PDA

View Full Version : கவிஞர் அறிமுகம்: மோகன்

leomohan
01-05-2007, 08:30 PM
பென்ஸ் மற்றும் ராஜகுமார் அவர்கள் சொன்னது போல் என்னை கவிஞன் என்று சொல்லிக் கொள்ள தயக்கம் தான். காரணம் நான் தமிழ் இலக்கணம் கற்காதவன்.

ஆனால் கவிதை என்னுடைய 5வது வகுப்பிலிருந்து எழுதிவருகிறேன். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில். மன்றம் சேர்ந்தப்பிறகு தமிழில் கவிதை எழுதுவது தான் அதிகம். ஆனாலும் கூட கவிதைகள் எழுதுவது என்னுடைய மற்ற வெளிப்பாடுகளான சிறுகதை, தொடர்கதை, கட்டுரை-களைவிட குறைவு தான்.

ஷீநிசி, ஆதவன், இளசு போன்றவர்களை பார்க்கும் போது கவிதை எழுதும் ஆவல் மேலும் அதிகரிக்கிறது. இப்போதைக்கு இந்த கரி மன்றத்து பட்டையால் தீட்டப்பட்டு வைரமாக ஒளிரும் எனும் நம்பிக்கை உள்ளது.

என்னுடைய படைப்புகள் இதோ. இனி இந்த திரியில் எல்லா கவிதைகளையும் இடுகிறேன்.

நன்றி

கவிதை

என் காதலியும் என் கல்லறையும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7018) ( 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7018) 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7018&page=2) 3 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7018&page=3) ... Last Page (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7018&page=4))
ஒரு கன்னிப் பெண்ணின் புலம்பல் - கவிதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6978) ( 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6978) 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6978&page=2))
போர் வெறி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6995)
போர் முடிந்ததின் அறிகுறி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6996)
பெண்ணே உன் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7040)( 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7040) 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7040&page=2))
சிறிய விஷயங்கள் தந்த பெரிய இன்பங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7039)( 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7039) 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7039&page=2))
நீரோடை தெளிந்தது! கவிதை - மோகன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7007)
இரு குழந்தைகள் - இரண்டு பாகங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7017)
சிலையாக நின்றேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8778)
மோகனின் கவிதைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7690) (http://www.tamilmantram.com/vb/images_pb/misc/multipage.gif 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7690)2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7690&page=2)3 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7690&page=3) ... Last Page (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7690&page=5))

இராசகுமாரன்
02-05-2007, 02:25 PM
நல்ல அறிமுகம், மோகன். அதனுடன் உங்கள் கவிதைகளைப் படிக்க உங்கள் சுட்டிகள் மிக உதவியாக உள்ளன.

ஆனால், நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று உங்கள் அறிமுகத்தில் அறிய விரும்பிய என் ஆவல் பூர்த்தியாகவில்லை.

இதனுடன் நீங்கள் விரும்பி படித்த சில கவிதைகளையும், மற்ற படைப்புகளையும் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

leomohan
02-05-2007, 02:42 PM

அவ்வாறே செய்கிறேன் ராஜகுமார்.

ஷீ-நிசி
02-05-2007, 04:30 PM
வாழ்த்துக்கள் மோகன் அவர்களே! தொடர்ந்து எழுதுங்கள்.. அலசி ஆராய நாங்கள் தயார்..

மனோஜ்
02-05-2007, 04:33 PM
மோகன் சார் உங்கள் கவிதையூம் படைப்புகளும் வித்தியசம் தான்
வாழ்த்துக்கள் தொடர்ந்து படைப்புகளை தருவதற்கு

leomohan
02-05-2007, 05:17 PM
நன்றி மனோஜ். நன்றி ஷீநிசி.

பென்ஸ்
02-05-2007, 06:42 PM
மோகன்...
மன்றத்தில் என்னை கவர்ந்த , பொறாமை பட வைக்க குடிய மனிதர்களில் மிகவும் முக்கியாமானவர் நீர் என்பது மிவும் உண்மை....
உங்களிடம் எனக்கு உங்களின் பன்முக திறமையும், உங்கள் பக்குவமும் பிடிக்கும்...
இப்படி போண்ர நல்ல சிந்தனையாளரை நண்பராக பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி....
நான் சந்திக்க விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவர்...

leomohan
02-05-2007, 06:44 PM

மிக்க நன்றி. அவசியம் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.

அக்னி
03-05-2007, 04:44 AM
மோகன் அவர்களே,
கவிஞர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள்.., ஆனால் எழுத்தாளர்கள் எல்லோரும் கவிஞர்களல்ல...
நீங்கள் இரண்டும் செய்கின்றீர்கள்...
எனவே வல்லவர்.

வாழ்த்துகின்றேன்.., தந்த படைப்புக்களுக்காகவும், தரப்போகும் படைப்புக்களுக்காகவும்...

crisho
03-05-2007, 04:50 AM
தலைவா கலக்குறீங்க!!

வாழ்த்துக்கள் :thumbsup:

ஓவியா
03-05-2007, 04:52 AM
வணக்கம் மோகன்.

சிறந்த எழுத்தாளர் நீங்கள்.

([QUOTE] பண்ணாதீர்கள். பின் வந்து எதாவது எழுதுவேன்...
ஹி ஹி ஹி தங்களை புகழ அகராதியிலே வார்தைகளை தேடுகிறேன்)

pradeepkt
03-05-2007, 05:08 AM
மோகன்...
சிறந்த அறிமுகம்...
அந்த சிறந்த அறிமுகத்திற்கான அத்தனை தகுதிகளையும் முதலிலேயே நிரூபித்துவிட்ட நேர்மை. இவையே உம்மிடம் எனக்கு மிகப் பிடித்தவை... எந்த சமூகப் பதிவிலும் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கும் வண்ணம் மாற்றியது உங்கள் சாதனை...
கவிப்பக்கங்களில் இன்னும் கலக்குங்கள்

leomohan
03-05-2007, 07:59 AM
மோகன் அவர்களே,
கவிஞர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள்.., ஆனால் எழுத்தாளர்கள் எல்லோரும் கவிஞர்களல்ல...
நீங்கள் இரண்டும் செய்கின்றீர்கள்...
எனவே வல்லவர்.

வாழ்த்துகின்றேன்.., தந்த படைப்புக்களுக்காகவும், தரப்போகும் படைப்புக்களுக்காகவும்...

நன்றி அக்னி. கவிதை எழுதுவதில் அவசியம் நான் ஒன்னாம் க்ளாஸ் தான். கதை எழுதுவதில் வேண்டுமானாலும் ஐந்தாவது தாண்டிவிட்டேன் என்று தைரியமாக சொல்வேன். :-)

leomohan
03-05-2007, 07:59 AM
தலைவா கலக்குறீங்க!!

வாழ்த்துக்கள் :thumbsup:

நன்றி கிஷோர்.

leomohan
03-05-2007, 08:00 AM
வணக்கம் மோகன்.

சிறந்த எழுத்தாளர் நீங்கள்.

([quote] பண்ணாதீர்கள். பின் வந்து எதாவது எழுதுவேன்...
ஹி ஹி ஹி தங்களை புகழ அகராதியிலே வார்தைகளை தேடுகிறேன்)

நன்றி ஓவியா. கோட் பண்ணிட்டேன். மேலும் எழுத அகராதி தேடவேண்டாம். ;-)

leomohan
03-05-2007, 08:02 AM
மோகன்...
சிறந்த அறிமுகம்...
அந்த சிறந்த அறிமுகத்திற்கான அத்தனை தகுதிகளையும் முதலிலேயே நிரூபித்துவிட்ட நேர்மை. இவையே உம்மிடம் எனக்கு மிகப் பிடித்தவை... எந்த சமூகப் பதிவிலும் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கும் வண்ணம் மாற்றியது உங்கள் சாதனை...
கவிப்பக்கங்களில் இன்னும் கலக்குங்கள்

நேர்மை - இதை நீங்கள் என்னிடம் அவசியம் எதிர்பார்க்கலாம். இப்போது திமுக ஆட்சி செய்வதால் அவர்களுக்கு அதிக அடிகள் என் பதிப்பில் காணலாம். அம்மா வந்தால் விட்டுவிடுவேன் என்ற அர்த்தம் இல்லை. அவர் நாளைக்கு ஆட்சிக்கு வந்தாலும் சூடுகள் உண்டு. மேலும் அவர் இப்படி செய்தால் இப்படி இப்படி செய்யலாம் என்ற வாதத்தை நான் ஏற்பதில்லை.

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

பரஞ்சோதி
03-05-2007, 08:09 AM
வாழ்த்துகள் மோகன்.

இணையத்தில் நான் வியந்து, கண்களை விரித்து, வாய் திறந்து, மூச்சடக்கி பார்க்கும் வியப்பு மனிதர் நீங்க.

உங்களால் சாதனைகள் எல்லாம் ஏணிப்படிகளாக அமைகிறது, இன்னும் இன்னும் சாதிக்க வாழ்த்துகள்.

leomohan
03-05-2007, 08:31 AM

மிக்க நன்றி பரம்ஸ். ஆனால் இத்தனை உயரத்தில் ஏற்றாதீர்கள். விழந்தால் முது தண்டு கையோடு வந்துவிடும். (இருக்கும் இடம் நல்ல இடம். அங்கே இருக்க விரும்புகிறேன்)

paarthiban
03-05-2007, 10:19 AM
பாராட்டுக்கள் கவிஞர் - கதையாசிரியர் - பன்முக திறமைசாலி மோகன் அவர்களே

leomohan
03-05-2007, 10:26 AM
பாராட்டுக்கள் கவிஞர் - கதையாசிரியர் - பன்முக திறமைசாலி மோகன் அவர்களே

நன்றி பார்தீபன்.

poo
03-05-2007, 10:45 AM
வாழ்த்துக்கள் மோகன் அவர்களே...உங்களுக்கு கவிஞர் என்ற அடைமொழி மட்டுமா அளிப்பது?!..

வியக்கவைக்கும் மனிதர் நீங்கள்... மரியாதைக்கு உரியவர்.. மனதில் பட்டதை வெளிப்படையாக, துணிச்சலாக சொல்லும்விதம் ஆச்சயர்ப்பட வைக்கிறது..

மன்மதன்
03-05-2007, 11:33 AM
நீங்கள் மேன்மேலும் புகழ்பெற வாழ்த்துகிறேன் மோகன். அனைத்து பகுதிகளிலும் கலக்குறீங்க.. சபாஷ்..

leomohan
03-05-2007, 04:18 PM
வாழ்த்துக்கள் மோகன் அவர்களே...உங்களுக்கு கவிஞர் என்ற அடைமொழி மட்டுமா அளிப்பது?!..

வியக்கவைக்கும் மனிதர் நீங்கள்... மரியாதைக்கு உரியவர்.. மனதில் பட்டதை வெளிப்படையாக, துணிச்சலாக சொல்லும்விதம் ஆச்சயர்ப்பட வைக்கிறது..

நன்றி பூ அவர்களே.

leomohan
03-05-2007, 04:18 PM
நீங்கள் மேன்மேலும் புகழ்பெற வாழ்த்துகிறேன் மோகன். அனைத்து பகுதிகளிலும் கலக்குறீங்க.. சபாஷ்..

நன்றி மன்மதன். எல்லாம் தமிழ் மன்றம் தந்த ஊக்கமே.

