PDA

View Full Version : (மே 2007) புதிய வசதிகள், மாறுதல்கள்இராசகுமாரன்
30-04-2007, 02:40 PM
நண்பர்களே..!

மன்றத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ள புதிய மாறுதல்கள் பின்வருமாறு:

1) வீடியோ படங்களின் கீழ் பதிவிறக்க சுட்டி கொடுக்கப் பட்டுள்ளது, இதன் மூலம், அதன் மூல தளத்திற்கு சென்று அசைபடங்களை காணலாம், அவர்கள் அனுமதித்தால் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2) மல்லி மன்றத்தில் ஒரு பகுதியாக இருந்த கவிதைப் பகுதியில் பங்களிப்பு அதிகமாக இருந்ததனால், பிரித்து தனியாக "செவ்வந்தி மன்றம்" உருவாக்கப் பட்டுள்ளது.

3) கவிதைப் போட்டியில் வென்ற பதிப்புகளின் மீது "விருது படம்" சேர்க்கப் பட்டுள்ளது.

4) கதைப் போட்டியில் வென்றவர்களுக்கு "பதக்கங்கள்" கொடுக்கப் பட்டுள்ளது. இதை வென்றவர்களின் பதிப்புகளிலும், அவர்கள் ப்ரோஃபைல்களிலும் காணலாம்.

இது தவிர மேலே உள்ள "மெனு" பாரிலும் "Award Winners" சுட்டியில் காணலாம்.

கதையை தவிர இன்னும் பல போட்டிகள் வைத்து அவற்றிற்கும் பதக்கங்கள் கொடுக்க நிர்வாக உறுப்பினர்கள் விவாதிக்கிறார்கள். இது பற்றிய உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன.

5) புதிய iCash என்னும் இ-பணம் (இணைய பணம்) நாளை முதல் அறிமுகப் படுத்தப் படுகிறது. இது நமது மன்றத்தில் உறுப்பினர்களை உற்சாகப் படுத்த உபயோகப் படுத்தப் படும் Virtual Currency. இது ஒரு வகையான "பாயிண்ட் சிஸ்டம்" பொதுவாக அனைத்து இணைய மன்றங்களிலும் காணலாம்.

நீங்கள் பதிக்கும் ஒவ்வொரு திரிக்கும், கருத்துகளுக்கும் உங்களுக்கு தானாக இந்த இ-பணம் கூடும். இது தவிர தரமாக படைப்புகள் கொடுப்பவர்கள், தரமாக கருத்துக்கள் வழங்குபவர்கள், புதியவர்களுக்கு உதவுபவர்கள், மற்றும் சிறந்த ஆலோசனைகள் வழங்குபவர்களுக்கு நமது நிர்வாக உறுப்பினர்கள் அவ்வப்போது இந்த "ஐ-கேஷ்" சன்மானம் கொடுப்பார்கள். இது தவிர மாதம் தோறும் சிறந்த 3 பழைய உறுப்பினர்களுக்கு 200 இ-பணம் கொடுத்து அவர்கள் மூலமாகவும் சிறந்த படைப்பாளிகளுக்கு கொடுக்க கூறுவோம்.

நீங்களும் மன்றத்தில் சிறந்த படைப்புகள், சிறந்த கருத்துக்களை காணும் போது அதன் படைப்பாளிக்கு அவரது பதிப்பின் வலது பக்கத்தில் உள்ள "Donate Me" என்ற பட்டனை அழுத்தி அவருக்கு உங்களிடம் உள்ள "ஐ-கேஷை" வெகுமதியாக வழங்கலாம்.

"ஐ-கேஷ்" உள்ளவர்கள் தாராளமாக வழங்குங்கள். அது நிறைய பேரிடம் சேரச் சேர அவர்களும் நிறைய பேருக்கு சன்மானம் வழங்கி ஊக்குவிக்க முடியும்.

இந்த ஐ-கேஷில் ஒரே ஒரு சிறிய பிரச்சனை உள்ளது, அதன் காரணமாகவே இதை தாமதப் படுத்தி வந்தேன். தமிழில் பயனாளர் பெயர் உள்ளவர்களுக்கு சன்மானம் வழங்கும் போது அவ்ர்கள் பெயரை நீங்கள் மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டும், ஏனெனில் அது "?????" என்று தோன்றும்.

இது தவிர உங்களிடம் வேறு ஆலோசனைகள் இருந்தால், அவையும் வரவேற்கப் படுகின்றன்.

நன்றி..

