுதியை வைத்து அங்கே அவர்கள் படைப்புகளைப் பதிக்கச்செய்யலாம். அப்படி அவர்கள் பதிந்த பதிவுகளை உதவியாளர்கள் உதவியுடன் திருத்திய பின்னர் ஏற்ற இடத்துக்கு மாற்றலாம். இன்னும் சிந்தனைக் குதிரையை தட்டி விட்டு மேலும் சில ஆலோசனைகளுடன் மீண்டும் வருகின்றேன்.

ராஜா
05-05-2007, 12:36 PM
உள்நுழைந்தால் தான் பதிவுகளைப் பார்வையிடலாம் என்ற விதியைத் தளர்த்தலாமே..

இது விருந்தினர்கள் பலரை ஈர்க்கும். அவர்களில் சிலரையாவது தக்க முறையில் பின்னூட்டம் போட வைக்கும்.

மயூ
05-05-2007, 03:12 PM
ராஜா சொல்வதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.. இதன் மூலம் இணையத் தேடல்கள் மூலமும் பயனர்கள் வந்து சேர்வர்....

தமிழ் கணி உலகம் இப்போது மெல்ல மெல்ல வீறு நடைபோடத் தொடங்குகின்றது.. ஆகவே யாவரும் மெல்ல மெல்ல தமிழ் தட்டச்சுக்கற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்~

ஓவியன்
06-05-2007, 04:36 AM
உள்நுழைந்தால் தான் பதிவுகளைப் பார்வையிடலாம் என்ற விதியைத் தளர்த்தலாமே..

இது விருந்தினர்கள் பலரை ஈர்க்கும். அவர்களில் சிலரையாவது தக்க முறையில் பின்னூட்டம் போட வைக்கும்.

இல்லையண்ணா!
இது சில வேளைகளில் வேண்டாத பிரச்சினைகளை உண்டு பண்ணுமென்று நினைக்கின்றேன். முக்கியமாக ஆக்கங்களைக் களவாடல் போன்ற தேவையற்ற விடயங்கள் நடைபெற வாய்ப்புண்டு.

உண்மையில் அவர்களுக்கு ஆர்வமிருந்தால் அவர்கள் உறுப்பினர் ஆகலாமே - அதில் ஒன்றும் தடைகள் இல்லையே?

ஓவியன்
06-05-2007, 04:41 AM
தொடர்ந்து பங்களிப்பதென்பது அது அவரவர் விருப்பு வெறுப்பைப் பொறுத்தவிடயம். விருப்பமில்லாதவரை மன்றத்திற்கு இழுத்துக் கொண்டு வருவதென்பது மன்றத்தின் தராதரத்திற்கே உலை வைக்கும் முயற்சியாகக் கூட அமைந்து விடலாம்.

எனவே இந்த விடயத்தில் கொஞ்சம் அவதானமாகச் செயற்படுவது நல்லது.

ராஜா
06-05-2007, 07:18 AM
இல்லையண்ணா!
இது சில வேளைகளில் வேண்டாத பிரச்சினைகளை உண்டு பண்ணுமென்று நினைக்கின்றேன். முக்கியமாக ஆக்கங்களைக் களவாடல் போன்ற தேவையற்ற விடயங்கள் நடைபெற வாய்ப்புண்டு.

உண்மையில் அவர்களுக்கு ஆர்வமிருந்தால் அவர்கள் உறுப்பினர் ஆகலாமே - அதில் ஒன்றும் தடைகள் இல்லையே?

அப்படியென்றால் சரி.. தம்பி.. இன்னும் எனக்கு ஒரு சந்தேகம்.

களவாட வருபவர்கள் அதற்காக ஒரு உறுப்பினராகி அச்செயலைச் செய்ய இயலாதா..?

ஓவியன்
06-05-2007, 07:23 AM
களவாட வருபவர்கள் அதற்காக ஒரு உறுப்பினராகி அச்செயலைச் செய்ய இயலாதா..?

செய்யலாம், ஆனால் அவர்களது பயணாளர் எண்ணை வைத்து நிர்வாகிகளால் அவர்களைக் கண்டு பிடித்து அவரை தடை செய்ய முடியும். அதாவது எந்த பயணாளர் எண் திருடி இருக்கிறது எண்டு.....

எல்லோரும் பார்க்கலாமென்றால் இது முடியாது

ராஜா
06-05-2007, 07:32 AM
ஓ அப்படியா..? எனக்கு இந்த வழிமுறைகள் தெரியாது தம்பி.

நான் முதலில் இங்குதான் பார்வையிட வந்தேன்.. ஆனால் உள்நுழைய இயலவில்லை. பின்னர் வேறிடம் சென்று பார்த்து அங்கு இணைந்து, சுமார் 12,000 பதிவுகள் இட்டு விட்டேன். பின்னரே இங்கு வந்தேன்.

முதலிலேயே என்னால் இங்கு பார்வையிட முடிந்திருக்குமானால் இங்கேயே இணைந்திருப்பேன். அதனால்தான் அப்படி ஒரு யோசனையைச் சொன்னேன்.

நல்லது தம்பி. அடுத்த முறை வேறொரு யோசனையுடன் இந்த திரிக்கு வருகிறேன்.

ஓவியன்
06-05-2007, 07:38 AM
எந்த திரிக்கு யார் யார் வந்து போகிறார்கள் என்று எமக்குத் தெரிகிறது அல்லவா, அதில் இருந்தே ஏதாவது ஆக்கம் திருடப் பட்டிருந்தால் ஓரளவிற்கு திருடியவரை ஊகிக்கலாமல்லவா?

முற்றாகக் கட்டுப் படுத்த முடியாவிட்டாலும், இவ்வாறான சம்பவங்களைக் குறைக்கலாம். அதற்கு பல வழி முறைகளுண்டு அவை எங்கள் ராசகுமாரன் அண்ணாவிடம் நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் அக்கருத்தை வெளியிட்டேன்.

ஓவியன்
06-05-2007, 07:41 AM
நான் முதலில் இங்குதான் பார்வையிட வந்தேன்.. ஆனால் உள்நுழைய இயலவில்லை. பின்னர் வேறிடம் சென்று பார்த்து அங்கு இணைந்து, சுமார் 12,000 பதிவுகள் இட்டு விட்டேன். பின்னரே இங்கு வந்தேன்.

முதலிலேயே என்னால் இங்கு பார்வையிட முடிந்திருக்குமானால் இங்கேயே இணைந்திருப்பேன். அதனால்தான் அப்படி ஒரு யோசனையைச் சொன்னேன்.
.

இந்த பிரச்சினைக்கு தமிழ் மன்றத்தைப் பற்றி ஒரு தெளிவான அறிமுகத்தை முன் பக்கத்தில் வைத்தால் சரிதானே?

அதாவது Synopsis மாதிரி

மனோஜ்
06-05-2007, 01:29 PM
அருமையான கருத்துக்கள் ஓவியரே
தாங்கள் குறியது உண்மைதான்
அவர்கள் தமிழ்மேல் விருப்பம் உள்ளவர்கள் என்றால் முதல்படி உறுப்பினர் ஆகட்டுமே

ஜோய்ஸ்
06-05-2007, 02:50 PM
உருப்பினர்களின் என்னிக்கை அதிகரிக்கும்
போது ஆர்வம் உள்ளவர்கள், சிந்தனை உள்ளவர்கள்
தானாக பங்களிப்பார்கள்.
பங்களிப்பு என்பது ஒருவர் ஆழ்மணதிலிருந்து உருவானால் தான் சிறப்பு

பங்களிக்க ஊக்க படுத்தினால் எதையாவது பங்களித்து
குப்பை சேர்ப்பார்கள், வம்பு கொண்டு வருவார்கள்
நிர்வாகத்துக்கு குப்பை அள்ளுவதே வேலையாகி விடும்

தங்களின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.

ஷீ-நிசி
06-05-2007, 04:28 PM
வாழ்த்துக்கள் தமிழ்மன்றத்திற்கு....

யோசனைகள் ஏதும் வரவில்லை... யோசிக்கிறேன்....

ஓவியா
06-05-2007, 07:50 PM
உருப்பினர்களின் என்னிக்கை அதிகரிக்கும்
போது ஆர்வம் உள்ளவர்கள், சிந்தனை உள்ளவர்கள்
தானாக பங்களிப்பார்கள்.
பங்களிப்பு என்பது ஒருவர் ஆழ்மணதிலிருந்து உருவானால் தான் சிறப்பு
(அதிகமான எதிர்பார்ப்பு, ஏமாற்றத்தைக் கொண்டுவரும்.)

பங்களிக்க ஊக்க படுத்தினால் எதையாவது பங்களித்து
குப்பை சேர்ப்பார்கள், வம்பு கொண்டு வருவார்கள்
நிர்வாகத்துக்கு குப்பை அள்ளுவதே வேலையாகி விடும்

நன்றி அண்ணா,
நான் சொல்ல தயங்கிய ஒரு விசயத்தை ஆணியடித்தது போல் சொல்லிவிட்டீர்கள். இப்பொழுதும் இது நடந்துகொண்டுதான் இருகின்றது.

இப்பொழுதும் சில பதிவுகள் தேவையில்லாதவைகள்தான், என்னா செய்ய அவர்களின் தமிழ் ஆர்வத்தையும் செவையை மெச்சலாம். ஆனால் எப்படி பாராட்டுவது?

நாம்மில் பெரும்பாலோர், குமுதம், விகடன், தினகரன் என முக்கியமான நாளிதழ்களை அவர்களின் பக்கத்திலே போய் படித்து விடுகிறோம், அதனால் அங்குல்ல பதிவுகளை இங்கு கொண்டு வந்து புது திரியாக பதிப்பது சிறப்பானதாக எனக்கு தோன்றவில்லை.

அவர்களே அவர்களை மாற்றி, தன் சொந்த படைப்புகளை தந்தால் நலம்.

ஓவியா
06-05-2007, 07:56 PM
சரி முதல் கருத்தாக நான் சொல்லுகிறேன்..

சுவேதாவின் பாட்டுக்குப் பாட்டு திரியை ஒட்டி வைக்கலாமே... 6000 பதிவுகளுக்கும்மேலே சென்று கொண்டிருக்கிறது.. கிட்டத்தட்ட எல்லாருமே சென்று பதிக்கிறார்கள் அல்லது பார்வையிடுகிறார்கள்...

