PDA

View Full Version : கலப்படம்-நகைச்சுவை கவிதை



ஜெயாஸ்தா
01-05-2007, 02:25 PM
கேடு கெட்ட உலக வாழ்க்ககை வெறுத்ததால்
சாகவேண்டி தற்கொலை செய்ய முயற்சித்தான் முனுசாமி...


கடைக்கு சென்று தாம்புக் கயிறு வாங்கி
கதவடைத்து நாற்காலியின் மீதேறி....
உத்திரத்தில் சுருக்கிட்டு, தலையை உள்நுழைத்து
காலால் உதைத்தான் நாற்காலியை.....

அந்தோ... பரிதாபம் கயிறு அறுந்துவிட
முனுசாமி தரையில்விழுந்தான்.......
காரணம் கயிற்றில் கலப்படமாம்...!

மூட்டைப்பூச்சி மருந்து குடித்தால் சகலாம் -என்ற
ஒரு முதியவரின் அறிவுரை புத்தியில் மின்ன,
கடைக்குச் சென்று வாங்கி வந்து,
குளிர்பானம்போல் குடித்தான்...!

சிறு நேரம் வாந்தி, சிறிது நேரம் தலைச்சுற்றல்
ஆனால் அவன் சாகவில்லை....!
காரணம் மருந்திலும் கலப்படமாம்...!


மற்றொரு முயற்சியாய் மண்ணெண்ணெய்
ஊற்றி முயற்சித்தான் முடிவு வழக்கம் போல்....


உடலில் தீக்காயம்.... மருந்திட
மருத்துவமனைக்கு வந்தான்....!

முதலுதவியின் போதே மூர்ச்சையானான்...
சீரிய சிகிச்சையில் செத்தே விட்டான்...!
காரணம் மருந்திலும் கலப்படமாம்...!

அரசன்
01-05-2007, 02:30 PM
கலப்படத்தின் விளைவை சுருக்கமான வரிகளில் விரிவாக சொல்லிவிட்டீர்கள். இந்த வரிகள் கண்டிப்பாக சிந்திக்க வேண்டியவை. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் படைப்பு.

மயூ
01-05-2007, 02:41 PM
ஆகா!!! இத்தனை கலப்படமா??!!

அன்புரசிகன்
01-05-2007, 03:05 PM
வாழ்க்கையே கலப்படமோ??

ஓவியா
01-05-2007, 10:07 PM
நண்பரே ஜே.எம்.

கவிதை சிறப்பாக இருகின்றது. அருமையான சமூக பார்வை. பலே. நன்றி.

மன்னிக்கவும் ஒரு கேள்வி, கோவிக்க வேண்டாம். கவிதை தங்களுடையதா?? ஆமாம் அப்படியென்றால் மன்றத்தில் கவிஞர் அறிமுக பகுதியில் ஒரு அறிமுகம் தந்து இதன் சுட்டியை தாருங்கள். நல்ல கவிதை.

ஷீ-நிசி
02-05-2007, 03:39 AM
சாக விரும்பியபோது, கலப்படங்கள் அவனைக் காப்பாற்றியது... வாழ விரும்பும்போது கலப்படங்கள் அவனை சாகடித்தது... நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் நண்பரே!

ஜெயாஸ்தா
02-05-2007, 03:56 AM
மன்னிக்கவும் ஒரு கேள்வி, கோவிக்க வேண்டாம். கவிதை தங்களுடையதா?? ஆமாம் அப்படியென்றால் மன்றத்தில் கவிஞர் அறிமுக பகுதியில் ஒரு அறிமுகம் தந்து இதன் சுட்டியை தாருங்கள். நல்ல கவிதை.

உங்கள் தலைமீது சத்தியமாக கவிதை (கவிதைஎன்று ஒத்துக்கொண்டீர்களா....?) என்னுடையதுதான்.......(நற....! நற...பற்களை கடிக்கும் சத்தம் கேட்கிறதா?)

சக்தி
02-05-2007, 04:14 AM
இன்றைய சமுதாய அவலங்களை சுட்டிக்காட்டும் நல்ல கவிதை பாராட்டுக்கள் நண்பரே

ஓவியா
03-05-2007, 01:27 AM
உங்கள் தலைமீது சத்தியமாக கவிதை (கவிதைஎன்று ஒத்துக்கொண்டீர்களா....?) என்னுடையதுதான்.......(நற....! நற...பற்களை கடிக்கும் சத்தம் கேட்கிறதா?)

என் கேள்வி உங்களை புண்படுத்தியிர்ருந்தால். முதலில் என்னை மன்னியுங்கள் நண்பரே.

உங்கள் கவிதை சிறப்பாக இருகின்றது. மீண்டும் பாராட்டுக்கள்.

pradeepkt
03-05-2007, 05:25 AM
சூப்பர் கவிதை... பிடியுங்கள் 10 ஐகேஷ்...

poo
03-05-2007, 09:47 AM
இது நகைச்சுவை கவிதையா... சிந்திக்க வைக்கும் விதை...

-- பாராட்டுக்கள் நண்பரே.

paarthiban
03-05-2007, 10:01 AM
பிரமாதம். ஜே எம் அவர்களே

கவிதை கலப்படம் இல்லாத அக்மார்க் உண்மையை சொல்லுகிறது

malan
03-05-2007, 10:06 AM
கலப்படம் எப்படிப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை உணர்த்தும் அருமையான கவிதை!

மதுவிலும் (சாராயம்) கலப்படம் செய்து மனிதர்களின் உயிரோடு விளையாடுகின்றனர் - சில எத்தர்கள்!

rocky
06-02-2008, 09:10 AM
அன்புள்ள மன்றத்தோழர் ஜெயாஸ்தா அவர்களுக்கு,

நகைச்சுவையாகத் தோன்றும் ஒரு அழுத்தமான கருத்து, மிகவும் எளிமையாக இருப்பதில் மிகிழ்ச்சி, ஆக நான் வலியில்லாமல் சாக ஒரு வழி கேட்டதற்கு நீங்கள் மட்டுமே பதில் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. கவிதை அருமை.

ஓவியன்
24-01-2009, 08:40 AM
சாக விரும்பியபோது, கலப்படங்கள் அவனைக் காப்பாற்றியது...
வாழ விரும்பும்போது கலப்படங்கள் அவனை சாகடித்தது... நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் நண்பரே!

இதனை விட வேறு நல்ல பின்னூட்டம் என்னாலிட முடியாது ஜெயாஸ்தா..!!

மனதார்ந்த வாழ்த்துக்கள்..!!