PDA

View Full Version : கொழும்பில் கடும் மழை 11பேர் பலி 3 ஆயிரத்திற்&

சுட்டிபையன்
04-05-2007, 02:08 PM
கடும் மழை காரணமாக கொழும்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்பு.

பிரதி மேயர் இராஜேந்திரன் தகவல் கொழும்பிலும் அதனையண்டிய பகுதிகளிலும் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு மாநகரசபையை அண்டிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. கிம்புலாகல, ரெட்பானா, கொட்டாஞ்சேனை, வனாத்தமுல்லை, மாளிகாவத்தை, கதிரான, களனி ஆகிய பகுதிகளிலேயே வெள்ள அபாயம் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் ஏ.கே.எம்.எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கொழும்பில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக 16 பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், வெசாக் பண்டிகைக்கென கட்டப்பட்டிருந்த அலங்கார தோரணங்களும் வீழ்ந்துள்ளன.

தொடர்ச்சியாக இன்னும் சில மணி நேரங்களுக்கு மழை பெய்யுமானால் கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்படும். இவ்வாறானதொரு வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படுமானால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

வெள்ளப் பெருக்கு காரணமாக இடம்பெயரும் மக்களை குடியமர்த்துவதற்கு முன்னேற்பாடாக இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட கொழும்பு மாநகர சபையின் பதில் மேயர் இராஜேந்திரன் மேலும் தெரிவித்தார்

அடை மழையால் பலியானோர் தொகை 11 ஆக அதிகரிப்பு

நேற்று பெய்த அடைமழைகாரணமாக இதுவரை 11 பேர் வரை பலியாகியுள்ளதாக பொலிஸார் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் 3 பேர் பலியாகியுள்ளனர் இவ் உயர் இழப்புகள் பாதுகாப்பற்ற குழிகள் விழுந்தமையால் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளார் ஒருவர் தெரிவித்தார் .

காலி மற்றும் களுத்துறையில் 9 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்

-Tamilwin-

சுட்டிபையன்
04-05-2007, 02:25 PM
வெள்ளவத்தை காலி வீதியில் 15 அடிக்கு நிலம் கீழிறங்கியுள்ளது.

வெள்ளவத்தை ரொக்ஷி தியட்டரிற்கு எதிரே காலி வீதியில் 15 அடிக்கு நிலம் கீழிறங்கியுள்ளதால், வெள்ளவத்தைக்கான காலி வீதியின் போக்குவரத்தை தவிர்த்துக்கொள்ளும்படி பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து பெய்துவந்த கடும் மழையினால், இன்று காலை 8 மணியளவல் ரொக்ஷி வீதிக்கு எதிரே காலி வீதியில் நிலம் 15 அடிக்கு கீழிறங்கியுள்ளதால், வெள்ளவத்தை காலி வீதியினூடாக செல்வோர் மாற்று பாதைதையை பயன்படுத்துமாறும் புறக்கோட்டையிலிருந்து வெள்ளவத்தை நோக்கிச் செல்வோர் ஹெவ்லொக் வீதியை பயன்படுத்தி, கொஹுவளைச் சென்று அங்கிருந்து காலி வீதிக்கு செல்லும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, தெஹிவளையை கடந்து காலி வீதியினூடாக புறக்கோட்டை வருவோர், தெஹிவளை வில்லியம்ஸ் மில்ஸுடன் திரும்பி சரணங்கர மாவத்தைனூடாக காலி வீதிக்கு வரலாம் என வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மங்கள தெஹிதெனிய கூறினார்.

அதேவேளை தொடர்ந்து பெய்த அடை மழை காரணமாக மட்டக்குளி பேர்குஷன் வீதியும் சுமார் 15 அடி கீழிறங்கியுள்ளது. இதனையடுத்து இவ் வீதி தற்காலிகமாக பொலிஸார் மூடியுள்ளதுடன் பொதுமக்களை மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கோரியுள்ளனர்.

http://imgplace.com/directory/dir2191/1178265071_5476.JPG
http://imgplace.com/directory/dir2191/1178265073_5947.JPG

crisho
05-05-2007, 05:34 AM
:4_1_8:

சுட்டிபையன்
05-05-2007, 05:40 AM
:4_1_8:

:ohmy: ஜோவ் மாமு அது நடந்த பகுதி வெள்ளவத்தை என்னும் பகுதி கொழும்பில் குட்டி யாழ்ப்பாணம் அதுதான், 95% தமிழர்கள் வாழும் பகுதி:huh:

ஓவியன்
05-05-2007, 05:40 AM
ஐயோ!!

