PDA

View Full Version : ро╡ро┐ро░ропрооро╛роХрпБроорпН ро╡ропродрпБроХрпНроХрпБ ро╡ро┐роЯрпИродро╛ро░рпБроЩрпНроХро│рпН...

родрпАрокройрпН
02-05-2007, 12:20 AM
விரயமாகும் வயதுக்கு விடைதாருங்கள்

இரவுப்படுக்கை
இதமாக இருக்கவில்லை...
Сஆனந்தம்Т கூட
ஆனந்தமாய் ரசிக்கமுடியவில்லை
СஅரசிТ பார்க்கையிலும் - நாளைய
அரிசிப் பிரச்சினையே மனம் முழுதும்...!

பகல் வேலைகளே பலவீனப்பட்டிருக்க
இரவெங்கே தூக்கம் வரும்..!?
உரமேறிய கரங்கள் மட்டுமே இங்கு
உறங்குகின்றனЕ

சிலர் சொந்த வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு
Сதொடர்களின்Т வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை...
சிலர்,
உயிரை காக்கும் உன்னத இடமாய்
சிறைக்குப் போகும் பரிதாபம்Е

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சமூகம்
இன்றும்
சங்கம் வைத்தே வயிறு வளர்க்க வேண்டிய கட்டாயம்...!

வரிசைக்குள் வரும் குழறுபடிக்கு
வரிந்துகட்டும் வாலிபர்கள்
தெருவுக்கு தம்மை விட்ட தெய்வங்களை
தெரிந்தும் ஏசாத வீரதீரம்..!

ஆரம்பமே மறந்துபோய்
உருளைக்கிழங்கிற்கும் ரின் மீனுக்கும்
போராடி வென்றுவிட்ட பராக்கிரமம்..!

தீவில் எங்குமே அமைதியாம்...!?
ஆமாம்,
இங்கும் அமைதியாய் தான்
உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றனЕ

நிற்க,
செழிப்பான நாடு வேண்டாம் எமக்கு-
குறைந்தபட்சம்,
விரயமாகும் வயதுக்கு
விடைதாருங்கள் போதும்Е!

குறிப்பு: நம்னாட்டில் வெள்ளைவான்களில் கடத்தப்படுவதும் உந்துருளிகளில் வந்து சுடப்படுவதுமான அச்சுறுத்தல்களிலிருந்து தப்புவதற்காக நீதிமன்றங்களை சரணடையும் இளைஞர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நீதிமன்றம் தேர்ந்தெடுக்கும் இடம் சிறைச்சாலைதான்.

சங்கம்: இந்தியாவில் வறிய மக்களிற்கு குடும்ப அட்டைகளிற்கு பொருட்களை வளங்கும் ரேஷன் கடை போன்று எமது நாட்டில் உள்ளது சங்கக்கடைகள்.

роЪрпБроЯрпНроЯро┐рокрпИропройрпН
02-05-2007, 04:14 AM
அழகான கவிதை பல விடயங்களை தொட்டுப் பார்த்திருக்கிறீர்கள்

роЖродро╡ро╛
02-05-2007, 12:05 PM
என்னப்பா! இந்த பக்கமே யாரும் காணோம்?? கவிதை அருமை தீபன்... நல்ல கருத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது. எழுத்துரு அளவு சற்று பெரியதாக இருக்கிறது. இம்மாதிரி பல விடயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்... இறுதி வரிகள் அதாவது தலைப்பு மிக அருமை... தொடர்ந்து எழுதுங்கள்

கருத்து சொன்ன சுட்டிப்பையருக்கு பாராட்டுக்கள்...

роУро╡ро┐ропройрпН
02-05-2007, 12:09 PM
அடடா ஒரு நிதர்சனக் கவிதை என் கண்ணில் படத் தவறிவிட்டதே?
மீட்டு வந்த ஆதவருக்கு நன்றிகள்.

அருமையான முத்தாய்ப்பு தீபன் - வாழ்த்துக்கள்.

நிற்க,
செழிப்பான நாடு வேண்டாம் எமக்கு-
குறைந்தபட்சம்,
விரயமாகும் வயதுக்கு
விடைதாருங்கள் போதும்Е!

родрпАрокройрпН
02-05-2007, 11:33 PM
கவிதை அருமை தீபன்... நல்ல கருத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது. எழுத்துரு அளவு சற்று பெரியதாக இருக்கிறது. இம்மாதிரி பல விடயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்... இறுதி வரிகள் அதாவது தலைப்பு மிக அருமை... தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி நண்பரே... பாராட்டுகளிற்கும் குறைகளை சுட்டிக்காட்டியதற்கும்...! சரிசெய்துவிட்டேன்.. கூடவே விளக்கத்திற்காக சிறு குறிப்பும் இட்டுள்ளேன்.

