PDA

View Full Version : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சாப்பாடுசுட்டிபையன்
03-05-2007, 07:03 AM
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர்களின் உணவு விஷயத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு தடை போடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமது வீரர்களின் பிட்னஸ் 'அழகாக' வெளிப்பட்டது. பந்தைப் பிடிக்க ஓட முடியாமல் பந்து மாதிரிேய அவர்களும் உருண்டு கொண்டிருந்தனர்.

இந் நிலையில் வங்கதேசத்துடனான ஒன்டே, டெஸ்ட் போட்டிகளுக்கு அணி தயாராகி வருகிறது. வரும் 10ம் தேதி முதல் இந்த டூர் தொடங்குகிறது.

வங்கதேச அணியில் அனைவருமே இளைஞர்கள். புலி மாதிரி பாய்ந்து பீல்டிங் செய்து வருகின்றனர்.

நம் அணியில் பெரும்பாலானவர்கள் முன்னாள் இளைஞர்கள் தான். தங்கள் லோக்கல் பாலிடிக்ஸ், உள்ளடி வேலைகளை பயன்படுத்தி அணியில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

வங்கதேசத்தில் போய் கேவலப்படுவதைத் தவிர்க்க நம் வீரர்களுக்கு உடல் திறனை அதிகரிக்கும் வேலையில் பயிற்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.

இதற்காக புதிய டயட் சார்ட் வகுக்கப்பட்டுள்ளது. கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு தடா போடப்பட்டுள்ளது. நெய்யில் வறுத்த முந்திரி போன்ற ஐயிட்டங்களை இவர்கள் விரும்பி அடிப்பது வழக்கம். இனி அதற்கும் தடை போடப்படுகிறது.

காய்கறிகள் அதிகம் சேர்க்கப்படுமாம். நோ நெய், நோ டால்டா. ஐஸ்கிரீம் கிடையாது. பொரித்த முட்டை சாப்பிடக் கூடாது.

மட்டன் குருமாவும் சாப்பிடத் தடை. ஒேர ஒரு சிக்கன் பீஸ், ஒரே ஒரு மீன் வறுவல் துண்டு ஆகியவை அனுமதிக்கப்படும்.

இவ்வாறு பல விதமாக நாக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இனியாவது அணி தேறுமா என்று பார்ப்போம்


நன்றி thatstamil.com

vgmnaveen
03-05-2007, 08:28 AM
வீரர்களுக்கு இந்திய கிரிக்கட் வாரியமா சாப்பாடு போடுகிறது. அவர்கள் வீட்டிலோ வெளியிலோ என்ன சாப்பிடுகிறார்கள் என்று எப்படி கண்காணிப்பார்கள். என்னை கேட்டால் உலகக்கோப்பையில் கேவலமாக தோற்றதற்கு தண்டனையாக அவர்களை பட்டினி கூட போடலாம்.

பரஞ்சோதி
03-05-2007, 08:56 AM
தினமும் முட்டை கொடுங்கப்பா, வீரர்களுக்கு முட்டை என்றால் ரொம்ப பிடிக்குமாம்.

கொடுக்கலைன்னா மைதானத்தில் ஆட்டத்தில் முட்டை வாங்கி வந்திடுவாங்க, ஜாக்கிரதை.

- முன்யோசனை முனிவர்

pradeepkt
03-05-2007, 10:34 AM
ஹா ஹா...
சாப்பிடாம இருந்தா மட்டும் ஒடனே ஓடிப் போயி ஒலகக் கோப்பையக் கையோட கொண்டு வந்துருவாங்களாக்கும்...
அத்தோடு அவர்கள் வீட்டில் என்ன சாப்பிடுகிறார்கள் என்று யாருக்குத் தெரியும்???

அன்புரசிகன்
03-05-2007, 10:41 AM
ஆடத்தெரியாதவனுக்கு....
சரி களத்தடுப்பை விடுங்க. குறைந்தது 1 ஓவருக்கு 1 நான்கு அடித்தால் போதாதோ? இதற்கு கொழுப்பு காரணமல்ல. அலுப்பும் கூடிவிட்டது. விடிகாலை 4 மணிக்கு 1குடம் தண்ணீரை ஊற்றி எழும்பாவிட்டால் இறப்பர் வயரால் அடித்து எழுப்பி தலைகீழாக நிற்கச்சொல்லவேண்டும். தலைகீழாக நிற்கும்பொழுது அப்பப்போ ஓணாண்டிக்கு போட்டதுபோல் முக்குப்பொடியும் தூவவேண்டும்.

