PDA

View Full Version : கவிஞர் அறிமுகம் : பென்ஸ்

பென்ஸ்
01-05-2007, 06:45 PM
என்னுடைய அறிமுகத்தை மன்றத்தில் முதலில் வைக்கலாம் என்றே இந்த திரியை துவங்குகிறேன்....
இராசகுமாரன் சொன்னதுபோல "கவிஞர்" என்ற சொல்லை சொல்ல நமது மக்கள் தயங்கவே செய்கிறார்கள்....
நானும் விதிவிலக்கல்ல...

இன்று பத்திரிக்கையில் கவிதை எழுதுபவர்கள் எல்லாம் தன்னி கவிஞர் என்று கூறி கொண்டால் அது அபத்தம்....
ஆதவனின் ஒரு கையெழுத்தில் வாசித்த வரிகள்.. "வரைமுறைகளை வென்றதாக சொன்னார்கள்;
இலக்கணம் இறந்து கொண்டிருக்கிறது" (முழுவதும் சரியில்லை, என்னை திருத்தலாம ஆதவா..!!!)

வார்த்தைகளை அடுக்கி கொண்டு போகும் இன்றைய கவிஞர்களுக்கு மத்தியில் ,
கருவையும் காரியமாக புகுத்தும் நமது மன்ற கவிகள் இங்கு ஒரு அறிமுகம் கொடுக்காதது எனக்கு வருத்தமே....

கவியானவன் , இதைதான் எழுதுவேன், இதுதான் எனக்கு பிடிக்கும் என்ற வரையரம்புக்குள் இருக்க கூடாது என்று விரும்புபவன் நான்... ஆனாலும் என் விருப்பங்களிடம் நானே தோற்று போகிறென்....
ஆதவனின் கையெழுத்தில் படித்த இன்னும் ஒரு வார்த்தை மீண்டும் என்னை கவர்ந்திருந்தது , அது கவிதை எழுதுவது அத்தனை எளிதானது(நன்றி: ஷீ) அல்ல ...
இந்த விதி எனக்கும் பொருந்தும்....

பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நீந்தி இங்கு வந்து இழைப்பாற கிடைக்கும் நேரம் வாசிப்பதற்க்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது...
கவிதை எழுத எங்கே நேரம்????....

அட... அறிமுகம் சொல்ல சொன்னால் என்ன கதை சொல்லி போகிறன்...

இருந்தாலும் நான் எழுதையவற்றி இங்கு கொடுக்கிறேன்,....

மனக்குப்பையிலிருந்து (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5812) நான் எழுதிய முதல் வரிகள்....

Unforgiven (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6018) MATALLICA என்னும் ஒரு ஆங்கில ராக் குழுவின் "UNFORGIVEN" என்னும் ஒரு பாடலினால் உந்தபட்டு வந்த கவிதை...

என்னை விட்டு பிரிந்து போ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6198) வலியின் வரிகள்...

தாமரைத்தண்டு... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7162) அப்பா சொன்ன கதை...

பிச்சைக்காரியாய்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5908) என் 100-வது பதிப்பு.........என்னில் எனக்கு பிடித்த பாகம்

கண்ணீர் காலம்.... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7147) இது நீண்டு போகும் ஒரு தொடர்... முடிவில்லை..

மேலும் பதில் கவிதைகள் சிலதும் எழுதி இருக்கிறென்....
மன்றம் என்னை மேலும் எழுத சம்மதிக்கும் என்ற நம்பிக்கையுடன்...

அக்னி
01-05-2007, 07:09 PM
தமிழ் மன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கவிஞர்கள் தனி மனித தெரிவுகளுமல்ல. செல்வாக்குகளின் வழி வந்த பெயருமல்ல.

எனவே மன்றத்தில் கவித்தேன் சிந்தும் பென்ஸ் அவர்கள், மன்றத்தினால் மதிக்கப்படும் கவிஞர் என்ற வகையில், அவரின் எழுத்துக்கள் மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன்...

இராசகுமாரன்
02-05-2007, 02:29 PM
அறிமுகப் பகுதி களைகட்ட துவக்கி வைத்த பென்ஸுக்கு வாழ்த்துக்கள்.

நமது கவிதை கூட்டங்களுக்கு உங்கள் கவிதைகள் மறைந்து கிடைந்தவை, உங்கள் சுட்டிகள் மூலம் எளிதாகி விட்டன.

ஷீ-நிசி
02-05-2007, 03:56 PM
பென்ஸ் அவர்களே! உங்கள் பிச்சைக்காரி என்ற கவிதையின் ரசிகன் நான்... உங்களுக்குள்ளிருக்கும் கவிஞன் இன்னும் தன் தூக்கத்தை சரியாக கலைக்காமல் இருக்கிறான் என்றே எண்ணுகிறேன்....

வாழ்த்துக்கள் நண்பரே!

அடைப்புக்குறியில் என் பெயரை இட்டிருக்கக காரணம் என்ன பென்ஸ்....

மனோஜ்
02-05-2007, 04:04 PM
உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை அண்ணா
இன்று அனைத்தையூம் ஒன்றாக படித்ததில் மகிழ்ச்சி
இனியூம் தொடர்ந்து எழுதலாமே

பென்ஸ்
02-05-2007, 05:49 PM
பென்ஸ் அவர்களே! உங்கள் பிச்சைக்காரி என்ற கவிதையின் ரசிகன் நான்... உங்களுக்குள்ளிருக்கும் கவிஞன் இன்னும் தன் தூக்கத்தை சரியாக கலைக்காமல் இருக்கிறான் என்றே எண்ணுகிறேன்....

வாழ்த்துக்கள் நண்பரே!

அடைப்புக்குறியில் என் பெயரை இட்டிருக்கக காரணம் என்ன பென்ஸ்....
ள... ழ..

ஓவியா
03-05-2007, 05:03 AM
என் மனங்கவர் பென்ஸ்,

வந்து எழுதுறேன்

pradeepkt
03-05-2007, 05:05 AM
கலக்கிப் போடுங்க பென்ஸூ...
இந்தக் கவிஞர் அறிமுகம் பகுதியே ஒரு இண்டெக்ஸ் கார்டு மாதிரி ஆகிரும்.
என் விருப்பம்! கவிஞர்கள் தங்கள் புதிய கவிதைகளை மன்றத்தில் இட்டபின் இங்கும் வந்து அதற்கு ஒரு சுட்டி கொடுப்பின் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

மதி
03-05-2007, 05:10 AM
அறிமுகம் அருமை பென்ஸ்..
நிறைய விஷயங்களை தீர்க்கமாய் யோசிக்கின்றீர். ஒருமுறை சொன்னீர் கல்லூரி காலத்திலெல்லாம் கவிதையே எழுதியதில்லை என்று. உமக்குள் இருந்த நல்ல கவிஞனை...கலைஞனை வெளிக்கொணர்ந்த தருணங்கள்..

இன்னும் நிறைய கவிதைகள் பல கருத்துக்களை உங்கள் பார்வையில் தருவீர்களாக..!

ஷீ-நிசி
03-05-2007, 05:49 AM
ள... ழ..

சுத்தமா புரியலைங்க பென்ஸ்... நண்பர்களே உங்களுக்கு புரிந்தாலும் விளக்குங்கள்....

அக்னி
03-05-2007, 06:00 AM
பென்ஸ் அவர்களின் ழகர, ளகர, லகர தடுமாற்றத்திற்கு உதவியுள்ளீர்கள் போலும் என நினைக்கின்றேன்.
தவறான நினைவு என்றால், பென்ஸ் அவர்கள் மன்னிக்கவும்...

மதி
03-05-2007, 06:49 AM
ஷீ-நிசி,
எனக்குத் தெரிந்து சில இடங்களில் "எளிமையான" என்பதற்குப் பதிலாக "எழிமையான" என பென்ஸ் எழுதியிருந்தார். அவற்றை நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கக் கூடும்.

சரிதானே பென்ஸ்..?

பரஞ்சோதி
03-05-2007, 07:37 AM
வாழ்த்துகள் பென்ஸ்.

உங்களை நேரில் பார்க்கும் வரை நீங்க புரியாத புதிராக தெரிஞ்சீங்க.

நேரில் சந்ததித்த போது ஒரு குழந்தையின் மனம் படைத்த ஒருவராக உங்களை கண்டேன், கள்ளம் கபடமற்ற பேச்சும், செயலும், திறமையையும் கண்டு வியந்தேன். உங்களைப் போன்ற ஒருவர் ரூம் பார்ட்னராக கிடைக்க மாட்டாரா என்றும் நினைத்தேன், அத்தனை இனியமையானவர் நீங்க.

நீங்க இன்னும் சாதிக்க எவ்வளவோ இருக்குது, அத்தனையும் சாதிக்க என் வாழ்த்துகள் கவிஞரே!

paarthiban
03-05-2007, 10:23 AM
கவிஞர் -விமர்சகர்-ரசிகர் -நண்பர் பென்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மன்மதன்
03-05-2007, 11:52 AM
உங்களை நேரில் பார்க்கும் வரை நீங்க புரியாத புதிராக தெரிஞ்சீங்க.

நேரில் சந்ததித்த போது ஒரு குழந்தையின் மனம் படைத்த ஒருவராக உங்களை கண்டேன், கள்ளம் கபடமற்ற பேச்சும், செயலும், திறமையையும் கண்டு வியந்தேன். உங்களைப் போன்ற ஒருவர் ரூம் பார்ட்னராக கிடைக்க மாட்டாரா என்றும் நினைத்தேன், அத்தனை இனியமையானவர் நீங்க.

நான் மிஸ் பண்ணிய தருணங்கள்..

இன்னும் நிறைய கவிதை தாருங்கள் பென்ஸ்..

பென்ஸ்
03-05-2007, 01:06 PM
பென்ஸ் அவர்களின் ழகர, ளகர, லகர தடுமாற்றத்திற்கு உதவியுள்ளீர்கள் போலும் என நினைக்கின்றேன்.
தவறான நினைவு என்றால், பென்ஸ் அவர்கள் மன்னிக்கவும்...
அக்கினி உங்களுக்கு நல்ல கலக்ஸன் மற்றும் கனெக்சன் இருக்கிறது....
நீங்கள் கூறியது சரியே...

பென்ஸ்
03-05-2007, 01:07 PM
பென்ஸ் அவர்களே! உங்கள் பிச்சைக்காரி என்ற கவிதையின் ரசிகன் நான்... உங்களுக்குள்ளிருக்கும் கவிஞன் இன்னும் தன் தூக்கத்தை சரியாக கலைக்காமல் இருக்கிறான் என்றே எண்ணுகிறேன்....

வாழ்த்துக்கள் நண்பரே!

அடைப்புக்குறியில் என் பெயரை இட்டிருக்கக காரணம் என்ன பென்ஸ்....
ஒரு ரசிகனின் ரசிகன் நீங்களா....
ஷீ... என் அருமை நண்பா... நன்றி..

பென்ஸ்
03-05-2007, 01:08 PM
என் மனங்கவர் பென்ஸ்,

வந்து எழுதுறேன்
ஏன் எதுக்கு...
என்னாதுக்கு...

அறிஞர்
03-05-2007, 01:09 PM
கவிஞர் பென்ஸ்.. கவிதைகள்.. இன்னும் மன்றத்தை அலங்கரிக்கட்டும்.

பென்ஸ் எழுதும் பதில் கருத்து கவிதைகள்... என்றுமே சிறப்பானவை...

பென்ஸ்
03-05-2007, 01:11 PM
அறிமுகம் அருமை பென்ஸ்..
நிறைய விஷயங்களை தீர்க்கமாய் யோசிக்கின்றீர். ஒருமுறை சொன்னீர் கல்லூரி காலத்திலெல்லாம் கவிதையே எழுதியதில்லை என்று. உமக்குள் இருந்த நல்ல கவிஞனை...கலைஞனை வெளிக்கொணர்ந்த தருணங்கள்..

