PDA

View Full Version : தினம் ஒரு கவிதை!ஆதவா
02-05-2007, 03:12 PM
நண்பர்களே இன்று தினமும் குறைந்தது ஐந்து கவிதைகளாவது பதிக்கிறார்கள்.. நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது கவிதைப் பகுதிகள்.. தொடர் கவிதையாக இன்னுமொன்று என் நெஞ்சில் உதித்தது இந்த யோசனை...

தினம் ஒரு கவிதை..

விதிமுறைகள்:

வாரத்திற்கு ஏழு நாட்கள்.. நாம் கவிஞர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். ஒருநாளைக்கு ஒருவர் வீதம் ஏழுநாட்கள் கவிதை இடம்பெறவேண்டும்.. ஒருவருக்கும் மேலேதான் இடம்பெறுவார்கள் எனில் ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று கவிஞர்கள் வீதம் கவிதைகள் இடலாம்... இந்த திரியில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எனக்கு தனிமடலில் தெரிவியுங்கள்.. அனைவரையும் ஒன்று சேர்த்து இன்ன நாளுக்கு இவர் கவிதை எழுதவேண்டும் என்று சொல்லிவிடுகிறேன்.. அல்லது நாம் இணைந்தே கூட முடிவெடுக்கலாம்..

கவிதை விதிகள்:

உங்கள் இஷ்டம்போல இரு வரிமுதல் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் எழுதலாம்...

விருப்பமுள்ளவர்கள் உடனே இணையுங்கள் அந்தந்த கிழமைகளுக்கு கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து கவிதை எழுத வைப்போம்...

கூடுதல் விதி : (முக்கியமல்ல)

கவிதை எழுதியவருக்கு அனைவரும் தகுந்த பணம் கொடுக்கலாம். எழுதாமல் விட்டால் என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்...

ஒருவருக்கு வாரம் ஒரு கவிதை என்ற கணக்கில் வரும்... முடியும்தானே!!!

பென்ஸ்
02-05-2007, 03:18 PM
ஆதவா....
சில நேரம் மன்றத்தில் மீரா, செல்வன், நான் , இளசு, பாரதி (இந்த இரண்டுபேரும் கலக்குவாங்க).. எழுத படும் கவிதையை ஒத்த கவிதை, அல்லது பதில் கவிதை எழுதுவது வழக்கம் .... இந்த தினம் ஒரு கவிதையை அதை போல் கொண்டு செல்லலாமே....

ஆதவா
02-05-2007, 03:23 PM
பென்ஸ் அண்ணா நீங்க சொல்றது எனக்கு கொஞ்சம் பிடிபடல...
நான் சொன்ந்து தினம் ஒரு கவிஞர் ஒரு கவிதை என்ற மாதிரி..
நீங்கள் சொல்வது எப்படி என்று எனக்கு விளங்கவில்லை..

poo
03-05-2007, 10:42 AM
ஆதவன் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்... (இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன் நான்..ஹிஹி )

பென்ஸ், சாதுர்யம் பேசாதேடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி- ங்கிற மாதிரி ஒரு பகுதி ஆரம்பித்தால் என்ன?!. வாலி, சுக்ரீவன், இராமன் என கதாபாத்திரங்களுக்கு இடையில் நடந்த சொற்போரைப்போல, சாதா பாத்திரங்களான, ஏமாற்றிய காதலனுக்கும்- காதலிக்கும்..., ஏமாற்றிய பெண்ணுக்கும்- தந்தைக்கும்.. இப்படி ஒரு வழக்காடு மன்றம்போல, கவிதை வழியில் இருவர் ஆளுக்கொரு பக்கமாய் நின்று நியாயங்களை எடுத்துரைத்து எழுதினால் என்ன?!... வரம்பு மீறாமல் இடையிடையே பார்த்துக்கொள்ள ஒரு நடுவர்.. (பென்ஸ் எங்கள் சாய்ஸ்..). இது எப்படி இருக்கும்... ? சரி வருமா?!!

பென்ஸ்
03-05-2007, 01:43 PM
கலக்கல்....
எனக்கு மிகவும் பிடித்தது... இந்த வகை போட்டி...
பிடிக்காதது நடுவராய் இருப்பது....(யாரையும் குறை சொல்ல முடியாதே..)
துவங்கலாம் வாங்க...

அக்னி
03-05-2007, 01:52 PM
பட்டிமன்ற சாயலில், ஒரு கவியரங்கு செய்யுங்களேன். கவர்ச்சியாய் இருக்கும். மன்றக் கவிஞர்க்கு எழுச்சியாய் இருக்கும். மன்ற ரசிகர்க்கு மகிழ்ச்சியாய் இருக்கும். தமிழிலே ஒரு புரட்சியாய் இருக்கும்.

பங்குபற்றுவோர், இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ பிரிந்து, தலைப்பை வகுத்துக்கொண்டு, கவியால் வாதாடி பார்க்கலாமே..!

ஆதவா
03-05-2007, 03:25 PM
கடைசியில எனக்கு ஒன்னுமே புரியல...

போட்டி விதிகளை பென்ஸ் கூறுவார்,..

மனோஜ்
03-05-2007, 03:39 PM
எல்லம் நன்று இப்ப ஒரு போட்டி அது எது பென்ஸ் அண்ணா நீங்களே செல்லுங்க

அல்லிராணி
03-05-2007, 03:44 PM
பென்ஸ் என்னை மறந்திடாதீங்க.. நானும் ஆட்டத்திற்கு வர்ரேன்

ஆதவா
03-05-2007, 03:48 PM
வாங்க அல்லிராணி... உங்களை மன்றத்தில பார்க்கவே முடியல... நலம்தானே?

அல்லிராணி
03-05-2007, 03:51 PM
நலமே!,, ஆனால் காணாமல் போனவர்கள் பகுதியில் என் பெயர் இல்லையே???

ஆதவா
03-05-2007, 03:55 PM
அதுவரைக்கும் நலம்தான்.... நீங்கள் காணாமல் போகவில்லை...

பென்ஸ்
03-05-2007, 06:38 PM
பென்ஸ் என்னை மறந்திடாதீங்க.. நானும் ஆட்டத்திற்கு வர்ரேன்

விதியில்லா ஆட்டமாய்
நினைவுகள்...
கனவுகளோடு சில
மக்கி போனது..
என் சுவடுகளை கூட
மறந்து போனாயோ
காணவில்லை என்கிறாய்..!!!!

நண்பர்களே... என் முதல் கிறுக்கலை கொடுத்து விட்டேன்...
இதற்க்கு பதில் கவிதையோ அல்லது போட்டி கவிதையோ கொடுக்கலாம்...
என் கருத்தை ஏற்று கவிதை கொடுக்கலாம்...
நிராகரித்து கவிதை கொடுக்கலாம்...
மறுத்து கவிதை கொடுக்கலாம்....
ஆனால் கவிதையின் தொடர்பு அறுந்து விட கூடாது....

மனோஜ்
03-05-2007, 06:58 PM
காலத்தின் நிகழ்வுகள்
கரைந்து விடும்
காலத்தை கடத்திவிட்டு
பெண்ணிடம் கேள்வி
சலச் சரியே..

பென்ஸ்
03-05-2007, 07:07 PM
காலத்தின் நிகழ்வுகள்
கரைந்து விடும்
காலத்தை கடத்திவிட்டு
பெண்ணிடம் கேள்வி
சரியே..
மனத்தரையில்
மணித்துளிகள்
விழுந்து அழித்ததா...!!!
நீ காதல்தான்
ஆனால் கவிதையாய் பொய்கிறாய்...

ஓவியா
04-05-2007, 02:30 AM
மனத்தரையில்
மணித்துளிகள்
விழுந்து அழித்ததா...!!!
நீ காதல்தான்
ஆனால் கவிதையாய் பொய்கிறாய்...


கவிதைக்கு பொய்தான்
அழகாம்
கண்ணுக்கு மைதான்
அழகாம்

இவள்
சுமந்து வரும்
பொய்க்கொஞ்சம்
மைக்கொஞ்சம்
பெண்மை தான்
உனக்கு அழகாம்.

ஷீ-நிசி
04-05-2007, 08:44 AM
"நல்லதொரு
திரிக்கான கருவிது..
கவிஞர்களுக்கே
உண்டான அறிவிது!

கவிதையில்,
பதிலுக்கு பதில் புதிதில்லை..
கவிதையில்
நீங்கள் சொல்லாவிட்டால்
இந்த திரியில் அது பதிலில்லை...

ஆதவா
04-05-2007, 01:15 PM
கொளுத்திவிட்டது நான்
பென்ஸ் விட்டது தேன்
கவிதைகளெல்லாம் வான்
எனக்கு வருதுப்பா போன்...
ஹி ஹி ஹி
ஹு ஹு ஹு

ஓவியா
05-05-2007, 03:13 AM
யப்பா முதல் கவிதைக்கும் அடுத்து எழுதுக் கவிதைக்கும் தொடர்பு இருக்க வேண்டும் தானே????

ஆதவா
05-05-2007, 03:32 AM
ஓ! அப்படிவேற ஒன்னு இருக்கணுமா?

