PDA

View Full Version : சிந்தனை செய் மனமே...



அரசன்
04-05-2007, 10:54 AM
ஆசிரமவாதிகளுக்கு
குறைவில்லை; ஏமாந்த
இந்திய மக்கள்
இருக்கும் வரை...!

:icon_hmm: :icon_hmm: :icon_hmm:

ஓவியன்
06-05-2007, 06:45 AM
ஏமாறுபவன் இருக்கும் வரை - ஏமாற்றுபவனும் இருப்பானாம்....

ஓவியா
06-05-2007, 10:03 PM
நல்ல பஞ். நன்றி

அமரன்
16-07-2007, 12:28 PM
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.
பாராட்டுக்கள் மூர்த்தி..

alaguraj
16-07-2007, 01:00 PM
ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக்
கொள்ளமாட்டான்,

சொகுசு வாழ்க்கைக்காக காவி அணியும் கபடதாரி நாயை விட மோசமானவன்.

இனியவள்
16-07-2007, 01:04 PM
ஆசிரமவாதிகளுக்கு
குறைவில்லை; ஏமாந்த
இந்திய மக்கள்
இருக்கும் வரை!

:icon_hmm: :icon_hmm: :icon_hmm:

ஏமாற்றும் அரசியல்
வாதிகளுக்கு குறைவில்லை
ஏமாறும் மக்கள்
இருக்கும் வரை :spudnikbackflip:

இப்படியும் வரலாம்

கவிதை நன்று மூர்த்தி

அரசன்
16-07-2007, 01:05 PM
ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக்
கொள்ளமாட்டான்,

சொகுசு வாழ்க்கைக்காக காவி அணியும் கபடதாரி நாயை விட மோசமானவன்.

ஆமாம் அழகு. காவி அணிபவர்களில் பலர் மோசமானவர்களே.

ஆதவா
17-07-2007, 03:45 AM
இது நம் தவறு...

கடை இல்லையென்றால் விற்பனை இல்லை என்பதைவிட
வாங்குபவன் இல்லையென்றால் கடையே இல்லை என்று சொல்லலாமே? (நன்றி லொள்ளுவாத்தியார்)

முதலில் நீ லஞ்சம் கொடுப்பதை நிறுத்து, தானாய் நின்றுவிடும் லஞ்சம்..

நாம் ஊக்குவிக்கிறோம். சாமியார் எத்தனைபேர் வந்து லிங்கம் எடுத்தும் ஏன் குழந்தையே கொடுத்தும் இன்னும் ஊக்குவிக்கிறோம்.. ஊக்குவித்தல் இருந்தால் சிறு துரும்புகூட ரயிலையே கவிழ்த்துவிடும்..

சிறப்பான கவிதை மூர்த்தி... வாழ்த்துக்கள்... நான்குவரிகளில் நச்....

சிவா.ஜி
17-07-2007, 04:38 AM
ஆதவாவின் கருத்து அத்தனையும் உண்மை. நம் தமிழ்நாட்டில் இந்த செவ்வாடை சில்லறைகள் செய்யும் அலம்பல்கள் அக்கிரமம். அவர்களைச் சொல்லி என்ன பயன்? பாராட்டுக்கள் மூர்த்தி.