PDA

View Full Version : ஒரு நடிகையின் பிராயமாற்றம்ஆதவா
02-05-2007, 02:00 PM
சிறு பிராய பொழுதினில்
மழைத்துளி கண்டு
ஒதுங்குவேன்.
கிரகண காலத்தைக்
கண்டஞ்சி ஜன்னலின்
உட்புறம் அமர்ந்து ரசிப்பேன்.
வானவில்லின் நிறங்களை
எண்ணி வர்ணக்கலப்பு செய்வேன்.
தூக்கம் வந்தால்
வேப்பமரத்தின் மடியில்
நித்திரை ஆட்கொள்ளுவேன்

xxxxxxxxxxxx

இன்றோ,
முகிலெடுத்து
என் மனதில் ஒளித்து
மழையின் கண்ணீரைக்
கண்டு ரசிக்கிறேன்
சந்திரனை நிறுத்தி
கிரகணத்தைக் கொஞ்சம்
தள்ளிப் போடுகிறேன்
வானவில்லைக் குடைந்து
அதைப் பூவாய் சூட்டிக் கொள்ள
வில்லெடுத்து புறப்படுகிறேன்.

xxxxxxxxxxxxxx

பிராயமாற்றத்தில்
ஏக மாற்றங்கள்.
என் கண்களில் விழுந்த
மழைத்துளி இன்றும்
நினைவிருக்கிறது எனக்கு,.
எளிதில் மறக்கக் கூடியதல்ல
சிறுவயது காதலனை...
இன்று நான் எத்தனையோ
கனவுகளில் கன்னியாக
இருந்தாலும்..


ஆங்கில கருவுக்கு நன்றி : கெல்லி கிளார்க்ஸன்

leomohan
02-05-2007, 02:19 PM
இன்று நான் எத்தனையோ
கனவுகளில் கன்னியாக
இருந்தாலும்..அப்படி போடுங்க ஆதவா. தூள்.

ஆதவா
02-05-2007, 02:24 PM
நன்றிங்க மோகன்..

ஷீ-நிசி
02-05-2007, 03:40 PM
எத்தனை படங்களில் அவள் கனவுக்கன்னியாக நடித்திருந்தாலும், அவளுக்குள்ளும் ஒரு மனது இருக்கிறது... அந்த மனதுக்கள் ஒரு காதல் இருக்கிறது.. அந்த சிறு வயதில் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி உண்டான காதலை எண்ணி ஏங்குகிறாள் இந்த நடிகையான பெண்..


முதல் பகுதியில் அவள் சிலவற்றை கண்டு அஞ்சுவதாய் உள்ளது..

இரண்டாம் பகுதியில் அவள் எல்லாவற்றையும், எதற்கும் பயப்படாதவளாய் ஆகிவிட்டாள்..

கவிதை நன்றாக உள்ளது... ஆதவா..

ஆனால் இதன் உட்கரு என்ன என்பது என்ன பார்வையில் நீர் எழுதினீர் என்பது விளங்கவில்லை... விளக்கவும்.. விளங்கிக்கொள்கிறேன்..

மனோஜ்
02-05-2007, 03:50 PM
ஆழ்மனதின் படிவங்கள் கவிதையானது அருமை ஆதவா

ஆதவா
02-05-2007, 04:07 PM
நன்றிங்க மனோஜ்.
நன்றிங்க ஷீ!

எந்த கருத்தும் இந்த கவிதை சொல்லவில்லை.. ஒரு நடிகை எந்த சூழ்நிலையிலிருந்தாலும் அவள் பழையதை மறக்கமாட்டாள்.... இதுதான் கரு.. மோகன் கப்பென்று பிடித்துவிட்டார் பாருங்கள்... அந்த வரிகளை..

சக்தி
02-05-2007, 04:30 PM
சிறு பிராய பொழுதினில்


பிராயமாற்றத்தில்
ஏக மாற்றங்கள்.
என் கண்களில் விழுந்த
மழைத்துளி இன்றும்
நினைவிருக்கிறது எனக்கு,.
எளிதில் மறக்கக் கூடியதல்ல
சிறுவயது காதலனை...
இன்று நான் எத்தனையோ
கனவுகளில் கன்னியாக
இருந்தாலும்..


ஆங்கில கருவுக்கு நன்றி : கெல்லி கிளார்க்ஸன்
மாற்றம் என்ற வார்த்தை மட்டுமே மாறாமல் இருக்கும் என்பதை அவள் அறியவில்லை போலும்.

pradeepkt
03-05-2007, 04:57 AM
தெளிந்த நீரோடை போன்ற கவிதை...
கருத்தை விட்டு விலகாத நடை.
சிறப்பு!
பாராட்டு!

poo
03-05-2007, 09:45 AM
கவிதை அழகாக சொல்லப்பட்டிருக்கிறது..., ஒரு நிதர்சனம் அழகாக செலுத்தப்பட்டிருக்கிறது....


பாராட்டுக்கள் ஆதவன்.

malan
03-05-2007, 10:23 AM
நல்ல கவிதை! இது எல்லோருக்கும் பொருந்தும் மலரும் நினைவுகள்!!

இரண்டாவது பத்தியில், தூக்கம் வந்தால் என்ன செய்வாள் என்று சொல்லவில்லையே?

(பத்தி பிரிப்பதற்கு xxx ஐ உபயோகிப்பதற்குப் பதில் ***, ---, ===, ___ இவற்றில் ஒன்றை உபயோகிக்கலாமே!)

ஆதவா
03-05-2007, 11:21 AM
நன்றிங்க ராஜா, பிரதீப், பூ மற்றும் மாலன்...

உங்கள் விருப்பப்படியே இனிவரும் கவிதைகளில் பத்தியை * போட்டு பிரிக்கிறேன் மாலன்,,, நன்றி

mravikumaar
03-05-2007, 11:28 AM
நல்ல கவிதை

நடிகையின் ஏக்கத்தை பிரதிபலிக்கிறது

அன்புடன்
ரவி

க.கமலக்கண்ணன்
14-05-2007, 10:18 AM
ஆழ் மனதில் உறங்கொண்டு இருக்கும் நடிகையின் குமுறல், நல்ல வார்த்தை பதிவு. மிக அருமை.

ஓவியன்
20-05-2007, 03:48 AM
என்னதான் காலத்தின் கோலத்தால் மாற்றங்கள் ஏற்பட்டாலும், பசுமரத்தாணி போல் மனதிலுள்ள சின்ன சின்ன ஆசைகள், எதிர்பார்ப்புக்கள், எடுகோள்கள் போன்றன மாறாது. அவை அடி மனதில் ஒளிந்து கொண்டு அடிக்கடி வெளியேயும் எட்டிப் பார்க்கும்.

விளக்கியக் கவி வரிகளைத் தந்த நவரசக் கவிக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

lolluvathiyar
20-05-2007, 08:09 AM
கவிதை அருமை,
நடிகைக்கும் உனர்வு இருக்கும்
அந்த உனர்வுனால அவள் பிரபலமாகவில்லை
கனவு கண்ணி என்பதால் தானே பிரபலமானால்

சூரியன்
20-05-2007, 08:22 AM
அது மக்களின் விருப்பம் நாம் என்ன செய்வது.