PDA

View Full Version : நான் ரசித்த படைப்புகள் - ஆதவன்



ஆதவா
03-05-2007, 11:31 AM
வணக்கம் அவையோரே..
கவிஞனாகும் முன் முதலில் ரசிகனாகவேண்டும்.. கவிதை எழுதத் தூண்டிய பாரதியை இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன். வெறும் கவிதை என்ற பானைக்குள்ளே தவளையாக இருந்துவிட்டேன்.. அதனால்தான் என்னவோ எனக்கு கதையும் தோணவில்லை. அப்படியே தோணினாலும் முடிவை முடிப்பதில் தோற்றுவிடுகிறேன். சரி. போகட்டும். மன்றத்தில் நான் ரசித்த சில பதிவுகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு படைப்புகளும் ரசிக்கும் படியாக இருந்தாலும் குறிப்பிட்ட சிலவற்றை நான் நிச்சயம் சொல்லியே ஆகவேண்டும். எனது அறிமுகத் திரியில் சொந்த படைப்புகளே நிரம்பிவிட்டதாலும் மேலும் அதைப் புதுப்பிக்க வேண்டி, தனித்திரியாகவே தொடங்கிவிடுகிறேன்.

கவிஞனாக என்னைக் கண்ட நீங்கள் ஒரு ரசிகனாக ஒவ்வொரு பதிப்புகளையும் கண்டுவிடுங்கள். எனது கவிதைகளை நான் ரசிப்பதுண்டு. அது சுயநலம். அப்படி இருந்துதான் ஆகவேண்டும். மற்றவர்கள் இங்கே இருக்கிறார்கள்.. மன்றத்திற்கு நானும் ஷீ-நிசியும் தான் வந்தோம்... அப்போதே அவரது கும்பகோணக் கவிதைக்கு ரசிகனாகிவிட்டேன்... அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. இம்மாதிரி பல இருக்கின்றன. ஒவ்வொன்றாகத் தேடி எடுத்துத் தருகிறேன். நிச்சயம் காலம் ஆகும். அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்ளுங்கள்..

கவிதைகள் மட்டுமல்ல ஏனைய அனைத்து துறைகளிலும் எனது ரசனைத்தனம் உள்ளது.

பழைய பதிப்புகளே இன்னும் இருக்கிறது... கொஞ்ச கால அவகாசம் வேண்டும்...

எனக்குப் பிடித்த கவிதைகள் :

குடந்தையில் கருகிய குழந்தைகள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=164003&postcount=15) - ஷீ-நிசி - வார்த்தைகளின் பிரயோகமும் கருத்தும் சிறந்த கவிஞருக்குண்டான வாய்ப்பு
ஒன்றுமில்லை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5951) - பூ - என் கவிதைகளின் அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு சென்ற கவிதை. கருத்து..... பலே
நிலாப் பெண் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7886) - ஷீ-நிசி - படக்கவிதை எப்படி எழுதவேண்டுமென்ற மிகச்சரியான வார்த்தைகளின் விளையாடல்...
பிள்ளைப்பேறு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8370)- ஷீ-நிசி - அருமையான வார்த்தை அதோடு கருவும் சூப்பர்...
திரைவிலகக் காத்திருக்கிறேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8619)-பூ - முதிர்கன்னியின் வாழ்நிலையை மிக அதிகப்படியான அர்த்தங்களுடன் குறைந்தவார்த்தைகள்..
கரகக்கிளி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8401) - பூ - கிராமிய நடனக்குழுவின் நடக்கும் சில வேதனை விஷயங்கள்..
கற்சிலையும் உயிர்பெறும் காதலில் (http://http://www.tamilmantram.com/vb/showpost.php?p=175572&postcount=12) - ஓவியா - சிலிர்க்க வைக்கும் படக்கவிதை முதல்பரிசை அள்ளிய கவிதை.
பூமியில் ஒரு வானவில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9179) - ஷீ-நிசி - படக்கவிதை... காதல் கற்பனை என்று உள்ளம் கொள்ளை போகும் கவிதை.. பிரமாதம்.
ஸ்மைலீஸ் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=181696&postcount=8) - ஓவியா - சாதாரண ஸ்மைலீஸுக்கும் அர்த்தம் கண்டுபிடித்த அந்த சிந்தனையை நான் மிகவும் ரசித்தேன்..

சிரிப்பு/கேலி

ராஜாவின் ரவுசுப் பக்கம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7253)- ராஜா - சிரிப்பு வெடிகள், வயிறு குலுங்கும், கண்கள் அழுகும்..

கதைகள் :

கள்ளியிலும் பால் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7779)- ராகவன் - சில கணங்களில் எனது விழிகளைத் திறந்த கதை என்றுகூட சொல்லலாம்.. அழகான நடை.

ஷீ-நிசி
03-05-2007, 12:15 PM
கலக்கலான திரிதான் இது.. ஆனால் உண்மையிலேயே வித்தியாசமாகவே சிந்திக்கிறாய் ஆதவா... வாழ்த்துக்கள்!

அறிஞர்
03-05-2007, 12:19 PM
ரசிகர் இல்லாவிட்டால் படைப்பாளிகள் எப்படி எழுதுவார்கள்....

ரசிகர்கள் இன்னும் பெருகவேண்டும்.. படைப்பாளிகள் இன்னும் எழுத வேண்டும்.

அக்னி
03-05-2007, 12:38 PM
ரசிக்கத் தெரிந்தவனுக்கு மௌனமும் ஓர் இசைதான். அதனுள்ளும் ஸ்வரம் எடுப்பான். ஆதவாவின் ரசிப்பில் புது அவதாரமே நிகழ்ந்துள்ளதோ..? அனுபவங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்...

ஓவியா
04-05-2007, 01:59 AM
சூப்பர் திரி ஆதவா. மிக்க நன்றி.



ஹெய்பா, நீங்கள் எழுத்தாளர்(கள்) இளசுவின் கட்டுரைகள், பாரதியண்ணாவின் முரண்தொடர்கள், மோகனின் தொடர்கதைகள், மயூவின் சிறுகதைகள், செல்வன் அண்ணாவின் தாலாட்டுக்கவிகள், பிச்சியின் பூக்கள், பிரதீப்பின் விமர்சனங்கள், பென்சுவின் அனுபவ கட்டுரைகள், மற்றும் பரம்ஸ் அண்ணாவின் எழுத்தோவியங்கள், மன்மதனின் கவிதைகள், கவிதா, மதிரகனின் கவிதைகள் என்று அங்கேயும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்........ அசந்து போவீர்கள்.


பாராட்டுகளுக்கு பாராட்டுக்கள் தலிவ.

poo
05-05-2007, 08:24 AM
ஆதவன்.. என் கவிதைகளை சுட்டியிருப்பதில் பெருமை கொள்கிறேன்.. கூடவே வெட்கமும்!!

நான் இதுபோல ஒன்றை எழுத நினைத்தால்.. இந்த மன்றத்தின் தொடக்க பக்கத்தின் சுட்டியை கொடுத்துவிடுவேன்!!...

அமரன்
05-05-2007, 08:26 AM
இது ஒவ்வொரு படைப்பாளியையும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஆதவன் நல்ல ஒரு படைப்பாளி மட்டுமல்ல புதுமை விரும்பிகூட.

ஆதவா
07-05-2007, 03:44 PM
புதுப்பிக்கப்பட்டது மே 07 2007.

ஷீ-நிசி
07-05-2007, 03:48 PM
உம் ரசிப்பில் என் படைப்புகளும் இடம்பெற்றதற்கு நன்றி ஆதவா..

நானும் ஆரம்பிக்கிறேன் என் ரசனைகளை உம் வழியில்!

மனோஜ்
07-05-2007, 03:50 PM
ரசிகரே என்னுல் என்ன ரசித்திர்கள் ?:icon_wink1: