PDA

View Full Version : உணவாகும் மகரந்தம்



ஜோய்ஸ்
03-05-2007, 08:14 AM
தாவரங்கள், பழங்கள், காய்கறிகள், இலைகள், தண்டுகள், விதைகள், வேர்கள், பூக்கள் என அனைத்துமே உணவாகப் பயன்படுவதைப் போல மகரந்ததூளையும் உணவாகப் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூவின் மையத்தில் காணப்படும் மகரந்தம் ஆண்பால் தன்மையைப் பெற்று இருக்கின்றது. இதில் புரதம், வைட்டமின்கள் போன்ற சத்துக்களும், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், தாமிரம் போன்ற உலோகச் சத்துக்கள் உள்ளன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இயற்கையில் உள்ள அனைத்துப் பொருள் களையும் பயன்படுத்தும் போது வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஆராய்ச்சி களின்படி மகரந்தத்தையும் உணவாகப் பயன்படுத்த முடியும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க மற்றும் இந்தியப் பழங்குடியினரில் பலர் பழங்காலத்தில் இருந்தே மகரந்தத்தை உணவாகச் சாப்பிடும் முறையை அறிந்துள்ளனர்.

பரஞ்சோதி
03-05-2007, 09:23 AM
ஆமாம், தேன் கூட்டில் மஞ்சளாக ஒரு பொருள் கிடைக்குமே, அது மகரந்த தூளா?

poo
03-05-2007, 10:31 AM
தகவலுக்கு நன்றிகள் நண்பரே...

பரம்ஸ் சந்தேகம் எனக்கும் உண்டு.. தேனை மட்டும் சேகரிக்கும் தேனீக்கள் கூடி கட்டும் பொருள் என்னவென யோசிப்பேன்..

ஓவியா
04-05-2007, 12:49 AM
ஆமாம், தேன் கூட்டில் மஞ்சளாக ஒரு பொருள் கிடைக்குமே, அது மகரந்த தூளா?

இருக்கலாம் அண்ணா, நானும் இதை பல முறை பார்த்துல்லேன்.


தகவலுக்கு நன்றி ஜோஸ்.

சக்தி
04-05-2007, 06:42 AM
மரந்தத்தூள் சிறு சிறு துகள்லாக இருக்கும், பொதுவாக் மலர்கள் கனியாவது இத்துகள்கள் வழியே என்று படித்த ஞாபகம். பூச்சிகள்,வண்டுகள் பூவிலிருந்து தேனை எடுக்கும் போது இத்துகள்கள் அவற்றுடன் ஒட்டிக்கொள்ளும், பின்பு அப்பூச்சிகள் வேறு மலர்களுக்கு தாவும் போது அம்மகரந்த துகள் அப்பூவிலுல்ல மகரந்த துகளுடன் இணைந்து கனியாக் காய்க்கின்றது.