இது ரொக்சிக்கு முன்னாலயா நடந்தது???

எத்தனை தரம் அந்த இடத்தால போயிருப்பம்......:ohmy:

சுட்டிபையன்
05-05-2007, 05:42 AM
ஐயோ!!

இது ரொக்சிக்கு முன்னாலயா நடந்தது???

எத்தனை தரம் அந்த இடத்தால போயிருப்பம்......:ohmy:

நீங்கள் அதால போயிருப்பீங்கள், நாங்கள் அதிலையே படுத்து உருண்டுருக்கம்:D

ஓவியன்
05-05-2007, 05:45 AM
:D
நீங்கள் அதால போயிருப்பீங்கள், நாங்கள் அதிலையே படுத்து உருண்டுருக்கம்:D

ஓமோம் - அதிலை நிறையப் பேர் படுத்துக் கிடக்கிறவை தான் - திருவோட்டுடன்...:D

crisho
05-05-2007, 06:48 AM
:ohmy: ஜோவ் மாமு அது நடந்த பகுதி வெள்ளவத்தை என்னும் பகுதி கொழும்பில் குட்டி யாழ்ப்பாணம் அதுதான், 95% தமிழர்கள் வாழும் பகுதி:huh:

தகவலுக்கு நன்றி மாப்பு!!

வெள்ளவத்தை தெரியாத இலங்கையனா நான்?? என் காலடி படாத இடம் கொழும்பில் இல்லை!! குறிப்பாக காலி வீதியிலும், கொழும்பிலிருந்து கந்தஹானை பகுதி வரையிலும்!!

கொள்ளுப்பிட்டி - லிபர்ட்டி பிலாசா, பம்பலப்பிட்டி மஜஸ்டிக் சிட்டி.... சுத்தாத... மீன்பிடிக்காத இடமில்லையாக்கும்!!

மாப்பு... உமது வதிவிடம் என் மீன்பிடி தளமாக்கும்!! சைக்கிளில் ஒரு கூட்டமாக சுத்துவோம்... ஹந்தலை, வத்தலை நமது முக்கிய இடமாக்கும்!! அப்போது எனது வதிவிடம் கந்தஹானையில்!!

ஓவியன்
05-05-2007, 06:52 AM
கொள்ளுப்பிட்டி - லிபர்ட்டி பிலாசா, பம்பலப்பிட்டி மஜஸ்டிக் சிட்டி.... சுத்தாத... மீன்பிடிக்காத இடமில்லையாக்கும்!!!!

மஜஸ்டிக் சிட்டியில் மீன் பிடித்தீரா???

நான் நினைச்சன் மாலுக்கடையில தான் மீன் பிடிக்கலாமெண்டு... :D

crisho
05-05-2007, 07:01 AM
மஜஸ்டிக் சிட்டியில் மீன் பிடித்தீரா???

நான் நினைச்சன் மாலுக்கடையில தான் மீன் பிடிக்கலாமெண்டு... :D

அது ஒரு நிலாக்காலம் ஓவியரே.... பலசயெல்லாம் தூசிதட்ட வைக்க வேண்டாம்!! :icon_nono: அழுதுடுவே!!

எங்க மீன் பிடிக்கனும்னு தோணுதோ அங்கெல்லாம் போயிடுவோம்ல்ல! :sport009:

மாலுக்கடையில மீன் வேண்டிப்போம்... ஆனா பிடிக்க மாட்டோம்!! :icon_tongue:

ஓவியன்
05-05-2007, 07:04 AM

அட மஜஸ்டிக் சிட்டிக்கு பக்கத்தில கடல் இருக்கு அது தான் அப்படிச் சொல்லுறீரோ??:D

crisho
05-05-2007, 07:22 AM
அட மஜஸ்டிக் சிட்டிக்கு பக்கத்தில கடல் இருக்கு அது தான் அப்படிச் சொல்லுறீரோ??:D

அப்படியே எடுத்துக்குங்க!! :D

சுட்டிபையன்
05-05-2007, 07:50 AM
தகவலுக்கு நன்றி மாப்பு!!

