PDA

View Full Version : கவிதைக் கவி 2 - புதுக்கவிதை!



ஆதவா
03-05-2007, 03:01 PM
விதிகளை வென்றதாகச்
சொல்லப்பட்டது.
இலக்கணங்கள்
செத்துக்கொண்டிருக்கின்றன....

மனோஜ்
03-05-2007, 03:02 PM
உண்மை 100 க்கு 100 உண்மை

தாமரை
03-05-2007, 03:08 PM
விதிகள்..
வெல்லப்பட்டனவா
இல்லை
கொல்லப்பட்டனவா.....???

ஆதவா
03-05-2007, 03:11 PM
வென்றதாகச் சொல்லப்பட்டது.
ஆனால் உண்மையில் கொல்லப்பட்டது.

கருத்துக்கு நன்றிங்க தலைவா...

நன்றிங்க மனோஜ்... நூறு சதம் உண்மைதான்...

ஓவியா
04-05-2007, 02:04 AM
அதவாவின் கவிதை
அண்ணாவின் எதிர்க்கவிதை
இரண்டுமே தூள்


நன்றி சகோஸ்.

ஆதவா
04-05-2007, 02:25 AM
நன்றிங்க தானைத்தங்கமே உடன் பிறவா சொந்தமே

பென்ஸ்
04-05-2007, 03:50 AM
இதை நான் உன் கையேழுத்தில் பார்த்து இருக்கிறென் ஆதவா....
அதை என் அறிமுகத்தில் சுட்டியும் இருக்கிறென்... என் மனதில் பதிந்து போன வரிகள்....

உணவு ருசிக்க தெரியாதவனுக்கு பாஸ்ட்-புட்டும் சரிதான்
கவிதையை ரசிக்க தெரியாதவனுக்கு புதுகவிதையும் சரிதான்...

ஆதவா
05-05-2007, 11:23 AM
இதை நான் உன் கையேழுத்தில் பார்த்து இருக்கிறென் ஆதவா....
அதை என் அறிமுகத்தில் சுட்டியும் இருக்கிறென்... என் மனதில் பதிந்து போன வரிகள்....

உணவு ருசிக்க தெரியாதவனுக்கு பாஸ்ட்-புட்டும் சரிதான்
கவிதையை ரசிக்க தெரியாதவனுக்கு புதுகவிதையும் சரிதான்

கவனித்தேன் அண்ணரே!! இப்படியாவது இலக்கணம் வளர்ப்போமே என்றுதான்....

நன்றி..

mravikumaar
05-05-2007, 02:23 PM
இலக்கணத்திற்க்காக வருந்தும் கவிதை

அருமை ஆதவா

அன்புடன்,
ரவி

ஆதவா
07-05-2007, 08:49 AM
நன்றிங்க ரவி..

இளசு
10-06-2007, 08:45 PM
படித்து உய்த்துணர்வது போய் - வானொலியில்
கேட்டு கற்பனை செய்தது மாறி - தொல்லைக்காட்சியில்
காட்டினால்தான் பார்ப்பேன்

என சிரையில் திரவ உணவு ஏற்றச்சொல்லும்
நோயாளியாய் நுகர்வோன் .......

பந்தி வைத்து ஆற அமரப் பரிமாற அவகாசமின்றி
நின்று கொறிக்க துரித உணவு அளிக்க
காகிதத் தட்டுகளே உசிதம்-
காய்கின்றன எச்சில்படா குமரிவாழை இலைகள்!


(குமரி வாழை - இன்னும் குலை தள்ளா வாழை
நன்றி - இளங்கோவடிகள்)


தொடரட்டும் காலக் கட்டாயங்களை பிரதிபலிக்கும்
ஆதவ ஒளி படும் கண்ணாடிக் கவிதைகள்!

ஆதவா
11-06-2007, 06:14 PM
அண்ணா.. இந்த விமர்சனம் கண்டதும் எனக்குள் புத்துணர்வு.. என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. அப்படி ஒரு அழகு. மூன்று வரிக்கவிதையை இப்படி அழகாய் விமர்சனம் செய்யமுடியுமா என்று யோசிக்கவைக்கீறது.. நன்றி அண்ணா...