பின் யோசனை வரின் சொல்லுகிறேன் தலைவா

PGK53 அண்ணாவின் சேவையை பாராட்டி, புதிரோ புதிரையும் ஒட்டி வைக்கலாம். 2,822 பார்வையாளர்கள் 21,575

அருமையான செய்தி இதன் பின் தூண் போல இருக்கும் அனைத்து நிர்வாகிகளக்கும் வழிநடத்துனர்களுக்கும் தொடர்ந்து வரும் உறுப்பினர்களும் வாழ்த்துகள். நன்றிகள்.

Invite - Referral முறையை அறிமுகப்படுத்தலாம். அதாவது ஓர்குட்டில் இருப்பது போல் ஒவ்வொரு உறுப்பினரும் மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த Invite அனுப்பினால் அவர்கள் மூலம் chain உருவாக்கலாம்.

மோகனை வழிமொழிகிறேன்.

ஓவியா
06-05-2007, 08:17 PM
அன்பு கூறியது போல் தமிழில் தட்டச்சு செய்து பதிவதுதான் முதல் பிரச்சனை,

முல்லை மன்றத்தை அனைவரும் காணும்படி வைக்கலாமே!!! (அறிமுக பகுதியை காண தடை செய்யாலாம்,) அவர்களுக்கு என்று ஒரு சில பதிவுகள் இட்டு ஒட்டி வைக்கலாம்.

நரேன் கூறுவது போல் அவர்களுக்கு ஒரு இடம் ஒதுக்கி தரலாம்,

முல்லை மன்றத்தில் புதிதாக ஒரு பக்கம் திறந்து அவர்களுக்கு என்று சில பல விசயங்கள் அடங்கிய திரியை வைக்கலாம், யார் வேண்டுமென்றாலும் அதை காணும்படி திறந்து விடலாம். இது புதிதாக பதியாமல் காணுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

பார்வையாளர்களாக வருபவர்களுக்கு 2 நிமிடத்திற்க்கு ஒரு முறை வந்து போவது போல் ஒரு பொப் ஆப் மேனு வைக்கலாமே,
இப்படி
'வாருங்கள் நன்பரே', தங்கள் வரவு நல்வரவாகுக, உதவி தேவையென்றால் இங்கே சொடுக்குங்கள் என்று, அட்மின் அல்லது உருப்பினர் பாரம் வைக்கலாமே!!!

ஓவியா
06-05-2007, 08:27 PM
தொடர்ந்து பங்களிப்பதென்பது அது அவரவர் விருப்பு வெறுப்பைப் பொறுத்தவிடயம். விருப்பமில்லாதவரை மன்றத்திற்கு இழுத்துக் கொண்டு வருவதென்பது மன்றத்தின் தராதரத்திற்கே உலை வைக்கும் முயற்சியாகக் கூட அமைந்து விடலாம்.

எனவே இந்த விடயத்தில் கொஞ்சம் அவதானமாகச் செயற்படுவது நல்லது.

ஆமாம், ஆமாம், ஆமாம் நல்ல கருத்து, யோசிப்போம். யோசிப்போம்.வாழ்த்துக்கள் தமிழ்மன்றத்திற்கு....

யோசனைகள் ஏதும் வரவில்லை... யோசிக்கிறேன்....

சீக்கிரம் வாங்க இல்லனா ஆட்டோதான் வரும்.

சுபன்
07-05-2007, 12:03 AM
நாம்மில் பெரும்பாலோர், குமுதம், விகடன், தினகரன் என முக்கியமான நாளிதழ்களை அவர்களின் பக்கத்திலே போய் படித்து விடுகிறோம், அதனால் அங்குல்ல பதிவுகளை இங்கு கொண்டு வந்து புது திரியாக பதிப்பது சிறப்பானதாக எனக்கு தோன்றவில்லை.

அவர்களே அவர்களை மாற்றி, தன் சொந்த படைப்புகளை தந்தால் நலம்.

நாம் எல்லாருமே போய் படிப்பதில்லையே!!

அறிஞர்
10-05-2007, 08:07 PM
சரி முதல் கருத்தாக நான் சொல்லுகிறேன்..

சுவேதாவின் பாட்டுக்குப் பாட்டு திரியை ஒட்டி வைக்கலாமே... 6000 பதிவுகளுக்கும்மேலே சென்று கொண்டிருக்கிறது.. கிட்டத்தட்ட எல்லாருமே சென்று பதிக்கிறார்கள் அல்லது பார்வையிடுகிறார்கள்...

பின் யோசனை வரின் சொல்லுகிறேன் தலைவா
தங்கள் எண்ணப்படி ஒட்டிவிட்டேன்.

அறிஞர்
10-05-2007, 08:08 PM
Invite - Referral முறையை அறிமுகப்படுத்தலாம். அதாவது ஓர்குட்டில் இருப்பது போல் ஒவ்வொரு உறுப்பினரும் மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த Invite அனுப்பினால் அவர்கள் மூலம் chain உருவாக்கலாம்.
நல்ல எண்ணம் தான்... ஆனால் தமிழ் ஆர்வமுள்ளவர்களுக்கு சொன்னால் கண்டிப்பாக வருவார்கள்..

எனக்கு வரும் பல தளங்களின் அழைப்புக்களை ஏற்பதில்லை.

அறிஞர்
10-05-2007, 08:09 PM
பங்களிக்க ஊக்க படுத்தினால் எதையாவது பங்களித்து
குப்பை சேர்ப்பார்கள், வம்பு கொண்டு வருவார்கள்
நிர்வாகத்துக்கு குப்பை அள்ளுவதே வேலையாகி விடும்
முடிந்த வரை.... தவறுகளை திருத்துகிறோம்.. மீண்டும் தவறு செய்யும்போது கண்டிக்கிறோம்.

அனைவரும் அன்போடு பங்களிக்க வேண்டும் என்பது தான் நம் விருப்பம்.

அறிஞர்
10-05-2007, 08:10 PM
பங்களிப்புகள் குறைவாக இருந்தாலும், இதில் அநேக மக்கள் வந்து படித்துவிட்டு செல்பவர்களாக இருப்பார்கள் என நம்புகிறேன்...
..
பங்களிப்புகள் கூட வேண்டும் என்பதே எம் விருப்பம்... சிறிது சிறிதாக 50% பங்களிக்கின்றனர்.

அறிஞர்
10-05-2007, 08:13 PM
இங்கு பலருக்கு இருக்கும் பிரச்சனை தமிழில் பதிவது. பலர் வந்து வாசிப்பதுடன் நிறுத்திவிடுவர். என்னுடன் பல வெளி நண்பர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வர். ஆனாலும் பிரச்சனை என்னமோ தமிழில் பதிவது தான். (நான் அறிந்த வகையில்).

இருவருக்கு காட்டிக்கொடுத்தாயிற்று. தமிழில் பதிவது ரைப் செய்வது எப்படி என்ற திரியை முதல் பக்கத்தில் நிரந்தரமாக கொடுக்கலாமே.
தமிழர்கள் தமிழில் உரையாடவேண்டும் என்பது தான் முழு நோக்கம்.

போரத்தின் முதல் (முல்லை) மன்றத்தில் தெளிவாக உள்ளதே நண்பரே...

அறிஞர்
10-05-2007, 08:16 PM
எனது கருத்தும் இதுவே. பலர் படிக்கின்றார்கள். ஆனால் பின்னூட்டம் இடுவதில்லை. படைப்புகள் கொடுக்க நினைப்பவர்கள் தமிழில் தட்டச்சுவது காரணமாக தவிர்க்கின்றார்கள். அப்படித் தவிப்பவர்களுக்காக தனியான ஒரு பகுதியை வைத்து அங்கே அவர்கள் படைப்புகளைப் பதிக்கச்செய்யலாம். அப்படி அவர்கள் பதிந்த பதிவுகளை உதவியாளர்கள் உதவியுடன் திருத்திய பின்னர் ஏற்ற இடத்துக்கு மாற்றலாம். இன்னும் சிந்தனைக் குதிரையை தட்டி விட்டு மேலும் சில ஆலோசனைகளுடன் மீண்டும் வருகின்றேன்.
இது கொஞ்சம் கடினமான வேலை நண்பரே.... கிட்டத்தட்ட 10 உதவியாளர்கள் தேவைப்படுவோர்.
அதை அனுமதித்தால் மன்றத்தின் பல பகுதி குப்பையாக மாறும். மேலும் தங்கலீஸ் பதிவுகளை படிப்பவர் 5% கூட இருக்க மாட்டார்கள்.
ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக தமிழ் எழுத பழகுவர்.

நாம் அனைவரும் பழகவில்லையா.

அறிஞர்
10-05-2007, 08:21 PM
உள்நுழைந்தால் தான் பதிவுகளைப் பார்வையிடலாம் என்ற விதியைத் தளர்த்தலாமே..

இது விருந்தினர்கள் பலரை ஈர்க்கும். அவர்களில் சிலரையாவது தக்க முறையில் பின்னூட்டம் போட வைக்கும்.
இது முன்பே யோசித்தோம்.
விருந்தினர் எவரும் பதிவுகளை கொடுப்பதாக நாங்கள் கண்டதில்லை.
ஆர்வமுள்ளவர்களே தொடர்ந்து பங்கெடுக்கிறார்கள்.

மேலும் ஒவ்வொரு பகுதியை படித்தவர்கள் எண்ணிக்கையும், நபர்களும் பதிந்தவருக்கு தெரியும். அது ஒரு தெம்பை தரும்.

பலர் பார்க்க திறந்து வைத்த தளங்களே இன்று மாறும் சூழ்நிலை.

அறிஞர்
10-05-2007, 08:40 PM
தமிழ் கணி உலகம் இப்போது மெல்ல மெல்ல வீறு நடைபோடத் தொடங்குகின்றது.. ஆகவே யாவரும் மெல்ல மெல்ல தமிழ் தட்டச்சுக்கற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்~
4 வருடங்களில் பலர் தமிழ் தட்டச்சு பயில இங்கு கற்றுக்கொண்டனர். இன்று இணைத்தளங்களில் வீறு நடைபோடுகிறார்கள்..

ஆர்வமிருந்தால் உள்ளே வருவர், தமிழ் தட்டச்சு பயிலுவர்... வீறுநடைபோடுவர்.

அறிஞர்
10-05-2007, 08:41 PM
அப்படியென்றால் சரி.. தம்பி.. இன்னும் எனக்கு ஒரு சந்தேகம்.

களவாட வருபவர்கள் அதற்காக ஒரு உறுப்பினராகி அச்செயலைச் செய்ய இயலாதா..?
திருடனாக பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க இயலாது...

அறிஞர்
10-05-2007, 08:43 PM
ஓ அப்படியா..? எனக்கு இந்த வழிமுறைகள் தெரியாது தம்பி.

நான் முதலில் இங்குதான் பார்வையிட வந்தேன்.. ஆனால் உள்நுழைய இயலவில்லை. பின்னர் வேறிடம் சென்று பார்த்து அங்கு இணைந்து, சுமார் 12,000 பதிவுகள் இட்டு விட்டேன். பின்னரே இங்கு வந்தேன்.

முதலிலேயே என்னால் இங்கு பார்வையிட முடிந்திருக்குமானால் இங்கேயே இணைந்திருப்பேன். அதனால்தான் அப்படி ஒரு யோசனையைச் சொன்னேன்.

நல்லது தம்பி. அடுத்த முறை வேறொரு யோசனையுடன் இந்த திரிக்கு வருகிறேன்.
அண்ணா எப்படியோ இங்கு வந்துவிட்டீர்கள். அதுவே மகிழ்ச்சி தான்.

தமிழர் எங்கு வளர்ந்தாலும் மகிழ்ச்சியடைபவர்கள் நாங்கள்....
(போட்டி போட்டு அழிக்கும் கூட்டமல்ல)

அறிஞர்
10-05-2007, 08:44 PM
இந்த பிரச்சினைக்கு தமிழ் மன்றத்தைப் பற்றி ஒரு தெளிவான அறிமுகத்தை முன் பக்கத்தில் வைத்தால் சரிதானே?

அதாவது Synopsis மாதிரி
ஒன்றை தயார் செய்து கொடுங்கள்.. அவற்றை சரிபார்த்து வைத்துவிடுகிறோம்.

அறிஞர்
10-05-2007, 08:45 PM
அன்பு கூறியது போல் தமிழில் தட்டச்சு செய்து பதிவதுதான் முதல் பிரச்சனை,

முல்லை மன்றத்தை அனைவரும் காணும்படி வைக்கலாமே!!! (அறிமுக பகுதியை காண தடை செய்யாலாம்,) அவர்களுக்கு என்று ஒரு சில பதிவுகள் இட்டு ஒட்டி வைக்கலாம்.

நரேன் கூறுவது போல் அவர்களுக்கு ஒரு இடம் ஒதுக்கி தரலாம்,

முல்லை மன்றத்தில் புதிதாக ஒரு பக்கம் திறந்து அவர்களுக்கு என்று சில பல விசயங்கள் அடங்கிய திரியை வைக்கலாம், யார் வேண்டுமென்றாலும் அதை காணும்படி திறந்து விடலாம். இது புதிதாக பதியாமல் காணுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

பார்வையாளர்களாக வருபவர்களுக்கு 2 நிமிடத்திற்க்கு ஒரு முறை வந்து போவது போல் ஒரு பொப் ஆப் மேனு வைக்கலாமே,
இப்படி
'வாருங்கள் நன்பரே', தங்கள் வரவு நல்வரவாகுக, உதவி தேவையென்றால் இங்கே சொடுக்குங்கள் என்று, அட்மின் அல்லது உருப்பினர் பாரம் வைக்கலாமே!!!
ஓவியாவின் கருத்துக்கள் சிந்திக்க வைக்கிறது.

இந்த பதிப்பில் வரும் தகவல்களை தொகுத்து தாருங்கள்.. நிர்வாகியிடம் சொல்லி மாற்றம் செய்வோம்.

சுபன்
10-05-2007, 09:23 PM
செய்யலாம், ஆனால் அவர்களது பயணாளர் எண்ணை வைத்து நிர்வாகிகளால் அவர்களைக் கண்டு பிடித்து அவரை தடை செய்ய முடியும். அதாவது எந்த பயணாளர் எண் திருடி இருக்கிறது எண்டு.....

எல்லோரும் பார்க்கலாமென்றால் இது முடியாது

அதெப்படி?! முடியாத விசையம் ஆச்சே!! வேணுமானால் ஐப்பி முகவரி இருக்குமே தவிர மற்றத்தளத்திலே போட்டவர் பற்றி இங்கே பதிவதால் ஒன்றும் கண்டு பிடிக்க முடியாது!!!

ஆனால் புல்லடினில் சில மாட்கள் உண்டு அதை வைத்து ஊகிக்கலாம்!

அன்புரசிகன்
10-05-2007, 11:09 PM
தமிழர்கள் தமிழில் உரையாடவேண்டும் என்பது தான் முழு நோக்கம்.
போரத்தின் முதல் (முல்லை) மன்றத்தில் தெளிவாக உள்ளதே நண்பரே...

நீங்கள் தவறாக புரிந்துவிட்டீர்கள். பலருக்கு தமிழிலில் பதிவது கடினமாகவே உள்ளது. ஏன் தற்சமயப் 1000 -2000 பதிவுகள் தாண்டிய பின்னரும் இதே பிரச்சனை உண்டு என்பது நானறிந்த விடையம்.
ஆனாலும் தமிழ் பிரயேகத்திற்கு முன்னுரிமை தேவை.

இங்கு பலருக்கு இருக்கும் பிரச்சனை தமிழில் பதிவது. பலர் வந்து வாசிப்பதுடன் நிறுத்திவிடுவர். என்னுடன் பல வெளி நண்பர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வர். ஆனாலும் பிரச்சனை என்னமோ தமிழில் பதிவது தான். (நான் அறிந்த வகையில்).

இருவருக்கு காட்டிக்கொடுத்தாயிற்று. தமிழில் பதிவது ரைப் செய்வது எப்படி என்ற திரியை முதல் பக்கத்தில் நிரந்தரமாக கொடுக்கலாமே.
அதற்க்காக கொடுக்கப்பட்ட தீர்வு தான் தடித்த எழுத்துக்களில் உள்ளது. காரணம் புதிதாக வருபவர்களுக்கு எந்த திரி எங்குள்ளதென தெரியுமென உறுதிபட கூறிவிட முடியாது. மன்றத்தில் உலா வந்து பதிவுகள் போட தேவையான அனைத்தையும் முகப்பில் கொடுக்கலாம்.

தவறாயின் பொறுத்தருள்க பெருந்தகையே...

அறிஞர்
10-05-2007, 11:18 PM
நீங்கள் தவறாக புரிந்துவிட்டீர்கள். பலருக்கு தமிழிலில் பதிவது கடினமாகவே உள்ளது. ஏன் தற்சமயப் 1000 -2000 பதிவுகள் தாண்டிய பின்னரும் இதே பிரச்சனை உண்டு என்பது நானறிந்த விடையம்.
ஆனாலும் தமிழ் பிரயேகத்திற்கு முன்னுரிமை தேவை.

அதற்க்காக கொடுக்கப்பட்ட தீர்வு தான் தடித்த எழுத்துக்களில் உள்ளது. காரணம் புதிதாக வருபவர்களுக்கு எந்த திரி எங்குள்ளதென தெரியுமென உறுதிபட கூறிவிட முடியாது. மன்றத்தில் உலா வந்து பதிவுகள் போட தேவையான அனைத்தையும் முகப்பில் கொடுக்கலாம்.

தவறாயின் பொறுத்தருள்க பெருந்தகையே...
அவசியம் தங்கள் கருத்துக்களை கவனத்தில் கொள்கிறோம். ஓவியா அல்லது வேறொருவர்.. தங்களின் கருத்துக்களை தொகுத்து கொடுத்தால்... செயல்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்....

இது என்ன பெருந்தகையே....
மன்றத்தில் குடும்பமாய் பழகுகிறோம். தவறிருந்தால் சுட்டி காட்டுவதில் தவறில்லை...

ஆதவா
11-05-2007, 12:43 AM
அறிஞரே!! நானும் முன்பே சொல்லலாம் என்று இருந்தேன்.. முன்பக்கத்தில் ஏதாவது பயனுள்ள வேலைகள், அதாவது தட்டச்சு செய்வது எப்படி அல்லது வேறேதாவது தகவல்கள் இருந்தால் சுகம்.. அதேபோல இவர்களுக்கென தனிப் பகுதியை உருவாக்கி அங்கே மட்டும் அவர்களுக்கு அனுமதி வழங்கி பின் நன்றாக பழகிய பின் மற்ற பகுதிகளுக்கு அனுமதிக்கலாம்..

ஆலோசனைகளை நான் தொகுக்கிறேன்....

ஆதவா
11-05-2007, 12:58 AM
இந்த ஆலோசனைகள் அடிக்கடி புதுப்பிக்கப் படும்.சுவேதாவின் பாட்டுக்குப் பாட்டு திரியை ஒட்டி வைக்கலாமே
Invite - Referral முறையை அறிமுகப்படுத்தலாம். அதாவது ஓர்குட்டில் இருப்பது போல் ஒவ்வொரு உறுப்பினரும் மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த Invite அனுப்பினால் அவர்கள் மூலம் chain உருவாக்கலாம்.
தமிழில் பதிவது டப் செய்வது எப்படி என்ற திரியை முதல் பக்கத்தில் நிரந்தரமாக கொடுக்கலாமே.
படைப்புகள் கொடுக்க நினைப்பவர்கள் தமிழில் தட்டச்சுவது காரணமாக தவிர்க்கின்றார்கள். அப்படித் தவிப்பவர்களுக்காக தனியான ஒரு பகுதியை வைத்து அங்கே அவர்கள் படைப்புகளைப் பதிக்கச்செய்யலாம். அப்படி அவர்கள் பதிந்த பதிவுகளை உதவியாளர்கள் உதவியுடன் திருத்திய பின்னர் ஏற்ற இடத்துக்கு மாற்றலாம்.
உள்நுழைந்தால் தான் பதிவுகளைப் பார்வையிடலாம் என்ற விதியைத் தளர்த்தலாமே
தமிழ் மன்றத்தைப் பற்றி ஒரு தெளிவான அறிமுகத்தை முன் பக்கத்தில் வைத்தால் சரிதானே?அதாவது Synopsis மாதிரி
PGK53 அண்ணாவின் புதிரோ புதிரையும் ஒட்டி வைக்கலாம்.
தமிழில் தட்டச்சு செய்து பதிவதுதான் முதல் பிரச்சனை,
முல்லை மன்றத்தை அனைவரும் காணும்படி வைக்கலாமே!!! (அறிமுக பகுதியை காண தடை செய்யாலாம்,) அவர்களுக்கு என்று ஒரு சில பதிவுகள் இட்டு ஒட்டி வைக்கலாம்.
முல்லை மன்றத்தில் புதிதாக ஒரு பக்கம் திறந்து அவர்களுக்கு என்று சில பல விசயங்கள் அடங்கிய திரியை வைக்கலாம், யார் வேண்டுமென்றாலும் அதை காணும்படி திறந்து விடலாம். இது புதிதாக பதியாமல் காணுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
பார்வையாளர்களாக வருபவர்களுக்கு 2 நிமிடத்திற்க்கு ஒரு முறை வந்து போவது போல் ஒரு பொப் ஆப் மேனு வைக்கலாமே,
இப்படி 'வாருங்கள் நண்பரே', தங்கள் வரவு நல்வரவாகுக, உதவி தேவையென்றால் இங்கே சொடுக்குங்கள் என்று, அட்மின் அல்லது உறுப்பினர் பாரம் வைக்கலாமே!!!
புதிதாக வருபவர்களுக்கு எந்த திரி எங்குள்ளதென தெரியுமென உறுதிபட கூறிவிட முடியாது. மன்றத்தில் உலா வந்து பதிவுகள் போட தேவையான அனைத்தையும் முகப்பில் கொடுக்கலாம்.
முன்பக்கத்தில் ஏதாவது பயனுள்ள வேலைகள், அதாவது தட்டச்சு செய்வது எப்படி அல்லது வேறேதாவது தகவல்கள் இருந்தால் சுகம்.. அதேபோல இவர்களுக்கென தனிப் பகுதியை உருவாக்கி அங்கே மட்டும் அவர்களுக்கு அனுமதி வழங்கி பின் நன்றாக பழகிய பின் மற்ற பகுதிகளுக்கு அனுமதிக்கலாம்..இந்த பட்டியல் தொடரும்.....

அறிஞர்
11-05-2007, 01:01 AM
தொகுப்புக்கு நன்றி ஆதவா...

நிர்வாக குழுவுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்.

ஆதவா
11-05-2007, 01:14 AM
தொகுப்புக்கு நன்றி ஆதவா...

நிர்வாக குழுவுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்.

ஓவி அக்கா சொல்வதுபோல விருந்தாளிகள் வந்தால் ஒரு பாப் அப் மெனு இருப்பதுதான் சரியாகும்.... இல்லையென்றால் நாம் எடுக்கும் நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள்... மற்றவர்களும் இந்த தொகுப்பை நீட்டிக்க ஆலோசனைகள் வழங்கினால் சுகம்

ஓவியா
11-05-2007, 04:02 PM
தொகுப்பிற்க்கு நன்றி ஆதவரே.

PGK53 அண்ணாவின் சேவையை பாராட்டி, புதிரோ புதிரையும் ஒட்டி வைக்கலாம். 2,830 பின்னூட்டம் 21,679 பார்வையாளர்கள்.

இந்தத்திரி இன்னும் சிறப்பாகதான் இயங்கிக்கொண்டு இருகின்றது.
அதுவும் இது ஒரு புதிர் திரி அறிவை வளர்க்ககூடிய பதிவுகள் இதில் அடங்கியுள்ளன. வழிமொழிகிறேன்.

நன்றி

ஷீ-நிசி
11-05-2007, 04:08 PM
மிக சிறப்பான ஆலோசனைகள்... தீர யோசித்து முடிவெடுங்கள் நண்பர்களே!

அறிஞர்
11-05-2007, 04:44 PM
தொகுப்பிற்க்கு நன்றி ஆதவரே.

PGK53 அண்ணாவின் சேவையை பாராட்டி, புதிரோ புதிரையும் ஒட்டி வைக்கலாம். 2,830 பின்னூட்டம் 21,679 பார்வையாளர்கள்.

இந்தத்திரி இன்னும் சிறப்பாகதான் இயங்கிக்கொண்டு இருகின்றது.
அதுவும் இது ஒரு புதிர் திரி அறிவை வளர்க்ககூடிய பதிவுகள் இதில் அடங்கியுள்ளன. வழிமொழிகிறேன்.

நன்றி
முன்பு ஒட்டியிருந்ததாக நியாபகம்.. திரும்ப ஒட்டுகிறேன்.

ஓவியா
11-05-2007, 04:58 PM
முன்பு ஒட்டியிருந்ததாக நியாபகம்.. திரும்ப ஒட்டுகிறேன்.

மிக்க நன்றி சார்.

gragavan
11-05-2007, 05:05 PM
3000 என்பது பெரிய எண். கண்டிப்பாக இது ஒரு சாதனைதான். ஆனால் அனைவரும் மன்றத்தில் பயனளிப்பதில்லை. அவர்கள் அனைவரையும் ஊக்குவித்தால் சிறப்பாக இருக்கும்.

vijayan_t
16-05-2007, 06:48 AM
தமிழ் மன்றத்தில் 3000 உறுப்பினர்கள் குழுமியுள்ளதற்கு வாழ்த்துக்கள். வெகுவிரைவில், 10000 உறுப்பினர்கள் வரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

தாமதமாக பார்த்ததற்கு மன்னிக்க.

பதிவாளர்களின் பங்ளிப்பை அதிகரிக்க எனக்கு தோன்றிய உத்திகள்

பதிவாளர்கள் பலதரம் மற்றும் ரசனை கொன்டவராயிருப்பர். ரசனை வாரியாக உப மன்றங்கள் ஏற்கனவே பிரிக்கப்பட்டு இருக்கின்றன ஆனால் பதிவாளர்களின் தரம் பற்றி யாருமே சிந்திப்பது இல்லை. தரம் என்று எதைச்சொல்லுகின்றேன் என்றால்,

அவர்கள் எந்த அளவுக்கு பொது அல்லது குறிபிட்ட விஷயத்தில் அனுபவம் பெற்று இருக்கின்றார்.

