PDA

View Full Version : கல்லூரியில் இறுதிநாட்கள்.



பிச்சி
03-05-2007, 06:39 AM
ஊழிச்சுவர் எழுந்து
பிரளயகாலத்திலும்
கண்ணீர் தரைதொடாது,
சூரியன் பொசுங்கிய துகள்கள்
காலில் விழுந்தாலும்
கண்கள் கசங்காது.

இன்று அப்படியா?

அலரிய பூக்களாய்
ஆண்டுவந்த நம்மை
முழுவதுமாய் மழிக்கிறதே
காலக்கொடூரன்.
மூன்றாண்டுகள்
தோட்டத்தின் மத்தியில் வாழ்ந்தோம்
மலர்களோடு கொஞ்சினோம்.
வண்டுகளின் முசுமுசுப்பை
சிரிப்பொலியால் முறித்தோம்.
ஆனால்
கையெழுத்துப் புத்தகங்களைக்
காணுகையில்
தொய்வடைந்து நிற்கிறது
நம் மனது.

நீக்கமற வியாபித்திருந்த
ரீங்காரத்தைக் கிழித்து
நம் பாடல்களைப் புகுத்தினோம்
பிராணன் எவனோ என
புன்னை மரநிழலில்
கண்களால் கடைந்தெடுப்போம்
பேதயர் யாரும் கண்டால்
பாதக்குறடுகளை நீட்டிச்செல்வோம்
இன்று கல்லூரிக் கதவுகள்
சொல்கிறது.

பாங்கியர்களே
அழுதல் வேண்டாம்..

என்றாவது ஒருநாள்
கணவர்கள் ஒத்தூதினால்
சந்திக்கலாம் தோழிகளே
மனப் பிரளயங்களை
ஊற்றி கொழுத்துங்கள்
கருகிய பூக்களை
புத்தகங்களுக்கிடையே
வைத்து மகிழுங்கள்.
மறவால் அனுப்புங்கள் தோழிகளே
உமது மண அஞ்சலையும்
எனது தொலைந்த மனத்துஞ்சலையும்.

ஷீ-நிசி
03-05-2007, 06:48 AM
ஆஹா! அருமை பிச்சி..

பாங்கியர்களே.. புதிய வார்த்தை எனக்கு..


என்றாவது ஒருநாள்
கணவர்கள் ஒத்தூதினால்
சந்திக்கலாம் தோழிகளே


மறவால் அனுப்புங்கள் தோழிகளே
உமது மண அஞ்சலையும்
எனது தொலைந்த மனத்துஞ்சலையும்.

ரசிக்க வைத்த வரிகள்....

எனது கல்லூரி கடைசி நாள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8947) கவிதை படித்தீர்களா பிச்சி...

சுட்டிபையன்
03-05-2007, 07:13 AM
அழகான கவிதை பிச்சி வாழ்த்துக்கள்

poo
03-05-2007, 10:00 AM
பாராட்டுக்கள் பிச்சி...

ஒவ்வொரு நினைவும் ஒரு இரகம்... இது ஒரு தனி சுகம்!

பிச்சி
03-05-2007, 10:36 AM
நன்றி எல்லாருக்குமே

அக்னி
03-05-2007, 10:43 AM
இறுதி வரிகள் ரசிக்க வைத்தன. பாங்கியர், துஞ்சல் என்று ஆழ்ந்த தமிழை அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்...

பி.கு:-
பாங்கியர் - பெண்கள்
துஞ்சல் - துன்பம்
சரிதானே..?

பிச்சி
05-05-2007, 12:29 PM
நன்றி அக்னி. பாங்கியர் என்றால் பெண்கள் சரி. துஞ்சல் என்றால் துன்பம் என்ற அர்த்தம் வருமா தெரியாது. ஆனால் தூக்கம்.

ஓவியன்
05-05-2007, 12:35 PM
நீக்கமற வியாபித்திருந்த
ரீங்காரத்தைக் கிழித்து
நம் பாடல்களைப் புகுத்தினோம்
பிராணன் எவனோ என
புன்னை மரநிழலில்
கண்களால் கடைந்தெடுப்போம்
பேதயர் யாரும் கண்டால்
பாதக்குறடுகளை நீட்டிச்செல்வோம்
இன்று கல்லூரிக் கதவுகள்
சொல்கிறது.

பாங்கியர்களே
அழுதல் வேண்டாம்..

என்றாவது ஒருநாள்
கணவர்கள் ஒத்தூதினால்
சந்திக்கலாம் தோழிகளே


அழகாகவும் சரளமாகவும் தமிழ் உங்கள் கவிகளில் இழையோடுகிறது.

வாழ்த்துக்கள் பிச்சி!

பிச்சி
05-05-2007, 12:37 PM
நன்றி ஓவியன் அண்ணா

mravikumaar
05-05-2007, 02:49 PM
கவிதை தூள் பிச்சி

பாராட்டுக்கள்

ஒத்தூதும் கணவர் கிடைக்க

வாழ்த்துக்கள்

அன்புடன்,
ரவி

மயூ
05-05-2007, 03:21 PM
ஒரு வருடத்தின் பின்னர் ஆட்டோகிராபுடன் வரப்போகும என் நண்பர்களை இன்னே கண்முன் காட்டிய பிச்சிக்கு நன்றி..

எத்தனை கொடுமையான கணம் அது.. அதுவும் தெரிந்தே அதை எதிர்கொள்வது!!!

ராஜா
05-05-2007, 03:28 PM
ஒத்த கருத்துள்ள மணவாளன் வாய்த்தாலும் சந்திக்கலாம்தானே..?

பிச்சி
08-05-2007, 04:32 AM
நன்றி மயூ அண்ணாக்கும் ராஜா அண்ணாக்கும்...