PDA

View Full Version : மலரும் நினைவுகள் தானோ???????சக்தி
01-05-2007, 07:17 PM
இரவின் மடியில்
மொட்டை மாடியில்
நிலவை வெறித்திருப்பேன்
இருட்டில் ஒளிரும்
நட்சத்திரங்கள்
உதிரும் போது
நினைத்திருப்பேன்
என்ன வாழ்க்கை
இது-என்று!!!!!!!

ஏன் பிறந்தேன்
அறியவில்லை
என்ன செய்வேன்
புரியவில்லை
ஏதோ
ஒரு ஏக்கம்
நம் வாழ்க்கை சரிதானோ?????

இயந்திர கதியில்
இருப்பதை தொலைத்துவிட்டு
கானல் நீராய்
இல்லாததை தேடி
இலக்கின்றி அலைகின்றேன்
தவிக்கின்றது மனது
ஆழ்மனதில்
ஓர் குரல்-நில்

கவலைகளின்றி
துள்ளித்திரிந்த
பிள்ளைப் பருவம்
திரும்ப வருமோ?????

அரும்பு மீசை
முளைத்த போது
பருவக்குமரிகளை
தேடி அலைந்த காலம்
மீண்டும் எப்போதோ?????

வானத்தை வில்லாய்
வளைக்கும் வாலிப வயது
வசந்தத்தை தவிர
வேறெதுவும் அறியா
பேதை மனது

கனவுகளும்
கற்பனைகளும்
கொண்ட
அந்த கல்லூரி வாசல்
நம் வாழ்வில்
மலரும் நினைவுகள் தானோ???????

அக்னி
01-05-2007, 07:24 PM
கனவுகளும்
கற்பனைகளும்
கொண்ட
அந்த கல்லூரி வாசல்
நம் வாழ்வில்
மலரும் நினைவுகள் தானோ???????

அடிக்கடி என் மனதையும் தொட்டுப் பார்க்கும் நினைவுகள்...
கவிதை நெஞ்சைத் தொடுகின்றது... தொடருங்கள்...

அன்புரசிகன்
01-05-2007, 07:32 PM
ஏன் பிறந்தேன்
அறியவில்லை
என்ன செய்வேன்
புரியவில்லை
ஏதோ
ஒரு ஏக்கம்
நம் வாழ்க்கை சரிதானோ?????


இந்த சந்தேகம் இன்றும் எனக்கு உண்டு.கவலைகளின்றி
துள்ளித்திரிந்த
பிள்ளைப் பருவம்
திரும்ப வருமோ?????


என்றும் பசுமையான காலமது. நாட்டுச்சூழ்நிலை சரியாக இல்லாவிட்டாலும் அதை நான் நன்றாக அனுபவித்திருக்கிறேன்.

வாழ்க்கையை மீண்டும் மீட்ட உதவிய ரோஜாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

ஓவியா
01-05-2007, 07:32 PM
அருமையான கவிதை. சபாஷ்.

ஓவ்வொரு முறையும் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்து எங்கும் குணம் உலக மக்களின் சொத்து.

நினைவிருக்கும் வரை நினைவலைகள் இருந்துக் கொண்டுதான் இருக்கும்.

பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே..

அறிஞர்
01-05-2007, 09:38 PM
கவலைகளின்றி
துள்ளித்திரிந்த
பிள்ளைப் பருவம்
திரும்ப வருமோ?????

அரும்பு மீசை
முளைத்த போது
பருவக்குமரிகளை
தேடி அலைந்த காலம்
மீண்டும் எப்போதோ?????

கனவுகளும்
கற்பனைகளும்
கொண்ட
அந்த கல்லூரி வாசல்
நம் வாழ்வில்
மலரும் நினைவுகள் தானோ???????
பிள்ளை பருவம்,
வாலிப பருவம்
கல்லூரி காலம்....

ஒவ்வொன்றும் நினைவிலிருந்து என்றும் நீங்காதவை...

