View Full Version : காதல்
சக்தி
01-05-2007, 05:20 AM
காதல்
அது
இரு உள்ளங்களின்
உரசல்
கண்டதென்னவோ
அவள்
விழிகள்
அதில்
விண்டதென்னவோ
என் இதயம்.
சுட்டிபையன்
01-05-2007, 05:23 AM
உங்கள் ஆரம்பக் கவிதை அழகாய் உள்ளது மென்மேலும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்
ஷீ-நிசி
01-05-2007, 05:25 AM
நல்லதொரு காதல் கவிதை நண்பரே! வாழ்த்துக்கள்... விண்டதென்னவோ என்பதின் பொருள் என்னவென்று கொஞ்சம் விளக்குங்கள் நண்பரே!
அக்னி
01-05-2007, 05:28 AM
ரோஜாவின் நறுமணம் கவிதைத் தளத்திலிருந்து கமழத் தொடங்கிவிட்டது...
தொடருங்கள்...
விண்டதென்னவோ என்பது, சிதறிப்போன, உடைந்துபோன என்ற பொருள்கள் தரக்கூடியது.
சக்தி
01-05-2007, 05:30 AM
விண்டதென்னவோ என்றால் உடைந்தது என்று அர்த்தம்
ஷீ-நிசி
01-05-2007, 05:33 AM
நன்றி நண்பர்களே!
சக்தி
01-05-2007, 05:35 AM
உழைப்பும் விடாமுயட்சியும் எனது வெற்றியின் திறவுகோல்
அன்பும் அரவணைப்பும் எனது வெற்றியின் எணிப்படி.
என்றும் தங்களின் அன்பை நாடும்
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!!! வாழ்த்துக்கள்!!!
சிறிய அருமையான கவிதை;
ஓவியன்
01-05-2007, 06:10 AM
ஆகா ரோஜாவின் ஒரு பரிமானம் மன்றத்திலே பரவத் தொடங்கி விட்டது.
கவி ரோஜா, அதுவும் காதல் ரோஜா!
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
ஓவியா
01-05-2007, 10:41 PM
தூள் கவிதை. நன்றி.
விழிகளை காணாமல் காதால் வராதா!!!!!!
சக்தி
02-05-2007, 04:46 AM
காதலின் துவக்கம் விழிகள் சந்தித்தல்.
விழிகள் பேசும் மொழிகள்
காதலர்களுக்கே உரியவை.
பொதுவாகவே
விழியின் மொழிக்கு
வலிமை அதிகம்
ஆனால்அதை
சரியாக
இடம்,பொருள்,ஏவல்
அறிந்து
பயன்படுத்த வேண்டும்.
இல்லையென்றால்
தரும அடிதான்.
அரசன்
02-05-2007, 10:12 AM
காதலர்களுக்கே உரிய விழிமொழியை நானும் கற்றுக் கொள்ளலாமா?
ஓவியன்
02-05-2007, 10:14 AM
ஆனால்அதை
சரியாக
இடம்,பொருள்,ஏவல்
அறிந்து
பயன்படுத்த வேண்டும்.
இல்லையென்றால்
தரும அடிதான்.
உண்மைதான் அனுபவித்து எங்களையும் அனுபவிக்க வைக்கிறீர்கள்!
நன்றிகள்!
சக்தி
02-05-2007, 11:44 AM
கற்றுக்கொடுத்து வருவதல்ல
காதல் மொழிகள்
காதலியுங்கள்
தானாகவே
தங்களுக்கு வரும்
முயன்று பாருங்கள்
முடியாவிடில்
தெரிந்த
காதலர்களின்
உதவியை
நாடுங்கள்.
அதுவும் இல்லையெனில்
இமாலயம் சென்று விடுங்கள்.
பின்குறிப்பு:
சாமியார்கள் காதல் மொழியில் வால்லவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பர்ஸ்ட் க்ளாஸ்....
அருமை ரோஜா!! அழகிய அர்த்தம்... உண்மையில் பிளவுபடுவது இதயம்தான்... கண்கள் என்ற கூரான ஆயுதத்தில்.... அருமை அருமை...
வாழ்த்துக்கள்.
mravikumaar
03-05-2007, 06:22 AM
கவிதை அருமை
அன்புடன்
ரவி