PDA

View Full Version : கவிகளுடன் அக்னியும்...



அக்னி
04-05-2007, 01:18 PM
தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு...
தமிழ் தந்தது என் வார்த்தைக்கு துளிர்ப்பு..,
தமிழ்மன்றம் தருவது என் உணர்வுக்கு மதிப்பு...
தமிழ் தந்தது என் மனதுக்கு கவிதை..,
தமிழ்மன்றம் தருவது என் கவிதைக்கு அரங்கை...

இது எனது நூறாவது பதிப்பு..!
இப்பொழுதே..,
நூறாண்டு வாழ்ந்த உணர்வு...
முழுமையாய்.., நிறைவாய்..!
ஆயிரம் பல தாண்டியும் அடக்கமாய், பலர் இருக்க,
எனக்கு முதல் அடி என்பதால், சிகரமாய் தெரிகிறது...

எனக்கும் மன்றத்தில் கவிஞனாய் வாழ ஆசை... அதனாலேயே நான் இங்கே பதிந்துகொள்கின்றேன்...
இப்போதைக்கு இல்லாவிட்டாலும், மன்ற கவிஞர்களின் உந்துதலில், எப்போதாவது ஒருநாளேனும் கவிஞன் என்ற நிலைக்கு உயர்வேன் என்கின்ற நம்பிக்கை...
அதுவே, இங்கே பதிந்துகொள்ளும் என் துணிவு...

மன்றிலே சில குறும்படைப்புக்களைப் (கவிதைகள்...???) பதித்துவிட்டேன். கவிகள் கண்நோக்க வேண்டும். எனக்கு வழிகாட்ட வேண்டும். தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.
இன்றைய சில படைப்புக்கள், நாளைய பல கவிதைகளாய் மாற, என் சிந்தைக்குச் சிறகுபூட்ட வேண்டும். சிறகடித்துப் பறக்க, கற்றுத் தரவேண்டும்.
இது, இந்தச் சிறியவனின் பெரிய வேண்டுதல்...
உங்களது தூண்டுதல்களும், விமர்சனங்களுமே எனது அங்கீகாரம்...

எனது எழுத்துக்களிலிருந்து.., (பதிவுகள் இங்கே புதுப்பிக்கப்படும்)
மென்மை..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8979)
இன்றைய காதல் ஸ்பெஷல்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8993)
காபனீரொட்சைட்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9080)
இது அழகான நினைவல்ல..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9159)
மரணத்தை வென்ற காவியநாயகர்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9284)
நினைப்பும்.., துடிப்பும்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9467)
இனியும் எனக்கு வலுவில்லை..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9995)
பசுமை நாடிய பயணங்கள்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10133)
பெருமூச்சு..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10229)
இதுதான் தலைவிதியா..? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10417)
வெடிப்பு..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10459)
லஞ்சம் என்றால்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=230380#post230380)
ஜாதி..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10584)
கருமையில் பிறந்த புதுமை... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10609)
காத்திருப்பு..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10723)
எனக்குள் ?? ... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10724)
அக்னித் துளிகள்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11430)
தமிழ் தேடி... தமிழ்மன்றம் நாடி..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13322)

மனோஜ்
04-05-2007, 02:09 PM
மன்றம் மட்டும் அல்ல அக்னி தமிழகமே வாழ்தும் அளவு உயர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

மயூ
04-05-2007, 03:08 PM
வாழ்த்துக்கள் அக்கினி..!!!
மேலும் எழுதுங்கள்.. வாழ்த்தி ஊக்கமளிக்க மன்றத்து உறவுகள் பின்னிற்க மாட்டோம்!
வாழ்த்துக்கள்!

ஓவியா
04-05-2007, 08:42 PM
தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு...
தமிழ் தந்தது என் வார்த்தைக்கு துளிர்ப்பு..,
தமிழ்மன்றம் தருவது என் உணர்வுக்கு மதிப்பு...
தமிழ் தந்தது என் மனதுக்கு கவிதை..,
தமிழ்மன்றம் தருவது என் கவிதைக்கு அரங்கை...

பிள்ளையார் சுழி சூப்பரா இருக்கு. ரசித்தேன்.

அழகிய தமிழில் அருமையான அறிமுகம்.

அனைவரின் பதிப்புகளிலும் கலந்து சிறப்பாக விமர்சனங்களும் கருத்துக்களும் வழங்கும் உங்களை இவ்வேளையில் பாராட்டி மகிழ்கிறேன்.

மேன்மேலும் பல சிறந்த கவிதைகளை வழங்கி சிறந்த கவிஞர் வரிசையில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்.

mravikumaar
05-05-2007, 01:55 AM
நீங்கள் கவிஞனாக வருவீர்கள் வாழ்த்துக்கள்

அன்புடன்,
ரவி

சுட்டிபையன்
05-05-2007, 03:37 AM
அழகான ஆரம்பம் உங்கள் கவி அறிமுகம்
தொடருங்கள் உங்கள் எழுத்தாற்றலை
ரசிக்க நாம் எல்லோரும் இருக்கிறோம், ரசிக்க மட்டுமல்ல விமர்சனம், ஊக்குவிப்பு எல்லாம் கொடுப்பதற்க்கும்:icon_clap:

poo
05-05-2007, 08:17 AM
வாழ்த்துக்கள் அக்னி..

உங்கள் பெயரே உங்களை நோக்கிய எங்கள் பார்வையை இழுக்கிறது... எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்து நிறைய கவிதை எழுதுவீர்களென நம்புகிறேன்..

அக்னி
06-05-2007, 11:37 PM
விரிகின்ற என் சிந்தனைகளுக்கு, கவி வடிவம் கொடுக்க,
உரமூட்டுகின்றன..,
உங்கள் வாழ்த்துக்களும், ஊக்குவிப்புக்களும்...
"நன்றி"

மதுரகன்
08-05-2007, 06:10 PM
உங்கள் சிந்தனைகள் அண்டங்களைத்தாண்டி விரிய வாழ்த்துகிறேன்....

leomohan
08-05-2007, 06:13 PM
வாழ்த்துகள் அக்னி. தொடருங்கள்.

ஓவியன்
09-05-2007, 09:38 AM
நீங்கள் அநீதிகளைச் சுடுவதிலும் அக்னியே,
நல்லவற்றைப் புடம் போடுவதிலும் அக்னியே,
உம் அக்னி வேள்வியில் நானும் சங்கமிக்க தயார் நண்பரே.

ஆதவா
11-05-2007, 01:31 AM
அறிமுகத் திரியில் பழக்கமானவர். நல்ல கவிதை வளம். காதல் கவிகள் புகுந்து விளையாடுகின்றன.. இப்பொழுதுதான் உள்ளே நுழைந்திருக்கிறார்.. மன்றத்தின்மீதுள்ள பாசம் வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள் அக்னி... மேன்மேலும் எழுத வாழ்த்துகிறேன்

தாமரை
11-05-2007, 01:33 AM
இங்குத் தவழப் பழகிய குழந்தைகள் இன்று இமயமலைகளை அளந்து கொண்டிருக்கின்றன. உயரே உயரே போக வாழ்த்துக்கள்

lolluvathiyar
11-05-2007, 02:14 PM
உங்களை அறிமுகம் செய்த
சாக்கில் மண்றத்தை உயர்த்தி
விட்டதுக்கு பாராட்டும் நண்றியும்
கூடவே என் ஆசியும்

அக்னி
23-05-2007, 12:43 PM
அன்பான ஆசிகளுக்கு நன்றி நண்பர்களே...

இளசு
12-06-2007, 10:37 PM
என் அன்பான வாழ்த்துகள் அக்னி!

முயற்சியும் பயிற்சியும் இரு சிறகுகளாக
வெற்றிச் சிகரங்களை எட்டி வாசம் செய்ய
பாசமிகு ஆசிகள்..ஊக்கங்கள்!

அக்னி
15-06-2007, 09:51 AM
என் அன்பான வாழ்த்துகள் அக்னி!

முயற்சியும் பயிற்சியும் இரு சிறகுகளாக
வெற்றிச் சிகரங்களை எட்டி வாசம் செய்ய
பாசமிகு ஆசிகள்..ஊக்கங்கள்!
நன்றி இளசு அவர்களே...
உங்கள் ஆசிகளோடு சிகரங்களைத் தொட்டுப் பார்க்கத்தான் ஆசை...

ஷீ-நிசி
07-07-2007, 02:26 AM
வாழ்த்துக்கள் அக்னி! நீங்கள் கவிதையில் மென்மேலும் வளர வேண்டுமென மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

அக்னி
07-07-2007, 02:49 PM
வாழ்த்துக்கள் அக்னி! நீங்கள் கவிதையில் மென்மேலும் வளர வேண்டுமென மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

மிக்க நன்றி ஷீ−நிசி...
என்னை வழிகாட்டும், எழுதத் தூண்டும் கவிதைகள் தருபவர்களில் நீங்களும் ஒருவர்...
உங்கள் பாராட்டு என்றும் எனக்கு உற்சாகமே...

சாராகுமார்
01-08-2007, 02:08 PM
அக்னி அவர்களுக்கு வணக்கம்.உங்கள் கவி அறிமுகம் அக்னி மாதிரி சீறுகிறது.வார்த்தைகள் அருமை.எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அக்னி வள்ளல் அல்லவா நீங்கள்.

இனியவள்
01-08-2007, 02:17 PM
அக்னி முதலில் வாழ்த்துக்கள்:icon_clap:

உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை அக்னி
உங்களைப் போல் எழுத முடியுமா என்று
தெரியவில்லை...

அதுவும் பதில் கவிதைகளில் தருவதில்
என்றுமே ஒரு தனித்துவம் உங்களிடம்

வாழ்த்துக்கள் பல அக்னி

விகடன்
01-08-2007, 02:29 PM
வாழ்த்துக்கள் அக்னி.
தொடருங்கள் உங்கள் ஒளிர்மயமான பதிவுகளை.

அக்னி
14-08-2007, 11:29 AM
அக்னி அவர்களுக்கு வணக்கம்.உங்கள் கவி அறிமுகம் அக்னி மாதிரி சீறுகிறது.வார்த்தைகள் அருமை.எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அக்னி வள்ளல் அல்லவா நீங்கள்.
நன்றி...
உங்கள் பாராட்டும் மனதிற்கும், கொடுக்கும் கரங்களுக்கும் முன்,
நான் மிகவும் சிறியவனே...


வாழ்த்துக்கள் பல அக்னி
உண்மையை சொல்லப் போனால், நீங்களும் எனது வழிகாட்டிகளில் ஒருவரே...
உங்கள் கவிகளே, எனக்கும் தூண்டுதல்களாகின.
நன்றி...

வாழ்த்துக்கள் அக்னி.
தொடருங்கள் உங்கள் ஒளிர்மயமான பதிவுகளை.
நன்றி விராடன்...
ஏற்றிய திரிகளின் ஒளிர்விற்கு, உங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள்,
உத்வேகமே...

kampan
15-08-2007, 05:20 AM
அக்கினியின் சொல் கோர்வை இப்படியென்றால்
அக்கினியின் பார்வை எப்படி இருக்குமோ

அக்கினியை எட்டி நின்று ரசிக்கவே நம்மால் முடியும்

ஓவியன்
16-08-2007, 10:15 PM
அக்கினியின் சொல் கோர்வை இப்படியென்றால்
அக்கினியின் பார்வை எப்படி இருக்குமோ

அக்கினியை எட்டி நின்று ரசிக்கவே நம்மால் முடியும்

எட்டி நின்று ரசிக்க நினைத்தால்
எட்டி எட்டி பார்ப்பதுடனேயே
இருந்து விடுவீர்..........

முடியும் என்று
ஜோதியில் குதித்துவிட்டாலே
மூட்ட முடியும் உம்மாலும்
பல அக்னி வேள்விகளை.......

அக்னி
30-08-2007, 07:10 PM
அக்கினியின் சொல் கோர்வை இப்படியென்றால்
அக்கினியின் பார்வை எப்படி இருக்குமோ

அக்கினியை எட்டி நின்று ரசிக்கவே நம்மால் முடியும்
கம்பன் புகழ் கேட்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்...
நன்றி நண்பரே...

எட்டி நின்று ரசிக்க நினைத்தால்
எட்டி எட்டி பார்ப்பதுடனேயே
இருந்து விடுவீர்..........

முடியும் என்று
ஜோதியில் குதித்துவிட்டாலே
மூட்ட முடியும் உம்மாலும்
பல அக்னி வேள்விகளை.......
அதானே...
கம்பரே தயங்கலாமா...?
மன்றத்தின் கம்பனாக வாழ்த்துகின்றோம்...

இலக்கியன்
04-09-2007, 05:21 PM
அழகான அறிமுகத்துடன் உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக உள்ளது
நேரம் உள்ளபோது அணைத்தையும் படிக்கிறேன் வாழ்த்துக்கள் அக்னி

அக்னி
04-09-2007, 05:25 PM
அழகான அறிமுகத்துடன் உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக உள்ளது
நேரம் உள்ளபோது அணைத்தையும் படிக்கிறேன் வாழ்த்துக்கள் அக்னி

நன்றி இலக்கியன்...