PDA

View Full Version : பாலாற்றில் அணைகட்டும் விவகாரம்



leomohan
02-05-2007, 12:15 PM
பாலாற்றில் அணைகட்டும் விவகாரத்தில் குறட்டைவிட்டு தூங்குவதாக கூறுவதா?



பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு குறட்டை விட்டுத் தூங்குவதாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளதற்கு சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார்.


பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதைக் கண்டித்து வேலூர் மாவட்டம் புள்ளூரில் பா.ம.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கடந்த 9 மாதங்களாக, தமிழக அரசு, பாலாறு அணை விஷயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் துரைமுருகன் இப்பிரச்னையில் அதிக ஆர்வமும், அக்கறையும் காட்டவில்லை என்றும், இப்பிரச்னையில் தமிழக அரசு குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் டாக்டர். ராமதாஸின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

-ஜெயா செய்திகள்

ஓவியா
03-05-2007, 02:14 AM
தகவலுக்கு நன்றி மோகன்.

நன்றி ஜெயா செய்திகள்

pradeepkt
03-05-2007, 05:39 AM
மோகன்,
இப்ப எல்லாம் அதிகமா ஜெயா செய்திகள் உங்க பதிவாக வருகிறதே... ஹி ஹி :D

ஓவியா
03-05-2007, 05:41 AM
இந்த கேள்விக்கு தக்க பதில் போட்டு அசத்த போகும் மோகனுக்கு ஒரு 'ஜெய்' :spezial: :spezial: :spezial:

leomohan
03-05-2007, 07:58 AM
மோகன்,
இப்ப எல்லாம் அதிகமா ஜெயா செய்திகள் உங்க பதிவாக வருகிறதே... ஹி ஹி :D


சன் டிவி ஜெயா ஆட்சி செய்யும் போதும்
ஜெயா டிவி சன் மன்னிக்கவும் கருணாநிதி ஆட்சி செய்யும் போதும் பார்த்தால் மோட்சம் கிடைக்கும் என்று பகவான் கூறுகிறார். :-)

அது சரி, நானும் ஜெயா செய்திகளில் கிடைத்த ஒரு செய்தியும் அதே மாதிரி அதே செய்தியை தினகரனோ தமிழ் முரசோ எப்படி போடுகிறது என்று போட்டு ஒரு ரகளை செய்ய வேண்டும் என்று பார்த்தால் அது மாதிரி ஒரு மசாலாவும் கிடைக்க மாட்டேங்குது :-(