மதுரகன்
08-05-2007, 06:30 PM
அற்புதமான கவிதைகளால் என்னை கிறங்கடித்த மோகன் அண்ணா..

உங்களிடம் கவிதை எழுதுவதற்கு உள்ள முதல் தகுதியே இதுதான்..

தமிழ் இலக்கணம் கற்காதவன்

இலக்கணம் எப்போதும் விரைமுறைகளைபோடும் வரைமுறைகளுக்குள் ஒரு கவிஞன் தனக்குதிருப்தியான படைப்புகளை வழங்க முடியாது என்பது எனது கருத்து..அதுதான் புதிய படைப்புகளுக்கு வழிவகுக்கும்..

உங்கள் வெற்றிப்பாதையை தொடருங்கள்..

leomohan
08-05-2007, 07:13 PM
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி மதுரகன்.

ஆதவா
11-05-2007, 01:42 AM
மோகன்.
மன்றத்தில் விரைவில் அறிமுகமான மனிதர்,,, கவிதை எழுதுவார் என்பது தாமசமாகத்தான் தெரிந்தது.. ஆனால் இப்படி அனல் கக்குவார் என்று நான் நினைக்கவில்லை... அரசியல் கவிதைகள் பல உண்மையைப் பிரதிபலிக்கும்.. கதைகள், கட்டுரைகள் எழுதிவந்தாலும் கவிதைகள் பக்கமும் கொஞ்சம் தலைவைத்து படுக்க வேண்டுகிறேன். பல்வேறு சமூகக் கவிதைகள் இவரிடம் எதிர்பார்க்கலாம்.. மேன்மேலும் எழுதுங்கள்

தாமரை
11-05-2007, 01:51 AM
கருத்தாழமிக்க எழுத்தாளர்களில் மோகன் ஒருவர்.. அவரின் எழுத்துக்களின் வீச்சு, அதன் ஆழம் மிக அதிகம்.

மோகன் இந்தியா எப்பொழுது வருவீர்கள்???

leomohan
11-05-2007, 04:10 AM
கருத்தாழமிக்க எழுத்தாளர்களில் மோகன் ஒருவர்.. அவரின் எழுத்துக்களின் வீச்சு, அதன் ஆழம் மிக அதிகம்.

மோகன் இந்தியா எப்பொழுது வருவீர்கள்???

மிக்க நன்றி செல்வன் அண்ணா. விரைவில் வரும் திட்டம் உள்ளது. பெங்களூரில் ஒரு சந்திப்பு போடலாம்.

leomohan
11-05-2007, 04:12 AM
மோகன்.
மன்றத்தில் விரைவில் அறிமுகமான மனிதர்,,, கவிதை எழுதுவார் என்பது தாமசமாகத்தான் தெரிந்தது.. ஆனால் இப்படி அனல் கக்குவார் என்று நான் நினைக்கவில்லை... அரசியல் கவிதைகள் பல உண்மையைப் பிரதிபலிக்கும்.. கதைகள், கட்டுரைகள் எழுதிவந்தாலும் கவிதைகள் பக்கமும் கொஞ்சம் தலைவைத்து படுக்க வேண்டுகிறேன். பல்வேறு சமூகக் கவிதைகள் இவரிடம் எதிர்பார்க்கலாம்.. மேன்மேலும் எழுதுங்கள்

மிக்க நன்றி ஆதவன். என்னுடைய நீண்ட நாள் ஆவல் நீங்கள் என்னுடைய ஞானி கட்டுரைகளை கவிதையாக எழுதவேண்டும் என்று. நீங்கள் ஒரு பாகமும் ஷீநிசி ஒரு பாகமும் இளசு ஒரு பாகமும் எழுதினால் ஞானி கட்டுரைகள் மக்கள் மனதில் நீண்ட நாள் இடம் பெறும் என்று நம்பிக்கை உள்ளது.

ஆனால் தங்களுடைய நேரம் எப்படி என்று தெரியவில்லை. இப்போது நிர்வாக வேலைகளும் சற்று நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கும் அல்லவா.

ஆதவா
11-05-2007, 04:13 AM
கொஞ்சம் தமிழ்நாட்டு இட்லி சாப்பிடவும் வாங்கலேன்....

(பெங்களூரில் மட்டும் உங்களைப் பார்த்துவிட்டேனென்றால் ஒரே ட்ரீட் மயம் தான்.... ஏண்டா வந்தோம் என்று ஆக்கிவிடுவேன்... :D )

leomohan
11-05-2007, 04:15 AM
கொஞ்சம் தமிழ்நாட்டு இட்லி சாப்பிடவும் வாங்கலேன்....

(பெங்களூரில் மட்டும் உங்களைப் பார்த்துவிட்டேனென்றால் ஒரே ட்ரீட் மயம் தான்.... ஏண்டா வந்தோம் என்று ஆக்கிவிடுவேன்... :D )

தமிழ்நாட்டில் தான் முழு விடுமுறையும். நடுவில் பெங்களூர் சந்திப்புக்கு நாமெல்லாம் சென்று வரலாம்.

அறிஞர்
11-05-2007, 04:17 AM
பல துறைகளில் பிரகாசிக்கும் மோகன்.. கவித்துறையில் தனி முத்திரை பதியுங்கள்..

ஆதவா
11-05-2007, 04:17 AM
அட!!!! என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.... நானே கேட்கலாம் என்று இருந்தேன்.. எனக்கு பல வருத்தங்கள் உண்டு... அதிலொன்று கதைகளை படிக்காதது... கணிணி திரையில் அதிகநேரம் செலவிட்டு படிக்கமுடியாது என்னால்... கண்கள் வலியெடுக்கும்... அதுபோக மனதுக்கும் ஒட்டாது...

ஞானியின் கதைகள் சின்னதாகவும் அரிய கருத்துக்களாகவும் இருப்பதால் அவை என் கவிதைக் கருவுக்கும் தேவைப்பட்டது.. முன்பே கேட்கலாம் என்றிருந்தேன்... மறுத்துவிட்டால் என்னாகும் என்ற எண்ணத்தில் கேட்கவேயில்லை... இப்போது நீங்களே சொல்லிவிட்டீர்கள்..... நான் தொடங்குகிறேன்....

நிர்வாக வேலைகள் ..... அது ஒருபக்கம் போய்க்கொண்டு இருக்கிறது...

leomohan
11-05-2007, 04:17 AM
பல துறைகளில் பிரகாசிக்கும் மோகன்.. கவித்துறையில் தனி முத்திரை பதியுங்கள்..

என்ன தலைவரே இன்னும் தூங்க போகலையா

leomohan
11-05-2007, 04:18 AM
அட!!!! என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.... நானே கேட்கலாம் என்று இருந்தேன்.. எனக்கு பல வருத்தங்கள் உண்டு... அதிலொன்று கதைகளை படிக்காதது... கணிணி திரையில் அதிகநேரம் செலவிட்டு படிக்கமுடியாது என்னால்... கண்கள் வலியெடுக்கும்... அதுபோக மனதுக்கும் ஒட்டாது...

ஞானியின் கதைகள் சின்னதாகவும் அரிய கருத்துக்களாகவும் இருப்பதால் அவை என் கவிதைக் கருவுக்கும் தேவைப்பட்டது.. முன்பே கேட்கலாம் என்றிருந்தேன்... மறுத்துவிட்டால் என்னாகும் என்ற எண்ணத்தில் கேட்கவேயில்லை... இப்போது நீங்களே சொல்லிவிட்டீர்கள்..... நான் தொடங்குகிறேன்....

நிர்வாக வேலைகள் ..... அது ஒருபக்கம் போய்க்கொண்டு இருக்கிறது...

