PDA

View Full Version : கம்ப்யூட்டரைத் தொடர்ந்து ஓடவிடலாமா?



அரசன்
01-05-2007, 01:14 PM
அனைத்துப் பணிகளுக்கும் மற்றும் அனைத்து வகையினரும் கம்ப்யூட்டர் பயன்படுத்த தொடங்கிவிட்டதால், அலுவலகங்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்கும் அலுவலகங்கள் வந்து விட்டதால் இந்த கேள்வி பலரின் மனதில் உள்ளது. ஒரு சிலர் விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டத்தினை எத்தனை மணிக்கொருமுறை ரீ ஸ்டார்ட் செய்திட வேண்ட்டும் என்ற கேள்வியும் எழுப்புகின்றனர்.

தொடர்ந்து கம்ப்யூட்டரை இயக்குவதால் கெட்டுவிடும் வாய்ப்புகள் பெருகும் என்பது முழுக்க உண்மையல்ல. சி.பி.யூ., சரியான சீதோஷ்ணநிலையில் இருந்தால் எந்த பிரச்சினையும் வர வாய்ப்பில்லை. ஆனால் ரீ ஸ்டார்ட் செய்ய அவசியம் சில நிலைகளில் ஏற்படுகிறது. குறிப்பாக ஏதேனும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பினை நீங்கள் இன்ஸ்டால் செய்தால் உடனே கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுமாறு அந்த இன்ஸ்டாலேசன் புரோகிராம் கேட்டுக் கொண்டால் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்வதே நல்லது. அப்போதுதான் புதிதாகப் பதிந்த பைல்களுக்கு ஏற்ப ஆப்ரேட்டிங் சிஸ்டம் தன்னை தயார்படுத்திக் கொள்லும். அவற்றில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலும் அறிவிப்பினைத் தரும். சிஸ்டம் இயங்குவதில் சிக்கல் அல்லது பிரச்சினைகள் இருந்தால் கட்டாயம் ரீ ஸ்டார்ட் செய்திட வேண்டும். ரீ ஸ்டார்ட் செஉவது சிக்கல்களை தீர்த்துவிடும். அல்லது சிக்கல்கள் எங்கு ஏற்பட்டுள்ளன என்று அறிவது எளிதாக இருக்கும். எனவே தொடர்ந்து இயங்கும் கம்ப்யூட்டர்களை எப்போதாவது நிறுத்தி இயக்குவது நல்லது.

:icon_good: :icon_good: :icon_good:

நன்றி: கம்ப்யூட்டர் மலர்.

suraj
01-05-2007, 03:08 PM
என்னைப் பொறுத்தவரை இயக்கலாம்.
எனது அனுபவம் 3 நாட்கள் நான் என் கணினியை செர்வராக(ரீ-ஸ்டார்ட் மற்றும் ஷட்டவுண் செய்யாமல்)இயக்கியுள்ளேன்,எந்த பிரச்சனையும் வரவில்லை.
உண்மையிலே அதன் பின் சிறிது வேகம் கூடியதாக உணர்ந்தேன்.

செய்திக்கு நன்றி.

அக்னி
01-05-2007, 06:31 PM
சாதாரண கணனிகள் தொடந்து பாவிக்கக்கூடிய விதத்தில்தான் வடிவமைக்க்கப்பட்டுள்ளன. ஆனால், LapTop (தமிழில் எவ்வாறு சொல்வது) கணனிகள் தொடர்ந்து இயங்குநிலையில் இருக்கும்போது பிரச்சினைகளைத் தராதா? தொடர்ச்சியான மின்னிணைப்பில் (பாவனையில்) இருக்கும்போது அதன் மின்கலங்கள் பாதிக்கப்படாதா?

leomohan
01-05-2007, 08:34 PM
சாதாரண கணனிகள் தொடந்து பாவிக்கக்கூடிய விதத்தில்தான் வடிவமைக்க்கப்பட்டுள்ளன. ஆனால், LapTop (தமிழில் எவ்வாறு சொல்வது) கணனிகள் தொடர்ந்து இயங்குநிலையில் இருக்கும்போது பிரச்சினைகளைத் தராதா? தொடர்ச்சியான மின்னிணைப்பில் (பாவனையில்) இருக்கும்போது அதன் மின்கலங்கள் பாதிக்கப்படாதா?

LAPTOP மடிக்கணினி எனலாம்.

praveen
02-05-2007, 04:37 AM
பயண்பாடு இல்லாத போது எந்த மின் பொருளையும் அனைத்து விடுவது அந்த மின்சாதனத்திற்கும் / நமது பொருளாதாரத்திற்கும் நல்லது.

