PDA

View Full Version : எமர்ஜென்சி எதிர்த்தவர்களை தியாகியாக்க ந



leomohan
02-05-2007, 12:17 PM
பாட்னா, மே 1-
எமர்ஜென்சியை எதிர்த்து சிறை சென்றவர்களுக்கு சுதந்திர போராட்ட தியாகி அந்தஸ்து வழங்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். இதற்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றவர்களுக்கு தியாகி பட்டம் வழங்கப்பட்டு பல்வேறு சலுகைளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை எதிர்த்து சிறை சென்ற ஜனதா தள தொண்டர்களுக்கும் இத்தகைய தியாகி பட்டம் வழங்க நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அவரது கட்சியிலும் மற்ற கட்சிகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுபற்றி முன்னாள் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான ஜெகன்னாத் மிஸ்ரா கூறியதாவது:
எமர்ஜென்சியை எதிர்த்தவர்களை தியாகியாக்குவது ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி உயிரையும் உடமைகளையும் இழந்த உண்மையான வீரத்தியாகிகளுக்கு செய்யும் அவமரியாதை. எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய போராட்டத்துடன் சுதந்திர போராட்டத்தை ஒப்பிட முடியாது. சுதந்திர போராட்ட தியாகிகள், அன்னியர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடினார்கள். ஜெயப்பிரகாஷ் தலைமையிலான போராட்டம் ஜனநாயகத்துக்கு புறம்பான ஒரு சில முடிவுகளையும், மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகத்தையும் எதிர்த்து நடத்தப்பட்டதாகும்.
இதுபோன்ற நடவடிக்கைகள் அரசாங்கத்தை எதிர்த்து போராடும் தீவிரவாத அமைப்புகளை ஊக்குவிப்பதாக அமைந்து விடும். தவறான முன்னுதாரணமாகிவிடும். தீவிரவாதம் பெருக வழி வகுத்து விடும்.
இவ்வாறு மிஸ்ரா கூறினார்.
பீகார் அரசின் முடிவுக்கு பீகார் மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அக்கைல் ஹைதரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நன்றி - தமிழ் முரசு