PDA

View Full Version : அம்மா.. (500வது பதிப்பு)



rambal
12-05-2003, 09:03 AM
அம்மா.. (500வது பதிப்பு)



உன் நியாபகப்பந்துகள்
தொண்டைக்குழி
வரை வந்து நலம்
விசாரித்துவிட்டுப் போகின்றன
புரையேறியபடி..
தலையில் தட்ட
உன் கைகள் தேடியே
அலுத்துக் கொள்கிறது
மனது...

பாழாய்ப்போன குளிர்
காற்றுக்காக
கம்பளி இழுத்துப்
போர்த்த
சடுதியில் வந்து போகிறாய்
பதட்ட முகத்துடன்
என் கண் முன்..

எப்போதாவது
என்னை இடறிவிட்டு
ஏளனத்தில் சிரிக்கும்
கல்லுக்கும்..
சமையலறையில்
கோபமாய்
வெடித்துச் சிதறும்
கடுகிற்கும்
பதிலாக உன்னைத்தான்
சொல்லியிருக்கிறேன்..

எப்போதாவது
மறக்கின்ற நேரத்தில்தான்
உனக்கான
தினமாக்கி
கொண்டாடுகிறேன்..

lavanya
12-05-2003, 09:31 AM
.......

இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டேப் போகலாம்....
மென்மையான நெகிழ வைக்கும் அழகான பதிவு
அம்மாவைப் பற்றி சொல்லும் எல்லாமே அழகானவைதான்
பாராட்டுக்கள் ராம்பால்.....
வாழ்த்துக்கள் உங்கள் 500 ஆம் பதிப்புக்கு....

poo
12-05-2003, 09:52 AM
அம்மாவைப்பற்றி ஆயிரமாயிரம் விஷயங்கள் எழுதலாம்... அதில் நீ சொல்லியிருப்பதும் அருமை...

500-வது மடலுக்கு அழகு சேர்த்துள்ளாய்...... பாராட்டுக்கள் ராம்!!!

karikaalan
12-05-2003, 10:30 AM
ராம்பால்ஜி!

எண்ணங்கள் எல்லாமே அவளைச் சுற்றித்தான்
இடுக்கண் வருங்கால் முதலில் சொல்வது அவளைத்தான்
இருக்கிற வரையில் அவளைப் பேணவேண்டியது நம்முடைய தலையாய கடமை.

===கரிகாலன்

இளசு
12-05-2003, 11:23 PM
அம்மா....

அருமை கவிதை....
அரை ஆயிரம் கண்ட இளவலுக்கு வாழ்த்தும் பாராட்டும்....

வசீகரி
13-05-2003, 04:41 AM
அருமையான கவிதை ராம்பால்

rambal
13-05-2003, 12:14 PM
பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..

Nanban
17-05-2003, 05:48 PM
தாமதமாகப் படிக்க நேர்ந்த்ஹலும் தரமான கவிதையைப் படித்தோம் என்ற திருப்தி.....

500 ஆவது பதிப்புக்கு special வாழ்த்துகள்.....