PDA

View Full Version : அன்னை



மனோஜ்
03-05-2007, 03:05 PM
பிறப்பில் தன்னை கொடுத்து
வளர்ப்பில் தன் உழைப்பை கொடுத்து
இறப்பில் மாறப் பிரிவை கொடுப்பவர்

ஆதவா
03-05-2007, 03:15 PM
மனோஜ்... இதேமாதிரியே நன்றாக முயலுங்கள்...
இறுதி வரி மட்டும் எனக்கு குழப்பம்...

எல்லாவற்றையும் மகனுக்கே கொடுப்பவர்தானே அன்னை.. விதிவிலக்குகளும் உண்டு...]

பிழையிருந்தமையால் 15 பணம் மட்டுமே
-----------------------------------------
தலைப்பை அன்னை என்று மாற்றுங்கள்.. பிறிவு அல்ல பிரிவு... ஒற்றுப் பிழை சரிசெய்துகொள்ளுங்கள்....

அறிஞர்
03-05-2007, 03:18 PM
அன்னைக்கு இணை யாருண்டு...

மீண்டும் அன்னையை பற்றி.. சிந்திக்க வைத்த மூவரிகள்....
---
பிழைகள் திருத்தப்பட்டது.

மனோஜ்
03-05-2007, 03:23 PM
இறக்கும் பொழது நம் மனதில் என்றும் நிலைப்பதால்
நன்றி ஆதவா நீங்கள் எழுதிய குறுங்கவிதை பார்த்து எழதியது இது
மிக்க மிக்க நன்றி அறிஞரே

ஓவியா
04-05-2007, 12:06 AM
அம்மா என் முதல் ஆசான். முதல் தெய்வம்.

அழகிய கவி.
நன்றி மனோஜ்.

ஷீ-நிசி
04-05-2007, 03:40 AM
நல்லாருக்கு மனோஜ்... தொடருங்கள்!

பென்ஸ்
04-05-2007, 04:19 AM
உன்மையை எழுதும் போது
கவிதை இன்னும் அழகாக தெரிகிரது அல்லவா மனோஜ்....

வாழ்த்துகள்....

mravikumaar
04-05-2007, 04:37 AM
அன்னையைப் பற்றி ஒரு

அழகான கவிதை

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரவி

அரசன்
04-05-2007, 05:22 AM
ஆம்! உண்மைதான். நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

மனோஜ்
04-05-2007, 02:05 PM
ஓவிய அக்காவுக்கும்
பென்ஸ் அண்ணாவிற்கும்
ஷீ க்கும்
ரவி
கருவை கலியமூர்த்தி அவர்களுக்கும் என் நன்றிகள்

ஓவியன்
06-05-2007, 05:52 AM
அன்னை - இதுவே ஒரு சொல் கவிதை

தந்த மனோஜுக்கு நன்றிகள்.