PDA

View Full Version : எரிந்துகொண்டிருக்கிறது..!



ஆதவா
02-05-2007, 11:51 AM
சிரிப்புகள்
எரிந்துகொண்டிருக்கிறது
கஞ்சிக்கு
உலைவைத்த
கொள்ளிக் கட்டைகளோடு..!

சுட்டிபையன்
02-05-2007, 12:02 PM
அழகான ஹைக்கூ

ஓவியன்
02-05-2007, 12:05 PM
கஞ்சிக்கு உலை வைப்பது நல்ல விடயம் தானே?
அவற்றுடன் சிரிப்புகள் ஏன் எரிந்து தொலைய வேண்டும்?
உண்மையில் விளங்கலை ஆதவா!

ஆதவா
02-05-2007, 12:12 PM
நன்றிங்க ஓவியன் மற்றூம் சுட்டிப்பையன்..

கஞ்சிக்கு உலைவைப்பவர்கள் கூலிகள்.. தினம் தினம் வேலை செய்தால்தான் அன்றைய நாளைக் கழுவ முடியும்.. அப்படியான பொழுதுகளில் கொள்ளிக் கட்டைகளோடு அவர்களின் சிரிப்பும் எரிந்துகொண்டிருக்கிறது..

ஓவியன்
02-05-2007, 12:24 PM
கஞ்சிக்கு உலைவைப்பவர்கள் கூலிகள்.. தினம் தினம் வேலை செய்தால்தான் அன்றைய நாளைக் கழுவ முடியும்.. அப்படியான பொழுதுகளில் கொள்ளிக் கட்டைகளோடு அவர்களின் சிரிப்பும் எரிந்துகொண்டிருக்கிறது..

விளக்கத்திற்கு நன்ற்றி ஆதவா!

கண்மணி
02-05-2007, 12:27 PM
இவர்கள் மனதும்
விறகும் ஒன்று..
ஈரம்...!

ஓவியன்
02-05-2007, 12:33 PM
இவர்கள் மனதும்
விறகும் ஒன்று..
ஈரம்.

அருமை கண்மணி!

உங்கள் அழகான வரிகளுக்கு இந்த ஓவியனின் பரிசு 10 புள்ளிகள்(ஈ-பணம்).

ஆதவா
02-05-2007, 12:36 PM
அருமை கண்மணி..... உங்கள் பற்றிய அறிமுகம் இருக்கிறதா? கவிதை ஹைக்கு என்று நினைக்கிறேன்...
ஓவியரே! உம்மைப்போலவே இவர் அவதாரமும் கண்கள் கொண்டு இருக்கிறதே....

ஓவியன்
02-05-2007, 12:37 PM
ஓவியரே! உம்மைப்போலவே இவர் அவதாரமும் கண்கள் கொண்டு இருக்கிறதே....

அட ஆமா!:icon_wacko:

கண்மணி
02-05-2007, 12:57 PM
கண்மணியின் அறிமுகம் - ஒரு பார்வை
அந்தக் கண்களின் பார்வைக் கோணம் வேறு
இந்தக் கண்மணியின் பார்வைக்கோணம் வேறு

ஈர விறகு - புகையும் அடுப்பு
ஈர மனம் - புகையும் நெஞ்சம்
கண்ணில் நீர்

...

ஆதவா
02-05-2007, 01:13 PM
ஏங்க.. இவங்க என்னவோ சொல்றாங்க.. எனக்குப் புரியலை..

கண்மணி
02-05-2007, 01:14 PM
ஆதவருக்கே புரியவில்லையென்றால் ஆச்சர்யம் தான்!!!

ஆதவா
02-05-2007, 01:23 PM
ஆதவருக்கே புரியவில்லையென்றால் ஆச்சர்யம் தான்!!!
அய்யோ அப்படியொன்னும் நான் பெரிய ஆள் இல்லிங்க... சும்மா பொடிப்பையல்... (இப்படி கூட பதிவர்கள் வரக்கூடும்.. யார் கண்டா?)

கண்மணி
02-05-2007, 01:29 PM
ஈர விறகும் புகையும் அடுப்பும்
ஈர மனமும் புகையும் நெஞ்சும்
இரு இடங்களுக்கும் பொதுவானது
கண்ணீர்..

ஓவியன்
06-05-2007, 10:42 AM
ஈர விறகும் புகையும் அடுப்பும்
ஈர மனமும் புகையும் நெஞ்சும்
இரு இடங்களுக்கும் பொதுவானது
கண்ணீர்

அசத்தல் கண்மணி!

ஓவியா
06-05-2007, 03:59 PM
சிரிப்புகள்
எரிந்துகொண்டிருக்கிறது
கஞ்சிக்கு
உலைவைத்த
கொள்ளிக் கட்டைகளோடு..

ஆதவா கவிதை சூப்பேர்,

கண்மனியின் கவிதை அசத்தல்

..............................................................................................

இது ஓவியா

உலைக்கு வைத்த
கொள்ளிக் கட்டைகளைவிட
அதிக வேகமாக எரிந்தது
கூலிக்கரானின் பசித்த வயிரு

காலையில் மறந்துப்போன
குழந்தையின் சிரிப்பு
மாலையில் மலர்ந்தது
கொள்ளிக்கட்டைகளின் வெளிசத்தில்...

ஆதவா
07-05-2007, 08:48 AM
கவிதை அருமை ஓவியா அவர்களே! தங்களின் திறமைக்கு இது உதாரணம்.. நன்றியும் கூட

மனோஜ்
07-05-2007, 09:28 AM
ஆதவா வித்திட்டு
கண்மணி கருவளர்த்து
ஓவியக்கா முடித்தவிதம் அருமை வாழ்த்துக்கள்

தாமரை
08-05-2007, 03:42 AM
ஆதவா கவிதை சூப்பேர்,

கண்மனியின் கவிதை அசத்தல்

..............................................................................................

இது ஓவியா

உலைக்கு வைத்த
கொள்ளிக் கட்டைகளைவிட
அதிக வேகமாக எரிந்தது
கூலிக்கரானின் பசித்த வயிரு

காலையில் மறந்துப்போன
குழந்தையின் சிரிப்பு
மாலையில் மலர்ந்தது
கொள்ளிக்கட்டைகளின் வெளிசத்தில்

அவன் வீட்டில்
அடுப்பெரியவில்லை
விளக்கெரியவில்லை
அவன் நல்லவன்
வயிறும் எரியவில்லை
இருந்தாலும் தீ

எரிந்தது
குடிசை.......!

மனோஜ் அதுக்குள்ள முடிக்க விட்டிருவோமா?

ஆதவா
08-05-2007, 04:19 AM
அதானே!! விட்டுடுவோமா நாங்க?

அமரன்
16-06-2007, 08:10 AM
அதானே!! விட்டுடுவோமா நாங்க?

இவர்கள் மனதும்
விறகும் ஒன்று..
ஈரம்.
இவர்கள் ஈரம்
தெரிவதில்லை
விறகின் ஈரம்
தெரிகின்றதே!

சிவா.ஜி
16-06-2007, 08:17 AM
இவர்கள் ஈரம்
தெரிவதில்லை
விறகின் ஈரம்
தெரிகின்றதே

இவர்கள் ஈரம்
இறங்கித்தான்
விறகும் ஈரம்..!

அமரன்
16-06-2007, 08:21 AM
இவர்கள் ஈரம்
இறங்கித்தான்
விறகும் ஈரம்!
இவர்கள் ஈரம்
இறங்கியதா.....!?
ஏறும்வரை
இறங்காது..!

சிவா.ஜி
16-06-2007, 08:25 AM
இவர்கள் ஈரம்
இறங்கியதா.....!?
ஏறும்வரை
இறங்காது

ஏறும் வரை
இறங்கிகொண்டுதான் இருக்கும்
வாழ்வின் தரம் ஏறும்வரை
கண்ணின் ஈரம்
இறங்கிகொண்டுதான் இருக்கும்..!

அமரன்
16-06-2007, 08:30 AM
தரம் ஏறினாலும்
நிரந்தரம்
மன ஈரம்
இது தரம்!

சிவா.ஜி
16-06-2007, 08:45 AM
தரம் ஏறினாலும்
நிரந்தரம்
மன ஈரம்
இது தரம்

உயர்ந்த சிந்தனை அமரன்.மன ஈரம் என்றுமே நிரந்தரமாய் இருக்க வேண்டும்.

அமரன்
16-06-2007, 08:49 AM
உயர்ந்த சிந்தனை அமரன்.மன ஈரம் என்றுமே நிரந்தரமாய் இருக்க வேண்டும்.

இருக்கும் சிவா....!