வெள்ளவத்தை தெரியாத இலங்கையனா நான்?? என் காலடி படாத இடம் கொழும்பில் இல்லை!! குறிப்பாக காலி வீதியிலும், கொழும்பிலிருந்து கந்தஹானை பகுதி வரையிலும்!!

கொள்ளுப்பிட்டி - லிபர்ட்டி பிலாசா, பம்பலப்பிட்டி மஜஸ்டிக் சிட்டி.... சுத்தாத... மீன்பிடிக்காத இடமில்லையாக்கும்!!

மாப்பு... உமது வதிவிடம் என் மீன்பிடி தளமாக்கும்!! சைக்கிளில் ஒரு கூட்டமாக சுத்துவோம்... ஹந்தலை, வத்தலை நமது முக்கிய இடமாக்கும்!! அப்போது எனது வதிவிடம் கந்தஹானையில்!!

அட மாம்ஸ் நீயும் நம்ம ஏரியாவா..............? நம்ம கூட குப்பை கொட்டும் போதே நினைச்சேன்:sport009: மாம்ஸ் நீ சொன்ன ஏரியா எல்லாம் நம்ம ஏரியாதான்:D :D :D :D

சுட்டிபையன்
05-05-2007, 07:57 AM
:D

ஓமோம் - அதிலை நிறையப் பேர் படுத்துக் கிடக்கிறவை தான் - திருவோட்டுடன்...:D

எனக்கு முன்னாடி திருவோடு வச்சிருக்கிரது தாங்கள் தானே:violent-smiley-010:

மஜஸ்டிக் சிட்டியில் மீன் பிடித்தீரா???

நான் நினைச்சன் மாலுக்கடையில தான் மீன் பிடிக்கலாமெண்டு... :D

MCல மீனா, பெரிய தூண்டில் போட்டா திமிங்கிலம், சுறா கூட பிடிக்கலாம்:sport009:

ஓவியன்
05-05-2007, 08:00 AM
எனக்கு முன்னாடி திருவோடு வச்சிருக்கிரது தாங்கள் தானே:violent-smiley-010:

நான் காலி வீதியில் படுத்து உருண்டேன் என்று சொன்னேனா???-உம்மைப் போல...:D

சுட்டிபையன்
05-05-2007, 08:11 AM
அது ஒரு நிலாக்காலம் ஓவியரே.... பலசயெல்லாம் தூசிதட்ட வைக்க வேண்டாம்!! :icon_nono: அழுதுடுவே!!

எங்க மீன் பிடிக்கனும்னு தோணுதோ அங்கெல்லாம் போயிடுவோம்ல்ல! :sport009:

மாலுக்கடையில மீன் வேண்டிப்போம்... ஆனா பிடிக்க மாட்டோம்!! :icon_tongue:

மாமு நம்ம கட்சிதான்
நாம இப்பவும் மீன் பிடிக்கிறமாக்கும்:D

சுட்டிபையன்
05-05-2007, 08:23 AM
நான் காலி வீதியில் படுத்து உருண்டேன் என்று சொன்னேனா???-உம்மைப் போல...:D

நாங்கள் உண்மைய சொல்லுவம்ல:D
நீங்க அப்படியா:violent-smiley-010:

அன்புரசிகன்
05-05-2007, 08:29 AM
தகவல் நெஞ்சை உலுக்குகிறது. நம் பகுதியில் பெரியகுழிகள் உண்டு. (விமான எறிகணைத்தாக்குதல்களால்). இய்கை தரமாகத்தான் கொடுக்கிது. இருருந்தாலும் மனம் வருந்துகிறது. எதிரிக்கும் நம் வலி வேண்டாம்.

அமரன்
05-05-2007, 08:34 AM
கொடுமையான விடயம். இலங்கைக்கு இது போதாத காலம் போலும். இலங்கைவாழ் மக்களுக்கு அடிக்கு மேல் அடி. பொருளாதாரம் பள்ளத்தில் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் இப்போ நிஜமாகவே ஒரு பள்ளம்.