எந்த அளவுக்கு ஒரு பிரச்சினையை ஆராய்ந்து, அறிகின்றார்.

எந்த அளவுக்கு அதை மற்றவர்களிடம் பங்கிட நினைக்கின்றார்.

எந்த அளவுக்கு சுவைபட எழுதும் திறன் கொன்டவராயிருக்கின்றார்

மேற்சொன்ன அனைத்தும் ஒருசிலரிடம் நிறைய அளவினதாகவும், இதுபோன்ற மன்றங்களில் அதிகம் உலவாததால் ஒருசிலரிடம் குறைந்த அளவினதாகவும் இருக்கும்.

அதிகம் அனுபவம் இல்லாதவர்கள் அனுபவஸ்தர்களின் பதிவுகளை பார்த்து மிரன்டு போய் படித்துமட்டும் சென்றுவிடுகின்றனர் அல்லது அதிக பட்சமாக நன்றாக இருக்கின்றது என்று சொல்லிப்போவர், அதில் பங்குகொள்ள மாட்டார்கள்.

அதேபோல அதிகம் அனுபவம் இல்லாதவர்கள் பதிவை அனுபவஸ்தர்கள் அதிகம் கன்டுகொள்வதில்லை, மன்ற மேலாளர்கள் கேட்டுக்கொன்டதற்காக கடமைக்கு நனறாக இருக்கு என்று ஒரு வரியில் முடித்துவிடுகின்றனர்.

அனுபவம் அதிகம் இல்லாதோரிடமும் இரன்டுவகை இருக்கின்றன, ஒருசிலர் இவ்வகையான விவாதமன்றங்களில் கலந்துகொள்ளாமலிருந்து பிறகு தாமதமாக வெளுத்து வாங்குவர். ஒருசிலர் எவ்வளவு நாளானாலும் ஒருவித தயக்கத்துடனே இருப்பர். அத்தகையவர்களை பங்குகொள்ள வைப்பதுதான் வெற்றியே. இதற்காக அவர்களுக்கு சமமாக இறங்கிவந்து, அவர்களின் கருத்தைகேட்டு, பதில்சொல்லி பாராட்டி, அவர்களை ஒரு திரி ஆரம்பிக்க வைத்து, அவர்கள் கருத்தை விமர்சனம் செய்தால் போதும் வெளுத்து வாங்க ஆர்மபித்துவிடுவர்.
அப்படி பொறுமையாக செய்ய தன்னார்வம் கொன்டு அனைவரும் செய்யனும். அப்படிபட்டவர்கள் தங்கள் திரி நல்ல முறையில் விமர்சனம் செய்யப்படும்போது பெறும் மகிழ்சியை கானும்போது , குழந்தையுடன் உரையாடும்போது கிடைக்கும் இன்பம் உன்டாகும்.

அதேபோல ஒவ்வொரு உறுப்பினரும் எத்தகைய தர-நிலையில் இருக்கின்றனர் அவர்கள் எந்த மன்றங்களில் அதிகம் உலாவுகின்றனர், எவ்வகையான திரிகளில் அதிக நேரம் செலவிடுகின்றார்கள் என்று ஆராய்ந்து அத்தகைய பதிவுகளையே சமீபத்திய பதிவுகளாக அவர்கள் மன்றத்தினுள் நுழைகயில் கான்பிக்கனும்.

வணிகநோக்கில் அனுகினால் அறிவியல் முறையில் இன்னும் நிறைய செய்யலாம்.

மன்றத்தினை உறுப்பினர் அல்லாதோர் அனுக அனுமதிக்கவே கூடாது, அப்படி செய்தால், தமிழ்மன்ற சமூகம் என்ற தனித்துவமில்லாமல் போய்விடும்.

கருத்துக்களை களவாடுதல் பற்றி கவலையே படத்தேவையில்லை, எவ்வளவு நன்றாயிருந்தால் அதை களவாடி தன்னுடையது என்று சொல்லுவார், அதைப்பற்றிய தகவலை மன்றத்தில் வெளியிட்டால், அது உங்களுக்குத்தானே பெருமை.

அறிஞர்
23-05-2007, 04:29 PM
விஜயன் கால தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

மன்றத்தில் இருக்கும் மேற்பார்வையாளர்கள் ஆக்டிவாக இருப்பது 4,5 பேர் தான். அவர்களால் எல்லாப்பகுதிகளிலும் சென்று அலச இயலுவதில்லை. அனைவருக்கும் தனித்தனியே அலுவல்கள் இருக்கின்றன. இருந்தாலும் முயன்றவரை அனைவரையும் அரவணைத்து செல்ல முயலுகிறோம்.

எதிர்காலத்தில் (விரைவில்) மேற்பார்வையாளர்களை தனிப்பகுதிகளில் அதிக கவனம் செலுத்த சொல்கிறோம்.

தங்களை போன்ற திறமையானவர்கள் மன்றத்தில் நிலைத்து உயர்த்தவேண்டும் என்பதே எம் ஆவல். தங்களுக்கு பிடித்த இடத்தில் தாங்களும் பலருக்கு கருத்துக்களை கொடுங்கள்...

ஒவ்வொருவரும் தனித்தனியே எங்கு செலவிடுகிறார்கள் என காட்ட முயற்சிக்கிறோம்.