PDA

View Full Version : வாங்கிட்டாரய்யா புது டொமைனுஆதவா
04-05-2007, 03:50 PM
மன்றத்தில் அதிகம் அடிவாங்கும்... அடிகொடுக்க நினைக்க மட்டும் செய்யும் நம் மயூரேசன் அவர்கள் புதிதாக டொமைன் வாங்கிவிட்டாருங்கோ.... :icon_clap:

இதுதான் முகவரி : http://mayuonline.com

எல்லாரும் போய் பாருங்க. முகப்பு பக்கம் அருமையா இருக்கு. மேட்டர் கொஞ்சம் கம்மிதான்.. சீக்கிரமே ஆரம்பிச்சிருவார்னு நினைக்கிறேன் தமிழ் ஆங்கிலம் னு இரண்டுமே இருக்கு. இவரது நீண்ட நாள் கனவு நினைவானது மிகுந்த மகிழ்ச்சி..

மயூரேசா! இதைவைத்து இலங்கைப் பெட்டயளை வளைத்துப் போடலாம்னு நினைக்காதேயும்... ஹி ஹி.. எல்லாருமே ஆதவன் ஆகமுடியுமா? :icon_shades: :smartass:

leomohan
04-05-2007, 03:53 PM

வாழ்த்துகள் மயூரேசன்

ஆதவா
04-05-2007, 04:04 PM
அடடே என்னங்க மோகன் அவர்களே! ஒத்தை வார்த்தையில சொல்லிப் புட்டீங்க... மயூரன் பாவம்ல..

மனோஜ்
04-05-2007, 04:14 PM
முயற்சி திருவினையானதற்கு வாழ்த்துக்கள் மயூ

அறிஞர்
04-05-2007, 04:18 PM
வாழ்த்துக்கள்.. மயூரேசா..
கனவுகள் நனவாகும் காலம்..

இன்னும் எண்ணிய எல்லா செயல்களும் சிறப்பாக அமையட்டும்.

பலருக்கு பயனுள்ள தகவல்களை கொடுங்கள்.....

தேவையில்லாமல் மற்றவர்கள் பதிவதை தடுத்துக்கொள்ளுங்கள்.

நாம் வளர்வதை கண்டு பொறாமை படும் கூட்டம் அதிகம். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

ஓவியா
04-05-2007, 06:54 PM
மயூ வாழ்த்துக்கள், :icon_08: :icon_08:

கண்டேன், முகப்பு சிக்கனமாக அற்புதமாக இருகின்றது. வாழ்த்துக்கள்.

உன் ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஆனந்தமடையும் முதல் ஆள் நாந்தான்.

கலக்கப்போவது யாரில் வெற்றிப் பெற்றவர் மயூதான்...ஹி ஹி ஹி

அறிஞர்
04-05-2007, 06:57 PM
உன் ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஆனந்தாமடையும் முதல் ஆள் நாந்தான்.

கலக்கப்போவது யாரில் வெற்றிப் பெற்றவர் மயூதான்...ஹி ஹி ஹி
யார் அந்த ஆனந்தா... மயூவின் காதலியா.....

தம்பியின் வளர்ச்சியில் தாங்கள் ஆனந்தமடைவதில் எந்த தவறும் இல்லை..

ஓவியா
04-05-2007, 07:01 PM
யார் அந்த ஆனந்தா... மயூவின் காதலியா.....

தம்பியின் வளர்ச்சியில் தாங்கள் ஆனந்தமடைவதில் எந்த தவறும் இல்லை..

எழுத்துப்பிழையை சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி.

அன்புரசிகன்
04-05-2007, 07:11 PM
வாழ்த்துக்கள் மயூ... என்ன ஊட்டப்போகிறீர்கள் என உத்தேசம்

அக்னி
04-05-2007, 07:18 PM
ஆரம்பமே அசத்தல்... மேலும் வளர வாழ்த்துக்கள்...

crisho
05-05-2007, 05:50 AM
வாழ்த்துக்கள் மயுரேசா....

ஓவியன்
05-05-2007, 05:57 AM
அட மயூரேசா!

இடைக்கிடை நல்ல வேலைகளும் பண்ணுறியேயப்பா!!

வாழ்த்துக்கள்.

