PDA

View Full Version : உன் நினைவோடு



சக்தி
01-05-2007, 09:26 AM
நீயில்லா நெடுஞ்சாலை
நான் மட்டும் தனியாக
எப்போதோ தொலைத்த ஒன்றை
தேடிக்கொண்டு

வளையல் சத்தம்
கொலுசின் ஓசை
சிரிப்பொலிகள்
என் உயிர்த்துடிப்பாய்

எது வாழ்க்கையென்று
அறியாமல் ஏகாந்தமாய்வாழ்ந்தவன் - நான்
இன்று எங்கே என் வாழ்க்கை என்று
தேடுகின்றேன்

தேடித்தேடி
அலைகின்றேன்
தேடியது கிட்டவில்லை
கிட்டியது தேவையில்லை

உன் வாழ்க்கையெனும்
மலர்ச்சோலை
வாழ்ந்துவிட்டுப் போனவன்
நான்

திரும்பவந்து
பார்க்கின்றேன்
சோலையதை காணவில்லை
பேதையவள் எங்கும் இல்லை

உயிரின் வலிஅறியவில்லை
உறங்குகின்றேன் காதலியே
உன் நினைவோடு

மயூ
01-05-2007, 09:30 AM
ம்...
உணர்வுகள்.. மனதின் ஆழமான வடுக்கள்.. என்றும் ஆற்றப்பட முடியாதவை.. பிரிவு.. காதலை சில வேளைகளில் மழுங்கடித்துவிடும்.. (உண்மைக் காதலுக்கல்ல)

ஓவியன்
01-05-2007, 09:30 AM
தேடித்தேடி
அலைகின்றேன்
தேடியது கிட்டவில்லை
கிட்டியது தேவையில்லை


அருமையான வரிகள் ரோஜா!

ரசித்தேன்,உங்கள் வரிகளை வியந்தேன்
வலியையும் ரசனையோடு சொல்லும் உங்கள் பாங்கு அருமை.
வாழ்த்துக்கள் ரோஜா!!

அன்புரசிகன்
01-05-2007, 10:36 AM
வளையல் சத்தம்
கொலுசின் ஓசை
சிரிப்பொலிகள்
என் உயிர்த்துடிப்பாய்


இதயம் விரைவாக துடிக்கவைக்கும் உலிகளவை.
யாரிதையம் தான் துடிக்காதிருக்கும்.


உயிரின் வலிஅறியவில்லை
உறங்குகின்றேன் காதலியே
உன் நினைவோடு

நானும் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் என்னவளின் முகம் காண. :D
அருமையான வரிகள். நன்றி ரோஜா.

சக்தி
01-05-2007, 10:50 AM
நன்றிகள் பலகோடி என் நண்பர்களே,
உங்களின் விமர்சனங்கள் என்னை
என்றென்றும் உயிர்பித்திருக்கும்.

ஓவியா
02-05-2007, 01:43 AM
தமிழை அழகாக கவிதைக்குல் அடக்கி இருகின்றீர்கள்.

கவிதை நன்று... பாராட்டுக்கள்.

சோகம் சுகமாமே!!! யாரோ சோகம் என்றால் என்ன என்று அறியாமல் சொல்லியவை அவை......



கொசுரு:
காதல் தோழ்வி என்றால் இப்படிதான் கவிதை வருமா????????
:spezial: :medium-smiley-100: ...:spezial: :medium-smiley-100: ...:spezial: :medium-smiley-100: .அச்சோ............பத்திக்கிட்டு வருதே

ஷீ-நிசி
02-05-2007, 04:14 AM
நீயில்லா நெடுஞ்சாலை என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்......

என்றோ அவனும், அவளும் நடந்து சென்ற பாதையில் அவன் மட்டும் இன்று நடந்துசெல்கிறான், அவனோடு இன்று அவள் இல்லை... ஆனால், அவளின் சிரிப்பு சத்தமும், கொலுசின் ஒலிகளும், சிரிப்பின் ஒலிகளும், இன்று அவனுக்கு கேட்கிறது..

காதலால் உண்டான மன வலிகள், கண்முன்னே காட்சிகளாய் விரிகின்றது நண்பரே! வாழ்த்துக்கள்!

சக்தி
02-05-2007, 04:31 AM
மாற்றிவிட்டேன் நண்பரே.