மிக்க நன்றி ஆதவன். முதல் ஞானி கவிதையை காண ஆவலாக இருக்கிறேன்.

அறிஞர்
11-05-2007, 04:34 AM
என்ன தலைவரே இன்னும் தூங்க போகலையா
இது என்ன புதுசா தலைவர் பட்டம்... சதாரண ஆளாக இருக்கவே ஆசை..

கொஞ்சம் வேலை இருந்தது.. இன்னும் அரை மணி நேரத்தில் தூங்கனும்.

lolluvathiyar
11-05-2007, 01:59 PM
என்னை கவர்ந்தவரே
நீங்கள் தமிழில் இலக்கனம் கற்காதவர்
ஆனாலும் என்னை விட மோசம் இல்லை
அறிமுகம் அசத்தல்
இன்னும் உங்கள் கவிதையை
படிக்க ஆரம்பிக்க வில்லை
விரைவில்

leomohan
11-07-2007, 04:25 PM
ரயிலில் போனால் வெடிக்குமோ என்றஞ்சி ரயிலை தவிர்த்தேன்
விமானத்தில் போனால் வெடிக்குமோ என்றஞ்சி விமானத்தை தவிர்தேன்
ரோடில் நடந்தால் ப்ளூ லைன் இடிக்குமோ என்றஞ்சி ரோட்டை தவிர்தேதன்
சன் ஜெயா செய்திகள் மாறி மாறி பார்த்து வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டேன்

leomohan
11-07-2007, 04:28 PM
மாநிலங்களவை தேர்தலில் அளவாய் பேசினதால் சேர்த்துக் கிட்டேன்
இடை தேர்தலில் இடையில் பேசாததால் சேர்த்துக் கிட்டேன்
கூட்டுறவு தேர்தலில் கூட்டறவாய் இருக்கலாம்னு சேர்த்துக் கிட்டேன்
எப்ப அம்மாகிட்ட தாவுவேன்னு தெரியாம தலையை பிச்சிகிட்டேன்

leomohan
12-07-2007, 08:31 AM
ராமதாசுக்கு இல்லை கையில் காசு
வைகோவுக்கு போச்சு இப்போ ஈகோ
தயாநிதிக்கு ஆப்பு வைச்சிட்டாரு ராசா
கூட்டுறவு தேர்தலில் கலைஞர் பெயிலா பாசா

leomohan
17-08-2007, 06:24 PM
பஹ்ரைன் வெயில்

நிழலான நிறுத்தத்தை (car parking) பார்த்து ஓடும் மனம்
கிடைக்காவிட்டால் சற்றே ஆகிவிடும் ரணம்
சந்திப்புகள் ரத்தாக (meeting cancel) மனம் வேண்டிக்கொள்ளும்
ஆகாவிட்டால் பஹ்ரைன் வெயில் கொல்லும்

leomohan
17-08-2007, 06:28 PM
வேண்டாம் இனி தனிமடல்

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் வேண்டாம்டா கவலை
உலகம் திருந்தாது என்று எண்ணவதும் சரியில்லை
உலகத்தை திருத்துவது இல்லை உன் வேலை
95% full ஆக இருக்கும் இன் inbox 100% ஆகுமடா நாளை
வேண்டாமடா இனி தனிமடலால் உனக்கு தொல்லை

ஓவியன்
20-08-2007, 03:03 AM
ஆமா மோகன் நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா..........?

என்ன ஓவியன், நீங்கள் வரைந்த படங்கள் என்று ஆர்வமாக வந்தால், கவிதைகளாக இருக்கிறதே. எனக்கும் கவிதைகளுக்கும் காத தூரம். :-)

ஹீ!,ஹீ! :icon_blush:

leomohan
20-08-2007, 08:44 AM
ஆமா மோகன் நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா..........?

ஹீ!,ஹீ! :icon_blush:

ஐயோ நான் எழுதறதெல்லாம் கவிதையே இல்லைங்கோ......