பாராட்டி ஊக்குவிக்கும் சுட்டிப்பையனிற்கும் ஓவியனிற்கும் கூட என் நன்றிகள்.

ஆமா, வேற யாரும் இத படிக்கிறதில்லையா..?

роУро╡ро┐ропро╛
03-05-2007, 03:31 AM
ஆமா, வேற யாரும் இத படிக்கிறதில்லையா..?

தீபன் நலமா???

ஓரு நாளில் சில பின்னூட்டங்கள் தான் வரும். கொஞ்சம் காத்திருங்கள். விமர்சனங்கள் வந்து குவியும்.

роХрогрпНроорогро┐
03-05-2007, 03:40 AM
விரயமாகும் வயது..
விடைதாருங்கள்..

எத்தனையோ பேரின் ஏக்கக் குரல்..

வயதுக்கு விடைதருதல்
அழகியல்
வயதில் விடைபெறுதல்
துன்பியல்

ро░ро╛роЬро╛
03-05-2007, 04:30 AM
அன்பிற்கினிய தீபன்..! கையைக் கொடுங்கள்.. நன்கு குலுக்கிவிட்டுச் சொல்கிறேன்..

பளபளக்கும் வார்த்தைஜாலங்களால் புனையப் பட்ட கவிதைகள் என்றுமே என்னைக் கவர்ந்ததில்லை.. உண்மை தீயின் அனல் தெறிக்கும் காவியங்களை மட்டுமே நான் ரசிக்கிறேன்..

அப்படிப்பட்ட எதார்த்தம் இழையோடும் நிதர்சனக் கவி உங்களுடையது. சுட்டி சொல்லுவது போல நாளை விடியும் என்ற நம்பிக்கை ம்ட்டுமே உங்கள் உயிர்நாடி.

மனமிருந்தும் மார்க்கமில்லாத சகோதரர்களாக நாங்கள் ...ஆறுதல்தான் சொல்ல முடியும்.

இன்னும் கவிதைகள் தாருங்கள்.. உங்கள் ரசிகனாய் உலகின் ஒரு மூலையில் காத்திருக்கும் இந்த அண்ணனுக்காக...

தருவீர்கள்தானே..?

роУро╡ро┐ропро╛
03-05-2007, 04:36 AM
ராஜா அண்ணா,

தீபன் எழுதிய இந்த கவிதைகளும் பிராமாதாம்.

1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6694

2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6429

படித்து பாருங்கள் மிகவும் அருமையாய் இருக்கும்.

முன்பு நான் விரும்பி படித்தவைகளில் இவ்வைகளும் அடங்கும்.

நன்றி.

pradeepkt
03-05-2007, 05:37 AM
தீபன்,
நானும் பல நாட்கள் கண்டு யோசித்த விதை...
உம் பெயரைப் போலே சுடும் கவிதை...
என் பாராட்டுகள் 20 ஐகேஷ் ஆக...

mravikumaar
03-05-2007, 06:13 AM
விரயமாகும் வயதுக்கு விடைத்தாருங்கள்

கவிதை அருமை

அன்புடன்
ரவி

родрпАрокройрпН
03-05-2007, 11:40 PM
தீபன் நலமா???

ஓரு நாளில் சில பின்னூட்டங்கள் தான் வரும். கொஞ்சம் காத்திருங்கள். விமர்சனங்கள் வந்து குவியும்.

ராஜா அண்ணா,

தீபன் எழுதிய இந்த கவிதைகளும் பிராமாதாம்.

1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6694

2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6429

படித்து பாருங்கள் மிகவும் அருமையாய் இருக்கும்.

முன்பு நான் விரும்பி படித்தவைகளில் இவ்வைகளும் அடங்கும்.

நன்றி.

நன்றி சகோதரி.. என் கவிதைகளை இப்படி ரசிப்பது மட்டுமல்லாமல் அதை நினைவு வைத்து எடுத்துக்காட்ட்டுவதற்கும்... ஆனால், இவ்வளவையும் செய்த நீங்களும் இந்த ஆக்கத்திற்கு உங்கள் விமர்சனத்தை (இரண்டு தடவை கருத்துக்களை பதிந்த போதும்) எதயுமே கூறவில்லையே.... ஏன் தாயே..?

родрпАрокройрпН
03-05-2007, 11:46 PM
அன்பிற்கினிய தீபன்..! கையைக் கொடுங்கள்.. நன்கு குலுக்கிவிட்டுச் சொல்கிறேன்..

மனமிருந்தும் மார்க்கமில்லாத சகோதரர்களாக நாங்கள் ...ஆறுதல்தான் சொல்ல முடியும்.

இன்னும் கவிதைகள் தாருங்கள்.. உங்கள் ரசிகனாய் உலகின் ஒரு மூலையில் காத்திருக்கும் இந்த அண்ணனுக்காக...

தருவீர்கள்தானே..?

நன்றி அண்ணா.. உங்கள் மானசீகமான ஆதரவே எங்களுக்கு யானைப் பலம்... மனமிருந்தாலே போதும்.. மார்க்கம் தானாய் அமையும்!

என் ஆக்கத்திற்கான உங்கள் பாராட்டெல்லாம் எனக்கு உரியனவல்ல.. அப்படி எழுதவைத்த என் நாட்டிற்கே உரியது!

தொடர்ந்து எங்கள் அவலங்களை ஏக்கங்களை பதிவுசெய்ய முயற்சிக்கிறேன் அண்ணா! நீங்கள் மூலைக்குள் இருந்து ரசிக்காமல் முன்னுக்கு வாருங்கள்...!

родрпАрокройрпН
03-05-2007, 11:53 PM
தீபன்,
நானும் பல நாட்கள் கண்டு யோசித்த விதை...
உம் பெயரைப் போலே சுடும் கவிதை...
என் பாராட்டுகள் 20 ஐகேஷ் ஆக...

பாராட்டுக்களிற்கு நன்றி தோழரே.
என் பேரைப்போல சுடுமா...? இங்கு எம் போலப்பலரை சுடுகிறார்கள்...!!! இதுக்க பேர்மட்டும் சுட்டு என்ன பயன்..
சரி, அதென்ன ஐகேஷ் 20? அதன் பயன் என்னவெண்டு விளக்குவீர்களா..?
(மன்றத்தின் சில செயற்பாடுகள் எனக்கு சரிவர தெரியாது.. காரணம் இணையத்துடன் இங்கு இணைந்திருப்பதே இடையிடையே சந்தர்ப்பம் கிடிக்கும் போதுதான்..! அந்த நேரத்தில் எல்லாவற்றையும் படித்துவிட முடிவதில்லை)

роУро╡ро┐ропро╛
04-05-2007, 09:24 PM
நன்றி சகோதரி.. என் கவிதைகளை இப்படி ரசிப்பது மட்டுமல்லாமல் அதை நினைவு வைத்து எடுத்துக்காட்ட்டுவதற்கும்... ஆனால், இவ்வளவையும் செய்த நீங்களும் இந்த ஆக்கத்திற்கு உங்கள் விமர்சனத்தை (இரண்டு தடவை கருத்துக்களை பதிந்த போதும்) எதயுமே கூறவில்லையே.... ஏன் தாயே..?

மன்னிக்கவும் சாரே.

அடடே, என்னாப்பா இப்படி ஒரு கேள்வி.

நான் என் பதிவுகளுக்கு மட்டும் விமர்சனம் எதிர் பார்க்கும் எழுத்தாளன் அல்ல.

மற்றவர்களின் எழுத்துக்களை படித்து அவர்களூக்கு ஊக்கமளிக்கும் எழுத்தாளன்.

எனக்கு ஒரு வரியில் 'அருமையாய் இருக்கு' என்று எழுத எண்ணமில்லை.

அதனால் பின் வந்து விமர்சனம் போடுவோம் என்று சென்று விட்டேன்.

இது தப்பா :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

роУро╡ро┐ропро╛
04-05-2007, 10:45 PM
ஆரம்பமே மறந்துபோய்
உருளைக்கிழங்கிற்கும் ரின் மீனுக்கும்
போராடி வென்றுவிட்ட பராக்கிரமம்..!

இந்த வரிகள் நெஞ்சை கனக்க வைக்கின்றன.

அருமையான ஆரம்பம்...சபாஷ்

வரிக்கு வரி சோகம் சொட்டுகிறது, ஏக்கமும் தாக்கமும், வாட்டும் வருமையும், அறியாமையும் அதனை சாதகமாக்கிகொள்ளூம் மக்களும், நாடும், அரசாங்கமும், தமிழும் வியாபார சங்கங்களும், வாலிபர்களும் சூடேரும் ரத்தமும், தெய்வமும் தொண்டானும் சமுதாய அவலங்களை சும்மா பொளந்து கட்டி இருக்கின்றீர்கள்.

அத்யாவசிய தேவையில் போரின் அவசியமே காணாமல் போய்விட்ட அவலம் ஒருபுறம், அப்பாவி மக்களிடம் களவாடப்படும் அவர்களின் உயிரும், வாழ்க்கையில் விரயமாகும் வயதுக்கு ஏங்கும் மனமும். அருமையாய் எழுதி எங்களையும் உங்களுக்காக இரங்க வைத்து விட்டீர்கள் தீபன்.

மீண்டுமொரூ சமுதாய சிந்தனைக் கவிதை. அற்புதமான கரு.

பாராட்டுக்கள் நண்பா.

родрпАрокройрпН
05-05-2007, 07:26 PM
நான் என் பதிவுகளுக்கு மட்டும் விமர்சனம் எதிர் பார்க்கும் எழுத்தாளன் அல்ல.

மற்றவர்களின் எழுத்துக்களை படித்து அவர்களூக்கு ஊக்கமளிக்கும் எழுத்தாளன்.

நன்றி சகோதரி... அருமையான விமர்சனம் தந்திருக்கிறீர்கள்.. ஆனால் உங்களை எம்மிடம் இரக்கப்படவைப்பதற்காக இதை வரையவில்லை.. எமது நியாயங்களை ஓரளவேனும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டுமென்ற அவாவில் எழுதப்பட்டது அது.. விரைவில் என்னோர் தோட்டாவுடன் வருகிறேன்..

(உங்கள் கருத்து மறைமுகமாக என்னையும் தாக்குகிறது.. எல்லோர் படைப்புகளிற்கும் உரிய விமர்சனம் அளிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனால் அவகாசமும் வசதியும்தான் இங்கில்லையே.. புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன்..)

роЕроХрпНройро┐
05-05-2007, 09:03 PM
தீவில் எங்குமே அமைதியாம்...!?
ஆமாம்,
இங்கும் அமைதியாய் தான்
உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றனЕ

மனதை தைத்துப் போகும் கவிதைக்கு மகுடமாய் தலைப்பும், முடிவும்.
ஜீரணிக்க முடியாத வாழ்நிலைகளை, வார்த்தைகளில் வரைந்து தந்த ஓவியமாய், விரிகிறது உங்கள் கவிதை...

родрпАрокройрпН
10-05-2007, 05:03 PM
ஜீரணிக்க முடியாத வாழ்நிலைகளை, வார்த்தைகளில் வரைந்து தந்த ஓவியமாய், விரிகிறது உங்கள் கவிதை...

இந்த ஓவியம் ரசிப்பத்ற்கல்ல... எங்கள் நிஜங்களை நீங்களும் தரிசிப்பதற்கு..
பாராட்டுகளிற்கு நன்றி நண்பரே.

роУро╡ро┐ропро╛
10-05-2007, 05:06 PM
நன்றி சகோதரி... அருமையான விமர்சனம் தந்திருக்கிறீர்கள்.. ஆனால் உங்களை எம்மிடம் இரக்கப்படவைப்பதற்காக இதை வரையவில்லை.. எமது நியாயங்களை ஓரளவேனும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டுமென்ற அவாவில் எழுதப்பட்டது அது.. விரைவில் என்னோர் தோட்டாவுடன் வருகிறேன்..

அட இரக்கம் என்பது அனைத்து மனிதருக்கும் இருக்கும் இயல்பான குணம்.

(உங்கள் கருத்து மறைமுகமாக என்னையும் தாக்குகிறது.. எல்லோர் படைப்புகளிற்கும் உரிய விமர்சனம் அளிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனால் அவகாசமும் வசதியும்தான் இங்கில்லையே.. புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன்..)

உங்கள் பிரச்சனை உலகறிந்த விசயம். எல்லாம் நலமான பின் தாராளமாக விமர்சியுங்கள்.

ро╖рпА-роиро┐роЪро┐
10-05-2007, 05:21 PM
அருமை கவிதை நண்பரே!

நிற்க,
செழிப்பான நாடு வேண்டாம் எமக்கு-
குறைந்தபட்சம்,
விரயமாகும் வயதுக்கு
விடைதாருங்கள் போதும்Е!

கடைசி வரியில் கவிதையின் தலைப்பை வைத்து ஒரு முடிவற்ற மனநிலையை உண்டாக்கியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்!

родрпАрокро╛
09-07-2008, 07:23 AM
роирпАроЩрпНроХро▓рпН роЗро▓роЩрпНроХрпИропро┐ро▓ро┐ро░рпБрокрпНрокро╡ро░рпН роОройрпНро▒рпБ роЪро┐ро▓ роХро╡ро┐родрпИроХро│ро┐ро▓рпЗропрпЗ родрпЖро░ро┐роирпНродрпБроХрпКрогрпНроЯрпЗройрпН. роЕродройро╛ро▓рпНродро╛ройрпН роОройрпНройро╡рпЛ ро╡ро▓ро┐роХро│рпН рооро┐роХрпБроирпНродрпБ роЗро░рпБроХрпНроХро┐ро▒родрпБ ро╡ро░ро┐роХро│рпН. роЗропро▓рпНрокро╛ роХрпКрогрпНроЯрпБ рокрпЛропро┐ро░рпБроХрпНроХрпАроЩрпНроХ.. роиро▓рпНро▓ро╛ роЗро░рпБроХрпНроХрпБроЩрпНроХ.