ஓவியா
05-05-2007, 03:44 AM
இல்லையா எனக்கு தெரியாதுலே,

நீர் தான் தலைமையாசிரியர். நீர் சொல்லும்.

ஆதவா
05-05-2007, 03:58 AM
இல்லை குழந்தாய்! எமக்கும் தெரியாது.. பெண்ஸ் வந்து சொல்வார்..... ஹி ஹி ஓம் சாந்தி

ஓவியா
05-05-2007, 04:01 AM
இல்லை குழந்தாய்! எமக்கும் தெரியாது.. பெண்ஸ் வந்து சொல்வார்..... ஹி ஹி ஓம் சாந்தி

யார் இவரா??


சிறிது காலம் நான் மன்றத்தில் இருந்து ஓய்வு எடுக்கிறேன்...விரைவில் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையுடன்...

நல்லது. :sport-smiley-014:

திரி கொழுந்து விட்டு எரிய என் வாழ்த்துக்கள். :medium-smiley-029:

ஓவியன்
06-05-2007, 12:32 PM
கொளுத்திவிட்டது நான்
பென்ஸ் விட்டது தேன்
கவிதைகளெல்லாம் வான்
எனக்கு வருதுப்பா போன்...


இது மயூரேசன் ஸ்டைலில இல்லே இருக்கு:D .

umakarthick
07-05-2007, 06:37 AM
எங்கோ... தூரத்தில்

ஒரு சொட்டு மழை வீழ்ந்தவுடன்
பரவி வருகிறதே.. மணம்...
அது போலத்தான் உன் நினைவும்
நினைக்கும்போதே நெஞ்சில் பரவும்

ஆயிரம் பேர் கூடி நின்றாலும்
அரை நொடியில் உனை அறிவேன்
அலுவலகப் பணிமுடிந்து
பின்னிரவில் என் வீடு கடந்து
போகும் உன் வாகனச் சத்தம்
கேட்க... ராட்சசியாய் விழித்திருப்பேன்

தடதடவென்ற வண்டியின்
சத்தத்தோடு என் இதயமும்
போட்டி போடும், நீ கடந்து போகும்
ஒரு நொடிக்காக.. காத்திருப்பேன்
ஒரு நாள் முழுக்க...
இதோ.. உன் வண்டிச் சத்தம்..
அழைப்பு மணியின் அலறல்..
தூக்கக் கலக்கத்தில் சோர்வோடு..
கதவு திறக்கிறேன்..
நாம் காதலித்துக் கொண்டே இருந்திருக்கலாம்
என் காதல் கணவனே..


கவிதைகளை ரட்சியும் - வைரமுத்து
Marathadi

அதிகாலை
சூரியன்கூட இன்னும்
முகம் கழுவவில்லை

வாசிக்க ஆளில்லை

என்னும்
வானப்புத்தகம்
திறந்திருந்தது

எனது தவச்சாலையாய்
மொட்டைமாடி

நட்டுவைத்த மௌனங்களாய்
மரங்கள்
அங்கங்கே
புள்ளினங்களின் பூபாளம்

கலை என்பது
இயற்கை வாழ்க்கை
இரண்டின் மொழிபெயர்ப்போ?

"அப்பா
உங்களைப் பார்க்க நிறையபேர்"

என் மகன்
கதவு தட்டிக்
கனவுடைத்தான்

கலைந்த தலை
கசங்கிய லுங்கி
முகத்தில் முள்

பரவாயில்லை

கவிதைக்கும் கவிஞனுக்கும்
நிஜமே கம்பீரம்

கீழே வந்தேன்

முகங்கள் முகங்கள்
முழுக்க முழுக்க முகங்கள்

படித்த முகங்கள் பாமர முகங்கள்
கனவு முகங்கள் கழுவாத முகங்கள்
அன்பில் குழைந்த ஆர்வ முகங்கள்
மழலை சுமந்த மாதர் முகங்கள்

'வணக்கம்'

ஓ!

ஒரேபொழுதில்
அத்தனை உதட்டிலும் பூப்பூக்க வைக்கும்
அற்புத மந்திரமா 'வணக்கம்'?

"எந்த ஊர் நீங்க?"

ஊர் சொன்னார்கள்

"என்ன விஷயம்?"

"ஒங்க பாட்டுன்னா உசுரு"

லுங்கி சிறகானது

"எல்லோருக்கும் டீ சொல்லுப்பா"

தேநீரைப் போலவே
சுடச்சுடக் கேள்விகள்

"ஒரு பாட்டு எழுத
எவ்வளவு நேரம்?"