தொடரட்டும்.. தங்களின் கவிகள்..

ஆதவா
02-05-2007, 12:22 PM
பிரமாதம் ரோஜா..

மலரும் நினைவுகள்... இம்மாதிரி எல்லாருக்கும் பல நினைவுகள் உண்டு.. பருவப்பெண்களைக் காண்வதும், தோழர்களோடு சேர்ந்து ரவுசு செய்வதும், சினிமா, பார்க் என்று ஊர் சுற்றுவதும், கேலியும் கிண்டலுமாக பேசி அக்கம்பக்கதிலிருப்பவர்கள் வைதலை வாங்குவதும் மலரும் நினைவுகள் தாம்.

கவிதையைப் பொறுத்தவரை பாதிவரை எதுவோ சொல்வதுபோல தெரிந்து மீண்டும் ரிவர்ஸ் கீயர் போட்டு போவதுபோல இருக்கிறது... ஒருவேளை என் வாசிப்பில் தவறாக இருக்கலாம்... கருத்துக்கள் அருமை ரோஜா... மேலும் தொடருங்கள்.

சுட்டிபையன்
02-05-2007, 12:47 PM
[COLOR="DarkSlateGray"]கனவுகளும்
கற்பனைகளும்
கொண்ட
அந்த கல்லூரி வாசல்
நம் வாழ்வில்
மலரும் நினைவுகள் தானோ???????

வாழ்க்கையில் இறுதி வரை மறக்காத நினைவுகள் என்றால் இந்த கல்லூரி நினைவுகள்தான்

அழகாக இருந்தது உங்கள் கவிதை மேலும் பல கவிதை எழுத வாழ்த்துக்கள்:angel-smiley-004:

ஷீ-நிசி
02-05-2007, 03:48 PM
சிலாகித்துவிட்டேன் நண்பரே! வாழ்கை இயந்திரகதியாய் போய்க்கொண்டிருக்கிறது...

பசுமையான நினைவுகள்...

கவலைகள் ஏதுமற்ற பிள்ளை பருவம்.. காலையில் கேரம்போர்டு விளையாட சென்றால் இரவுதான் திரும்பி வருவேன்.. கவலைகள் மனதில் ஏதுமில்லை... பட்டாம்பூச்சியான வாழ்க்கை....

அரும்பு மீசை
முளைத்த போது
பருவக்குமரிகளை
தேடி அலைந்த காலம்
மீண்டும் எப்போதோ?????

மீசை முளைத்த பருவத்தில் பெண்களை பார்ப்பது, சிரிப்பது, பேசுவது, பழகுவது... ஹூம், அது ஒரு கனாக்காலம்..

எண்ணங்களை ஒருமுறை ரீவைண்ட் செய்துவைத்தீர்கள் நண்பரே!

கவிதை அருமை.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்...

உங்கள் கவிதையைப் பாராட்டி உங்களுக்கு பொற்கிழி 25 ரூபாய்..

lolluvathiyar
02-05-2007, 03:55 PM
நீங்கள் நினைத்த எதுவும் திரும்ப வராது
ஆனால் நாம் நினைத்தால் என்றும்
இளமையுடன் வாழலாம்
சமுகம் போட்ட வட்டத்தை விட்டு
சற்றே வெளியே வர வேண்டும்
Materialisam இந்த பிசாசை அடையாளம்
கான வேண்டும், அதன் பின்
அதை தைரியமாக விட முயர்ச்சிக்க வேண்டும்

Materialisam இதை விட்டு விட்டால் அப்புரம் என்றும் சந்தோசம் தான்

மனோஜ்
02-05-2007, 03:55 PM
மலரும் நினைவுகள் வரிகளானது அருமை ரோஜா அவர்களே

சக்தி
02-05-2007, 04:16 PM
என்னை ஊக்குவித்துகொண்டிருக்கும் தமிழ்மன்ற சகோதர-சகோதிரிகளுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.