PDA

View Full Version : வெகுநாட்களாய் தொடர்கிறது



mravikumaar
04-05-2007, 07:13 AM
மன்ற நண்பர்களே,
எனக்கு கவிதை எழுத ஆசை எழுந்தது.
சில நாட்கள் முயற்சித்தேன், கவிதை வரவில்லை.
விட்டுவிட்டேன்.

இப்பொழுது,

தமிழ் மன்றத்து கவிகளின் கவிதைகளை
தாகத்தோடு பருகியதலாலோ என்னவோ
மீண்டும் எழுத ஆசை
முயற்சித்திருக்கிறேன்.
குறை, நிறைகளை சுட்டிக் காட்டுங்கள்


வெகுநாட்களாய் தொடர்கிறது
____________________________

அன்ன நடையில்
அவசரமாக வருவாள்
அணுக்கள் அனைத்தும்
அதிரும் என்னுள்

கண்கள் பேசும் என்கிறார்கள்
காதல் கொண்டவர்கள்

கண்கள் பேசுவதை காண
காத்திருக்கும் எனது கண்கள்

கடைக்கண் பார்வை பட்டுவிட்டால்
மண்ணின் மைந்தருக்கு மாமலையும் கடுகாம்

கடைக்கண் பார்வையை காண
விழித்திருக்கும் எனது மனது

எது நடக்கும் என
துடிக்கும் எனது இதயம்

தானாக அவள் உணர
தளர்ந்து நடக்கும் எனது கால்கள்

கடந்து செல்வாள்
கவனியாமல்...
கலங்கும் எனது
கண்கள்

கடந்து செல்வாள்
உணராமல்...
கணக்கும் எனது
உள்ளம்

விலகி செல்வாள் பார்வை
விலகாமல்...
இறுகும் எனது
இதயம்

நிற்காமல் செல்வாள்
அவள்...
நின்றது போகும் எனது
கால்கள்.

அன்புடன்
ரவி

குறிப்பு:
ஓவியா நீங்கள் சொன்னது போல் எனது முதல் படைப்பை பதித்துவிட்டேன். விமர்சனம் தாருங்கள்.

leomohan
04-05-2007, 07:33 AM
நல்ல கன்னி முயற்சி. தொடருங்கள் ரவிகுமார்.

ஆதவா
04-05-2007, 08:17 AM
ரவிக்குமார்.... (உங்கள் பெயருக்கும் என் பெயருக்கும் ஒரு ஒற்றுமை...)

முதல் கவிதை என்றூ சொல்லுமளவிற்கு இல்லை. கவிதை பயங்கரமான அதி அற்புதமான, ம்ம்ம் வேண்டாம்... அழகாக இருக்கிறது.
முதல் கவிதை என்பதால் தேவையான விமர்சனங்கள் இடுகிறேன்.

அணுக்கள் அதிரும்... இம்மாதிரியான வார்த்தைப் பிரயோகம் சிலரிடம் தான் கவனித்திருக்கிறேன்.. காதலை மையமாக எழுதியதிற்கு ஒரு சபாஷ்.. ஷீ-நிசி சொன்னமாதிரி காதலில் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக போகலாம்..

இடையே பாரதிதாசன் வரிகள் வருகின்றன... ஒட்டியும் ஒட்டாமலும்..

ஓவியா அவர்கள் கவிதைப்பகுதியில் கவிதை எழுதாவிடினும் புதியவர்களை ஊக்குவிக்கிறார்.. அதைக்கேட்டு எழுதியமைக்கு ஒரு சபாஷ்

முதல் கவிதை : 25
காதல் : 25
வார்த்தைகள் பிரயோகம் : 25
ஊக்கத்தினால் உந்தப்பட்டது : 25
ஒரு சின்ன ஜெர்க் : -25

ஆக மொத்தம் எழுபத்தைந்து பணம் விழுந்ததா? சோதிக்கவும்...

mravikumaar
04-05-2007, 08:35 AM
நன்றி மோகன்.

நன்றி ஆதவா.

உங்கள் விமர்சனத்தைப் படிக்கும்போது

உண்மையிலேயே, நிறைய எழுதனும் என்ற உந்தல் ஏற்படுகிறது.

அன்புடன்,
ரவி

சக்தி
04-05-2007, 08:39 AM
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

ஆதவா
04-05-2007, 09:33 AM
ரவிக்குமார்.. நிச்சயம் எழுதுங்கள்.. ரவிக்குமார் என்றால் என்ன அர்த்தம் வருகிறது தெரியுங்களா? கர்ணன் என்ற அர்த்தம்... எப்படி? கண்டுபிடியுங்க.
------------------
இன்னும் விமர்சனம் பண்ணியிருக்கலாம் என்று தோணியது. முன்பிருந்த கவனம் இன்றில்லாமல் இருப்பதுபோன மாயை என்னிடம் இருக்கிறது. விரைவில் முழுபலத்துடன்.........

அடுத்த கவிதை எப்போது???

mravikumaar
04-05-2007, 09:45 AM
ரவிக்குமார்.. நிச்சயம் எழுதுங்கள்.. ரவிக்குமார் என்றால் என்ன அர்த்தம் வருகிறது தெரியுங்களா? கர்ணன் என்ற அர்த்தம்... எப்படி? கண்டுபிடியுங்க.
------------------
இன்னும் விமர்சனம் பண்ணியிருக்கலாம் என்று தோணியது. முன்பிருந்த கவனம் இன்றில்லாமல் இருப்பதுபோன மாயை என்னிடம் இருக்கிறது. விரைவில் முழுபலத்துடன்.........

அடுத்த கவிதை எப்போது???

என் பெயருக்கு கர்ணன் என்று அர்த்தம்
என்று இப்பொழுதான் எனக்கு தெரிகிறது.எனவே
எப்படி என்று நீங்களே கூறிவிடுங்கள்

அடுத்த கவிதை விரைவில்

அன்புடன்,
ரவி

ஆதவா
04-05-2007, 11:54 AM
ரவி - சூரியன்
குமார் - குமாரன்

சூரியகுமாரன் = சூரியனின் குமரன் - சூரியனின் மகன்

சூரியனின் மகன் வேறு யாரு? கர்ணன் தானே?

மனோஜ்
04-05-2007, 01:20 PM
ரவியின் முதல் கவிதைக்கு என்வாழ்த்துக்கள்
கவிதை அருமை தொடருங்கள் நண்பரே
25 பணம் பரிசு

mravikumaar
04-05-2007, 02:51 PM
ரவி - சூரியன்
குமார் - குமாரன்

சூரியகுமாரன் = சூரியனின் குமரன் - சூரியனின் மகன்

சூரியனின் மகன் வேறு யாரு? கர்ணன் தானே?

ரவி - சூரியன்
குமார் - குமரன்
குமரன் -முருகன்

இது மட்டும்தான் எனக்கு தெரியும்

உண்மையில்

சூரியனின் குமரன் கர்ணன் என்று தோன்றவில்லை

அன்புடன்
ரவி

ஆதவா
04-05-2007, 03:15 PM
ரவி - சூரியன்
குமார் - குமரன்
குமரன் -முருகன்

இது மட்டும்தான் எனக்கு தெரியும்

உண்மையில்

சூரியனின் குமரன் கர்ணன் என்று தோன்றவில்லை

அன்புடன்
ரவி

குமரன் என்றால் மகன் என்ற அர்த்தமும் உண்டு.

ஓவியா
05-05-2007, 12:04 AM
அன்ன நடையில்
அவசரமாக வருவாள் (ன்)
அணுக்கள் அனைத்தும்
அதிரும் என்னுள் (சூப்பர்)
அடடே இது உண்மைதான்....அசத்தல்


கண்கள் பேசும் என்கிறார்கள்
காதல் கொண்டவர்கள்
கண்கள் பேசுவதை காண
காத்திருக்கும் எனது கண்கள்
அதே அதே, பார்த்துக்கொண்டே இருங்க, வாய்ப்பு இருக்கு


கடைக்கண் பார்வை பட்டுவிட்டால்
மண்ணின் மைந்தருக்கு மாமலையும் கடுகாம்
ஆமாங்க இப்படிதான் ராமர் வில்ல ஒடிச்சாராம்

கடைக்கண் பார்வையை காண
விழித்திருக்கும் எனது மனது
காத்திருப்பு சுகமாம். வேய்ட் மாமு


எது நடக்கும் என
துடிக்கும் எனது இதயம்
தானாக அவள் உணர
தளர்ந்து நடக்கும் எனது கால்கள்
இந்த வரி பிரமாதம்.....பின்னிட்டீங்க


கடந்து செல்வாள்
கவனியாமல்...
கலங்கும் எனது
கண்கள்
அழாதீங்க, காதலில் ஆண்கள் அழக்கூடாதாம், மயூ சொன்னான்.


கடந்து செல்வாள்
உணராமல்...
கணக்கும் எனது
உள்ளம்
ஆமாம் இலை வடிவ இதயமும் மலை வடிவில் கணக்குமாம். மாதவன் டும் டும் டுமிலே பாடி இருக்கார்.


விலகி செல்வாள் பார்வை
விலகாமல்...
இறுகும் எனது
இதயம்
இதுதாங்க உண்மையான ரணம். விலகி செல்வது. கண்ண தொடச்சிகுங்க. நானும் தொடச்சிகுறேன்


நிற்காமல் செல்வாள்
அவள்...
நின்றது போகும் எனது
கால்கள்..
அய்யோ பாவம்.



அன்புடன்
ரவி

குறிப்பு:
ஓவியா நீங்கள் சொன்னது போல் எனது முதல் படைப்பை பதித்துவிட்டேன். விமர்சனம் தாருங்கள்.


ரவி அவர்களே,
முதல் கவிதையிலே சென்ஞ்சரி அடிசீட்டீங்க, சபாஷ்

கவிதை பிரமாதம், உண்மைய சொன்ன இது கவிதயே அல்ல உணர்வின் வார்த்தைகள், ரொம்ப அழகா கவிதையா சொல்லி இருக்கீங்க.

பாராட்டுகளுடன் வாழ்த்துக்களும்.

ஓடிபோய் ஒரு கவிஞர் அறிமுகம் கொடுங்க. பின் இந்த சுட்டியையும் இணைக்கவும். நன்றி.

mravikumaar
05-05-2007, 01:49 AM
ரவி அவர்களே,
முதல் கவிதையிலே சென்ஞ்சரி அடிசீட்டீங்க, சபாஷ்

கவிதை பிரமாதம், உண்மைய சொன்ன இது கவிதயே அல்ல உணர்வின் வார்த்தைகள், ரொம்ப அழகா கவிதையா சொல்லி இருக்கீங்க.

பாராட்டுகளுடன் வாழ்த்துக்களும்.

ஓடிபோய் ஒரு கவிஞர் அறிமுகம் கொடுங்க. பின் இந்த சுட்டியையும் இணைக்கவும். நன்றி.

நன்றி ஓவியா

உங்களுடைய விமர்சனம் நன்றாக இருந்தது.

உங்களுடைய விமர்சனம்,பாராட்டுக்கு

மீண்டும் நன்றி

அன்புடன்,
ரவி