PDA

View Full Version : கவிதைக் கவி 1.



ஆதவா
03-05-2007, 03:00 PM
நாட்டிலே நூறு கவிகள்.
ஆளுக்கோர் புத்தகம்
ஆயிரம் அச்சிட்டனர்.
நூறு புத்தகங்கள்
விற்று தீர்ந்தன.!!

மனோஜ்
03-05-2007, 03:01 PM
இது என்ன முரன் கணக்கு ஆதவா

தாமரை
03-05-2007, 03:05 PM
மற்றவை அன்பளி(ழி)ப்பாகி
மடிக்கப்பட்டன
மளிகைக்கடைகளில்..!

ஆதவா
03-05-2007, 03:09 PM
சரியாக பிடித்துக்கொண்ட செல்வன் அண்ணாக்கு நன்றி...
மனோஜ்... இப்போது புரிந்ததுங்களா?

மனோஜ்
03-05-2007, 03:11 PM
புரிந்தது ஆதவா நன்றி

ஓவியா
04-05-2007, 01:48 AM
நல்ல கவிதை, நல்ல நச்.


ஆதவா,
நீர் வேரும் 100 மட்டுமே அச்சடிலே, ஆயிரம் வாணாம், இத வித்துட்டு எல்லாம் வித்து முடித்தாகிவிட்டதுனு அறிக்கை விடலாம்..என்னாலே ஐடியா ஓகேவா!!!!!!!!

ஆதவா
04-05-2007, 02:29 AM
ஆயிரத்தையும் நீங்களே வாங்கறதா இருந்தா எனக்கு ஓகே தான்...

ஷீ-நிசி
04-05-2007, 03:12 AM
அந்த ஒரு புத்தகமும் இவரே பணம் கொடுத்து வாங்கியிருப்பார்...

நல்ல குறுங்கவி... ஆதவா..

பென்ஸ்
04-05-2007, 03:23 AM
ரசித்தேன் ஆதவா....
செல்வன் தொடங்கியாச்சா???

மதி
04-05-2007, 03:37 AM
என்னவோ தெரியல..இதுவரைக்கும் நான் ஒரு கவிதை புத்தகம் கூட வாங்கினதில்லை..அன்பளிப்பா கூட..

நல்ல கவிதை ஆதவா...!

மதி
04-05-2007, 03:38 AM
ரசித்தேன் ஆதவா....
செல்வன் தொடங்கியாச்சா???
எது தொடங்கியாச்சா...? புத்தகம் வெளியிடவா...?

பென்ஸ்
04-05-2007, 03:40 AM
எது தொடங்கியாச்சா...? புத்தகம் வெளியிடவா...?
ஏன் இன்னைக்கு உனக்கு ஆபிசுல வேலை இல்லையோ???

இரு... அனிருத்துகிட்ட உனக்கு போன் பன்ன சொல்லுறென்...

ஓவியன்
05-05-2007, 11:15 AM
ஆதவா நீர் அசத்தலாக ஆரம்பித்தற்கு செல்வன் அண்ணா அருமையான முடிவு கொடுத்துள்ளாரே!

இரண்டையும் இரசித்தேன்.

ஆதவா
05-05-2007, 11:21 AM
அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

அமரன்
17-06-2007, 07:21 PM
ஆதவனின் கவிதையும் அதனைப்புரிய வைத்து மெருகூட்டிய செல்வரின் கவிதையும் சிறப்பானவை.

சிவா.ஜி
18-06-2007, 04:47 AM
நாட்டிலே நூறு கவிகள்.
ஆளுக்கோர் புத்தகம்
ஆயிரம் அச்சிட்டனர்.
நூறு புத்தகங்கள்
விற்று தீர்ந்தன.

நூறு கவிகள் ஆயிரம் புத்தகம் அச்சடித்தாலும் வெறும் வார்த்தைகள் விலை போகாது என்று நச்சென்று சொன்ன கவிதை. அருமை ஆதவா.