"அதிகபட்சம்
அரை மணி நேரம்"

"பாட்டுக்கு எவ்வளவு
பணம் வாங்குறீங்க?"

"வாங்கவில்லை
கொடுக்கிறார்கள்"

"பாரதிராஜா உங்களுக்குச்
சொந்தக்காரரா?"

"ஆமாம் 'கலைச்சொந்தம்'"

"ரஜினியோடு
சாப்பிடதுண்டா?"

'உண்டு'

"கமல் டெலிஃபோன்
பண்ணுமா?"

"எப்போதாவது"

"நடிகைகள் வருவார்களா?"

"வந்திருக்கிறார்கள்
கல்யாண அழைப்பிதழ் கொடுப்பதற்கு"

"உங்களைப் பற்றியும்
கிசுகிசு வருகிறதே"

"என் புகழுக்கு அது போதாது"

"உங்களைத்
தொந்தரவு செய்கிறோமா"

"இல்லை
தோகை, மயிலுக்குத்
தொந்தரவா?

"உங்களுக்குப்
பிடித்த பாட்டு..."

'காதல் சிறகைக்
காற்றினில் விரித்து'

"நீங்கள் நினைத்து
நிறைவேறாமல் போன ஆசை?"

'மொட்டை மாடியிலிருந்து
குதிக்க வேண்டும்'

"உங்கள் பலம் எது?
பலவீனம் எது?"

'பலம் - பகை
பலவீனம் - சொந்தம்'

"குறைந்த நாளில்
நிறையச் சம்பாதித்த கவிஞர்
நீங்கள் தான்"

'இல்லை
எனக்கும்
மாசக்கடைசிகள் உண்டு'

"எங்களுக்கு
என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"

'மீண்டும் வணக்கம் சொல்ல
விரும்புகிறேன்'

சிரித்தார்கள்

அலையலையாய் அழகழகாய்ச்
சிரித்தார்கள்

கலைந்தார்கள்

கனவுகளாய்
கலர் கலராய்க்
கலைந்தார்கள்

எல்லோரும் போனபின்
அந்த அறையில் யாரோ
முனகுவது கேட்டது

திரும்பிப் பார்த்தேன்

தன்னை யாரும்
விசாரிக்கவில்லையே என்ற
விசாரத்தில்
கண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது
என் கவிதை

மரணம் 1
-----------

அவர் திடீரென மறைந்து விட்டதாக
செய்தி வருகிறது.
மரணம் அப்படியன்றும்
திடீரென வந்து விடுவதில்லை
நள்ளிரவில்
நாயின் அழுகை
சாக்குருவியின் சிறகசைப்பு
கோட்டானின் கூவல்கள்
வழியாக மரணம் தன் வருகையை
நிச்சயப்படுத்துகிறது.
மரணம் தங்கள் வீட்டையே
வட்டமடித்ததாகக் கூறி அழும்
பெண்களின் அழுகை
மரணத்தின் வருகையை இன்னும் அடர்த்தியாக்குகின்றது.
அந்த ஊருக்கு
குறிப்பிட்ட அந்த தெருவுக்கு
பின் அந்த வீட்டுக்கு
மரணம் பல ஒத்திகைகளுடன்
வந்து சேருகிறது.
மரணம் ஒருவரை நெருங்கி விட்டதென்பதை
அவர்
உத்திரத்தைப் பார்த்து விடும் இறுதி மூச்சு
உறுதி செய்கிறது.
உரிய நேரத்திற்காக மரணம்
மிக நிதானமாக ஆனால் கவனமாக
காத்திருக்கிறது.
கடைசியில்
அந்த நபர் இறந்து விடுகிறார்.
மரணம்
ஒரு பூவைப்போல
அங்கே மெதுவாகப் பிறந்துவிட்டிருக்கிறதுபொன். இரவீந்திரன்
---------------

கந்தையானாலும்
கசக்கிக்கட்டு
சரிதான்.
அது காயும்வரை
எதைக் கட்டுவது?


--------------------------------------------------------------------------------


ஒவ்வொரு
இரவு நேரப் பயணத்திலும்
பேருந்தோ
இரயிலோ
யாரோ ஒருவன்
தூக்கம் இழக்கிறான்

யாரோ ஒருவன்
பட்டினி கிடக்கிறான்

யாரோ ஒருவன்
எதையோ
பறி கொடுத்துத்
தவிக்கிறான்

யாரோ ஒருவன்
இடம் மாறி
இறங்கித் தொலைக்கிறான்

யாரோ ஒருத்தி
கணவனுக்குத்
துரோகம் இழைக்கிறாள்

மணமகளாய்
மாப்பிள்ளையுடன்
மகளை
வழியனுப்பி
வீடு வந்த அம்மாவின்
சுருக்குப் பைக்குள்
சுருங்கிக் கிடக்கின்றன
மகளின்
காதல் கடிதங்கள்

வெறும் பொழுது - உமா மகேஸ்வரி
-------------------------------

பிரியம்

ஏனிந்தக் குருவியை
இன்னும் காணோம்?
எனக்கு மகா செல்லம் அது.
பழுப்புக் கலரில் அழுக்குக்குஞ்சு.
சின்ன இறக்கைகளில்
கறுப்புக்கோடு தெரியும்.
கண் மட்டும்
கண்ணாடிக் கல் மாதிரி
செளிச்சத் துறுதுறுக்கும்.
உரிமையாய் கூடத்தின்
உள்ளே நுழைந்து நடக்கும்.
புத்தகம் ஒதுக்கி
அதையே கவனிக்கும் என்னை
அலட்சியப்படுத்தும்.
மாடி வெயிலில்
வேட்டியில் காயும்
வடகத்தை அலகால் நெம்புதல்,
தோல் உரிக்காது
நெல்லை விழுங்குதல்,
துணிக்கோடியில் கால் பற்றிக்
காற்று வாங்குதல்,
அறைக்கண்ணாடியில்
தன்னைத் தானே
கொத்திக் கொள்ளுதல் -
அதற்குப் பிடிக்கும்.
நான் இறைக்கும்
தானியமணிகளை
அழகு பார்த்துத் தின்னும்
ரசனாவதி.
ஏனிந்தக் குருவியை
இன்னும் காணோம்?
அது வரும் மாலை
மெதுவாய் நகருதே!
கீழ்வானப் பரப்பில்
கண் விசிறித் தேடினும்
காணவில்லை, எங்கு போச்சோ!
திடுமெனக் காதில்
தித்தித்தது அதன் கீச்சுக்குரல்
ஜன்னல் பிளவில்
உன்னிப் பார்த்தால்
அடுத்த வீட்டு முற்றத்தில்
இறைந்திருக்கும் தானியம் பொறுக்கி
அழகு பார்க்கும் என் குருவி;
என் முகம் ஏறிடாது
திருப்பிக் குனியும் விழிகளை

umakarthick
07-05-2007, 06:41 AM
நான் புதியவன்

என்னிடம் நிறைய கவிதைகள் இரூக்கின்றன

தினமும் ஐந்து கவிதைகள் இடுகிறேன் படித்து விட்டு சொல்லுங்கள்.

ஓவியன்
07-05-2007, 08:00 AM
நான் புதியவன்
என்னிடம் நிறைய கவிதைகள் இரூக்கின்றன
தினமும் ஐந்து கவிதைகள் இடுகிறேன் படித்து விட்டு சொல்லுங்கள்.

புதியவரே கவிதைகளை இடும் போது தலைப்புக்களைப் பார்த்து அந்த திரிகளுக்கு ஏற்ற வகையில் பதிக்க வேண்டும், அதுவும் சொந்த பதிப்புக்களாக இருக்க வேண்டும். மற்றையவர்கள்ளின் படைப்புக்களை இலக்கியம்,புத்தகங்கள் பகுதியில் பதிக்கலாம்.

ஆதவா
07-05-2007, 07:49 PM
உமா கார்த்திக்... மற்றவர்களின் கவிதையை இங்கே இடவேண்டாம்... நீங்கள் புதியவர் என்பதால் தெரியவாய்ப்பில்லை... இலக்கியங்கள், புத்தகங்கள் என்ற பகுதி இதற்காகவே இருக்கிறது... அங்கே எழுதுங்கள்... இந்த பதிவில் உங்கள் சொந்தக் கவிதை இருக்கிறதா?

கலைவேந்தன்
18-08-2009, 04:39 PM
இதை ஏன் தொடரவில்லை யாரும்...?

- விண்ணப்ப மனுவுடன்

அமரன்
18-08-2009, 06:23 PM
இதை ஏன் தொடரவில்லை யாரும்...?

- விண்ணப்ப மனுவுடன்

சமீபத்தில் தாய் வரம் கொடுத்த தேவதைக்காக எழுதியது. அதைக் கொண்டு தொடர்வோம்..

ஒரு
புது உலகம் உருவானது
உன்னாலே...


இந்தக் கவிதை(?)யுடன் சம்பந்தப்படுத்தி (இந்தக் கவிதையை ஆதரித்தோ எதிர்த்தோ) கவிதை வரைங்க நண்பர்களே.