இராசகுமாரன்

பின்சேர்ப்பு: ஆங்கிலத்தில் பதிவுகள் செய்பவர்கள். மற்றும் விதிமுறை மீறிய பதிவுகள் செய்பவர்களிடம் தானாக போய் சேர்ந்த iCash-கள் அவ்வப்போது திருப்பி பெற்றுக் கொள்ளப் படும்.

மயூ
30-04-2007, 04:11 PM
புதுமையான வசதிகளுடன்.. தமிழ் மன்றம்.. வாழ்க வளர்க!!!

அரசன்
30-04-2007, 04:18 PM
தமிழ் மன்றத்தின் வளர்ச்சியை வரவேற்கிறோம். இம்மன்றம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

paarthiban
30-04-2007, 04:19 PM
ஆகா இத்தனை நல்ல மாற்றங்களா? நன்றி அண்ணா.

leomohan
30-04-2007, 04:54 PM
அற்புதமான உற்சாகமூட்டும் மாற்றங்கள். அவசியம் பயன்படுத்தி மகிழ்வோம்.

அன்புரசிகன்
30-04-2007, 05:01 PM
புதிய பரிமாணத்திற்கு நன்றி தல.

அக்னி
30-04-2007, 05:46 PM
தமிழ் மன்றம் மெருகூட்டப்படுவது, மனதுக்கு புது உற்சாகம் தருகிறது. வளர்ச்சிப் பாதையில் மற்றுமொரு மைல் கல். தமிழ்மன்றம், புத்துணர்ச்சியோடு அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை.

சுட்டிபையன்
01-05-2007, 04:23 AM
மன்றத்தில் மாற்றங்கள் சிறப்பாக உள்ளது, மன்றத்தை மென்மேலும் மெருக்கூட்டும் என்பதில் அச்சமில்லை, மாற்றஙக்ளை கொடுத்த அனைவருக்கும் நன்றி கலந்த மாற்றங்கள்

ஐ-காஷ் இல் பணம் பெறுபவருக்கு யார் அதை கொடுக்கிறார் எதற்காக, எவளவு (Billing System) என்ற ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும்

இராசகுமாரன்
01-05-2007, 04:39 AM
ஐ-காஷ் இல் பணம் பெறுபவருக்கு யார் அதை கொடுக்கிறார் எதற்காக, எவளவு (Billing System) என்ற ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும்

பில்லிங்க் சிஸ்ட்ம் கிடையாது. ஆனால், நீங்கள் யாருக்கு கொடுக்கிறீர்கள், யார் உங்களுக்கு கொடுக்கிறார்கள் என்ற விவரம், அடுத்தவர் Donate Me பட்டனை அழுத்தும் போது அங்கே கீழ் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

மாதிரிக்காக உங்களுக்கு 2 iCash-கள் கொடுத்துள்ளேன், தெரிகிறதா பாருங்கள்.

ஆனால், திரிகள் துவக்கினால், மற்றும் பின்னூட்டம் இட்டால் தானாகவே கிடைக்கும் iCash-கள் மட்டும் அங்கே தெரியாது.

சுட்டிபையன்
01-05-2007, 04:53 AM
பில்லிங்க் சிஸ்ட்ம் கிடையாது. ஆனால், நீங்கள் யாருக்கு கொடுக்கிறீர்கள், யார் உங்களுக்கு கொடுக்கிறார்கள் என்ற விவரம், அடுத்தவர் Donate Me பட்டனை அழுத்தும் போது அங்கே கீழ் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

மாதிரிக்காக உங்களுக்கு 2 iCash-கள் கொடுத்துள்ளேன், தெரிகிறதா பாருங்கள்.

.

Incoming From:
இராசகுமாரன் : 2
தெரிகிறது, அப்படியே எந்த பதிவுக்காக கொடுக்கப் பட்டது என்றும் பதியக் கூடிய வாய்பிருந்தால் நன்றாக இருக்கும்,
நன்றி
:icon_wink1:

ஷீ-நிசி
01-05-2007, 04:58 AM
மிக வரவேற்கத்தக்க முயற்சி... நல்ல கருத்துக்களும், படைப்புகளும் இன்னும் அதிகம் வலம் வரத் தொடங்கும்.. வாழ்த்துக்கள் சார்.

pradeepkt
01-05-2007, 06:08 AM
அருமை அருமை...
வாருங்கள் அனைவரும் கலக்குவோம்

ஜோய்ஸ்
01-05-2007, 07:07 AM
புதுமையான ஊக்குவிக்கும் சிறந்த முறை இது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.வாழ்த்தும்,பாராட்டுக்களும்.

crisho
01-05-2007, 07:45 AM
இந்த பதிவுக்காக நேற்று காலை முதல் காத்திருந்தேன்!

தரத்துடன் கூடவே புதுமையும் அருமை!!

வாழ்த்துக்கள்!!

பரஞ்சோதி
01-05-2007, 11:25 AM
வாழ்த்துகள்

புதுமையான வழிமுறைகள் பலரையும் ஊக்கப்படுத்தும், நல்ல முறையில் மன்றத்தில் பதிவுகள் பெற வழி வகுக்கும். வாழ்த்துகள்.

சுட்டிபையன்
01-05-2007, 11:37 AM
பரம்ஸ் அண்ணோய் என்னோட காஷ் அவுஸ்ரேலியன் ரீம் ஸ்கோர் போல ஏறிக்கிட்டே போகுதே, அதிகமா சேர்ந்தால் வேல்டுகப் ஏதாச்சும் கொடுப்பீர்களா...........?

இணைய நண்பன்
01-05-2007, 11:41 AM
மன்றத்தின் மாற்றங்களும் புதிய விடயங்களும் வரவேற்கத்தக்கது..நிர்வாகக்குழுக்கு வாழ்த்துக்கள்.மன்றம் மேலும் வளர வாழ்த்துகிறேன்.நன்றி

மயூ
01-05-2007, 01:11 PM
மன்றத்தின் மாற்றங்களும் புதிய விடயங்களும் வரவேற்கத்தக்கது..நிர்வாகக்குழுக்கு வாழ்த்துக்கள்.மன்றம் மேலும் வளர வாழ்த்துகிறேன்.நன்றி
நீண்ட நாட்களின் பின்பு!!!!! நலம் என்று நம்புகின்றேன்!

இராசகுமாரன்
01-05-2007, 02:33 PM
Incoming From:
இராசகுமாரன் : 2
தெரிகிறது, அப்படியே எந்த பதிவுக்காக கொடுக்கப் பட்டது என்றும் பதியக் கூடிய வாய்பிருந்தால் நன்றாக இருக்கும்,
நன்றி
:icon_wink1:

அந்த வசதி இன்னும் வரவில்லை. வரும் போது கூறுகிறேன்.

ஓவியா
01-05-2007, 05:30 PM
அற்புதம், அற்புதம். மன்றம் சிறப்பாக உள்ளது. இம்மன்றம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.


நன்றி தலைவரே.

இணைய நண்பன்
01-05-2007, 06:51 PM
நீண்ட நாட்களின் பின்பு!!!!! நலம் என்று நம்புகின்றேன்!


நன்றி தோழா

மனோஜ்
02-05-2007, 08:03 AM
நன்றி இராசகுமாரன் அண்ணா

gayathri.jagannathan
02-05-2007, 09:27 AM
மன்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மனதுக்கு மகிழ்வைத் தருகின்றன.....

சூரியன்
13-05-2007, 03:13 PM
மன்றத்தில் மாற்றங்கள் சிறப்பாக உள்ளது, மன்றத்தை மென்மேலும் மெருக்கூட்டும் என்பதில் அச்சமில்லை, மாற்றஙக்ளை கொடுத்த அனைவருக்கும் நன்றி கலந்த மாற்றங்கள்

mickysluck

ஜோய்ஸ்
16-05-2007, 07:24 AM
மதிப்பிற்க்குறிய ஐயா,
என் சந்தேகம் என்னவெனில்,ஒருவர் அறுபது பதிவுகள் செய்திருந்தும் இன்னமும் ஒரு ஐ சன்மானம் கூட கிடைத்திருக்கவில்லை.ஒருவர் 36 பதிவுகள் செய்திருந்தும் 1 ஐ பணம் சன்மானம்தான் கிடைத்திருக்கிறது. தானாகவே சன்மானம் இயங்கி வரும் என்றால் 63 அஞ்சல்களை பதித்தவருக்கு இதுவரை வராதது ஏன்?இந்த நியாயமான சந்தேகத்தை நிவர்த்திப்பார் உண்டா ஐய்யா?
அதனால் எதனடிப்படையில் இப்படி கொடுக்கப்படுகிறது?
அப்படியென்றால் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாக சன்மானம் கொடுக்கப்படுவது எதை வைத்து?

உதாரணத்திர்க்கு சில பெயர்கள் :

1) தமிழ் 81 /63 அஞ்சல்கள் /ஐ பண சன்மானம் 0.00.
2) மீனாகுமார் / 36 அஞ்சல்கள் / ஐ பன சன்மானம் 1.00.
3) ஜோய்ஷ் / 146 அஞ்சல்கள் / ஐ பண சன்மானம் 917.90.

விளக்கமாக பதிலுறைத்தால் நலமாயிருக்கும் என நம்புகிறேன்.