PDA

View Full Version : உன் கைகளிலே!!!!!



சக்தி
02-05-2007, 04:06 PM
மார்கழி மாதம்
பனிவிழும் நேரம்
பாவையோ பக்கத்திலே
பார்வையோ வெட்கத்திலே

மெல்ல திறக்கின்றாள்
விழிகளில் என்னை வெறிக்கின்றாள்
நான் பார்த்தலோ
தலை குனிகின்றாள்

அவள் அருகாமை
என்னை சூடேற்றும்
அந்த சூட்டினிலே
குளிர் காய்கிறாள்

அவள் தொட்டாலோ
உயிர் பதபதைக்கும்
தொடாவிட்டால்
மனம் பரிதவிக்கும்

அவள் பேசும்போது
என்னை மறக்கின்றேன்
பேசாவிடில்
என்னை தொலைக்கின்றேன்

உன்னை சரணடைந்தேன்
உயிர்க்காதலியே
நான் இருப்பதுவும்
அன்றி
இறப்பதுவும்
உன் கைகளிலே!!!!!

ஷீ-நிசி
02-05-2007, 05:38 PM
அவள் அருகாமை
என்னை சூடேற்றும்
அந்த சூட்டினிலே
குளிர் காய்கிறாள்


அருமையான வரிகள்! ரசிக்கவைத்த வரிகள் நண்பரே!

சக்தி
03-05-2007, 06:32 AM
நன்றி ஷி-நிசி அவர்களே, என் கவிதைகளுக்கு முதல் வாசகனாய் இருந்து என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல!!!!

அக்னி
03-05-2007, 07:04 AM
வார்த்தைகளின் நேர்த்தியான கோர்வை, மனதைச் சுண்டியிழுக்கின்றது...
மேலும் தொடருங்கள்...

சுட்டிபையன்
03-05-2007, 07:05 AM
அழகான கவிதை, கவியே மேலும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்

அரசன்
03-05-2007, 07:59 AM
மார்கழி மாத குளிரில் மங்கையரின் செயல்பாட்டை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள். கோர்வையான வரிகள். வாழ்த்துக்கள்

mravikumaar
03-05-2007, 11:55 AM
நல்ல காதல் கவிதை

ரசிக்கத்தக்க வரிகள்

வாழ்த்துக்கள்

அன்புடன்
ரவி

ஓவியா
04-05-2007, 12:30 AM
உன்னை சரணடைந்தேன்
உயிர்க்காதலியே
நான் இருப்பதுவும்
அன்றி
இறப்பதுவும்
உன் கைகளிலே!!!!!

அட வாழ்கையையே அவங்க கையில் கொடுத்தாகி விட்டதா???
இத்தான் லைசன்ஸ் என்று கழுத்தில் கட்டிக்கொள்வார்களா?? அடடே

கவிதை அற்புதம். பாராட்டுக்கள்



இதையே ஒரு பொண்ணு எழுதினா, இப்படியா???



உன்னை சரணடைந்தேன்
உயிர்க்காதலனே
நீ இருப்பதுவும்
அன்றி
இறப்பதுவும்
என் கைகளிலே!!!!!!!!!!

நம்ப வில்லையென்றால் இந்த சுட்டிய காணுங்கள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9102

சக்தி
05-05-2007, 03:20 AM
கோடி காட்டியதற்கு நன்றி. இனிமேல் பெண்களிடம் சற்று தள்ளியே நிற்பேன்

ஆதவா
05-05-2007, 03:38 AM
ராசா...
ராசாவாட்டம் இருக்கிறது கவிதை. காதல் கவிதையெல்லாம் எனக்கு இந்த அளவிற்கு எழுதத் தெரியாது. சில விஷயங்கள் இங்கே கவனித்தேன்.

அருகாமை சூடு
குளிர்காய்வது அவள்
பதைக்கும் அவளால்
தொடாமல் பரிதவிக்கும்

இருப்பதுவும்
இறப்பதுவும் அவள் கையில்..

ரசிக்கவைத்த வரிகள். நீங்கள் ஒரு பரிமாணத்திற்குள் நுழைந்துவிட்டிர்கள். காதல் கவிதைகளில் கைதேர்ந்த மனிதர்கள் ஷீ, ப்ரியன், ஓவியா போன்றவர்கள் இருக்கையில் நீங்களும் இணைந்துவிடுங்கள்.. கொஞ்சம் போட்டிபோட்டு காதல்கவிதைகளை நிரப்புங்கள்.. ஆனால் நம் பென்ஸ் சொன்னமாதிரி காதல் என்ற வட்டத்திற்குள் சுற்றாமல் மேலும் எழுந்து பார்க்கவும் வேண்டும். நீங்கள் வானைப் பார்க்கும் நிலையில்தான் இருக்கிறீர்கள். போட்டிகளில் பங்கேற்றால் தெரிந்துவிடும் நிலையென்ன என்று..

பிரமாதம் கவிதை.
வாழ்த்துக்களுடன் 50 பொற்கிழிகள்.

சக்தி
05-05-2007, 04:51 AM
நண்பர் ஆதவாவிற்கு

முதற்கண் பரிசளித்து ஊக்குவித்ததிற்கு என் நன்றிகள் பல. எனது கற்பனைகள் பிரபஞ்சங்களைத் தாண்டி எல்லைகள் அற்றது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இயந்திர யுகத்தில் சிக்கிதேக்கமடைந்து விட்டது. தற்பொழுது தமிழ்மன்றம் எனக்கு புனர்வாழ்வு அளித்துள்ளது. முதலில் சிறிது தயக்கம் எனக்கு இருந்தது எனது படைப்புகளுக்கு இங்கே அங்கீகாரம் கிடைக்குமோ அல்லது கிடைக்காதோ? என்று. ஆனால் இங்கோ மொழிகளையும் தாண்டி என்னை ஊக்குவிக்கும் நண்பர்கள் திரு. ஷி-நிசி, சுட்டிப்பையன், ஓவியா,கலிய மூர்த்தி, அக்னி, ரவிக்குமார் மற்றும் நீங்கள் என எனது நண்பர்களின் எல்லை விரிந்து கொண்டிருக்கிறது.(பெயர்கள் விடிபட்டவர்கள் மன்னிகவும்). எனது கற்பனைகள் எல்லைகளைத்தாண்டி
சிறகடித்து பறக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை.

சக்தி
05-05-2007, 04:59 AM
அட வாழ்கையையே அவங்க கையில் கொடுத்தாகி விட்டதா???
இத்தான் லைசன்ஸ் என்று கழுத்தில் கட்டிக்கொள்வார்களா?? அடடே

கவிதை அற்புதம். பாராட்டுக்கள்



இதையே ஒரு பொண்ணு எழுதினா, இப்படியா???



நம்ப வில்லையென்றால் இந்த சுட்டிய காணுங்கள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9102

ஹ ஹ ஹ ஹா சிரிக்கமட்டுமல்ல சிந்திக்கவும் வைத்துவிட்டாய் தோழி:icon_clap: