PDA

View Full Version : நிலவே ஏன் மறைகின்றாய்



சக்தி
30-04-2007, 05:08 PM
நிலவே
உன் முகம் பார்த்து
நதியலைகள்
சிலிர்க்கின்றன!!!
ஆனால்
நீ ஏன்
மேகப்பெண்ணின்
கூந்தலுக்குள்
மறைகின்றாய்

என்னவளின்
முகம் பார்த்தோ!!!

பென்ஸ்
30-04-2007, 05:12 PM
வணக்கம் ரோஜாவின் ராஜா...

நல்ல துவக்கம்...

காற்றின் நதியலை வெக்கத்தின் சிலிர்ப்பா ...!!!
நல்ல சிந்தனை தொடரட்டும்...

அரசன்
30-04-2007, 05:21 PM
நயமான நல்ல ஒரு கற்பனை. வளம் வர வாழ்த்துக்கள்

:angel-smiley-010: :angel-smiley-010: :angel-smiley-010:

அன்புரசிகன்
30-04-2007, 05:24 PM
நல்ல கவி ஒன்று. ஆரம்பத்திலேயே அசத்துகிறீர்கள். தொடருங்கள்.

ஓவியா
01-05-2007, 10:27 PM
அவளிடம் நிலவும் தோற்றதா!!! அடடே. நல்ல சிந்தனை.

அழகிய கவிதை. வாழ்த்துக்கள்.

சக்தி
02-05-2007, 04:24 AM
பெண்களை வெல்ல இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை என்பதை தாங்கள் அறியததா தோழியே?

ஆதவா
02-05-2007, 12:09 PM
மன்றத்தில் முதல் கவிதையா? அழகிய கவிதை...

ஒரு காதலியை எப்படியெல்லாம் தூக்கி பேசலாம்????

உங்கள் கவிதையில் சில வார்த்தைகள் அடுத்த பரிமாணத்திற்குண்டான வளர்ச்சியைக் காண்பிக்கிறது. ஆனால் காதல் கவிதைகளில் வரும் அதே கருத்து, அதே ஒப்பிடல்//// சற்று ஒப்ப மறுக்கிறது..மற்றபடி கவிதை பிரமாதம்.. வாழ்த்துக்கள்......


நிறைய கவிதைகள் கைவசம் இருப்பதாகச் சொன்னீர்கள்... தயங்காமல் இடுங்கள்.. நிறைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.. குறைகளைத் திருத்துவதற்க்காக ஏற்றுக் கொள்ளுங்கள்..

சக்தி
05-05-2007, 02:29 AM
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்குண்டு தலைவரே, ஆகையால் சரியோ? தவறோ? சளைக்காமல் விமர்சியுங்கள். உங்கள் விமர்சனங்கள் என்னை நல்ல நிலைக்கு வழிநடத்திச் செல்லும்

ஆதவா
05-05-2007, 02:33 AM
கவலைப்படாதீங்க.. நல்லா காரமா விமர்சனம் பண்றேன்... ஹி ஹி ...

ஓவியா
05-05-2007, 02:39 AM
பெண்களை வெல்ல இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை என்பதை தாங்கள் அறியததா தோழியே?

இருக்கு நண்பா.

என் சொந்த கருத்து.
பெண்களை வெல்ல இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒரே ஆயுதம் ஆண்கள்தான்.

இது உண்மை. சில சண்டிராணிகளும் இவர்களின் அன்பில் சரணம்தான்.

மந்திரியாகும் வாய்பையும்கூட ஒரூ ஆணுக்காக துக்க்கியெறிந்த பெண்ணையும் நான் பார்த்ததுண்டு.

ஒரு நல்ல ஆண் எந்த ஒரு பெண்ணையும் அன்பால் வெல்ல முடியும். :sport-smiley-014:

ஓவியா
05-05-2007, 02:41 AM
பெண்களை வெல்ல இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒரே ஆயுதம் ஆண்கள்தான்.

கடவுளால் படைக்கப்பட்ட ஒரே ஆயுதம் ஆண், ஆனால் இன்றய சமுதாயம் அதை .:violent-smiley-010: :violent-smiley-010: பெண்ணடிமையாக்கி விட்டது.

ஆதவா
05-05-2007, 03:04 AM
பெண் எப்போது அடிமை ஆகிறாள்?

ஒடுங்கும்போதும் நடுங்கும்போதும்..
ஒரு ஆண்மகனின் தைரியத்தை இவள் இழக்கும் போதும்
படிப்பறிவு, அழகின்மை, ஆற்றலின்மை, இன்னும் பல

எப்போது அடிமை ஆக்கப்படுகிறாள்.?

மலடி, ஆணின் தானூன்றித்தனம்,

எப்படி நீக்குவது?

ஆண்மகனால் நிச்சயம் முடியும். ஆண்மகனால் மட்டுமே நிச்சயம் முடியும்.

சக்தி
05-05-2007, 03:05 AM
தோழி ஓவியாவிற்கு,

பெண்ணை நேசிக்கும் எந்த ஆணும் அவளை அடிமையாக்க நினைக்கமாட்டான், பெண்கள் தங்களை தானே அடிமையாக்கிக் கொள்கின்றனர். பொதுவாகவே பெண்களுக்கு எதிரி பெண்கள்தான்.

ஆதவா
05-05-2007, 03:06 AM
பெண்களை வெல்ல இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒரே ஆயுதம் ஆண்கள்தான்.

கடவுளால் படைக்கப்பட்ட ஒரே ஆயுதம் ஆண், ஆனால் இன்றய சமுதாயம் அதை .:violent-smiley-010: :violent-smiley-010: பெண்ணடிமையாக்கி விட்டது.

இப்படி சொல்வதை விட.. ஆணின் அன்பு என்று சொல்லலாம் தேவி.. ஆண் அன்புக்கு நிகரானது எதுவுமில்லை. பெண் அன்பும் அஃதே. ஆனால் பெரும்பாலும் அப்படி இருப்பதேஇல்லை.. எதோ ஒரு பக்கம் பிறழ்கிறது.

ஓவியா
05-05-2007, 03:10 AM
ஆமாம் ரோஜா, நீங்கள் கூறுவது உண்மையே. 'பெண்ணை நேசிக்கும் எந்த ஆணும் அவளை அடிமையாக்க நினைக்கமாட்டான்' நன்றி.

ஆமாம் ஆதவா, சரியாக சொன்னீர்கள். 'ஆண் அன்புக்கு நிகரானது எதுவுமில்லை.' நல்ல கருத்து. நன்றி.


சூப்பர் பைண்ட்.

ஆதவா
05-05-2007, 03:13 AM
ஒரு பெண் எப்போது பதிபக்தி அதீதசரணம் இச்சை தவிர்ப்பு ஆகிய கர்மங்களிலிருந்து வெளியே வருகிறாளோ அப்போது அவளே அடிமையாகும் நிலையிலிருந்து வெளியே வரலாம்..
மற்றபடி ஆண்கள்தான் பெரும்பாலும் பெண்ணடிமைக்குக் காரணம்.

இன்றைய நிலைமையில் அப்படி இருக்கிறதா? பெண்களிடம் அடிவாங்கும் கணவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்...

சுட்டிபையன்
05-05-2007, 03:23 AM
பெண் அடிமையாவது 2 விடயங்களிள்
ஒன்று அன்பு இரண்டாவது அடக்கபடுதல்

முதலாவதில் ஒரு ஆணிடம் தானாக அடிமையாகிறாள் அது அவளது சுய நலம்
மற்றையது அடக்க படுகிறாள், மற்றவர்கள் அவளது அடக்கம் அன்பு இயலாமையை பயண்படுத்தி அடக்கிக்கௌவது

சக்தி
05-05-2007, 11:54 AM
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் இல்லறம் என்பது நல்லறமாகும்.