PDA

View Full Version : என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி



ஷீ-நிசி
02-05-2007, 05:28 PM
கவிதை எழுத தயங்கிடும் யாவருக்குமே நான் சொல்லவிரும்புவது....

நான் முதன்முதலில் எழுதின கவிதை.... 10-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த என் தோழி ஒருத்திக்காக என் இளவயது நாளில் எழுதியது... "தோல்வியை வெற்றியாக நினைத்து தொடர்ந்து முயற்சி செய்!தோல்விகள் இனி உன்னிடம் நெருங்காது" இது மிகச் சாதாரணமானதுதான்.. ஆனால் இன்று நான் கண்டெடுத்திருக்கும் கவிதை என்னும் கிணற்றில் அன்று தென்பட்டது இந்த சிறுதுளிதான்...அதன் பின்னர் நிலவையும், காதலியையும் ஒப்புப்படுத்தி ஒரு கவிதை எழுதினேன்.. அதற்கு இன்று வரை பெயர் சூட்டவில்லை... கவிதை எழுதிடும் ஆர்வத்தை பன்மடங்காக்கின கவிதை.. அந்தக் கவிதையை இதுவரை எங்கேயும் நான் வெளியிடவில்லை.. அது என் மனதுக்குள்ளேயே இருக்கிறது.. விரைவில் அதை இங்கே பதிக்கிறேன். அதன் பின்னர் கவிதை எழுதாமல் இருந்த காலங்களில் ஒரு நாள் கொஞ்ச காலம் என்னுடன் பழகிக்கொண்டிருந்த என் தோழி திடீரென்று கேட்டாள்.. உனக்கு கவிதை எழுத தெரியுமா என்று..... ம்... என்றேன், அவளுக்கு கவிதைகள் எழுதி காட்ட வேண்டும் என்று காதல் கவிதைகள் தான் எழுதினேன்... "முடி திருத்த கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ குழந்தையின் தலைதான்" அதேப்போல் கவிதை எழுதக் கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ காதல் கவிதைகள் தான்..." ஒன்று மறக்காதீர்கள்.. குழந்தையிடம் முடிவெட்ட பழகியபின் தான் பெரியவர்களுக்கு வெட்ட அனுமதிப்பார்கள்.. அதனால் காதல் கவிதை எழுதுவதும் சாதாரணமானதல்லல...இப்படியாய் போய்க்கொண்டிருந்த காலக்கட்டதில் வேலை செய்யுமிடத்தில் சக நண்பர் ஒருவருக்கு கவிதைகள் என்றால் கொள்ளை பிரியம்.. அவர் வைரமுத்து கவிதைகள் அடங்கிய பெரிய புத்தகம் ஒன்றை வாங்கியிருந்தார்.. இரயிலில் நாங்கள் பயணிப்பது வழக்கம்... அப்பொழுதுதான் முதன் முதலில் வைரமுத்துவின் கவிதைகள் படிக்க ஆரம்பித்தேன்.. அந்தக் கவிதைகள் படித்தபிறகுதான், வார்த்தைகளை எப்படி கையாளவேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன், அதுமட்டுமில்லாமல் காதலைத் தாண்டி அவர் எழுதியிருந்த பல்வேறு கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன... பிறகுதான் நான் எழுதும் கவிதைகளின் எல்லையை விரிக்க ஆரம்பித்தேன்... கவிதைகள் என் சிறகினுள் தஞ்சம் அடைந்தன.. திருமணம் ஆனது... கவிதைகள் எழுதுவதையே முழுமையாய் விட்டிருந்த காலத்தில்தான் ஆர்கூட் அறிமுகமானது.. மறுபடியும் என் கவிதைகளுக்கு தூசுதட்டினேன்.. அருமை நண்பர் ஆதவா அறிமுகமானார்.. என் கவிதைகளுக்கு விமர்சனம் என்னும் பல்வேறு ஆடைகளை அணிவித்தவர்.... அவர்தான் இம்மன்றத்தினை எனக்கு அறிமுகப்படுத்தினார்... இங்கே வந்தேன்... முதலில் கைவசம் இருந்த கவிதைகளை பதிக்க ஆரம்பித்தேன்.. வாழ்த்துவதற்கு வஞ்சனை இல்லாத உள்ளங்கள்.... என் கவிதைகளை வாழ்த்தி வரவேற்றன... அன்பு அறிஞர் கவிதைப் போட்டிகளை அறிமுகப்படுத்தினார்.. இது எனக்கு கவிதை எழுதிட ஊன்றுகோலாய் அமைந்தது... இதோ, இன்று எழுதியிருக்கும் கவிதைகள் வரையில் இம்மன்ற உறவுகள் உற்சாகமான பின்னுட்டங்கள் இல்லையென்றால் என் கவிதைகள் பலவும் உயிர்பெற்றிருக்காது... என்னை வாழ்த்தின, என்னை வளர்க்கின்ற நம் மன்ற உறவுகள் அனைவருக்கும் நன்றி கூறி என் கவிதைகளை இங்கே தொடர்ந்து பதிக்கிறேன்....

என்றும் அன்புடன்.
உங்கள்.

ஷீ-நிசி..

-----------------------------------------------------------------
என் கவிதைகளின் சுட்டிகள்... உங்கள் வசதிக்காக....

கவிதைகள் தொகுப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7373) (பல கவிதைகள் உள்ளடக்கியது.. அந்த கவிதைகளின் சுட்டி கீழேயும் கொடுக்கப்பட்டுள்ளது)

காதல் கவிதைகள்

நிலவு தந்த வெளிச்சம் (முதல் நீள கவிதை) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9358)

ஆசையாகத்தானிருக்கிறது!!! (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=163860&postcount=1)
நிலவு களவு போனது (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=164798&postcount=101)
கிராமத்துக் காதலன் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=165026&postcount=154)
உன்னை நான் பார்க்காமலிருந்திருந்தால்... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=165646&postcount=167)
காதல் தோல்வியரே! (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=167566&postcount=295)
உன் திருமணம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=168775&postcount=365)
மின்சார (ரயில்) தேவதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8002)
பிப்ரவரி 14-ல் ஒரு காதல் கடிதம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7953)
மெளனமான நேரம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8215)
யாருடன் அவளை ஒப்பிடுவேன்?! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7969)
காதல் நினைவுகள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=170841&postcount=407)
காதல் காலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8499)
வான் விழியாள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10151)


நிகழ்வு கவிதைகள்

குடந்தையில் கருகிய குழந்தைகள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=164003&postcount=15)
கடல் நீர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=164863&postcount=117)
கரையோர மீன்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8722)
காவிரி நீர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=172395&postcount=434)
மரணத்தை நேசித்தவன் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=166117&postcount=207)


சமூக கவிதைகள்

போர்க்களமா வாழ்க்கை? (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=163908&postcount=5)
ஒலி வடிவில் - போர்க்களமா வாழ்க்கை?! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10448)

இவர்கள் தவழும் குழந்தைகள்! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10645)
தீக்குச்சி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=166697&postcount=254)
பிள்ளைப்பேறு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8370)
நடைபாதை மனிதர்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8075)
புதுமைப் பெண் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8994)
விட்டுக்கொடுப்போம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9518)
சித்தாள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9613)
குயவனை வனையும் வாழ்க்கைச் சக்கரம்! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9928)


குறுங் கவிதைகள்

மனிதனைத் தவிர! (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=166222&postcount=213)
கருப்பு வானவில் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=166260&postcount=218)
விழிவலை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=166281&postcount=225)
சாமிக்கு ஒரு கோவில் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=164953&postcount=146)
உயிர்க்காப்பான்! (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=165821&postcount=176)
விழி நீர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=165841&postcount=182)
விந்தை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=164211&postcount=33)

