PDA

View Full Version : தூறல் துரோகம்.

ஆதவா
02-05-2007, 05:36 AM
தூறல்களில்
தொலைந்துபோனது
துவண்டு கிடக்கும்
துற்வாசர்களின்
துஞ்சல்கள்.

ஷீ-நிசி
02-05-2007, 06:20 AM
துர்வாசகர்... துஞ்சல்... இவற்றின் விளக்கங்கள் என்ன ஆதவா...

ஆதவா
02-05-2007, 07:00 AM
நன்றிங்க நிசி...

துற்வாசர் - துற்+வாசர் = அழுக்கான மனிதர்கள் அல்லது பிச்சைக்காரர்கள் என்றுகூட வைத்துக்கொள்ளலாம்..

துஞ்சல் - உறக்கம்.

ஷீ-நிசி
02-05-2007, 07:24 AM
துற்வாசர் - பிச்சைக்காரர்கள் என்று பட்சி சொல்லியது.. பரவாயில்லை சரிதான்.. துஞ்சல் முற்றிலும் எனக்கு புதிய வார்த்தை...

கோவில் வாசலிலோ அல்லது எங்கேயோ வீதியில் படுத்துகிடக்கும், நாதியற்றவர்களின் தூக்கத்தில் விழும் மழைத்துளிகள்...

சின்ன நிகழ்வு.. கவிஞனின் பார்வையில்..

leomohan
02-05-2007, 09:21 AM
தூறல்களில்
தொலைந்துபோனது
துவண்டு கிடக்கும்
துற்வாசர்களின்
துஞ்சல்கள்
....................
.......................

நச்.

ஆதவா
02-05-2007, 11:16 AM
நன்றிங்க மோகன்...

பரஞ்சோதி
02-05-2007, 11:38 AM
படிக்கும் போது புரியலை, விளக்கம் பின்னர் புரிந்தது.

தம்பிக்கு நன்றி.

ஆதவா
02-05-2007, 11:40 AM
நன்றிங்க பரம்ஸ் அண்ணா

தாமரை
08-05-2007, 03:45 AM
அரசாங்கத்தின் புது வரி
மழை பெய்தால்
12 சதவிகிதம் சேவை வரி.

ஆதவா
08-05-2007, 04:21 AM
பதில் கவிதை அருமை என்றாலும் எனக்குப் புரிய மறுக்கிறது... அண்ணா... இந்தமாதிரி எழுதக் கண்டால் எனக்கு மிகவும் பிடிக்கும்,

தாமரை
08-05-2007, 06:28 AM
மழை அதுபாட்டுக்கு சிவனேன்னு பெய்ய
இப்படி சிலபேர் குளிச்சா..

சேவை வரி போடணுமில்ல....

ஆதவா
08-05-2007, 07:44 AM
அட!!:icon_shok:

இளசு
11-06-2007, 11:30 PM
உன் குத்தமா என் குத்தமா
படக்காட்சியை நினைவூட்டிய
காட்சிக்கவிதை அருமை ஆதவா!

சொல்லாடலால் பரிமாணம் கூடிய கவிதை! பாராட்டுகள்!

சிதம்பர ரகசியத்தை
ராவணான்னு போட்டுடைச்ச
தாமரைக்கும் சபாஷ்.

ஆதவா
12-06-2007, 01:28 AM
ஆஹா!! நன்றி அண்ணா,, சட்டென அந்த பாட்டு நினைவுக்கு வந்தது கூட ஒரு வகை திறமை தானே!

சிவா.ஜி
12-06-2007, 04:35 AM
தூறல் சிலரை ஓடவைக்கும்,சிலரை பாட வைக்கும்,சிலரை ஆடவைக்கும் எங்கள் ஆதவாவை சமூகசிந்தனை கவிதை எழுத வைத்திருக்கிறது. அட்டகாசம் ஆதவா.

ஆதவா
12-06-2007, 04:42 AM
தூறல் சிலரை ஓடவைக்கும்,சிலரை பாட வைக்கும்,சிலரை ஆடவைக்கும் எங்கள் ஆதவாவை சமூகசிந்தனை கவிதை எழுத வைத்திருக்கிறது. அட்டகாசம் ஆதவா.

இதற்காகவே கவிதை எழுதலாம்... நன்றி சிவா.ஜி

அமரன்
15-06-2007, 08:11 PM
ஆதவா நல்ல கவிதை. தூறல் அழகு. அதிலும் ஒரு அவலம் இருக்கு என்கின்றீர்கள். பாராட்டுகள். ஒரு சின்ன ச்ந்தேகம். தப்பாக நினைக்கவேண்டாம் துற்வாசர் என்பது சரியா துர்வாசர் என்பது சரியா. எழுத்துப்பிழை என்றால் இரண்டுதரம் பதிந்திருக்கமாட்டீர்கள். இருந்தாலும் ஒரு சந்தேகம்.

தாமரை
16-06-2007, 02:33 AM

துர்வாசம் என்பதுதான் சரி..:violent-smiley-010: :violent-smiley-010:
துற என்றால் விட்டுவிடு என்று அர்த்தம்...

துர்வாசர்கள்
வாசம் துறக்கிறார்கள்
தூறல்
வாசல் தெளிக்கிறது:food-smiley-011: :food-smiley-011: :food-smiley-011:

ஆதவா
16-06-2007, 10:16 AM
துர்வாசம் என்பதுதான் சரி..:violent-smiley-010: :violent-smiley-010:
துற என்றால் விட்டுவிடு என்று அர்த்தம்..

துர்வாசர்கள்
வாசம் துறக்கிறார்கள்
தூறல்
வாசல் தெளிக்கிறது:food-smiley-011: :food-smiley-011: :food-smiley-011:

நாற்றம் - மணம்
துற்நாற்றம் - அழுகிய வாசனை
வாசர்கள் - மணப்பவர்கள்./வசிப்பவர்கள்
துற்வாசர்கள் - அழுக்கோடு வசிப்பவர்கள்

ஓவியன்
06-10-2009, 08:24 AM
ஒரு துளி தூறலுக்காக ஏங்குவோர் ஒரு பக்கம்,
ஒரு துளியும் பெய்யாதிருக்காதா என ஏங்குவோர் இன்னோர் பக்கம்...

வாழ்க்கையே ஒரு முரண் தான் இல்லையா ஆதவா...