கணிப்பானை பொறுத்தவரை நாம் வேலை செய்யாமல் அது தானே வேலை(ஏதாவது பெரிய பைல்களை இனையத்திலிருந்து இறக்கி கொண்டிருந்தாலோ/வீடியோ என்கோடிங் செய்து கொண்டிருந்தாலோ) மானிட்டரை அனைத்து அதன் ஆயுளை / மின்சாரத்தை சேமிக்கலாம்.

மடிக்கணினி ஆக இருந்தால் அதன் இயக்கம் தேவைப்படாத போது hybernate செய்து அது திரும்ப இயக்கும் போது ஆகும் பூட் செய்யும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

vgmnaveen
02-05-2007, 08:53 AM
இப்போதுள்ள கணினிகள் அனைத்திலும் நாம் தொடாமல் இருந்தால் குறித்த நேரத்திற்கு பின் தானாகவே அனைந்து விடும்படி தான் வடிவமைத்துள்ளார்கள். நான் என் மடிக்கணினியை நிறுத்துவதே இல்லை.

மனோஜ்
02-05-2007, 09:03 AM
கணியை நிறுந்தி இயக்குவதால் பல தொகுப்புகள் தனாக சரி செய்யது கொள்ளும் நிறுத்தி இயக்குதல் சிறந்தது

pradeepkt
02-05-2007, 09:45 AM
பயன்பாடு இல்லையெனில் நிறுத்திவிடுதல் நாட்டிற்கும் வீட்டிற்கும் நலம். முக்கியமானதாக இருப்பின் கணினி ஓட வேண்டியது அவசியம்...

ஆயின், கணினிகளை நிறுத்தத் தேவை மக்கள் சொன்னது போல் சில மென்பொருள்களால் கூட நடக்கலாம். அந்நிலையில் memory leak எனப்படும் நினைவு ஓட்டைகள் ஏற்பட்டிருக்கலாம். அப்போது நாம் அதை அடைத்தாலோ அல்லது அந்த மென்பொருளை மட்டும் நிறுத்தினாலோ கூடப் போதுமானது.

ஓவியா
03-05-2007, 01:44 AM
மின்சார கட்டணம் குறையும்.

அக்னி
03-05-2007, 02:00 AM
மின்சார கட்டணம் குறையும்.

இந்த நக்கல்தானே வேணாங்கிறது...

ஓவியா
03-05-2007, 02:04 AM
இந்த நக்கல்தானே வேணாங்கிறது...

ஆமாங்க நண்பரே நக்கலுடன் ஒரு உண்மை.

அக்னி
03-05-2007, 02:15 AM
ஆமாங்க நண்பரே நக்கலுடன் ஒரு உண்மை.

ஆமாம், ஏற்றுக்கொள்கின்றேன்...
"சிறு துளிதான், பெரு வெள்ளம்." என்று சொல்லாமல் சொல்லும் உங்கள் கருத்தை...

ஓவியா
03-05-2007, 03:12 AM
ஆமாம், ஏற்றுக்கொள்கின்றேன்...
"சிறு துளிதான், பெரு வெள்ளம்." என்று சொல்லாமல் சொல்லும் உங்கள் கருத்தை...

ஆமாம் அக்கினியாரே,
அந்த சிறு துளி நீர்தான் பின் பெரு வெள்ளமாகி, மின்சாரம் தயாரிக்க (சுழழ்நீராக) உதவுகிறதாம் :medium-smiley-029: :medium-smiley-029:

அன்புடன்
ஓவியா..

மன்மதன்
03-05-2007, 12:32 PM
எனது மடிக்கணினியை நான் உபயோகிக்கும் நேரம் தவிர ஆஃப் செய்துவிடுவேன். ஆனால் சட் டவுன் செய்யாமல் ஹைபர்நேட் செய்துவிடுவேன். சட்டவுன் செய்து, திரும்ப ஆன் செய்தால் , நிறைய நேரம் எடுக்கிறது!

shanthi
05-08-2007, 07:00 AM
நான் புதியவன். அனைவருக்கும் வணக்கம்.

விகடன்
05-08-2007, 07:10 AM
கணினி தொடர்ந்து இயக்குவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அது தகுந்த வெப்ப நிலையிலிருக்க வேண்டும். வெப்பனிலை அதிகமானால் உதிரிப்பொருட்கள் பாதிப்பிற்குள்ளாகலாம்.

அன்புரசிகன்
05-08-2007, 07:16 AM
நான் புதியவன். அனைவருக்கும் வணக்கம்.

அன்பரே... உங்களது அறிமுகத்தை அறிமுகப்பகுதியில் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) தந்து உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

இதயம்
05-08-2007, 07:17 AM
எந்த பொருளும் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தால் விரைவில் பழுதடையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், நான் பணிபுரியும் அராம்கோ நிறுவனத்தில் பணி முடிந்து வீடு போகும் போது யாரும் கணினியை Shutdown செய்வதில்லை. அதற்கு இங்குள்ள சீரான மின்சார ஓட்டம் மிகவும் உதவியாக இருக்கிறது. இதுவே இந்தியாவாக இருந்தால் அங்கு மின்சாரம் அடிக்கடி தடைபடுதலும், சீரற்ற மின் வினியோகமும் கோப்புகளையும், கணினிகளையும் நிச்சயம் பாதிக்கும். அது மட்டுமல்லாமல் கணினியில் பணி முடிந்து அதை shutdown செய்வதே சிறப்பு. காரணம், நாம் ஒவ்வொரு முறையும் shutdown செய்து மீண்டும் கணினியை இயக்கும் போது அதன் இயங்கு மென்பொருள் பழுதடைய வாய்ப்புகள் குறைவாகிறது. hypernate செய்தாலும் கணினியில் சில பாகங்கள் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதால் முழுதும் அணைப்பதே நல்லது. சில நேரங்களில் பூட் ஆவதில் அதிக கால தாமதம் இருந்தால் அப்படி செய்வதை தவிர்க்க முடிவதில்லை. என் மடிக்கணினியை முன்பு நான் அணைக்காமல் தொடர்ந்து இயங்கு நிலையிலேயே வைத்திருந்ததால் கடைசி முறையாக அணைத்து இயக்கிய போது இயங்கு மென்பொருள் பழுதடைந்து இறுதியில் ஹார்ட் டிஸ்க் கோப்புகளை மீட்டெடுப்பதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டது.

எனவே கோப்புகள், மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றின் சிறந்த செயல்பாடுகளை மனதில் கொண்டு பணி முடிந்ததும் கணினியை முறையாக அணைப்பதே சிறப்பு என்பது என் கருத்து..!

ஆதவா
05-08-2007, 08:06 AM
தொடர்ந்து ஓடவிட்டா நாமலும் கூட ஓடனும்... அதைப்பிடிக்க. :D

இதயம்
05-08-2007, 08:09 AM
தொடர்ந்து ஓடவிட்டா நாமலும் கூட ஓடனும்... அதைப்பிடிக்க. :D


எங்கே ஆதவனிடமிருந்து அறிவுபூர்வமான பதில் எதுவும் சமீபத்தில் வரவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். வந்து விட்டது.!! இந்த ஒரு பதில் போதும். இன்னும் ஒரு மாதத்திற்கு ஆதவனின் அறிவு பூர்வமான பதில்கள் மன்றத்திற்கு தேவைப்படாது..!!:icon_wacko: :icon_wacko:

தூங்கிக்கிட்டே யோசிப்பீங்களோ..?!!:natur008: :natur008:

ஆதவா
05-08-2007, 08:12 AM
எங்கே ஆதவனிடமிருந்து அறிவுபூர்வமான பதில் எதுவும் சமீபத்தில் வரவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். வந்து விட்டது.!! இந்த ஒரு பதில் போதும். இன்னும் ஒரு மாதத்திற்கு ஆதவனின் அறிவு பூர்வமான பதில்கள் மன்றத்திற்கு தேவைப்படாது..!!:icon_wacko: :icon_wacko:

தூங்கிக்கிட்டே யோசிப்பீங்களோ..?!!:natur008: :natur008:

அட நீங்க வேற. அறிவு பூர்வமான பதில்தான் என்னோட எல்லா பதிவுகளிலும் இருக்கும்.:D. நீங்க வேணும்னா நான் சொன்னத நல்லா யோசிச்சுப் பாருங்க. உண்மை தெரியும்.!!:nature-smiley-008:

slwaran
02-09-2007, 09:12 AM
எந்த ஒரு மின்சாதனத்தையும் அடிக்கடி ஒன் ஒப் செய்யுமபோதே அது பழுதடைகின்றது. அதாவது மின் உபகரணங்கள் வேலை செய்யும் பொழுது வெப்பத்தை உமிழ்கின்றன. அதனால் அதில் உள்ள (கெப்பாசிட்ரர் போன்றவை) உபகரணங்கள் விரிவடைகின்றன. அவை வேலை செய்யாத போது போது சுருங்குகின்றன. இதனால் அவற்றுக்கும் தாய்ப்பலகைக்கும் இடையில் இணைப்பில் விரிச்சல் ஏற்படுகின்றன. இதற்கு ஆங்கிலத்தில் Termal Cரேப் என்று பெயர். எனவே கணினியை மற்றுமன்று எந்தவொரு தொடர்ச்சியாக இயக்கலாம். ஆனால் போதிய காற்றோற்டம் தேவை.