PDA

View Full Version : சக்தியின் வணக்கம்,



சக்தி
02-05-2007, 05:57 AM
சக்தியின் வணக்கம்

ரோஜாவின்ராஜா என்ற பெயரிலிருந்து சக்தி என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறேன்

கலைஞர்கள்,கவிஞர்கள் பிறக்கிறார்கள், உருவாக்கப்படுவதில்லை என்ற வரிகளை எங்கோ படித்த ஞாபகம். நான் கவிஞனாக பிறக்கவில்லை என்னை நானே உருவாக்கிப்பார்க்கிறேன். பள்ளிக்
காலத்தில் என் நண்பர்கள் எழுதும் கவிதைகளை படிக்கும் போது நாமும் இதுபோல் எழுதவேண்டும் என்று எண்ணியதுண்டு. முயன்று முயன்று என் கல்லூரிக் காலத்தில் தான் நான் கவிஞன் என்ற பெயரைப் பெற்றேன்.ஆம், நான் என் தொழிக்கு எழுதி கொடுத்த கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அப்பொழுது தான் உணர்ந்தேன் என் வரிகளுக்கும் வலிமை உண்டென்று.

நான் எழுதிய நூற்றிக்கும் மேற்பட்ட கவிதைகள் இன்று எங்கோ உறங்கிக்கொண்டிருக்கின்றன.இத்தமிழ்மன்றம் மூலம் அவற்றை உயிர்ப்பிக்க எண்ணூகிறேன். என் கவிதைகள் இலக்கணம் அறியாதவை. எனது எண்ணங்களினூடே தோன்றும் உணர்வுகளை பதிக்கின்றேன். அவற்றிக்கு உங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும்

மன்றத்தில் உள்ள கவிதைகள்
மலரும் நினைவுகள் தானோ??????? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9041)
நிலவே ஏன் மறைகின்றாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9004)
நெஞ்சின் வலிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9658)
இரட்டைக்கிளவியில் ஓர் கவிதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9606)
எங்கே இருக்கிறாய்?
(http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9704)
யதார்த்தக் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9511)

.

பாரதி
02-05-2007, 07:20 AM
அன்பு நண்பரே,

சுட்டிகளை ஏன் தர விரும்புகிறீர்கள்..? ஒவ்வொரு கவிதையாக இங்கேயே பதியலாமே..! நண்பர்களுக்கும் எளிதாக இருக்கும்.

வாழ்த்துக்கள். நன்றி.

மனோஜ்
02-05-2007, 09:10 AM
தங்கள் கவிகளை தாருங்கள் ரோஜா அவர்களே

ஓவியன்
02-05-2007, 09:14 AM
கவி ரோஜா உங்கள் கவிநறுமணத்திற்கு என்றும் எங்கள் எல்லோருடைய ஆதரவும் உண்டு.

leomohan
02-05-2007, 09:29 AM
வாழ்த்துகள் ரோஜா.

அரசன்
02-05-2007, 10:09 AM
காத்திருக்கிறோம் சீக்கிரம் பதிவிடுங்கள்.

ஷீ-நிசி
02-05-2007, 03:59 PM
ரோஜாவின் ராஜாவின் கவிதையில் காதல் ஊற்றெடுக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. தொடர்ந்து இங்கே பவனி வர போகும் அவரின் கவிதைகளுக்கும் அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

பென்ஸ்
02-05-2007, 06:34 PM
அன்பு நண்பரே,

சுட்டிகளை ஏன் தர விரும்புகிறீர்கள்..? ஒவ்வொரு கவிதையாக இங்கேயே பதியலாமே..! நண்பர்களுக்கும் எளிதாக இருக்கும்.

வாழ்த்துக்கள். நன்றி.

பாரதி....

இவர் கவிதைகளை தனியே பதியட்டும் அப்போது மன்றத்தில் இவரது கவிதைகள் கவணிக்கபடுவதுமட்டுமில்லாமல் , விமர்சணக்களையும் பெறும் என்பது என் கருத்து....

இவர் பதிக்கும் கவிதைகளை தலைப்பு , அதன் சுட்டி, சிறிது விரிவுரையாக இங்கு கொடுப்பது இவரது கவிதைகளை கண்டு பிடிக்கவும், அலசவும் வசதியாக இருக்கும்....

அக்னி
03-05-2007, 04:12 AM
[CENTER][SIZE="4"]என் கவிதைகள் இலக்கணம் அறியாதவை. எனது எண்ணங்களினூடே தோன்றும் உணர்வுகளை பதிக்கின்றேன். அவற்றிக்கு உங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும்

கவிதைகள் இலக்கணம் தழுவி வருவதை விட, உணர்வுகளில் உதிக்கும்போதுதான் உயிரோட்டமாய் இருக்கும்.

என்றும் புகழ் பெற வாழ்த்துக்கள்...

poo
05-05-2007, 07:07 AM
வாழ்த்துக்கள் ரோஜா... மன்றத்தில் உங்கள் வாசம் வீசிக் கொண்டேயிருக்கட்டும்!!

crisho
05-05-2007, 07:19 AM
வாருங்கள் ரோஜா... உங்கள் வரவு நல்வரவாகுக!!

மதுரகன்
08-05-2007, 06:26 PM
தொடர்வெற்றிகளுக்கு வாழ்த்துகிறேன் ராஜா..

கலைஞர்கள்,கவிஞர்கள் பிறக்கிறார்கள், உருவாக்கப்படுவதில்லை
எனது கருத்து கவிஞர்கள் பிறப்பதுமில்லை, உருவாக்கப்படுவதுமில்லை
தாமே உருவாகிறார்கள்... தங்கள் முயற்சியாலல்ல எண்ணங்களால்...
நீங்கள் கவிதை உருவாக்கவேண்டுமென்ற எண்ணம் தான் உங்களுள் நின்று உங்களை உயர்த்தியது
எனவே உயர்ந்த எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்...
வெற்றி நிச்சயம்...

அறிஞர்
08-05-2007, 06:31 PM
இரு கவிதைகளை இணைத்துள்ளேன்... வேறு எந்த உதவி வேண்டும் அன்பரே..

ஆதவா
11-05-2007, 01:45 AM
குறுகிய காலத்தில் மன்றத்தில் இடம்பிடித்துவிட்ட சிலருள் இவரும்.... காதல் கவிதைகள் போட்டு பின்னுகிறார்... இன்னும் கொஞ்சம் முயலவேண்டும்.. ஆரம்பக் கட்டத்தைத் தாண்டி அடியெடுத்து மெல்ல நடந்து கொஞ்ச தூரம் வந்துவிட்டார்... பல நூறு கவிதைகள் எழுதி மன்றத்திலும் வெளியேயும் சிறப்பு பெறூமாறு வாழ்த்திக் கொள்கிறேன்

lolluvathiyar
11-05-2007, 02:05 PM
உன் கவிதையை
இன்னும் நான் படிக்க
ஆரம்பிக்க வில்லை
ஆனால் அறிமுமே
உன் திறமையை பரைசாற்றி விட்டது

சக்தி
01-06-2007, 04:02 PM
இம்மன்றத்தில் என்னையும் உங்களது நண்பனாக சேர்த்து எனது படைப்புகளுக்கு ஊக்கமளித்து எனது குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழிநடத்தும் நண்பர்களுக்கு எனது அன்பை காணிக்கையாக்குகிறேன்.
நன்றி
தங்களது அன்பை நாடும்

அமரன்
01-06-2007, 04:30 PM
ரோஜா! உங்கள் கவிகளைப் படித்திருக்கின்றேன். இப்போதுதான் உங்கள் அறிமுகத்தைப் படித்தேன். பல கவிதைகளை நீங்கள் இணைக்கவில்லை. உங்களுக்கு சுட்டி கொடுப்பதில் பிரச்சினை இருந்தால் மேற்பார்வையாளரை நாடுங்கள். (உங்கள் இரு கவிதைகளுக்கு அறிஞர் அவர்கள் சுட்டியை இணைத்துள்ளார்) நீங்களே சுட்டியை இணைக்க இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9820) வாருங்கள்.

சக்தி
01-06-2007, 06:00 PM
தங்களின் சுட்டி மூலம் எனது கவிதைகளை இணைத்து விட்டேன். உதவிக்கு நன்றி. சில கவிதைகளைக் காணவில்லை. அனேகமாக அவை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அவற்றின் சுட்டி கிடைத்ததும் இணைத்து விடுகிறேன்.

அமரன்
01-06-2007, 06:05 PM
தங்களின் சுட்டி மூலம் எனது கவிதைகளை இணைத்து விட்டேன். உதவிக்கு நன்றி. சில கவிதைகளைக் காணவில்லை. அனேகமாக அவை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அவற்றின் சுட்டி கிடைத்ததும் இணைத்து விடுகிறேன்.
அவை இரண்டொரு நாட்களில் சரியாகி விடும். அதற்கான காரணத்தை இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9786) போய்ப்பாருங்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9786 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9786)

விகடன்
03-06-2007, 05:19 PM
வாருங்கள் சக்தி,
உங்களின் இந்த பெயர்மாற்றத்தால் இன்னும் நன்மை உண்டாகும்.

வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
04-06-2007, 06:05 AM
ஓ அந்த ராஜாவின் ரோஜாதான் இந்த சக்தியா? உங்கள் எழுத்தின் சக்தியை பலமுறை பார்த்திருக்கிறேன். இன்னும் இன்னும் சக்தி கூட வாழ்த்துக்கள்.

சக்தி
04-06-2007, 06:09 AM
நன்றி தோழர்களே. உங்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் என்னை செம்மையுறச்செய்யும்.

ஓவியன்
07-09-2007, 05:06 AM
அன்பான சக்தி!

என்ன நீங்களும் காணாமல் போனோர் பட்டியலில் இணைவதாகத் திட்டமா.......?
விரைந்து வாருங்கள் உங்களோடு முன்னர் போன்று சேர்ந்து கலக்க மிக்க ஆவல்............!

அனுராகவன்
27-01-2008, 10:39 PM
வாருங்கள் சக்தி ..
நாங்கள் காத்து க்கொண்டுள்ளோம்..
ம்ம் கலக்க வாருங்கள்

RRaja
08-04-2008, 06:17 AM
கிட்டத்தட்ட ஒருவருட காலம் ஆகிவிட்டது. என் தாமத பதிவுக்கு வருந்துகிறேன். வாருங்கள் சக்தி.