Ram-Sunda
05-05-2007, 06:00 AM
நானும் சென்று பார்த்தேன், நன்றாக தான் உள்ளது,
புது முயற்ச்சியானலும் மயூரேசன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்

தங்கவேல்
06-05-2007, 03:13 AM
மிக நல்ல வெப்சைட். மயூரேசன் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

சுட்டிபையன்
06-05-2007, 03:45 AM
அட நம்ம மயூட டொமைன் அழகா இருக்கிறது, சிக்கனமாக மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

சக்தி
06-05-2007, 06:27 AM
நண்பரே உங்களது தளம் சிறப்பாக செயல்பட என் வாழ்த்துக்கள்

இணைய நண்பன்
06-05-2007, 10:35 AM
வாழ்த்துக்கள் மயூரேசன்.உங்கள் கனவு நனவாகிவிட்டது.உங்கள் இணையத்தளம் மேலும் பல்சுவை அம்சங்களுடன் வெளிவர வாழ்த்துகிறேன்

மதி
07-05-2007, 03:15 AM
வாழ்த்துக்கள் மயூரா..!

ஷீ-நிசி
07-05-2007, 03:29 AM
வாழ்த்துக்கள் மயூ! எல்லா கனவுகளும் நிறைவேற வாழ்த்துக்கள்!

ஆதவா
07-05-2007, 08:36 AM
அதெப்படி... மயூரேசருக்கு நான் ஆரம்பிக்கும் திரிகளில் இவர் எட்டியே பார்க்கமாட்டேங்கிறாரே!!!

ஓவியன்
07-05-2007, 08:38 AM
அதெப்படி... மயூரேசருக்கு நான் ஆரம்பிக்கும் திரிகளில் இவர் எட்டியே பார்க்கமாட்டேங்கிறாரே!!!

எல்லாம் ஒரு பயம் தான் - கவலை வேண்டாம் நான் இழுத்து வாறன் அப்ப தானே எங்களுக்கும் ஜாலியா பொழுது போகும்.:sport-smiley-018:

அமரன்
07-05-2007, 09:16 AM
இது என்ன வகை திரி. வாரும் திரியா? வாழ்த்து திரியா? மயூவின் இணையத்தளச் சுட்டித் திரியா? எதுவானாலும் ஜாலியாக இருக்கு.

pradeepkt
07-05-2007, 09:43 AM
டேய் தம்பி
புது வீட்டில் இ-பால் கொடுத்ததோடு சரி...
உன் புது வீட்டுக்குப் போன கையோடு இந்தப் பிறந்த வீட்டை மறந்து விட்டாயா என்ன???

ஓவியன்
07-05-2007, 09:46 AM
டேய் தம்பி
புது வீட்டில் இ-பால் கொடுத்ததோடு சரி...

இ-பால் (ஜோரா இருக்குதில்லே)

எப்பவுமே புதிய அருந்தமிழ் சொற்களுக்கு பிரதீப் நானா தான்!.:icon_clap:

ஆதவா
07-05-2007, 10:01 AM
இ-பால்? அதென்ன பால்.. குடிக்கமுடியுமா?

மனோஜ்
07-05-2007, 10:08 AM
இ-பால் அப்டினா:icon_shades: :icon_hmm:

அக்னி
07-05-2007, 10:17 AM
இ-பணம் போல..
இ-பால்...

அப்படியா பிரதீப்?

pradeepkt
07-05-2007, 10:34 AM
ஆமாம் ஆமாம்...
இ-மெயில், இ-பணம், இ-அது, இ-இது எல்லாம் இருக்கும்போது ஒரு இ-பால் இருக்கக் கூடாதா????
தம்பி ஆசையாகப் புது வீட்டுக்குக் கூப்பிட்டான்... போயி இ-பால் சாப்பிட்டு வந்தேன்...

ஓவியன்
07-05-2007, 10:36 AM
அது என்னமோ சரிதான்!

ஆனா என்னைக் கூப்பிடலையே , இ-பால் சாப்பிட..
மயூ சரியான கஞ்சூஸ் போல அது தான் என்னைக் கூப்பிடலை.

Mano.G.
07-05-2007, 03:07 PM
மயூரா இதுதான் உன் முதல் அடி
உன் முதல் அடியிலேயே தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டாய்
இன்னும் நீ வைக்க வேண்டியது பல பல அடிகள்
ஓவ்வொரு அடியும் நீ யாரென காட்ட வேண்டும்,

வாழ்த்துக்கள்
உனது புதிதாக உதித்த
வலைபூவிற்கு
அதோடு எனது ஆசியும் கூட

மனோ.ஜி

அறிஞர்
07-05-2007, 09:54 PM
டேய் தம்பி
புது வீட்டில் இ-பால் கொடுத்ததோடு சரி...
உன் புது வீட்டுக்குப் போன கையோடு இந்தப் பிறந்த வீட்டை மறந்து விட்டாயா என்ன???
புகுந்த வீடா - பிறந்த வீடா போராட்டம்.

பெண்களுக்கு - பிறந்த வீடு பிடிக்கும்
ஆண்களுக்கு - புகுந்த வீடா????

மயூரேசா பதில் சொல்லுப்பா...