PDA

View Full Version : ஹைக்கூ...(3)



அரசன்
02-05-2007, 10:59 AM
இரவலாக பெற்றாலும்
இரவுக்கு துணையாய்
வெண்ணிலா!

ஆதவா
02-05-2007, 12:26 PM
இரவலாகப் பெற்றாலும்
இரவுக்குத் துணையாய்
வெண்ணிலா!

ஹைகூ இலக்கணமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது என்றாலும் நிலவு பூமிக்குச் சொந்தம். இரவல் என்பது சூரியனின் ஒளி என்றுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்... இருந்தால் ஜெர்க் உண்டாகுதே... ஏன்??? ஹி ஹி ஹி எனக்க்கு ஹைகூனாலே என்னான்னு தெரியாது சாமி...

சுட்டிபையன்
02-05-2007, 12:31 PM
இரவுக்கு துணையாய் வந்தாலும்
வெண்ணிலா வெளிச்சம் இரவல்தான்

எனக்கும் கவிதை, இலக்கணம் எதுவுமே தெரியாதுப்பா பிழை என்றால் மன்னிக்கவும்

தாமரை
08-05-2007, 03:43 AM
பார்வை மங்கியது
தெரியவில்லை
நட்சத்திரங்கள்

ஷீ-நிசி
08-05-2007, 04:18 AM
இரவலாக பெற்றாலும்
இரவுக்கு துணையாய்
வெண்ணிலா!

கவிதையில் ஜெர்க் இருக்கத்தான் செய்கிறது...நண்பரே!

இரவில் மட்டும் ஒளிர்கிறதே,
இதென்ன.......
இரவில் நிலாவா?!
இரவல் நிலாவா?!

அரசன்
08-05-2007, 04:21 AM
கவிதையில் ஜெர்க் இருக்கத்தான் செய்கிறது...நண்பரே!

இரவில் மட்டும் ஒளிர்கிறதே,
இதென்ன.......
இரவில் நிலாவா?!
இரவல் நிலாவா?!



அதென்னங்க 'ஜெர்க்' எனக்கு ஒன்றும் புரியலைங்கோ!

ஷீ-நிசி
08-05-2007, 04:29 AM
அதென்னங்க 'ஜெர்க்' எனக்கு ஒன்றும் புரியலைங்கோ!

அது ஒன்னுமில்லைங்க நண்பரே! படிக்கும்போது பொருந்தி வராமல் நிற்பதாய் தோன்றுகிறது... அவ்ளோதான்.. வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிபோட்டால் சரியாகும் என்று தோன்றுகிறது...

அரசன்
08-05-2007, 04:36 AM
அது ஒன்னுமில்லைங்க நண்பரே! படிக்கும்போது பொருந்தி வராமல் நிற்பதாய் தோன்றுகிறது... அவ்ளோதான்.. வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிபோட்டால் சரியாகும் என்று தோன்றுகிறது...

ஆதவன் அவர்கள் சொல்வதுபோல் 'ப்,த்' இட வேண்டுமோ?

ஷீ-நிசி
08-05-2007, 05:02 AM
ஆதவன் அவர்கள் சொல்வதுபோல் 'ப்,த்' இட வேண்டுமோ?

எழுத்துப்பிழை மட்டுமல்ல...

சரி.. உங்களின் இந்த ஹைக்கூவின் விளக்கம் கொடுங்கள்.. தவறு எங்குள்ளது என்று நாம் கண்டுபிடிப்போம்...

அரசன்
08-05-2007, 05:18 AM
எழுத்துப்பிழை மட்டுமல்ல...

சரி.. உங்களின் இந்த ஹைக்கூவின் விளக்கம் கொடுங்கள்.. தவறு எங்குள்ளது என்று நாம் கண்டுபிடிப்போம்...


"இயற்கையிலே தன்னிடம் ஒளியில்லை என்றாலும், சூரியனிடமிருந்து ஒளியை இரவலாக பெற்றாலும், தான் பெற்ற ஒளியைக் கொண்டு இரவுக்கு துணையாக நின்று உலகுக்கு வெளிச்சத்தை கொடுக்கும் இந்த வெண்ணிலா" என்ற பொருளில் எழுதினேன்.

ஷீ-நிசி
08-05-2007, 05:23 AM
இயற்கையிலே தன்னிடம் ஒளியில்லை என்றாலும், சூரியனிடமிருந்து ஒளியை இரவலாக பெற்றாலும்,

இது புரியவில்லையே நண்பரே! நிலவு சூரியனிடமிருந்து ஏன் ஒளியை பெறவேண்டும்? நிலவு வேறு சூரியன் வேறுதானே... இரண்டுமே ஒளிர்பவைதானே! விளக்குங்கள்... நாம் ஆராய்வோம்!

அரசன்
08-05-2007, 05:30 AM
இது புரியவில்லையே நண்பரே! நிலவு சூரியனிடமிருந்து ஏன் ஒளியை பெறவேண்டும்? நிலவு வேறு சூரியன் வேறுதானே... இரண்டுமே ஒளிர்பவைதானே! விளக்குங்கள்... நாம் ஆராய்வோம்!

இல்லை நண்பரே, நிலவுக்கு இயற்கையிலே ஒளி கிடையாது. இது அறிவியல் உண்மைதானே. அதனால் நிலவு சூரியனிடமிருந்துதான் ஒளியைப் பெறுகிறது. எனவே தான் பெற்ற ஒளியைக் கொண்டு இரவில் வெளிச்சத்தைத் தருகிறது எனுமாறு எழுதினேன்.

ஷீ-நிசி
08-05-2007, 05:35 AM
இல்லை நண்பரே, நிலவுக்கு இயற்கையிலே ஒளி கிடையாது. இது அறிவியல் உண்மைதானே. அதனால் நிலவு சூரியனிடமிருந்துதான் ஒளியைப் பெறுகிறது. எனவே தான் பெற்ற ஒளியைக் கொண்டு இரவில் வெளிச்சத்தைத் தருகிறது எனுமாறு எழுதினேன்.

ஓ! இப்படி ஒரு உண்மை இருக்கிறதா.. நன்றி நண்பரே! இந்த வகையில் பார்த்தால் இந்தக் கவிதை சரியானதுதான்.. விளக்கியமைக்கு நன்றி நண்பரே!