PDA

View Full Version : உன் நினைவுகள்

சுட்டிபையன்
02-05-2007, 01:18 PM
மாறிவிடும் வாழ்க்கையில்
மாறத வசந்தகாலங்களாக
உன்னோடு வாழ்ந்த
எனது வாழ்க்கையின்
தருணங்கள்
நீ தந்து போன மூச்சுக்
காற்றுத்தான் நான்
சுவாசிக்கும் சுவாசக்காற்று
உன் பாதத் தடங்கள்
என் மனசில் இன்னும்
அழிய வில்லை
ஆனால் உன்னுடல்
இந்த உலகத்தில்
எங்குமில்லை.........

ஆதவா
02-05-2007, 01:43 PM
இறந்துபோன காதலியா?...

கவிதை அருமை சுட்டி.. என்னவோ ஒன்று குறைந்த மாதிரி எனக்குத் தோணுகிறது. கவிதையை வளர்த்தியிருக்கலாமோ அல்லது சுருக்கியிருக்கலாமோ??? எனக்கு சரிவர விளங்கவில்லை.

கவிதையைப் பொறுத்தவரை சில வார்த்தைகள் பிரமாதம். கரு அழகு..

உங்களுக்கு 5 பணம் மட்டுமே.. சின்ன சின்ன தவறுகள் இருக்கிறது... முற்றுப்புள்ளி வைக்கவில்லை. அதோடு... உங்களிடம் பணம் நிறைய இருக்கிறது.. ஹி ஹி ஹி

சுட்டிபையன்
02-05-2007, 02:05 PM

இப்போதானே உங்க கிட்ட கிளாஸ் எடுக்கிறோம்:musik010:

அக்னி
03-05-2007, 12:24 AM
எனக்குப் பிடித்த இந்த வரிகளின் கரு...

நீ தந்து போன மூச்சுக்
காற்றுத்தான் நான்
சுவாசிக்கும் சுவாசக்காற்று

என்னுள்ளும் சில வரிகளை உருவகித்திருந்தது...
அதனைத் தேடிக்கொண்டிருக்கின்றேன், மன்றில் விரைவில், இணைக்கின்றேன்.

"நிறுத்தக் குறிகள்" உங்கள் கவிதைகளை மெருகூட்டும்... கருத்துக்கள், கருத்தைக் கவர்கின்றது...

ஓவியா
03-05-2007, 03:22 AM
மாறிவிடும் வாழ்க்கையில்
மாறத வசந்தகாலங்களாக
உன்னோடு வாழ்ந்த
எனது வாழ்க்கையின்
தருணங்கள்
நீ தந்து போன மூச்சுக்
காற்றுத்தான் நான்
சுவாசிக்கும் சுவாசக்காற்று
உன் பாதத் தடங்கள்
என் மனசில் இன்னும்
அழிய வில்லை
ஆனால் உன்னுடல்
இந்த உலகத்தில்
எங்குமில்லை.........

சஞ்சய்,,
உங்கள் கவிதை என் அனுபவம். சோ,

கண்ணீர் மட்டுமே விமர்சனம்.

கொசுரு:
இன்றாவது நண்பரின் கவிதைக்கு ஒரூ விமர்சானம் போடலாம் என்று வந்தால்...........வச்சு அனுப்பறீங்களே!!!!!!!!!!!

அக்னி
03-05-2007, 05:56 AM
சஞ்சய்,,
உங்கள் கவிதை என் அனுபவம். சோ,

கண்ணீர் மட்டுமே விமர்சனம்.

கொசுரு:
இன்றாவது நண்பரின் கவிதைக்கு ஒரூ விமர்சானம் போடலாம் என்று வந்தால்...........வச்சு அனுப்பறீங்களே!!!!!!!!!!!

மனதுக்குள்ளே எரிமலையின் உறக்கமா?
உங்கள் மன அமைதிக்காக இறைவனிடம் வேண்டுகின்றேன்...

poo
03-05-2007, 09:51 AM
உங்கள் உடலுக்குள் புகுந்து, உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறாளே...

கவிதை அருமை... வாழ்த்துக்கள் சுட்டி.

crisho
03-05-2007, 10:28 AM
மருமகனே என்னாச்சி?? இப்படி சோகமா போட்டு தாக்கினா நா தாங்க மாட்டேன்!!

"கொசுரு" ன்னா என்னப்பா??

ஓவியா
04-05-2007, 12:57 AM
மனதுக்குள்ளே எரிமலையின் உறக்கமா?
உங்கள் மன அமைதிக்காக இறைவனிடம் வேண்டுகின்றேன்...

நன்றி தோழரே.
எரிமலையியும் ஒருநாள் தனியும். குளிர்ந்த நிலமாய் மாறும், விதை விதைத்து, காய் காய்த்து, பூ பூத்து, கனியாகும். இது இயக்கையின் நிதி.

அதுபோல்தான் நம் மனதில், ஒருவரின் இழப்பு, இன்னொரு மனிதரின் வரவால் நிரப்பப்படும். இதுவும் இயக்கையின் நிதியே.

மருமகனே என்னாச்சி?? இப்படி சோகமா போட்டு தாக்கினா நா தாங்க மாட்டேன்!!

"கொசுரு" ன்னா என்னப்பா??

கொசுரு:
என்றால் 'கருத்தை சார்ந்து லூட்டி அடிப்பது அல்லது, மாற்று கருத்தை கூறுவது என்று அடியேன் நினைக்கிறேன்

ஷீ-நிசி
04-05-2007, 03:18 AM
நல்ல கவிதை சுட்டி......

உடல் இவ்வுலகில் இல்லாமல் போனாலும், அந்த நினைவுகள் ஒரு நாளும் சாகாது.. நினைவுகளே உங்கள் காதலியாய்...

எண்ணங்களை வார்த்தையில் வெளிப்படுத்தி படிக்கிறவர்களுக்கு அது சேரும் என்றால் அதுவே அக்கவிதையின் வெற்றி.. (சில கவிதைகளுக்கு இது பொருந்தாது.. அவைகள் நம்மை ஆழ யோசிக்கவைக்கும்) சுட்டி நீங்கள் வெற்றிபெற்றிருக்கிறீர்கள்....

crisho
05-05-2007, 10:35 AM
கொசுரு:
என்றால் 'கருத்தை சார்ந்து லூட்டி அடிப்பது அல்லது, மாற்று கருத்தை கூறுவது என்று அடியேன் நினைக்கிறேன்

நன்றிப்பா... :icon_give_rose: