PDA

View Full Version : வெங்காயம்



mgandhi
03-05-2007, 07:38 PM
வெங்காயம்

தாவரவியல்ற் பெயர்;(Allium Cepa)

உணவில்,சுவையூட்டியாகவும்,தாளிப்பாகவும்
உணவில் மிக முக்கியமானது ஆகும்.
வெங்காயத்தில் புரதம் மிதமான அளவில் இருந்தாலும் கால்சியம் ரைபோஃப்ளேவின் செறிந்துள்ளது.

புரதம்-1.2 கிராம்
கொழுப்பு 0.1 கிராம்
நார்ப்பண்டம்-0.6 கிராம்
கார்போஹைட்ரேட்-11.1 கிராம்
கால்சியம்- 46.9மி.கி
மக்ளீசியம்- 67மி.கி
ஆக்ஸாலிக் அமிலம்- 1மி.கி
பாஸ்பரஸ்- 50 மி.கி
அயம்- 0.7 மி.கி
சோடியம்- 4.0 மி.கி
பொட்டாசியம்- 127 மி.கி
வைட்டமின் சி 11.0மி.கி
தயமின்- 0.08 மி.கி
ரைபோஃப்ளேவின்- 0.01 மி.கி
நியாஸின்- 0.4 மி.கி

100கிராமில் 51 கலோரி உள்ளது.

வெங்காயம் சிறுநீரைப் பெருக்கும்,கபம் நீக்கும்,சரும நிறத்தை சவப்பாக்கும்.
பச்சை வெங்காயம் எளிதில் சீரணமாகும்.
வெங்காயவிதை விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.சீறுநீர் சம்மந்தமான நோய்களை குணமாக்கும்.
வெங்காயதாள் வைட்டமின் ஏ,தயமின்,ஆஸ்கார்பிக் அமிலத்தின் மூலமாக இருக்கும்.
வெங்காயச்சாறும் தேனும் சம அளவில் கலந்து தினம் மீன்று அல்லது நான்கு தேக்கரண்டி அளவு பருகினால் ஐலதோஷம்,இருமல்,இன்ஃப்ளூயன்சா உபாதைகள் நீங்கும்.
வெங்காயத்தில் பாக்டீரியாக்களை அழிக்கும் குணம் உண்டு.இதை பச்சையாக உண்டால் பல் உபாதைகள் குறையும்.
வெங்காயத்தில் உள்ள கால்சியம், அயம், பாஸ்பரஸ்,தயோசயனேட்,ப்ரோட்டோட்டக்னிக் ஆஸிட்,போன்றவை இருதய நோய்க்கு நல்ல பலன் தருபவை.
வெங்காயம் மோகத்தை தூண்டும்.இனவிருத்தி,உறுப்புகளைவலுப்படுத்தும்.

அறிஞர்
03-05-2007, 07:42 PM
நீங்க சொல்லுறது சின்ன வெங்காயம் தானே... காந்தி.....

ஓவியா
04-05-2007, 01:22 AM
உடலுக்கு சிரிய வெங்காயம் நல்லதா அல்லது பெரிய வெங்காயமா??

ஒரு கேள்வி
உடலில் அதிக அள்வு ஃஅர்மோன் சுரப்பது வெள்ளை வெங்காயத்திலா அல்லது சிகாப்பு வெங்காயத்திலா???

poo
04-05-2007, 09:05 AM
நல்ல தகவல்கள் நண்பரே.. நன்றி.

வெங்காயத்தை கை இடுக்கில் வைத்துக் கொண்டால், உடல் சூடாகும், காய்ச்சல் என்று சொல்லி பள்ளிக்கு விடுப்பு எடுக்கலாம்.

சுகந்தப்ரீதன்
10-08-2008, 01:32 PM
உடலுக்கு சிரிய வெங்காயம் நல்லதா அல்லது பெரிய வெங்காயமா??

ஒரு கேள்வி
உடலில் அதிக அள்வு ஃஅர்மோன் சுரப்பது வெள்ளை வெங்காயத்திலா அல்லது சிகாப்பு வெங்காயத்திலா???
யாராவது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்.. நானும் தெரிந்துக் கொள்கிறேன்..??

poornima
10-08-2008, 01:55 PM
வெள்ளை வெங்காயம்..? வெள்ளு வெங்காயம்..? பூண்டு..?

வெள்ளை வெங்காயம் என்று பல்லாரியை குறிக்கிறீர்களா..?
எனக்குத் தெரிந்தவரை அதிக சத்தும் மருந்து சக்தியும் சின்ன வெங்காயத்தில் தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அமரன்
10-08-2008, 02:34 PM
ஐரோப்பாவில் அதிகமாகவும் மலிவாகவும் கிடைப்பது வெள்ளை வெங்காயமே.
ஆனால் நம்மூரு வெங்காயத்தைக் காட்டிலும் சத்துக் குறைவே.

யவனிகா
10-08-2008, 04:01 PM
சந்தேகமே வேண்டாம் சின்ன வெங்காயம் தான்...கணக்கில்லாத நன்மைகள் கொண்டது...

பச்சை வெங்காயத்தை அப்படியே சிறு துண்டுகளாக்கி தினமும் சாப்பிட்டு வர உடலில் எதிர்ப்பு சக்தி கூடும். சருமம் பொலிவு பெறும்.

நல்ல பதிவு...வாழ்த்துகள் காந்தி அவர்களே.

mgandhi
10-08-2008, 05:23 PM
சந்தேகமே வேண்டாம் சின்ன வெங்காயம் தான்...கணக்கில்லாத நன்மைகள் கொண்டது...

பச்சை வெங்காயத்தை அப்படியே சிறு துண்டுகளாக்கி தினமும் சாப்பிட்டு வர உடலில் எதிர்ப்பு சக்தி கூடும். சருமம் பொலிவு பெறும்.

நல்ல பதிவு...வாழ்த்துகள் காந்தி அவர்களே.

மிக்க நன்றி யவனிகா