PDA

View Full Version : மன்றக் கவிதைகள் வாழ்த்து



பிச்சி
03-05-2007, 07:28 AM
புற்களூடான மத்தியில்
எறும்புகளோடு
புன்னாகவராளியில் பாடிய
மழைச் சத்தம்
இங்கு துள்ளும் கவிதைகள்

உலர்ந்துபோகாத
உதிரங்களால்
வாகைப்பூக்கள்
உதிர்த்த விதைகளின்
தொகுப்பு இங்கிருக்கும்
மன்றத்துக் கவிப்பூங்கா

கழனியில் முட்டிமுளைக்கும்
சின்னஞ்சிறு களைகளும்
நெற்களாய் மாறி
உழவனின் துயர்துடைக்கும்
உட்கருத்தடங்கிய உண்மைகள்
உலவுகின்ற கவிதைகள்

கர்ப்பஸ்திரியின்
வயிற்றுக்குள்ளும்
இறுமாப்பாய் உள்நுழைந்து
இசைந்து அசைந்து
கருவிலே கானம் பாடும்
தாய்மை குணமடங்கிய
இலக்கணப் பாடல்கள்

இரெளத்தரம் தெறிக்கும்
முறுவல்களும்
அனுமானத்தில் உலவும்
கிறுக்கல்கள்
புதுப் பெயர்ச்சியடையும்
எழுத்துக்கள்
எங்கள் பதிப்புகள்

பூவாசனைபோல
நீக்கமற விரவிய
மன்றக் கவிதைகளைப்
படித்தாலே போதும்
மனம் பொலிவடையும்
கோடையிலும் தணிப்புண்டாகும்

எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க.

சுட்டிபையன்
03-05-2007, 07:32 AM
அழகான கவிதை மிச்சி, வரிகள் எல்லாம் கடுமையான வரிகளாக இருக்கிறது, நமக்கு தமிழ் மொழி அறிவு ரொம்ப ரொம்பக் குறைவு :D:D:D

அக்னி
03-05-2007, 07:36 AM
விளக்கம் தர மன்றத்துக் கவிகள் வராமலா போய்விடுவார்கள்?
எங்கே அன்பர்களே...

மனோஜ்
03-05-2007, 02:54 PM
அருமை பிச்சி உங்கள் கவிதைகளுக்கு இது ஒரு அலங்காரம்
நம் மன்ற கவிதைகளுக்கும்

ஓவியா
04-05-2007, 12:08 AM
பிச்சி கவிதை செம்ம சூப்பர்.

பாராட்டுக்கள் தங்கையே.

தொடரட்டும்.

mravikumaar
04-05-2007, 09:52 AM
நல்ல கவிதை பிச்சி

வாழ்த்துக்கள்

அன்புடன்,
ரவி

ஷீ-நிசி
04-05-2007, 10:47 AM
கேளுங்க.. கேளுங்க... கேட்டுட்டேயிருங்க
அது F.M. மச்சி!

எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க.
இது நம்ம பிச்சி....

கலக்கிட்டீங்கம்ணி...

பிச்சி
17-05-2007, 08:52 AM
நன்றி ஷீநிசி அண்ணா

இளசு
12-06-2007, 09:47 PM
எழுச்சி வருகிறது படிக்க..
எழுத ஆசை எழுகிறது!

நன்றி பிச்சி..

பிச்சி
15-06-2007, 05:25 AM
எல்லாருக்கும் என் நன்றி, ஏதாவது புரியலையா? தப்பு. மண்ணிச்சுக்கொங்க