புகைப்படக் கவிதைகள்

எப்போதடா வருவாய்? (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=166268&postcount=219)
நிலாப் பெண் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7886)
பூமியில் ஒரு வானவில்! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9179)
உதிராத நினைவுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9813)

மற்றக் கவிதைகள்

கோபம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=166961&postcount=278)
அப்பா (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=168231&postcount=351)
சமாதானம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=165855&postcount=186)
தாய்மை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=164828&postcount=104)
இந்த நட்சத்திரங்கள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=165976&postcount=202)
திருமண வாழ்த்து (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=167961&postcount=331)
புத்தாண்டு! (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=164438&postcount=51)
டிரிங்..... டிரிங்..... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=171089&postcount=425)
கல்லூரி கடைசி நாள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8947)
அம்மா.... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9762)

கவிதைபோட்டி கவிதைகள்

1. குடியரசு தினம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=170701&postcount=4)
2. நீயும் நானும் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=174739&postcount=4) கவிதைக்கான படம் (http://i128.photobucket.com/albums/p163/shenisi/5-1.jpg)
3. உயிர்ச்சிலைகள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=178233&postcount=5) கவிதைக்கான படம் (http://i128.photobucket.com/albums/p163/shenisi/Uyirchilai.jpg)
4. முதல் முத்தம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=179614&postcount=4)
5. பூக்காரி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=183226&postcount=14)
6. உடைந்த ஜாடி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=195361&postcount=21) கவிதைக்கான படம் (http://i128.photobucket.com/albums/p163/shenisi/sad_boy-1.jpg)
7. காதல் செய் காதலா (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=206049&postcount=10) கவிதைக்கான படம் (http://i128.photobucket.com/albums/p163/shenisi/Poem%20Competition%20Photos/RainWoman.jpg)
8. அதிர்ஷ்டமில்லாத காதல் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=224951&postcount=7)


தொடரும்.....

பென்ஸ்
02-05-2007, 07:38 PM
எனது அருமை ஷீ...
கவிதை போன்ற உங்கள் அறிமுகம்....
அட உங்க எழுத்துக்க்களை பார்க்கு நானும் கவிதை எழுத வேண்டும் என்று தோன்றும்...
காலம் கனியட்டும்...

leomohan
02-05-2007, 07:43 PM
"முடி திருத்த கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ குழந்தையின் தலைதான்" அதேப்போல் கவிதை எழுதக் கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ காதல் கவிதைகள் தான்..."

தொடரும்.......

அற்புதமான அறிமுகம். உங்கள் கவிதை மழையில் நனைய எப்போதுமே காத்திருக்கிறோம்.

என்னுடைய ஒரு பிரச்சனை பெரிய கவிதைகளை படிப்பது தான். சிறிய கவிதைகளை உடனடியாக படித்து விடுவேன்.

இன்னொரு பிரச்சனை - கவிதைகள் சிறியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தான்.

ஓவியா
03-05-2007, 06:06 AM
அன்பு ஷீ,,

வாழ்த்துக்கள்

(இன்று இரவு இங்கு எதாவது கிறூக்குகிறேன்.)

அக்னி
03-05-2007, 06:07 AM
ஷீ-நிஷி!
பெயரே கவிதையாய் கவர்கிறது.
கவிதையோ,
அப்படியே அள்ளுகின்றது...

எளிய நடையில், பன்முகப்பட்ட பார்வையிலே கவிதை யாக்கும் உங்களுக்கு, எனது வாழ்த்துக்கள்...

ஷீ-நிஷி...
நடுநிசியின் இருளல்ல... அந்த இருளில் தானே ஒளிரும் தாரகைகளில் ஒன்று...

என்றும் ஒளிருங்கள்... உங்கள் கவிதைகளால் மன்றை அலங்கரியுங்கள்...

pradeepkt
03-05-2007, 06:19 AM
கலக்கிப் போடுங்க ஷீ...
உங்கள் கவிதைகளைப் போலே அறிமுகமும் அற்புதம்.
வாழ்த்துகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும்

சக்தி
03-05-2007, 06:20 AM
உங்களுக்கும் தூண்டுகோல் தோழிதானோ?எனக்கும் அப்படியே, இன்று அவள் எங்கோ நான் அறியேன் முகம்கூட மறந்துவிட்டதது.அனால் அவள் நினைவுகள் இன்றும் பசுமையாய் என் நெஞ்சில்.

paarthiban
03-05-2007, 11:42 AM
அட்டகாசமன அற்புதமான அறிமுகம். அருமை கவிஞர் ஷீ-நிசி அவர்களே.
பாராட்டுக்கள்.

மனோஜ்
07-05-2007, 04:46 PM
கவிதையை மட்டுமல்ல ஷீ
கவியாரகவும் காவியங்கள் படைக்கவும் என் வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
07-05-2007, 04:51 PM
என்னை வாழ்த்தின அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...

poo
08-05-2007, 07:49 AM
வாழ்த்துக்கள் ஷீ-நிசி.

மன்றத்தில் மேலெழும்பி இருக்கும் கவிதைகளை மட்டுமே படித்து வந்ததினால், உங்கள் பல கவிதைகளை தவறவிட்டிருக்கிறேன்.. எல்லாவற்றையும் படிக்கிறேன் விரைவில்..

இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பரே...

ஷீ-நிசி
08-05-2007, 07:57 AM
நன்றி பூ.. உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

அரசன்
08-05-2007, 07:58 AM
உங்கள் கவிஞன் அறிமுகத்திலிருந்து இனி ஒவ்வொருவரின் மனதில் ஒளிந்துகிடக்கும் கவிதை திறன் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொருவருக்கும் எழுத்தின் மேல் காதல் பிறக்கும். பிறகு எழுத துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இது உற்சாகமாக இருக்கும்.

ஷீ-நிசி
08-05-2007, 08:00 AM
மிக்க நன்றிகள் கலியமூர்த்தி...

மதுரகன்
08-05-2007, 07:04 PM
ஷீ
மன்றத்தில் என்னை உங்கள் தம்பியாக பாவித்து வழிநடத்தினீர்கள்..
என் கவிதைகளை மேம்படுத்த துணை புரிந்தீர்கள்...
உங்கள் கவிதை உலகம் மென்மேலும் சிறக்க வாழத்துக்கள்..

ஷீ-நிசி
09-05-2007, 04:27 AM
நன்றி மதுரகன்.. என்றும் உங்கள் அன்புடன் தொடர்ந்திருப்பேன்.. நீங்களும் இணைந்திருங்கள்....

ஓவியன்
09-05-2007, 09:56 AM
அன்பான ஷீ-நிசி!

உங்கள் வரிகளின் மேல் மோகம் எனக்கு
இந்த மன்றத்தில் என்னையும் கவி எழுத தூண்டியவர்களில் நீங்களும் ஒருவர். நான் மன்றத்திலே என் முதல் கவி முயற்சியையும் செம்மைப் படுத்தியதும் நீரே.

உம் வரிகளில் நனைவதும் சுகம், அதை நினைப்பதும் சுகம்.
நிறைய எழுதுங்கோ, கடவுள் உங்களுடனேயே இருப்பார்.

ஷீ-நிசி
10-05-2007, 05:56 AM
அன்பின் வார்த்தைகள் ஓவியன்...

நன்றி! என்றும் இணைந்திருங்கள்....

ஆதவா
11-05-2007, 02:24 AM
எல்லாருக்கும் எல்லாம் வாய்ப்பதில்லை.. சிலர் இதில் விதிவிலக்கு.

நல்ல தொகுப்பு. நேரம் கிடைக்கும்போது இவைகளை மீண்டும் படிக்கிறேன். தமிழ்மன்றத்தில் முதல் அறிமுகம். முதல் கவிதையே இவருடையதுதான் படித்து பின்னூட்டமிட்டேன். காட்சிக் கவிதைகளில் வல்லவர்.. அழகிய கருத்துக்களும் ஆழ்ந்த கவிதைகளும் இவருடைய சொந்தம்...

வாழ்க ஷீ-நிசி வளர்க உம் பணி.

ஷீ-நிசி
11-05-2007, 04:32 AM
நன்றி ஆதவா.... உன் விமர்சனம் வேண்டியே நான் முக்கியத்துவம் கொடுத்து எழுதின கவிதைகள் பல உள்ளன... அவ்வகையில் என் வளர்ச்சிக்கு துணைபுரிந்ததில் உம் பங்கு நிறைய உண்டு....

என்றும் நட்புடன்,

mravikumaar
11-05-2007, 04:56 AM
வாழ்த்துக்கள் நண்பரே

அன்புடன்,
ரவிக்குமார்

ஷீ-நிசி
11-05-2007, 06:19 AM
மிக்க நன்றிகள் ரவிக்குமார்

lolluvathiyar
11-05-2007, 02:55 PM
நிசி வயசில் நான் மூத்திருந்தாலும்
கவி திறமையில் நீ மூத்தவன்

கவிதையை பொருத்த மட்டில்
குழந்தையாக இருக்கும்
நான் உன் படைப்புகள்
எனக்கு ஊக்கமளித்து
கவிஞனாக்கும்

ஷீ-நிசி
11-05-2007, 04:44 PM
உங்களின் பெருந்தன்மையான் அன்பிற்கு என்னிடம் வணக்கங்கள் தவிர வேறொன்றும் வார்த்தைகள் இல்லை வாத்தியாரே..... மிக்க நன்றிகள்.

அமரன்
18-05-2007, 09:53 AM
வணக்கம் நிஷி. உங்கள் கவிதைகளைப் படித்திருக்கின்றேன். அதில் லயித்திருக்கின்றேன். அதே அளவு ஆத்ம திருப்தி உங்கள் அறிமுகத்தில் கிடைக்கின்றது. இப்போ உங்கள் கவிதைகளைப் படித்துச் சுவைக்க இலகுவாக சுட்டிகளைக் கொடுத்து விட்டீர்கள். நன்றி.

ஷீ-நிசி
18-05-2007, 09:57 AM
ஆமாம் நண்பரே! ஒரே இடத்தில் இருந்தால் புதியவர்களுக்கு சிரமம் இருக்காது அல்லவா! நன்றி அமரன்....

சுகந்தப்ரீதன்
30-06-2007, 11:31 AM
ஷீ-நிசி....எத்தனை அற்புதமாக கவிதை எழுதுகிறீர்கள்....
இத்தனை நாட்கள் வைரமுத்து ரசிகன் நான்....
இன்று முதல் உங்கள் ரசிகனில் ஒருவன்....
எனக்கும் ஆசைதான் இப்படி எல்லாம் எழுத....
என்ன செய்ய எழுதநேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது....
இருந்தும் கிறுக்குவேன் கிடைக்கின்ற சிறுபொழுதில்....
தொடரட்டும் உங்கள் கலைப்பணி....நம் தாய்தமிழுக்கு....
வாழ்த்தி வணங்கும் உங்கள் ரசிகன்....சுகந்தப்ரீதன்.

அமரன்
30-06-2007, 11:33 AM
இதோ என்னுடன் இன்னொருவர் சேர்ந்துவிட்டார். நிசிக்கு ரசிகர்மன்றம் ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.

ஷீ-நிசி
01-07-2007, 03:52 PM
நன்றிகள் சுகந்தப்ரீதன்.... உங்கள் அன்பிற்கு என் நன்றிகள்..

அமரா என்ன வுட்டுடுபா......:icon_08:

ஓவியன்
02-07-2007, 06:45 AM
இதோ என்னுடன் இன்னொருவர் சேர்ந்துவிட்டார். நிசிக்கு ரசிகர்மன்றம் ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.

ஷீ! நான் தான் உங்க ரசிகர் மன்றப் பொருளார்!

என்ன சரியா?:sport-smiley-014:

ஷீ-நிசி
02-07-2007, 06:54 AM
ஷீ! நான் தான் உங்க ரசிகர் மன்றப் பொருளார்!

என்ன சரியா?:sport-smiley-014:

என் ஐகேஷ் ரொம்ப கம்மியா இருக்கு ஓவியன்... ஆதவாவினுடையது பார்..அதிகம் உள்ளது..:animal-smiley-026:

ஓவியன்
02-07-2007, 07:06 AM
என் ஐகேஷ் ரொம்ப கம்மியா இருக்கு ஓவியன்... ஆதவாவினுடையது பார்..அதிகம் உள்ளது..:animal-smiley-026:

பரவாயில்லை ஷீ!

அதைப் பற்றிக் கவலையில்லை, நான் பொருளாளராக இருந்து மன்றத்திலே இருக்கும் கறுப்புப்:wub: பணத்தையெல்லாம் வெள்ளையாக்கி உங்களிடம் தரப் போகிறேன்!:icon_clap: .

ஷீ-நிசி
07-07-2007, 03:28 AM
பரவாயில்லை ஷீ!

அதைப் பற்றிக் கவலையில்லை, நான் பொருளாளராக இருந்து மன்றத்திலே இருக்கும் கறுப்புப்:wub: பணத்தையெல்லாம் வெள்ளையாக்கி உங்களிடம் தரப் போகிறேன்!:icon_clap: .

:icon_drunk:

அமரன்
07-07-2007, 08:49 AM
ஓவியன் ரசிகர் மன்றத்தலைவர் நான். ஞாபகத்தில் வைத்துகொள்ளும்.

சாராகுமார்
30-07-2007, 04:26 PM
அன்பு ஷீ−நிசி அவர்களுக்கு வணக்கம்.உங்கள் கவிதை அறிமுகம் பார்த்தேன்.அருமை.நேரம்கிடைக்கும் போது படித்து ரசித்து பதில் தருகிறேன்.

இனியவள்
01-08-2007, 03:20 PM
வாழ்த்துக்கள் ஷீ

இதுவரை நான் படித்த உங்கள்
கவிதைகள் அனைத்தும் அருமை..

படிக்க படிக்க படித்துக் கொண்டே
இருக்கலாம்...

நிறைய கற்கவேண்டும் உங்களிடம்

வாழ்த்துக்கள் தோழரே

ஷீ-நிசி
02-08-2007, 04:43 AM
நன்றி சாரா! நன்றி இனியவள்!

சாராகுமார்
29-08-2007, 04:24 PM
வான் மேகங்களே!
வாழ்த்துங்கள் எங்கள்
நிசியை.
அவருக்கு கவிதை
எழதுவதில் ஆர்வம்..
எங்களுக்கு கவிதை
படிப்பதில் ஆர்வம்.

ஷீ-நிசி
29-10-2007, 05:10 PM
வான் மேகங்களே!
வாழ்த்துங்கள் எங்கள்
நிசியை.
அவருக்கு கவிதை
எழதுவதில் ஆர்வம்..
எங்களுக்கு கவிதை
படிப்பதில் ஆர்வம்.

நன்றி சாராகுமார்

ஓவியன்
03-11-2007, 08:07 PM
எங்களுக்கு கவிதை
படிப்பதில் ஆர்வம்.

படியுங்கள், படையுங்கள் பின்
படைப்புக்களை விமர்சியுங்கள்...!!

இதுவே ஒரு கவிஞன் ஆவதற்கான வழிமுறையும் கூட...!! :)