இன்னும் நிறைய கவிதைகள் பல கருத்துக்களை உங்கள் பார்வையில் தருவீர்களாக..!
மதி... நான் மன்றத்தில் வந்த நாளிலிருந்தே நாம் ஒருவரை ஒருவர் நங்கு அறிந்தவர்கள் தானே...
மன்றம் இல்லையேல், ஒரு கவிதையை வாசிக்க கூட லாயக்கில்லாதன் ஆகியிருப்பேனே...

பென்ஸ்
03-05-2007, 01:18 PM
வாழ்த்துகள் பென்ஸ்.

உங்களை நேரில் பார்க்கும் வரை நீங்க புரியாத புதிராக தெரிஞ்சீங்க.

நேரில் சந்ததித்த போது ஒரு குழந்தையின் மனம் படைத்த ஒருவராக உங்களை கண்டேன், கள்ளம் கபடமற்ற பேச்சும், செயலும், திறமையையும் கண்டு வியந்தேன். உங்களைப் போன்ற ஒருவர் ரூம் பார்ட்னராக கிடைக்க மாட்டாரா என்றும் நினைத்தேன், அத்தனை இனியமையானவர் நீங்க.

நீங்க இன்னும் சாதிக்க எவ்வளவோ இருக்குது, அத்தனையும் சாதிக்க என் வாழ்த்துகள் கவிஞரே!
பரம்ஸ்.. அப்புட்டு நல்லவனா நானு...!!!!
நண்பர்கள் பல வீட்டிக்கு வருவார்கள்...
ஆனாள் சில பிரிந்து செல்லும் போது நான் என்னவோ எதும் நடக்காதது போல் நடித்து கொள்வேன்... இவர்கள் சிறிது நேரத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பார்கள்....
போன விறகு .. நானும் மனிதன் தானே... மனம் சிறிது காலம் வெற்றிடமாக இருக்கும்... இருந்தாலும் அன்பை வேளியே சொல்ல கூச்சம்...
பரம்ஸ் கொடுத்த பாதிப்புகள்... நிறைய....
ஆனால் அனைத்தும் இனிமையானவை மட்டும்...
புதிய நண்பர்கள், முக்கியமாக நண்பர் ரத்தினகிரி.... பாலா...
நமது லால் பாக் சந்திப்பு இன்னும் அந்த பக்கம் செல்லும் போது நன்பர்களிடம் சொல்லுவேன்...
உங்கள் பரிசான அந்த மின் இசைபெட்டகம் ... இன்னும் என் கூடவே... உஙள் அன்பை போல...

பென்ஸ்
03-05-2007, 01:19 PM
கவிஞர் பென்ஸ்.. கவிதைகள்.. இன்னும் மன்றத்தை அலங்கரிக்கட்டும்.

பென்ஸ் எழுதும் பதில் கருத்து கவிதைகள்... என்றுமே சிறப்பானவை...
நன்றி அறிஞர்....

மயூ
03-05-2007, 02:17 PM
மன்றம் தந்த முத்தே!
அண்ணா என்ற சொல்லே!
உன்னால் வந்த சொல்லே!
அன்புக்கு பொருள் நீ
அறிவிற்கு அர்த்தம் நீ!

சரி.. சரி.. எவ்வளவுஎன்று தான் பொய் சொல்வது..!!!
மன்றத்தின் விமர்சனநாயகன்.. அருமை அண்ணா பென்ஸூ அவர்களுக்கு அன்புத் தம்பியின் அன்பான வாழ்த்துக்கழும் ஹக்சும்!!!!!

பென்ஸ்
03-05-2007, 06:59 PM
நான் மிஸ் பண்ணிய தருணங்கள்..

இன்னும் நிறைய கவிதை தாருங்கள் பென்ஸ்..
இந்த ஆகஸ்ட் மாதம் பரம்ஸ் வருகிறாராம்....
அப்ப சந்திக்கலாமா???? பெங்களூரில்...

leomohan
03-05-2007, 10:08 PM
கவியானவன் , இதைதான் எழுதுவேன், இதுதான் எனக்கு பிடிக்கும் என்ற வரையரம்புக்குள் இருக்க கூடாது என்று விரும்புபவன் நான்... ..

அற்புதமான அறிமுகம். தொடருங்கள் பென்ஸ்.

poo
05-05-2007, 08:37 AM
மன்றத்தில் இன்னொரு அதிசயம் பென்ஸ்... விமர்சனம் வந்துவிட்டால் மனசு ரெக்கைக் கட்டிக்கும்.. உங்கள் பதிலுக்கு, உங்கள் ப்ரபைல் பார்த்து ஏங்குபவன் நான்.. ( என் கவிதையை படிக்கிறாரு.. படிக்கிறாரு, பதில் போடறறரு.. போடறாருன்னு தெறந்து வைச்சி ரெப்ஃரஷ் பண்ணிக்கிட்டே இருப்பேன்..)

வாழ்த்துக்கள்... நீங்கள் கவிதை வானில் உச்சத்திற்கு செல்வதற்கு..
வேண்டுதல்கள்.. மன்றத்தில் வலம்வர உங்களுக்கு நேரம் கிடைப்பதற்கு!

மதுரகன்
08-05-2007, 06:21 PM
பென்ஸ் அண்ணா..
மற்றவர்களின் படைப்புக்களுக்கு நீங்கள் வழங்கும் ஊக்கம் போற்றத்தக்கது..
உங்கள் படைப்புகளுக்கு நாங்கள் துணை நிற்போம் தயங்காமல் கவிதைகளை எழுதித்தள்ளுங்கள்..
தயக்கம்தான் முதல் எதிரி வெற்றிக்கு..

ஆதவா
11-05-2007, 01:50 AM
பென்ஸ் ஒரு கவிஞர் என்று ஒரு போட்டியின் மூலமாகத்தான் தெரியும்.... ஆனால் அழகிய விமர்சகர் என்பது மன்றம் வந்த சில நாட்களிலேயே தெரியும்.... ரசிகரும் கூட... கண்ணீர்காலங்களை சிந்திக் கொண்டிருக்கிறார்... (இன்னும் படிக்கவில்லை அண்ணா, மன்னிக்க) அற்புதமான திறத்தைக் கையில் வைத்துக் கொண்டு இல்லை என்கிறார்... உஷார் கவிஞர்களே!!. மேன்மேலும் நிறைய படைக்கவேண்டும் என்பதே என் அவா... இப்போது அது நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்குண்டு..

தாமரை
11-05-2007, 01:57 AM
பென்ஸ் நரிமுகம் கொண்ட உமக்கு அறிமுகமா?
நீர் எதிர்பட்டாலே திரி தொடங்கியவருக்கு கொண்டாட்டம் தானே
பென்ஸின் புகழ்ச்சியில் சிலநேரம் உண்மைகள் இருக்கும்
பலநேரம்...?
உணர்ச்சி வசப்படுவர் பென்ஸ்
ஆனால்
உணர்ச்சிகளை உள்ளுக்குள் புதைத்து
சிரிக்கத் தெரிந்தவர்
சிந்தனைத் தெளிவும் நயமான அணுகுமுறையும்
பென்ஸின் முத்திரைகள்

lolluvathiyar
11-05-2007, 02:03 PM
பெண்ஸ் கவிதை மூலாம்
நான் அறிந்த ஒரு பொக்கிசம்
இது வரை எழுதிய கவிதைகளை
இன்னும் முழுமையாக படிக்காவிட்டாலும்
விரைவில் படித்து விடுகிறேன்

பென்ஸ்
14-05-2007, 06:37 PM
மன்றத்தில் இன்னொரு அதிசயம் பென்ஸ்... விமர்சனம் வந்துவிட்டால் மனசு ரெக்கைக் கட்டிக்கும்.. உங்கள் பதிலுக்கு, உங்கள் ப்ரபைல் பார்த்து ஏங்குபவன் நான்.. ( என் கவிதையை படிக்கிறாரு.. படிக்கிறாரு, பதில் போடறறரு.. போடறாருன்னு தெறந்து வைச்சி ரெப்ஃரஷ் பண்ணிக்கிட்டே இருப்பேன்..)

வாழ்த்துக்கள்... நீங்கள் கவிதை வானில் உச்சத்திற்கு செல்வதற்கு..
வேண்டுதல்கள்.. மன்றத்தில் வலம்வர உங்களுக்கு நேரம் கிடைப்பதற்கு!
இப்படி உசுப்பிவிட்டே உடம்பை ரணகளமாக்கிடுறிங்க...

பென்ஸ்
14-05-2007, 06:40 PM
பென்ஸ் அண்ணா..
மற்றவர்களின் படைப்புக்களுக்கு நீங்கள் வழங்கும் ஊக்கம் போற்றத்தக்கது..
உங்கள் படைப்புகளுக்கு நாங்கள் துணை நிற்போம் தயங்காமல் கவிதைகளை எழுதித்தள்ளுங்கள்..
தயக்கம்தான் முதல் எதிரி வெற்றிக்கு..
நன்றி மது...
கவிதை எழுத தயக்கம் இல்லை... இருந்திருந்தால் அடுத்தவர்கள் கவிதையில் குற்றம் கண்டுபிடிக்கும் நான் ஒரு கவிதைகூட பதிதிருக்கமாட்டேன்....
நேரமின்மை... கிடைக்கும் நேரத்தில் வாசிக்க மட்டுமே முடியுது....
ஒரே நாளில் 300 கவிதை எழுதும் மக்கள் நம்மக் கலங்க வைக்கிறர்கள்...

தாமரை
14-05-2007, 06:41 PM
உங்களை தத்துவ ஞானியாக்கின அனிருத் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லியே பென்ஸ்

பென்ஸ்
14-05-2007, 06:42 PM
பென்ஸ் ஒரு கவிஞர் என்று ஒரு போட்டியின் மூலமாகத்தான் தெரியும்.... ஆனால் அழகிய விமர்சகர் என்பது மன்றம் வந்த சில நாட்களிலேயே தெரியும்.... ரசிகரும் கூட... கண்ணீர்காலங்களை சிந்திக் கொண்டிருக்கிறார்... (இன்னும் படிக்கவில்லை அண்ணா, மன்னிக்க) அற்புதமான திறத்தைக் கையில் வைத்துக் கொண்டு இல்லை என்கிறார்... உஷார் கவிஞர்களே!!. மேன்மேலும் நிறைய படைக்கவேண்டும் என்பதே என் அவா... இப்போது அது நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்குண்டு..
டேய்....
எல்லோரும் பாராட்டுறங்கன்னு நீயுமா....
என் கவிதை ஒன்றையாவது வாசித்து இருக்கிறயா..???? இல்லைதானே...பின்ன எதுக்கு இந்த பம்மல்...!!!!

(சும்மா லுலுவாயிக்கு)

ஆதவா
14-05-2007, 06:42 PM
இப்படி உசுப்பிவிட்டே உடம்பை ரணகளமாக்கிடுறிங்க...

உடல் ரணமென்றால்
போர்க்களம்
பேனா ரணமென்றால்
கவிக்களம்

இதில் நீங்கள் எந்த களம்?

ஆதவா
14-05-2007, 06:44 PM
டேய்....
எல்லோரும் பாராட்டுறங்கன்னு நீயுமா....
என் கவிதை ஒன்றையாவது வாசித்து இருக்கிறயா..???? இல்லைதானே...பின்ன எதுக்கு இந்த பம்மல்...!!!!

(சும்மா லுலுவாயிக்கு)

உங்கள் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த வரிகள் தான். :icon_shout: :icon_shout: :icon_shout: :D :D

நாங்களும் லுலுவாயி சொல்லுவோம்ல..

பென்ஸ்
14-05-2007, 06:44 PM
உடல் ரணமென்றால்
போர்க்களம்
பேனா ரணமென்றால்
கவிக்களம்

இதில் நீங்கள் எந்த களம்?
இன்னோரு களம் இருக்கு ...
மங்களம்...

ஆதவா
14-05-2007, 06:46 PM
இன்னோரு களம் இருக்கு ...
மங்களம்...

எங்களத்தில்
நீங்கள் இருக்குமிடம்
மங்களமென்றால்
எங்களங்கள்
என்னாகும்?

தாமரை
14-05-2007, 06:47 PM
பென்ஸ் மாட்டிக்காதீங்க
அல்லிராணி ஞாபகம் இருக்கா

பென்ஸ்
14-05-2007, 07:03 PM
பென்ஸ் நரிமுகம் கொண்ட உமக்கு அறிமுகமா?

தாமரை....
எப்படியோ... தகப்பனும் மகனுமா என்னை ஒரு வழி பண்ணுவது என்று முடிவேடுத்து அலைகிறிர்கள்...
நான் முடி தொலைத்து ஓடுகிறேன்...

நீர் எதிர்பட்டாலே திரி தொடங்கியவருக்கு கொண்டாட்டம் தானே

எதுக்கு....
திரும்பவும் கைபுள்ள கதைதானே...

பென்ஸின் புகழ்ச்சியில் சிலநேரம் உண்மைகள் இருக்கும்
பலநேரம்...?

செல்வன் எதையும் பாசிட்டிவாக பார்க்கலாம் என்பது என் கருத்து....
இந்த குவழையில் பாதி தண்ணிர்தானே இருக்கிறது என்பதற்க்கு பதிலாக,
பகுதிவரை தண்ணிர் இருக்கிறதே...!!!
என்ரு ஆச்சரிய படுபவன் நான்..
மன்றத்தில் நான் பலரை பாராட்டுவது கிடையாது, அதற்க்கு காரணம்... அவர்கள் அதையும் மீறியவர்கள் என்பதால்...
மன்றத்தில் அதிகம் கவிதைகள் எழுதும் உங்கள் கவிதைகளுக்கும், ஆதவன் கவிதைகளுக்கும் நான் விமர்சணம் கொடுக்க வேண்டியது இருக்காது (தேவைதான்... !!! இருந்தாலும்), ஆனாலும் சுட்டி காட்ட வேண்டி இடத்தில் சுட்டி காட்டுவேன்....

உணர்ச்சி வசப்படுவர் பென்ஸ்
ஆனால்
உணர்ச்சிகளை உள்ளுக்குள் புதைத்து
சிரிக்கத் தெரிந்தவர்
சிந்தனைத் தெளிவும் நயமான அணுகுமுறையும்
பென்ஸின் முத்திரைகள்

நானும் ஒரு சராசரி மனிதன் தானே....

அமரன்
18-05-2007, 12:12 PM
வணக்கம் பென்ஸ்.
விபரமான ஒரு அறிமுகம். கவிதைகளைப் பட்டியலிட்டதோடல்லாமல் கவி பிறந்த விதத்தையும் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துகள்

இளசு
04-11-2007, 05:26 PM
இனிய பென்ஸ்

மனக்குடத்தில் பொங்கும்
எண்ணப்பாலாவிகளை

வார்த்தைகளில் நெய்யும்
வித்தைக் கைவந்த
உன் வல்லமைக்கு
என்றும் இனிய முதல் ரசிகன் நான்.

கவிஞனுக்கு ரசிகனின் வாழ்த்துகள்!

பென்ஸ்
05-11-2007, 04:06 AM
இளசு,

நேற்று மாலை மன்ற நண்பர் ஒருவரை சந்தித்தேன் (யார் என்பதை அவரே சொல்லுவார் என்று நம்புகிறேன்) ...

நமக்கு பிடித்த்வர்களை பற்றி பேசுவதில் எத்தனை இன்பம் தெரியுமா... மன்றத்தை பற்றி பேசிய போது நான் அதிகம் பேசியது உங்களை பற்றி என்றால் அது மிகையாகாது...
என் எழுத்துகள் ஒவ்வொன்றும் உங்களது பிரதி மட்டுமே என்றேன்... அதுவும் பொய்யாயிருக்க வாய்ப்பில்லை. உங்கள் அனுகுமுறை, விமர்சனக்கள், எழுத்துகள் எங்கள் அனைவருள்ளும் பாதிப்புகளை கொடுத்திருப்பதை நீங்களும் மறுக்கமுடியாது...

ஒரு நல்ல மாணவனாக உங்கள் அனைவரிடமும் இருந்து நிறைய கற்ரு வருகிறேன்...

நான் சில நேரம் யோசிப்பது உண்டு..
நாம் சந்திக்க நேர்ந்தால் .....
ஒத்த அலைவரிசை என்று பேசிகொண்டே இருப்போமா...!!!!
இல்லை....
அனைத்தும் புரிந்து கொள்ளபட்டதால் அமைதிகாப்போமா...!!!!!???

பார்க்கலாம் .. காலம் சம்மதித்தால்.....

kavitha
05-11-2007, 09:22 AM
பென்ஸ் ... நல்ல ரசிகரால் கண்டிப்பாக நல்ல கவிதை எழுதமுடியும். கவிதை விமர்சகர், அனைவருக்கும் இனிய நண்பர். வலிகள் வரிகளால் குறைந்தால் 'வலிகள் தொலைந்து வழிகள் பிறக்க' தொடரட்டும் உங்களது கவிதைப்பதிவுகள்.

ஆதவா
05-11-2007, 10:43 AM
இளசு,

நேற்று மாலை மன்ற நண்பர் ஒருவரை சந்தித்தேன் (யார் என்பதை அவரே சொல்லுவார் என்று நம்புகிறேன்) ...

நமக்கு பிடித்த்வர்களை பற்றி பேசுவதில் எத்தனை இன்பம் தெரியுமா... மன்றத்தை பற்றி பேசிய போது நான் அதிகம் பேசியது உங்களை பற்றி என்றால் அது மிகையாகாது...
என் எழுத்துகள் ஒவ்வொன்றும் உங்களது பிரதி மட்டுமே என்றேன்... அதுவும் பொய்யாயிருக்க வாய்ப்பில்லை. உங்கள் அனுகுமுறை, விமர்சனக்கள், எழுத்துகள் எங்கள் அனைவருள்ளும் பாதிப்புகளை கொடுத்திருப்பதை நீங்களும் மறுக்கமுடியாது...

ஒரு நல்ல மாணவனாக உங்கள் அனைவரிடமும் இருந்து நிறைய கற்ரு வருகிறேன்...

நான் சில நேரம் யோசிப்பது உண்டு..
நாம் சந்திக்க நேர்ந்தால் .....
ஒத்த அலைவரிசை என்று பேசிகொண்டே இருப்போமா...!!!!
இல்லை....
அனைத்தும் புரிந்து கொள்ளபட்டதால் அமைதிகாப்போமா...!!!!!???

பார்க்கலாம் .. காலம் சம்மதித்தால்.....

அதே அதே... நீங்கள் மட்டுமில்லை அண்ணா. நானும்...

அத்தனை குணங்களும் அண்ணன் மேல் படும்..... (பொறாமையும் கூட )

பென்ஸ்
05-11-2007, 02:09 PM
நன்றி கவி...
முதன் முதலில் உங்கள் கவிதைகளை தத்தி தத்தி படித்து வந்தவன் அல்லவா... விமர்சனம் கொடுக்காமல் இருக்க முடியுமா...???

ஆதவா....
அவர் இந்த திரியில் பதிவு செய்த ஒரு நிமிடம் ,
நின்று...
யோசித்தேன்....

இந்த பதிவின் அவசியம்...
"பென்ஸ், நீ கவிதை எழுதலாமே..!!!" .. என்று சொல்லவா???
"உன் பங்களிப்பு குறைந்து வருகிறது.. என்னாசு??" என்று கேட்க்கவா???
"மிஸ்ஸிங் சம்திங்..!!!" என்றா ...

அட ரொம்ப யோசிக்க விட கூடாது... பாராட்டினால் பயந்து ஓடிடுவாங்க, அடுத்த முறை நம்மிடம் இது போல கேட்க்கமாட்டாங்க என்று உண்மையை சொல்லிட்டேன்....

இளசு... சும்மா லுலுவாயிக்கு :)