அப்போ வழிக்கு வருவார்கள். அப்பவும் இல்லேன்னா சொல்லுங்க. அடுத்த வழி நான் சொல்கிறேன்.

மன்மதன்
03-05-2007, 11:38 AM
அவங்க எல்லாம் கோடிஸ்வரர்களாச்சே. நாக்கை கட்டுப்படுத்த சொன்னால், போய்யா போன்னு சொல்லிட்டு போவ மாட்டாங்களா..?? :D

mravikumaar
03-05-2007, 11:44 AM
நம் வீரர்களுக்கு

வெற்றியடையனும் என்ற வெறி இருந்தால்

நிச்சயம் வெற்றி பெறலாம்

அன்புடன்
ரவி

தங்கவேல்
03-05-2007, 12:01 PM
அவங்க எல்லாம் கோடிஸ்வரர்களாச்சே. நாக்கை கட்டுப்படுத்த சொன்னால், போய்யா போன்னு சொல்லிட்டு போவ மாட்டாங்களா..?? :D

வெந்த புண்ணில் வேலை பாச்சாதீங்க.

அமரன்
03-05-2007, 06:35 PM
இந்திய அணியினர் வீட்டிலும் சாப்பிடுகின்றார்கள். ஹோட்டல்களிலும் சாப்பிடுகின்றார்கள். அவர்களில் சிலர் சொந்தமாக ஓட்டலே வைத்திருக்கின்றார்கள். அப்படி இருக்கும் போது அவர்களின் சாப்பாட்டில் எப்படி கட்டுப்பாடு விதித்து அதனை நடைமுறைப்படுத்தலாம். ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு கண்காணிப்பாளன் அல்லவா போட வேண்டும். இது நடமுறைக்கு சாத்தியமில்லாத விடயம் என்றே நினைக்கின்ரேன். எந்த வகையான சாப்பாடு சாப்பிட்டாலும் அதனை உடற்பயிற்சி மூலம் நமக்கு ஏற்றாற்போல் பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே உடற்பயிற்சியின் வகைகளை அறிந்து, கடுமையான பயிற்சிகளை வழங்கி வீரர்களின் கொழுப்பைக் குறைக்கலாமே.

அறிஞர்
03-05-2007, 07:13 PM
ஒரு சில நாட்கள் தான் இவர்களை கட்டுபடுத்தலாம்.. மற்ற நாட்களில்....

ஓவியா
03-05-2007, 11:49 PM
'நாக்கை கட்டுப்படுத்த சொன்னால்'

இது தனிமனித சுதந்திரமல்லவா??? இல்லையா??

சக்தி
04-05-2007, 05:52 AM
நம்ம ஆளுங்க விளையடறதுக்காக சாப்பிடுவதில்லை, சாப்பிடுவதற்காக விளையாடுகிறார்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு கிட்டிபுல், பம்பரம், கோலிகுண்டு போன்ற விளையாட்டுக்கள் விளையாடலாம். செலவும் மிச்சமாகும்.

அமரன்
04-05-2007, 08:47 AM
'நாக்கை கட்டுப்படுத்த சொன்னால்'
இது தனிமனித சுதந்திரமல்லவா??? இல்லையா??

பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டு தனிமனித சுதந்திரம் பற்றி எல்லாம் பேசக்கூடாது.

ஓவியா
04-05-2007, 11:10 PM
பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டு தனிமனித சுதந்திரம் பற்றி எல்லாம் பேசக்கூடாது.

நரேன்,

ஒரு நாட்டு பிரதமரே தனிமனித சுதந்திரத்தை காட்டி, எனக்கும் என் வாழ்க்கையின் அவசியங்களும், தேவைகளும் இருக்கே என்று சுற்றுலாவும் விடுமூறையும் போராரே.