PDA

View Full Version : இதெப்படி இருக்கு?..ஜெயாஸ்தா
02-05-2007, 01:10 PM
நகராட்சி அனுமதிக்கு
நாள்கணக்கில் காத்திருந்து...
காந்தியின் புன்னகையோடு
பல நூறு கைத்திணித்து...

காவல் துறை அனுமதிக்கு
கால்கடுக்க காத்திருந்து....
மஞ்சள்முகமாய் காந்திசிரிக்க
பல நூறு கைத்திணித்து...

கோயில் இடத்தில் கூட்டம்போட...
இன்னும் பல நூறு தர்மகத்தாவிற்கு....

அரங்கத்திற்கு மின்வசதி
அரசாங்கத்திற்கு தெரியாமல் எடுக்க...
மின் துறைக்கு இன்னும் பல நூறு.....

கூட்டத்திற்கு ஆள் சேர்க்க
தரகருக்கு பல நூறு....
தரகர் அழைத்து வந்த
தறுதலை தொண்டர்களுக்கு...
தலைக்கு ஒரு நூறு.......
தாகத்திற்கு 'குவார்ட்டர்"
தொட்டுக்கொள்ள ஆட்டுப்பிரியாணி.....


ஒரு வழியாய் தடைகளைனைத்தும் தகர்ந்து
மின்விளக்கு ஒளிவெள்ளத்தில்....
என் தானைத்தலைவனின் வீரஉரை
'லஞ்சம் ஒழிப்போம்...!"

ஆதவா
02-05-2007, 01:21 PM
அருமை அருமை...

மிக எளிய நடை.. ஜே.எம். இதேபோலொரு கவிதை எழுதவேண்டுமென்ற ஆவல் எனக்கிருந்தது.. நல்லவேளை நான் எழுதவில்லை.. இல்லையென்றால் இவ்வளவு அழகாய் எளிமையாய் கிடைத்திருக்காது...

லஞ்சம் என்பது பாக்டீரியாவைவிட அதிக இடங்களில் ஊடுறுவியிருக்கிறது. லஞ்சம் ஒழிப்போம் என்ற சொல்லுக்கே லஞ்சம் தரவேண்டிய சூழ்நிலை நம் நாட்டில்... தலைவிரித்து ஆடும் இந்த பேயின் ஓட்டத்தை நிறுத்த ஒருவரும் முன்வரவில்லை இன்றைய காலகட்டத்தில்..

ஒரு இடத்தில் கூட்டம் போட எத்தனை பேருக்குத் தரவேண்டி இருக்கிறது பாருங்கள். சொன்னவிதம் அருமை. முடித்தவிதம் அருமையோ அருமை..... கலக்குங்க ஜே.எம்.

இந்த அருமையான கவிதைக்கு இருபது பணம்...

கண்மணி
02-05-2007, 01:26 PM
காந்திக்கு மீசை உண்டா?
அலுவலகத்தில் கேட்டபொழுது

உண்டென்றவர் - இருவர்
இல்லையென்றவர் - 7 பேர்
தெரியலையே என குழம்பினவர் - 32
100 ரூபாய் பணத்தில் தேடியவர் - 12

ஆதவா
02-05-2007, 01:53 PM
கண்மணி! உங்கள் கவிதைகளை தனியே தனியே விடலாமே!! படிப்பவர்கள் விமர்சனம் இடுவார்கள்,.. மீண்டுமொரு 10 பணம் உங்கள் வங்கியில்..

கவிதை அருமை.. அழகிய கோணம்

கண்மணி
02-05-2007, 02:02 PM
கவிதைகளின் நோக்கமே
ஒற்றுமைதானே
அவைகளையே
பிரிப்பதா?

தவிர நான் சொன்னது கவிதை அல்ல.. ஒரு உண்மை நிகழ்ச்சி.

ஆதவா
02-05-2007, 02:04 PM
கவிதைகளின் நோக்கமே
ஒற்றுமைதானே
அவைகளையே
பிரிப்பதா?

பிரித்தால்தான்
தாயும் சரி
சேயும் சரி
நலமாயிருப்பார்கள்

தனிமேடையில் பாடுவது சரியா?
கூட்டத்தோடு முணுப்பது சரியா?

leomohan
02-05-2007, 02:18 PM
ஒரு வழியாய் தடைகளைனைத்தும் தகர்ந்து
மின்விளக்கு ஒளிவெள்ளத்தில்....
என் தானைத்தலைவனின் வீரஉரை
'லஞ்சம் ஒழிப்போம்...!"

சாட்டையடி கவிதை. அருமை ஜே எம்.

மனோஜ்
02-05-2007, 02:30 PM
அழகாய் விளையாடுகிறது உங்கள் கவியில் லஞ்சம்
முரன்தொடர் போல்

தாமரை
02-05-2007, 05:27 PM
பிரித்தால்தான்
தாயும் சரி
சேயும் சரி
நலமாயிருப்பார்கள்

தனிமேடையில் பாடுவது சரியா?
கூட்டத்தோடு முணுப்பது சரியா?

அப்புறம் எதுக்கு குடும்பத்தை கலைச்சிட்டாங்கன்னு கூப்பாடு போடறீங்க...
தனி மேடையில் பாடலாம்.. ஆனா.. மொத்தமாவே தனியே பாடினா?

ஷீ-நிசி
02-05-2007, 05:32 PM
அருமை ஜே.எம்.. சவுக்கடி போல ஒரு கவிதை.... மிக எளிமையாக இருந்தது... வாழ்த்துக்கள் நண்பரே!

என்னைக் கவர்ந்தது உங்கள் கவிதை
பொற்கிழி 25 ரூபாய்... பரிசு..

ஆதவா
02-05-2007, 07:34 PM
அப்புறம் எதுக்கு குடும்பத்தை கலைச்சிட்டாங்கன்னு கூப்பாடு போடறீங்க...
தனி மேடையில் பாடலாம்.. ஆனா.. மொத்தமாவே தனியே பாடினா?

பாடுவதும்
பாடுபடுவதும்
ஒன்றோ?

அறிஞர்
02-05-2007, 09:29 PM
எளிய முறையில் எழுதிய....
சிந்திக்க வைக்கும் சாட்டையடி கவிதை அருமை...

லஞ்சம் இல்லா வாழ்க்கையை
இந்தியாவில் காண்பது அரிது..
சமீபத்தில் இந்திய பயணத்தில் ஏற்பட்ட அனுபவம்.

தாமரை
03-05-2007, 01:17 AM
[


பாடுவதும்
பாடுபடுவதும்
ஒன்றோ?

பாடுபடாமல்
பாடமுடியாது:whistling: :whistling: :whistling:
அப்படி பாடினால்
பாடுபடுத்தி விடுவீர்கள்
கேட்பவரை....:lachen001: :lachen001: :lachen001:

ஓவியா
03-05-2007, 01:19 AM
ஒரு வழியாய் தடைகளைனைத்தும் தகர்ந்து
மின்விளக்கு ஒளிவெள்ளத்தில்....
என் தானைத்தலைவனின் வீரஉரை
'லஞ்சம் ஒழிப்போம்...!"


கவிதை நச்சோ நச்.

நன்றி. பாராட்டுக்கள்.

ஓவியா
03-05-2007, 01:21 AM
காந்திக்கு மீசை உண்டா?
அலுவலகத்தில் கேட்டபொழுது

உண்டென்றவர் - இருவர்
இல்லையென்றவர் - 7 பேர்
தெரியலையே என குழம்பினவர் - 32
100 ரூபாய் பணத்தில் தேடியவர் - 12


நானும் இல்லையென்ருதான் பதில் சொன்னேன், தப்பான பதில். ஆக காந்தித் தாத்தாவை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்து விட்டோம்.

நன்றி கண்மணி.

கண்மணி
03-05-2007, 03:32 AM
உன் பாடு
நீ பாடு

கேட்பவர் பாடு..
பெரும்பாடு

ஓவியா
03-05-2007, 03:39 AM
என் சொகக்கதை.....கேட்பவர்களுக்கு பெரும்பாடுதான்.

ஜெயாஸ்தா
04-05-2007, 01:23 PM
பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும், பாராட்டுடன் இணையப்பணம் பரிசளித்த ஆதவா மற்றும் ஷீ-நிசி ஆகியோர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றி.

அமரன்
14-06-2007, 07:53 PM
[
பாடுபடாமல்
பாடமுடியாது:whistling: :whistling: :whistling:
அப்படி பாடினால்
பாடுபடுத்தி விடுவீர்கள்
கேட்பவரை....:lachen001: :lachen001: :lachen001:
கேட்பவரா பாடுபடுகிறார்
கொடுப்பவரல்லவா
லஞ்சத்தை
பாடுபடுகின்றார்