PDA

View Full Version : காபனீரொட்சைட்.

அக்னி
03-05-2007, 01:19 AM
http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/My%20poems/j4.jpg

நான் இன்னமும்
சுவாசிப்பது..,
நீ விடுத்த மூச்செடுத்து,
நான் மூர்ச்சையாக
மட்டுமே.

அது இன்னமும் - என்
வாசனைக்கு
வரவில்லையா?
அல்லது.., உன்
காபனீரொட்சைட் தான்
எனக்கு
உயிர்மூச்சாகின்றதா?

சுட்டிபையன்
03-05-2007, 09:32 AM
ஆழகான வரிகள்

அழகான இணைப்பு

வாழ்த்துக்கள்

ஓவியன்
06-05-2007, 06:47 AM
அழகான சிந்தனை அக்னி!
எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமும் கூட...

ஓவியா
06-05-2007, 09:13 PM
அட வித்தியாசமான சிந்தனை.

குட்டிக்கவிதை சுட்டியாக உள்ளது.

நன்றி

தாமரை
08-05-2007, 03:48 AM
நான் சுவாசிப்பது
உன் மூச்சுக்காற்றை..

நல்ல கற்பனை...

அன்புரசிகன்
08-05-2007, 04:14 AM
அருமையான வரிகள். சிந்திக்கவேண்டியவிடையங்கள்.
மரங்கள் எவ்வளவு அளப்பெரிய விடையங்கள்.
இவ்றை அறியா காடையர்கள் எமது தாயகத்தில் தங்கள் முகாம்களுக்கு இரையாக்கிக்கொண்டிருக்கின்றனர்.
நன்றி அக்னி.

அக்னி
09-05-2007, 10:52 AM
காதலில் ஒரு வேதனைதான் என் கருவாக இருந்தது...
ஆனால் எழுதியபின், மரங்களின் உயிரூட்டல் என் மனதில் பளிச்சிட்டது. எனவேதான் இந்தப்படத்தில் வரிகளைப் பொதிந்தேன். (பொதுவாக இருக்கட்டும் என்று)
இருமுகங்களையும் கண்டுணர்ந்து, பின்னூட்டம் தந்த நண்பர்களுக்கு நன்றிகள்...

ஷீ-நிசி
09-05-2007, 11:02 AM
ஆம்! இரண்டுக்குமே பொருந்துகிறது இந்தக் கவிதை...

காதலியின் மூச்சை சுவாசிக்க முடியாது... ஆனாலும் உன் மூச்சில் நான் வாழ்வேன்.... இதில் பொய் அழகு..

மரத்தின் மூச்சுதான் நம் மூச்சு... இதில் மெய் அழகு...

வாழ்த்துக்கள் நண்பரே!

அக்னி
09-05-2007, 11:12 AM
காதலியின் மூச்சை சுவாசிக்க முடியாது... ஆனாலும் உன் மூச்சில் நான் வாழ்வேன்.... இதில் பொய் அழகு..

மரத்தின் மூச்சுதான் நம் மூச்சு... இதில் மெய் அழகு...

இரு வரிகளில் இலகுவான விளக்கம். இதையே எப்படி விளக்கமாக எழுதுவது என்று குழப்பமாகவிருந்தது. உங்களுக்குரிய தனித்துவத்தோடு அழகாக, தெளிவாக்கிவிட்டீர்கள். அதுதான், ஷீ-நிஷி.

நன்றிகள்...

மனோஜ்
10-05-2007, 05:31 PM
ஒரு பொருள் இரு விளக்கங்கள் வாழ்த்துக்கள்

அமரன்
26-05-2007, 05:37 PM
இங்கே கற்பனை விளையாடுகின்றது. அதிலும் முதல் வரிகள் மூன்றும் கலக்கல்.

கேசுவர்
26-05-2007, 05:47 PM
மெய்யான பொய்யும்
பொய்யான மெய்யும்
அருமை...
வாழ்த்துக்கள் அக்னி.

விகடன்
26-05-2007, 05:51 PM
எப்படித்தான் வாதிட்டாலும் மரந்தான் இவ்வுலகில் எல்லாவற்றையும் காக்கிறது. போய்ச் சென்றடையும் முறைகள் வேறுபடலாம்.

மரங்களை வெட்டுவது கூடாது என்று வாதாடமாட்டேன். ஆனால் வெட்டுவதற்கு இரண்டுமடங்காக உருவாக்க முயற்சிக்காமலிருப்பதே குற்றம், பாவம் எல்லாமே.

கருத்தாழமிகுந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்.

lolluvathiyar
31-05-2007, 02:36 PM
கவிதை அருமை, ஒரு வாக்கியம் புரியவில்லை
காபனீரொட்சைட் -என்றால் என்ன
அதனால் அந்த வரியின் அர்த்தம் புரியவில்லை

அக்னி
01-06-2007, 04:44 PM
ஒரு பொருள் இரு விளக்கங்கள் வாழ்த்துக்கள்
நன்றி மனோஜ்...

இங்கே கற்பனை விளையாடுகின்றது. அதிலும் முதல் வரிகள் மூன்றும் கலக்கல்.
அப்ப மிச்சம்...:music-smiley-010: :music-smiley-010: :music-smiley-010: யா...?
சும்மா சும்மா... நன்றி அமரேசா...

மெய்யான பொய்யும்
பொய்யான மெய்யும்
அருமை...
வாழ்த்துக்கள் அக்னி.
நன்றி நண்பரே...

எப்படித்தான் வாதிட்டாலும் மரந்தான் இவ்வுலகில் எல்லாவற்றையும் காக்கிறது. போய்ச் சென்றடையும் முறைகள் வேறுபடலாம்.

மரங்களை வெட்டுவது கூடாது என்று வாதாடமாட்டேன். ஆனால் வெட்டுவதற்கு இரண்டுமடங்காக உருவாக்க முயற்சிக்காமலிருப்பதே குற்றம், பாவம் எல்லாமே.

கருத்தாழமிகுந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்.
கவிதைக்கு கருத்தான பின்னூட்டமிட்டதற்கு நன்றி ஜாவா...

அக்னி
01-06-2007, 04:50 PM
கவிதை அருமை, ஒரு வாக்கியம் புரியவில்லை
காபனீரொட்சைட் -என்றால் என்ன
அதனால் அந்த வரியின் அர்த்தம் புரியவில்லை
எமது சுவாசத்திற்கு உதவுவது, ஒட்சிசன் வாயு.

எமது சுவாசத்தின் போது நாம் ஒட்சிசனை உள்ளெடுத்து, காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றோம்.

மரங்கள் பகல் நேர சுவாசத்தில், ஒட்சிசனை உள்ளெடுத்து, காபனீரொட்சைட்டை வெளியிட்டாலும், இரவில், காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து, ஒட்சிசனை வெளிவிடுகின்றன.

இது வளியின் சமநிலைக்குப் பெரிதும் உதவுகின்றது...

ஆனால், மனிதன்தான், தனக்கு உயிர்வாழ்விற்கு அவசியமான வளியைக் கவனிக்காது, தனது செயற்பாடுகள் மூலம் அசுத்தமாக்குகின்றான்.

எனக்குத் தெரிந்ததைக் கூறிவிட்டேன்.

மேலதிக விளக்கங்களுக்கு, மன்றத்து உறவுகள் உதவுவார்கள்.....

சிவா.ஜி
04-06-2007, 04:50 AM
எல்லாம் தரும் தரு அதை கருவாக்கி ஒரு கவிதை. காதலி, மரம் இரண்டுமே இளைப்பாறலுக்கு மடி தரும்.இரண்டையும் இணைத்த இந்த கவிதை அருமை. பாராட்டுக்கள் அக்னி.

lolluvathiyar
04-06-2007, 04:58 AM
எமது சுவாசத்தின் போது நாம் ஒட்சிசனை உள்ளெடுத்து, காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றோம்.

ஒட்சிசனை -Oxygen
CarbonDioxide - காபனீரொட்சைட்டை
சரியா

அக்னி
08-06-2007, 12:47 PM
ஒட்சிசனை -Oxygen
CarbonDioxide - காபனீரொட்சைட்டை
சரியா
ஒட்சிசன் என்பது சரி...
குறியீட்டுப் பெயர் O2

காபனீரொட்சைட் என்பது CarbonDioxide என்பது சரியா என்று தெரியவில்லை.
குறியீட்டுப் பெயர் CO2

குறியீட்டுப் பெயர்களை வடிவம் மாறாமல் சரியாக எழுத முடியவில்லை...

பென்ஸ்
08-06-2007, 01:27 PM
ஆம்! இரண்டுக்குமே பொருந்துகிறது இந்தக் கவிதை...
காதலியின் மூச்சை சுவாசிக்க முடியாது... ஆனாலும் உன் மூச்சில் நான் வாழ்வேன்.... இதில் பொய் அழகு..
மரத்தின் மூச்சுதான் நம் மூச்சு... இதில் மெய் அழகு...
வாழ்த்துக்கள் நண்பரே!
கவிதைகள் மனக்கல்லை உடைத்து எழுத்துகளால் செதுக்கபட்டு சிலையாகின்றன்...
சில விமர்சனக்கள் அதை அலங்கரித்து கலையாக்கி விடுகின்றன...
காதலியின் உட்யிர் மூச்சில் வாழும் அக்கினியின்
கவிதையின் ஊஇர்மூச்சி கொடுத்த ஷீக்கு பாராட்டுகள்...
நன்றி அக்னி, ஷீ...

தாமரை
08-06-2007, 01:39 PM
CO2 - கார்பன் - டை - ஆக்ஸைடு - கரியமில வாயு.

அறிஞர்
08-06-2007, 01:59 PM
கவிதை அருமை... சிந்தனைகளும் அருமை அக்னி...

மரங்கள் பகல் நேர சுவாசத்தில், ஒட்சிசனை உள்ளெடுத்து, காபனீரொட்சைட்டை வெளியிட்டாலும், இரவில், காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து, ஒட்சிசனை வெளிவிடுகின்றன.... உமக்கு சரியான தகவல்.. அன்பரே...
பகலில் சூரியவெளிச்சத்தில் ஒளிச்சேர்க்கை (photosynthesis) நடைபெறும். அப்பொழுது தாவரங்கள் CO2வை உள்ளெடுத்து... O2வை வெளியிடும்...

அமரன்
08-06-2007, 03:54 PM
CO2 - கார்பன் - டை - ஆக்ஸைடு - கரியமில வாயு.
கலக்கல் பதிவு....

அறிஞர்
08-06-2007, 03:56 PM
CO2 - கார்பன் - டை - ஆக்ஸைடு - கரியமில வாயு.

கலக்கல் பதிவு....
இது என்ன கலக்கல் பதிவு....
விளக்கம் தானே கொடுத்திருக்கிறார் நண்பா..

அமரன்
08-06-2007, 03:58 PM
CO2 - கார்பன் - டை - ஆக்ஸைடு
இது கலக்கல் அறிஞரே....

அக்னி
08-06-2007, 04:06 PM
தகுந்த விளக்கங்களுக்கு நன்றிகள்...
மறந்து போன பல விடயங்கள் மன்றம் வந்ததால் எனக்குள் மீள எழுப்பப்படுகின்றன...

அக்னி
08-06-2007, 04:07 PM
CO2 - கார்பன் - டை - ஆக்ஸைடு
இது கலக்கல் அறிஞரே....
புரியவில்லையே...

அமரன்
08-06-2007, 04:09 PM
புரியவில்லையே...
காபனீர் ஒட்சைட்டை நாம் அதிகம் சுவாசித்தால் என்ன நடக்கும். டை பண்ணி விடுவோம். அதைத்தான் சொல்லி இருப்பார் போலும். அதனால்த்தான் இந்த கலக்கல் என்பது.

அக்னி
08-06-2007, 04:11 PM
காபனீர் ஒட்சைட்டை நாம் அதிகம் சுவாசித்தால் என்ன நடக்கும். டை பண்ணி விடுவோம். அதைத்தான் சொல்லி இருப்பார் போலும். அதனால்த்தான் இந்த கலக்கல் என்பது.
நினைத்தேன் அப்படித்தான் இருக்கும் என்று... சபாஷ்...

தாமரை
08-06-2007, 04:11 PM
அப்படி அல்ல..

கார்பன் எரிவதானால் உண்டாவது இவ்வாயு..
அதாவது கார்பன் சாவதினால். (செத்தா எரிப்பாங்க, எரிச்சா சாவாங்க)
அதனால கார்பன் - டை - ஆக்ஸைடு

அமரன்
08-06-2007, 04:12 PM
அப்படி அல்ல..

கார்பன் எரிவதானால் உண்டாவது இவ்வாயு..
அதாவது கார்பன் சாவதினால். (செத்தா எரிப்பாங்க, எரிச்சா சாவாங்க)
அதனால கார்பன் - டை - ஆக்ஸைடு
நன்றி அண்ணா.

அக்னி
08-06-2007, 04:13 PM
அப்படி அல்ல..

கார்பன் எரிவதானால் உண்டாவது இவ்வாயு..
அதாவது கார்பன் சாவதினால். (செத்தா எரிப்பாங்க, எரிச்சா சாவாங்க)
அதனால கார்பன் - டை - ஆக்ஸைடு
விஞ்ஞான விளக்கத்திற்குள் ஒரு தத்துவமா.. ச்சே... கித்துவமா...?
:nature-smiley-008: :nature-smiley-008: :nature-smiley-008:

இளசு
12-06-2007, 10:27 PM
ஓர் அறிவியல் மெய்யையும்
ஓர் அழகியல் பொய்யையும்
ஒருங்கே கொடுத்த பாங்கு அழகு....

அக்னியின் கவிதையும்
ஷீ-யின் கவிவிமர்சனமும்
பென்ஸின் வெட்டுப்பார்வையும்
தாமரையின் இரட்-டை(த்) தத்துவமும்

கலக்கலோ கலக்கல் மக்களே..

அக்னி - தமிழகத்தில் ஆக்சிஜன் (உயிர் வாயு), கார்பன் -டை -ஆக்ஸைடு ( கரியமில வாயு) என்பவையே புழக்கத்தில் உள்ளதால்
தலைப்பில் உள்ள ஈழ வழக்குச் சொல்லை மிகவும் ரசித்தேன்.. நன்றி!

அக்னி
15-06-2007, 09:53 AM
அக்னி - தமிழகத்தில் ஆக்சிஜன் (உயிர் வாயு), கார்பன் -டை -ஆக்ஸைடு ( கரியமில வாயு) என்பவையே புழக்கத்தில் உள்ளதால்
தலைப்பில் உள்ள ஈழ வழக்குச் சொல்லை மிகவும் ரசித்தேன்.. நன்றி!
ஆமாம்...
மன்றம் வந்ததால்தான் பல வார்த்தைகள் வசப்படுகின்றன...

நன்றி!

அக்னி
28-04-2012, 04:30 PM
தமிழ் மன்றத்தில் ஐந்து வருடங்களுக்கு முன்னர்,

ஒட்சிசன் என்பது சரி...
குறியீட்டுப் பெயர் O2

காபனீரொட்சைட் என்பது CarbonDioxide என்பது சரியா என்று தெரியவில்லை.
குறியீட்டுப் பெயர் CO2

குறியீட்டுப் பெயர்களை வடிவம் மாறாமல் சரியாக எழுத முடியவில்லை...
O2
CO2
இப்போ எழுத முடியுமே... :icon_b:

கீதம்
29-04-2012, 12:07 AM
இதையும் தேடிக் கண்டுபிடிச்சிட்டீங்களா? அப்படின்னா உறுப்பினர் போட்டியின் ஏகபோக வெற்றியாளர் நீங்கதான்னு சொல்லுங்க. :icon_b: