PDA

View Full Version : காதல் தேவதாஸ்!



அரசன்
02-05-2007, 10:56 AM
தாடியின் வளமை
காதலின் முதுமையை
சொல்லியது.
என்னவளுக்கும் புரிந்தது.
இருந்தும்
இரு பிள்ளைகளோடு
தன் கணவருடன்
பஸ் நிறுத்தத்தில் அவள்!

:080402uthere_prv: :080402uthere_prv: :080402uthere_prv: :080402uthere_prv:

ஓவியா
03-05-2007, 01:47 AM
நல்ல கவிதை.. நன்று.

ஓவியன்
06-05-2007, 10:21 AM
ஒரு கதைக்கான கரு உங்கள் கவிதையில்...

எனக்கு ஒரு டவுட் இந்த தாடிக்கும் காதல் தோல்விக்கும் அப்படி என்ன கணக்ஷனோ???

poo
09-05-2007, 07:40 AM
காதல் பட கிளைமாக்ஸ்..?!..

கொஞ்சம் கொஞ்சமாக ஊசியேற்றுவதில் உங்களுக்கு இணையில்லை நண்பரே..

ஆதவா
09-05-2007, 08:06 PM
பூ அண்ணா சொன்னமாதிரி காதல் கிளைமாக்ஸ் தான்.... ஆனால் பூ அண்ணா... இதை எழுதும்போது நிச்சயம் மூர்த்திக்கு அந்த பட கிளைமாக்ஸ் நினைவுக்கு வந்திருக்காது. எனக்கும் பல இம்மாதிரி ஆனதுண்டு

கவிதை அருமை.. அழகிய நிகழ்வைப் படம்பிடித்து அடைத்தது.. இன்னும் அருமை... வாழ்த்துக்கள்

sinnavan
09-05-2007, 08:21 PM
காதல் தோல்வியில் ஏற்படும் வலிகள்
கவிதையில் தெரிகிறது....

அவளுக்கு தெரிந்து என்ன பயன்....

மனோஜ்
10-05-2007, 08:18 AM
சிலநேரம் சில மனிதர்கள்
சிலிர்த்திடும் உனர்வுகள் அருமை கவிதை

ஷீ-நிசி
10-05-2007, 08:22 AM
தாடியின் வளமை
காதலின் முதுமையை
சொல்லியது.

இந்த வரிகளின் வளமை
கவிதையின் எளிமையை
சொல்லியது!

வாழ்த்துக்கள் நண்பரே!

sarcharan
14-05-2007, 03:01 PM
தாடியின் வளமை
காதலின் முதுமையை
சொல்லியது.
என்னவளுக்கும் புரிந்தது.
இருந்தும்
இரு பிள்ளைகளோடு
தன் கணவருடன்
பஸ் நிறுத்தத்தில் அவள்!

:080402uthere_prv: :080402uthere_prv: :080402uthere_prv: :080402uthere_prv:

கலைந்த தலையும்
கையில் மதுக்குப்பியுடனும் நான்....

அரசன்
15-05-2007, 04:45 AM
கலைந்த தலையும்
கையில் மதுக்குப்பியுடனும் நான்....


காதல் வாழ்வின் ஒரு அங்கம். அதை மட்டுமே வாழ்க்கையாகி விடாது. தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

தீபா
15-05-2007, 12:55 PM
தாடியின் வளமை
காதலின் முதுமையை
சொல்லியது.
என்னவளுக்கும் புரிந்தது.
இருந்தும்
இரு பிள்ளைகளோடு
தன் கணவருடன்
பஸ் நிறுத்தத்தில் அவள்!


காதலின்போது
தாடியில்லை
முதுமையில்லை
பிள்ளைகள் இல்லை (:icon_hmm:)
எல்லாம் இருந்தும்
ஏன் தோற்றோடியது
காதல்?


உங்கள் கவிதை அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்