PDA

View Full Version : சிலந்திவலை!



ஆதவா
02-05-2007, 07:52 AM
மிகச் சாதாரணமாக
அழித்துவிடுகிறோம்
சிலந்தி கட்டிய வலையை.

ஓவியன்
02-05-2007, 07:57 AM
மிகச் சாதாரணமாக
அழித்துவிடுகிறோம்
சிலந்தி கட்டிய வலையை

அருமை ஆதவா!

அழிக்கும் எங்களுக்குத் தெரிவதில்லை சிலந்தியின் வலியும் அதன் அயராத உழைப்பும்.

இலகுவாக அழித்துவிடும் எங்களுக்கு மீள அதனை பின்னத் தான் தெரியுமா??


இந்த கவிதை சிலந்தி வலைக்கு மட்டுமல்ல மனித வாழ்வில் பல இடங்களுக்கு கனகச்சிதமாகப் பொருந்தும்.

வாழ்த்துக்கள்.

ஆதவா
02-05-2007, 07:58 AM
நன்றிங்க ஓவியன்

மனோஜ்
02-05-2007, 08:09 AM
நன்றி ஆதவா நீங்கள் கூறிய வரிகள் குறைவு ஆனால்
விளக்கங்கள் செல்லிமுடியாதது
சிலந்திவலையை கண்டுமனதில் உறுதிபெற்று வெற்றிபெற்றவர் பலர்

ஷீ-நிசி
02-05-2007, 09:01 AM
பரவாயில்லை...
ஆனால் இன்னும் யோசிக்கலாம்... ஆதவா..

என்றோ நான் படித்தது...

வீட்டை சுத்தம் செய்ய
கதவை திறந்தேன்!
சிலந்தியின் கூடு கலைந்தது.......

அரசன்
02-05-2007, 10:19 AM
நமக்கு போகி (பொங்கள் முதல் நாள்) சரி, சிலந்திக்குமா!

pradeepkt
02-05-2007, 10:31 AM
மீண்டும் இலக்கணம் மாறாத, செய்தியுடன் கூடிய, மக்களை விதவிதமாகச் சிந்திக்க வைக்கக் கூடிய ஹைக்கூ.

15 ஐகேஷ் கொடுத்துப் பாராட்டுகிறேன்.

ஆதவா
02-05-2007, 11:11 AM
நெசமாவே இது ஐகூ வா??? என்னால் நம்பவே முடியலை...

அப்படீன்னா என்னோட முதல் ஹைகூ இதுதான்.... ஹி ஹ் இ...

நன்றிங்க அனைவருக்கும்.. (பிரதீப் அண்ணா கேஷ் வந்து சேரல... செக் அனுப்புங்க..)

தாமரை
08-05-2007, 10:01 AM
மிகச் சாதாரணமாக
அழித்துவிடுகிறோம்
சிலந்தி கட்டிய வலையை

இவனும் சிலந்திதான்
எச்சிலில்(ஜொள்ளில்) வலைபின்னி
மாட்டியது இரை!

அமரன்
17-07-2007, 11:56 AM
அற்புதம் ஆதவா+ஷீ−நிசி+ தாமரை அண்ணா(ஆதவாவை சொல்லலையே)

aren
17-07-2007, 02:04 PM
அழகான கவிதை. மூன்று வரிகளில் எத்தனை விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பு 110 வருடம் வாழ்ந்த ஒரு மரத்தை வேரோடு வெட்டி எறிந்து விட்டார்கள் இங்கு. அது அங்கே வரும் ஒரு தெருவிற்கு இடைஞ்சலாக இருந்தது அதனால் வெட்ட வேண்டியதாகிவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதைப் பார்த்தபொழுது கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. ஒரு எதிர்ப்பு கூட செய்யமுடியாமல் அநியாயமாக துண்டு துண்டாக ஆகிவிட்டது நொடியில். அதைப் பார்த்த என்னால் அதை ஜீரணிக்கமுடியவில்லை.

உங்கள் கவிதையைப் படித்தவுடன் அதே மாதிரியான நினைவு எனக்கு ஏற்பட்டது. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
17-07-2007, 03:41 PM
இவனும் சிலந்திதான்
எச்சிலில்(ஜொள்ளில்) வலைபின்னி
மாட்டியது இரை

அசத்தல் அண்ணா! :thumbsup:

ஓவியன்
17-07-2007, 03:43 PM
இரண்டு தினங்களுக்கு முன்பு 110 வருடம் வாழ்ந்த ஒரு மரத்தை வேரோடு வெட்டி எறிந்து விட்டார்கள் இங்கு. அது அங்கே வரும் ஒரு தெருவிற்கு இடைஞ்சலாக இருந்தது அதனால் வெட்ட வேண்டியதாகிவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதைப் பார்த்தபொழுது கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. ஒரு எதிர்ப்பு கூட செய்யமுடியாமல் அநியாயமாக துண்டு துண்டாக ஆகிவிட்டது நொடியில். அதைப் பார்த்த என்னால் அதை ஜீரணிக்கமுடியவில்லை.

உங்கள் பின்னூட்டமே கலங்க வைத்தது என்னை − அப்படியானால் உங்கள் நிலை..........

நன்றி அண்ணா!

அமரன்
17-07-2007, 03:43 PM
அசத்தல் அண்ணா! :thumbsup:

ஆதவாவை சொன்னது அசத்தலா...

ஆதவா
17-07-2007, 06:27 PM
மனமார்ந்த நன்றிகள் அனைவருக்கும்...

இளசு
22-07-2007, 07:03 AM
மூன்றே வரிகள்...
நீண்ட எண்ண அலைகள்..

வலைஞன் − சிலந்திக்கு நான் வைத்திருக்கும் பெயர்...
ராபர்ட் ப்ரூஸ் முதல் தாமரை வரை
சிந்தனைகளை உருவாக்கும் சிலந்திக்கு நன்றி!

எட்டாத சிந்தனைகளையும்
எட்டவைக்கும் வல்லமை கொண்ட
ஆதவனின் கவி விரல்களுக்கு பாராட்டு முத்தம்!

ஆதவா
22-07-2007, 07:17 AM
அண்ணா. இது மிகப்பெரும் பாராட்டு எனக்கு.. நான் அலுவலகத்தில் சிலந்திவலையை ஒட்டடை அடிக்கும்போது திடீரென்று தோன்றிய வரிகள் தான் அவைகள்..

உண்மையில் முத்தம் பெற்றதுபோல இருந்தது எனது கைவிரல்கள்.... அத்தனை சக்தியோ அந்த வார்த்தைகளுக்கு?