PDA

View Full Version : கண்பார்வைக்கு தேன் நல்லதுஜோய்ஸ்
03-05-2007, 09:43 AM
கண் பார்வைத் திறனை அதிகரிக்க விரும்புபவர்கள், இரண்டு "ஸ்பூன்' தேனுடன் கேரட் சாறைக் கலந்து பருகினால் போதும்' என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

பஞ்சாபிலுள்ள கிரிஷி விஞ்ஞான் கேந்திரா என்ற அமைப்பைச் சேர்ந்த மதீப் கவுர் என்பவர், பல்வேறு உடல் உபாதைகளுக்கு தேனை மருந்தாக பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்துள்ளார். அவரது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு.

நூறு கிராம் தேனில் 0.3 கிராம் புரோட்டீன், 0.2 கிராம் கனிமம், 79.5 கிராம் கார்போஹைடிரேட், கால்சியம் 5 மில்லி கிராம், பாஸ்பரஸ் 15 மில்லிகிராம் மற்றும் இரும்புச் சத்து 0.696 மில்லிகிராம் ஆகியவை உள்ளன.

தேன் இனிப்பான உணவுப் பொருளாக மட்டுமின்றி, இயற்கைப் பொருளாகவும் மருத்துவ பொருளாகவும் பயன்படுகிறது. ஆஸ்துமா, இருமல், பேதி, குமட்டல், வாந்தி போன்ற உடல் உபாதைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. தேனை பல்வேறு மூலிகைகளுடன் கலந்து மருத்துவ பொருளாக பயன்படுத்தலாம். இரண்டு "ஸ்பூன்' தேனுடன் கேரட் சாறைக் கலந்து தினமும் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும். அதே போல், இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர, சளி, இருமல், நெஞ்சடைப்பு ஆகியவை சரியாகும். ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீருடன் ஒரு ஸ்பூன் தேன், பாதி எலுமிச்சை பழச் சாறு ஆகியவற்றை கலந்து குடித்தால், மலச்சிக்கல் தீரும். உடல் பருமனும் குறையும். இஞ்சி சாறு, மிளகுத் துள் மற்றும் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் ஆஸ்துமா தொல்லை நீங்கும். வெறும் தேனையே தினமும் ஒரு "ஸ்பூன்' குடிக்கலாம். இதன் மூலம், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தேனை பயன்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேனை சூடு படுத்தக் கூடாது. வெயில் அதிகமாக உள்ள இடங்களில் தேனை பயன்படுத்தக் கூடாது. சூடான மற்றும் மசாலா பதார்த்தங்களுடன் தேனை கலந்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால், தேன் விஷத் தன்மை கொண்டதாக மாறும் வாய்ப்புள்ளது. நீண்டநாட்கள் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய விஸ்கி, பிராண்டி, ரம் போன்றவற்றுடனும் தேனை கலந்து குடிக்கக் கூடாது. நச்சுத் தன்மை கொண்ட இப்பொருட்களுடன் சேரும்போது தேன் அதிகமாக பாதிப்பைத் தரும்.

பரஞ்சோதி
03-05-2007, 09:50 AM
மிகவும் பயனுள்ள பதிவு.

அதிலும் தேன் கேடாக அமையும் விசயம் எல்லோருக்கும் பயனுள்ள விசயம்.

நன்றி நண்பரே!

poo
03-05-2007, 11:42 AM
தேனும் விஷமாகும் என்ற செய்தியை இப்போதுதான் அறிகிறேன்.. நல்ல எச்சரிக்கை.

தெரிந்த செய்திகள் கொஞ்சம்.. தெரியாதவை அதிகம்.. இன்னும் சொல்லுங்கள்.

nellaitamilan
03-05-2007, 12:27 PM
தேனைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் தெரிந்திருந்தாலும் முழுமையாக தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது.. நன்றி நண்பரே...

மன்மதன்
03-05-2007, 12:36 PM
நல்ல பயனுள்ள செய்தி. அனைவரும் படிக்க வேண்டிய திரி..நன்றி ஜோய்ஸ்..

mravikumaar
03-05-2007, 12:38 PM
தேனின் உபயோகத்தைத் தெரிந்துகொள்ள முடிந்தது

அன்புடன்
ரவி

ஓவியா
04-05-2007, 01:42 AM
நல்ல தகவல். எழுதியவருக்கும் பதித்தவருக்கும் நன்றி.

தேன் மிகவும் பயனுள்ள சத்துணவு, கலப்படமின்றி கிடைப்பதும் அரிது.

தேன்னை பிழிந்த பின் அதன் சக்கையை மென்று அதனுள் இருக்கும் தேனை உறிஞ்சினால் மிகவும் ருசியாக இருக்கும்.
முளைக்கும் நல்ல சத்துணவாம். சிறு வயதில் இது என் ஃபுல் டைம் ஜோப்.

தேன் அதிகம் உண்டால், குண்டாக வாய்ப்பும் குண்டாகவே இருகின்றதாம்.
இது என் ஃபுல் டைம் ஜோப்பின் பலன்.

கேரட்ச்சாறு அதிகம் உட்கொண்டால் கேன்சர் வருமாமே?

யவனிகா
11-08-2008, 09:52 AM
தேனை சுட வைத்து சாப்பிடக்கூடாது. உடல் இளைப்பதற்காக தேன் சாப்பிடுபவர்கள், வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.உடல் எடை கூட வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.உடல் சூடு உள்ளவர்களுக்கு தேன் சிலசமயம்.அரிப்பையோ,கொப்புளங்களையோ ஏற்படுத்தும்.சூட்டு உடல் கொண்டவர்கள் பாலுடன் கலந்து சாப்பிடலாம்,தேன் உண்ண தகுந்த நேரம் இளங்காலை. வெறும் வயிறு என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

பூமகள்
11-08-2008, 11:00 AM
கேரட் சாற்றுடன் தேன் சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகுமா??!!

ஆகா மிக நல்ல தகவல்..

இந்தக் கண்ணாடிக்கண்களுக்கு விடிவு காலம் வந்துட்டது போல இருக்கே.....!!!

தேன் பற்றிய சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்றில்..

தேன் உற்பத்தியாளர்களின் வருத்தம் தெரிந்தது..

நாட்டில் பல மடங்கு தேன் உற்பத்தி இருந்தும் பயன்படுத்துபவர் எண்ணிக்கை.. நூற்றில் சில சதவீதங்கள் தானாம்..

மருத்துவம், வீட்டு உபயோகத்துக்காக தேன் வாங்குபவர்கள் எண்ணிக்கை மிகச் சொற்பமாம்.. சொற்பத்தில் பூவும் இருப்பதில் ஒரு குட்டி மகிழ்ச்சி..!:icon_rollout: பாட்டில் பாட்டிலாக தேன் விழுங்கிக் கொண்டிருக்கிறேன்...!! :rolleyes: :D:D

இந்த குறிப்பு படித்தவுடனாவது.. தேனை.. அனைவரும் வாங்கி அருந்தி உடல் நலனையும்.. நீண்ட ஆயுளையும் பெறுவார்கள் என நம்புகிறேன்.

பழைய பதிவை மேலெழுப்பிய யவனி அக்காவுக்கு எனது நன்றிகள்..!

arun
11-08-2008, 07:39 PM
நல்ல பயனுள்ள தகவல்கள் இது போல வெறும் காரட்டை நன்றாக சுத்தம் செய்து சாப்பிட்டால் கண் பார்வை சிறப்பாக இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன்