Log in

View Full Version : தொட்டுப் பார்த்து...



பிச்சி
04-05-2007, 03:54 AM
வானம் உடுத்திய ஆடை
காற்றின் பெருமூச்சில்
கலைந்தோடியது.
என் கண்களைக் கண்டுத்தான்
சூரிய உதயம் தள்ளிப்போகிறது.

அனிச்சப்பூ அணிந்த
என் கூந்தல் இழைகள்
காற்றுடன் பேசியது
காதல் பாசைகளினால்
ராகம் மீட்டியது.

சுருங்கிவிரிந்த
விழிகளுக்குள்
நிலவினைப் பொதிக்கிறேன்
மகிழ்ச்சிக் கடலில்
மூழ்கி முத்தெடுத்து
அதைக் கழுத்தில் அணிந்து
கணவனின் வருகைக்கு
கால்கடுக்க நிற்கிறேன்

உதிர்ந்த இலைகளும்
தேன்குடித்த வண்டுகளும்
என்னைப் பார்ப்பதற்கே
முற்றத்தில் நிற்கும்
அஷ்டலட்சுமியும்
முத்தமிட்டு சென்றனர்
சில நொடிப்பொழுதுகளில்...

தோகை விரித்தாடிய
கனவுகளில்
அம்மா என்ற புதுராகம்
அலையாக தொனித்தது
ஒவ்வொரு ஸ்திரிக்கும்
ஒருவித ராகம்..

உதரத்தில் கைவைத்து
கண்களை மூடினேன்
உயர்வு நவிற்சியில்
ஒரு கவிதை நித்திரைகொண்டது

மேடான வயிறு
என் பெண்மையை
உண்மை என்று சொல்லியது,

தொட்ட கைகளை
கண்களால் கவனிக்கிறேன்

ஆமாம் ஆமாம்..
இதற்குத்தானே காத்திருந்தேன் :love-smiley-008:

ஷீ-நிசி
08-05-2007, 04:42 AM
தாய்மையப் பற்றின மிக அழகான கவிதை.....

நவிற்சி... இந்த வார்த்தைகள் எனக்கு முற்றிலும் புதிது பிச்சி..


அனிச்சப்பூ அணிந்த
என் கூந்தல் இழைகள்
காற்றுடன் பேசியது

முடி பறக்கின்றது என்பதை.... என் கூந்தல் இழைகள் காற்றுடன் பேசியது என்பது மிக கவிதையான கற்பனை....


மேடான வயிறு
என் பெண்மையை
உண்மை என்று சொல்லியது,

ரசிக்க வைத்த வரிகள் பிச்சி...

வாழ்த்துக்கள் பிச்சி.. உங்களின் பலமே கவிதைத்தனமான வார்த்தைகள்தான்... உங்களுக்கு 100 இகேஷ் சன்மானம்

பிச்சி
08-05-2007, 04:45 AM
நன்றி அண்ணா.. அழகா இருக்கு உங்க விமர்சனம்

poo
08-05-2007, 07:13 AM
வானம் உடுத்திய மேலாடை.. -- காற்றின் பெருமூச்சு.., . பிரகாசிக்கும் கண்கள்..சூரிய உதயம்,... அர்த்தம் பொதிந்த வரியமைப்புகளில் சிலிர்க்கிறேன்..

தாய்மையடைந்த தருணத்தின் பூரிப்புகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் பிச்சி.

பிச்சி
09-05-2007, 05:11 AM
நன்றி அண்ணா உங்கல் பூந்தோட்டத்திலும் கொஞ்சம் உலவ ஆசதான்.